பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 19, 2012

எழுத்தாளர்கள், பாடகர்கள்

நண்பர் ஒருவர் பாக்கியம் ராமசாமி FBல் இப்படி எழுதியிருக்கிறார் என்று என்னிடம் அனுப்பினார்.


எழுத்தாளர்கள் சங்க்கீதக்காரர்களைவிட ஒரு விதத்தில் உயர்ந்தவர்கள்.
சக எழுத்தாளர்கள் சிறப்பாக எழுதியிருந்தால் மற்ற எழுத்தாளர்கள் பாராட்டுவார்கள்.

சுஜாதாவை ரா.கி.ர . பாராட்டுவார். என்னை சுஜாதா பாராட்டியுள்ளார் நான் பாராட்டாத எழுத்தாளரே இல்லை.

ஆனால் பாருங்கள், சங்கீதக்காரர்கள் சக பாடிகளை பாராட்டுவது அபூர்வம். விமரிசனம் வேண்டுமானால் மானாவாரியாகச் செய்வார்கள். பாராட்ட மனசே வராது. வேறென்ன. பொறாமை, கர்வம்னு அவசரப்பட்டுச் சொல்லி விடாதீர்கள்.

அவர்களுக்கு குருகுல வாசத்தில் குரு சொல்லித் தந்த பாடம் அது. குரு யாரையும் புகழவே மாட்டார். அப்படியே புகழ்ந்தாலும் மற்ற மாணவர்களுக்கு எரிச்சலாகிவிடும் .
இதனால் புகழ்வது என்றால் என்ன என்றே க்ளாஸ் பாடகர்கள் அறியமாட்டாதவர்கள்!குமுதம் விகடனை புகழாது, கல்கி குமுதத்தை புகழாது அதே போல தான் இதுவும். ஆனால் சங்கீத வித்வான் இறந்து போன பிறகு வண்டி வண்டியாக புகழ்வார்கள்...அஞ்சலி கட்டுரை எழுதுவார்கள்!

3 Comments:

dr_senthil said...

நான் இட்லிவடையை புகழ்ந்து விட்டேன்

dr_senthil said...

பாக்கியம் அய்யாவிற்கு சாருவை பத்தி ஒன்னும் தெரியாது போல.. அவரை இரண்டு நாள் சாருவின் வலை பதிவுகளை படிக்கும்மாறு வேண்டுகிறேன்

வல்லிசிம்ஹன் said...

எனக்கு இட்லி வடை எப்பவும் பிடிக்கும். படிக்கத்தான். கடுகு சார் சொல்லி இருப்பது அத்தனையும் நிஜம்.