பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 06, 2012

டிவியில் விஸ்வரூபம் !

விஸ்வரூபம் படத்தை முதலில் டிடிஎச் மூலம் டிவியில் வெளியிடுவதில் உறுதியாக நிற்கிறார் கமல்ஹாஸன். தனது இந்த முடிவை அவர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தெரிவித்துவிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.

கமல் திட்டப்படி, விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!

விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பும் உரிமையை முக்கியமான டிடிஎச் ஆபரேட்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த பிரதான ஆபரேட்டர், மற்ற டிடிஎச் நிறுவனங்களுடன் பேசி படத்தை விற்கப் போகிறார். கிடைக்கும் வருவாயை கமலும் டிடிஎச் நிறுவனமும் பகிர்ந்து கொள்வார்கள்.

இப்படி வெளியிடுவதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. முக்கியமாக, திருட்டு டிவிடி பிரச்சினை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்பட்டுவிடும்.

டிடிஎச்சில் படம் வெளியாகி 8 மணி நேரம் கழித்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல். கிடைக்கும் தியேட்டர்களில் இதை வெளியிடப் போகிறாராம். இதில் இன்னொரு நன்மை... முதலிலேயே படம் டிவியில் காட்டப்பட்டுவிடுவதால் பிளாக் டிக்கெட் பிரச்சினையும் இருக்காது.

டிடிஎச்சில் படம் வெளியிடும் தனது முடிவைத் தெரிவிக்க நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்தார் கமல். அங்கே சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரபல தயாரிப்பாளர்களிடம் தனது பிரச்சினையை விளக்கினார்.

தன் படத்தை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற உரிமை அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே உண்டு என்பதை மறைமுகமாக, ஆனால் அழுத்தமாகத் தெரிவித்துவிட்டு சென்றாராம் கமல்.

- செய்தி

குஜராத்தில் புது மின்சார மீட்டர் போட்டவர்கள் இதை வீட்டிலிரிந்தே பார்க்கலாம். பார்த்த பிறகு திரும்ப மீட்டர் எரிந்துவிட்டது என்று சொல்ல கூடாது !

10 Comments:

R. J. said...

Who will see the film by paying for DtH in TN when you are not sure of electricity? I think Kamal is very confident that even after seeing the film in the small screen at home, people will flock the theatres for the experience of greater enjoyment and special sounds. Best wishes to him. - R. J.

dr_senthil said...

எதுவும் முதல் முறை எனும் போது அதற்கான அச்சங்கள் இருக்கத்தான் செய்யும் ஆனாலும் கமல் ஒரு முன்னோடிதான்.. பல ஆங்கில ஹிந்தி படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனா சில நாட்களிலேயே டிவி இலும் வெளிவந்து விடுகிறது ஒருவேளை இனி இது தான் எதிர்கால வியாபாரம் போலும்.. வாழ்த்துக்கள் கமல் படம் எவ்வாறு இருந்தாலும் தங்களின் துணிவு மெச்ச தகுந்ததே..

balhanuman said...

கமலின் இந்தப் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Anonymous said...

//Kamal is very confident that even after seeing the film in the small screen at home, people will flock the theatres for the experience of greater enjoyment and special sounds//

thats 100% true, i think )

Anonymous said...

//Who will see the film by paying for DtH in TN when you are not sure of electricity?//

Million Dollar question. Who'll answer this?

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

டிவியில் வெளியீடு.... அப்படின்னா...

விளம்பரதாரர்களை நம்பி,Free to air.... (அதாவது விளம்பரங்களுக்கு மத்தியில் படம் வருமே... நம்மூர்ல...) அது மாதிரி கிடையாது.... இது... prepaid subscription model.... அதாவது.... டிஷ் வைத்திருக்கிறவர்கள்... SMS அனுப்பி, கண்ட்ரோல்டு விதமாக நாம் இந்த படத்தை பார்த்து கொள்ளலாம்...

ரிலீஸ் டேட் அன்னிக்கு சன், ராஜ்ன்னு தேடினா பிரயோஜனம் இல்ல...

எங்கேயோ படிச்ச ஞாபகம்... தமிழ் நாட்டில.... 30 சதவிகிதம் தான் டிஷ் வைச்சிருக்காங்க.... மீதியெல்லாம் கேபிள்...ன்னு........ அப்படியா...

அப்ப, யாரு டிவியில இத பாப்பாங்க...

திருட்டு விசிடி ஆளுங்கதான் முதல்ல பார்த்து, அதை காப்பி பண்ணி, சுட சுட கண்ணுல ஒத்திக்கிற மாதிரி பிரிண்ட்ட சர்க்குலேஷன் விடுவாங்க...

விவரம் தெரிஞ்சவங்க யாராவது விலாவாரியா சொன்னா கேட்டுக்கலாம்...

புதுசா டிரை பண்ணுற... உலக நாயகனுக்கு வாழ்த்துக்கள்... வேறென்ன சொல்றதுக்கு இருக்குது....

Anonymous said...

ஆக மொத்தம், திருடனாய் பார்த்தும் திருந்தணும், அந்த திருட்டை ஊக்குவிக்கும் "திருட்டு விசிடி பார்க்கும் திருட்டு தமிழனும் திருந்தணும்". கமலின் இந்த முயற்சி கட்டாயம் வெற்றியடைய வேண்டும். தியேட்டரில் படம் பார்க்க வருபவர் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது தெரிந்தும் கூட இம்முடிவை கமல் எடுத்திருக்கலாம்.

Shankari said...

Oh great news!.. by new way when is he going to release? What a bold decision!

சிந்திப்பவன் said...

எனி சந்தேகம்...சொலவது முற்றிலும் உண்மை..

விஸ்வரூபம படத்தின் நல்ல தரமுள்ள "மனுஷ்யபுத்திரன் DVD"* அடுத்த நாளே மார்க்கெட்டில் சீப்பா கிடைக்கும்.
*இது அங்கீகாரம் பெற்ற DVD யும் இல்லை திருட்டு DVD யும் இல்லை இரண்டிற்கும் நடு.எனவேதான் இந்த பெயர்.

Anonymous said...

டாடா ஸ்கையில் வி.ரூபம் பார்க்க 1000 ரூபாயாம். இவ்வளவு கொடுப்பவர்களுக்கு 3 மணிநேரம் தடையில்லாமல் மின்சாரம் இருக்கும் என்று யார் கியாரண்டி கொடுக்க முடியும்? சென்னையிலேயே அந்த உறுதி இல்லை. மற்ற மாவட்டங்களில் எங்கே 3 மணிநேரம் தொடர் சப்ளை இரவில் இருக்கிறது?! மாவட்ட மக்கள் யாரும் இதை வாங்கப்போவது இல்லை.

சரவணன்