பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 08, 2012

ரமணி சந்திரன் - சுமதி

Fairy tales பிடித்த எல்லோருக்கும் ரமணி சந்திரன் கதைகள் பிடிக்கும். தேவதையின் குணங்கள் கொண்ட கதாநாயகி , அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவற்றிலிருந்து வெளியே வர உதவும் கதாநாயகன் , (சில சமயம் பிரச்னைகளின் மூல காரணமே கதானாயகனாக இருப்பான்) , எப்படி அவள் அவற்றை எதிர்கொண்டு மீண்டு வந்து இறுதியில் இருவரும் இணைகின்றனர் என்ற ஒரு தங்க முடிச்சு தான் கதைக்கான outline.

ஆனால் கதைக்களன், நாயகி மற்றும் நாயகன் குடும்பம், கதையில் நடைபெறும் சம்பவங்கள் ஆகியவை வேறுபடும். அவற்றின் சுவாரசியம் ஒவ்வொரு நாவலிலும் ( 150 நாவல்கள் தாண்டியாயிற்று) புத்தம்புதிதாக இருப்பது அவருடைய மேஜிக் என்பதா வெற்றியின் ரகசியம் என்பதா !

"அப்புறம் இளவரசனும் இளவரசியும் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்" என்ற fairy tales ன் முடிவுதான் பெரும்பாலும். மொத்தத்தில் படித்து முடித்தவுடன் கிடைக்கும் திருப்தியும் நிறைவும் தனிதான்.

கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் பெயர் வைப்பதே மிகுந்த ரசனையுடன் பொருள் நிறைந்த பெயராக இருக்கும்.

திருக்குறளும் பாரதியும் மேற்கோள் காட்டப்படுவார்கள். கல்கியின் "பொன்னியின் செல்வனை நாயகி, வீட்டுப்பெரியவர்களுக்கு படித்துக்காண்பிப்பாள்.

முக்கியமாக அவருடைய எழுத்து நடை-- சீரான ஆற்றோட்டம் போன்ற நடை , ஆங்கிலக்கலப்பில்லாத அழகு தமிழில், இருவர் பேசிக்கொள்ளும் போது பெரும்பாலும் அவற்றை பேச்சுத்தமிழில் இல்லாமல் இலக்கண நடையிலேயே எழுதுவார்.

க்ரெடிட் கார்ட் புழக்கத்தில் வந்த சமயம்.
க்ரெடிட் கார்ட்டை மையமாக வைத்து ஒரு நாவலில் வெளியுலகம் அறிந்திராத ஒரு இளம் பெண் கார்டைத் தொலைப்பதும் அதைத் தொடர்ந்து அவள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள், அவள் மேற்கொள்ளும் இரவுப்பயணம், அதுவும் முன் பின் தெரியாத வாலிபனுடன் அதுவும் காரில், என்று மிகமிக சுவாரசியமாக எடுத்துக்கொண்டு போவார்.

இன்னொரு நாவலில் சுற்றுலா செல்லும் கலலூரி மாணவி வம்பு செய்யும் வாலிபனை கீழே தள்ளி விட்டு தன்னைக்காப்பாற்றிகொள்ள, அவனோ பழி வாங்கவே ( சில பல வருடங்கள் கழித்து )அவளை திருமணம் செய்ய ஒவ்வொரு தடவையும் அவனிடமிருந்து அவள் தப்பிப்பது, த்ரில்லர் மாதிரியே போகும்.

புதிய நாவல் வந்து விட்டதா என்று கடைக்குப் போவதே ஒரு ஜாலி அனுபவம்தான். முதலில் எல்லாம் கடைக்காரர் அலுத்துக் கொள்வார் "நீங்க கேக்கற புத்தகம் நம்ம ஏரியாவுல வரதில்ல' என்று. இதற்காக தி.நகர் போக முடியுமா, வாங்கி வையுங்கள் என்று தினம் சொல்லிச் சொல்லி, இப்போது எடுத்து வைத்து வீட்டுக்கே அனுப்பி வைக்கும் அளவுக்கு முன்னேறி விட்டார்.

எனக்குத் தெரிந்த, புதிதாய் திருமணமான குடும்பத்தில் மாமியார் மருமகள் இருவருமே ரமணி சந்திரன் ரசிகைகள் என்பது தெரிந்த வுடன் முதலில் இருந்த சண்டை சச்சரவு குறைந்து ராசியாகி விட்டார்கள். போதாக்குறைக்கு மாமியார் படிக்காமல் விட்ட புத்தகங்களை அவர் பிறந்த நாளுக்கு ப்ரசெண்ட் பண்ணி கதையில் வருகிற மாதிரியே "அப்புறம் பல காலம் சந்தோஷமாய்" வாழ அச்சாரம் போட்டுக்கொண்டு விட்டாள். :-)

- சுமதி

17 Comments:

R. J. said...

Template story, change the tiltle and hero / heroin's name - voila another 'new' story. Ok for a few books, nice. I know Ramani Chandran is fast selling from the number of her new books in the railway book stalls and the highest cost - Rs 25! But, for me, no thanks! Had enough!- R. J.

shamimanvar said...

ஆனால் கதைக்களன், நாயகி மற்றும் நாயகன் குடும்பம், கதையில் நடைபெறும் சம்பவங்கள் ஆகியவை வேறுபடும். >>>... அதாவது கொஞ்சம் வேறுபடும். அதாவது அரைத்த மாவையே அரைப்பது போல...

Anonymous said...

ஐயோ, நான் அப்போ நிறைய மிஸ் பண்ணி இருக்கேனே!...

Anonymous said...

பெண் எழுத்தாளர்கள் அவர்களின் டார்கெட் ஆடியன்ஸ்-க்கு ஏற்றாற் போல் எழுதுகிறார்கள். அதில் நடுவில் நுழைந்து நீங்க ஏன் சார் அலுத்துக்கிறீர்கள்.

தமிழ் படிப்பாராம் ஆனால் தமிழ் தளத்தில் ஆங்கிலத்திலேயே கருத்திடும் பொன்னானபனியும் செய்வாராம் .

என் கணனியில் தமிழ் இல்லை அலுவலக கணனி -ன்னு எதாவது நொண்டி சாக்கு சொல்ல வேண்டியது.

தமிழ்ல அடிக்கமட்டும் வராது ஆன கருத்து மட்டும் மடை திறந்த வெள்ளமாய் வரும். சின்ன முயற்சி செய்தால் தமிழிலேயே அடிக்கமுடியும் அதைக் கூட முயற்சி செய்யாமல்.....

சுபத்ரா said...

ரமணி சந்திரனை நினைவூட்டிய நல்ல பதிவு. ஷார்ட் & க்ரிஸ்ப்..

எவ்வளவு பெரிய ‘இலக்கியம்’ படிச்சாலும் ரமணிசந்திரன் படிக்கிற அந்த சந்தோஷம் வேற எதுல வரும்?

ரமணிசந்திரன் நாவல்களில் வரும் கதாநாயகர்கள் பல கன்னிப் பெண்களின் ட்ரீம் ஹீரோ :))

Anonymous said...

இது என்னடா இது ?
முன்ன பாரதி மணியோட பதிவு வந்த பொழுது, அவர் மத்த பதிவைஎல்லாம் பாராட்டினார் .
இப்போ அந்த வேலை சுபத்ரா அவர்களோடது .

R. J. said...

To Anony: I have a gifted lap top. This is from Google and does not have a hard disc, no loaded soft wares. We can reach the internet immediately. We can use cloud computing for our works. I tried and also asked for help to know how to download nhm writer so that I can comment in Tamil. (My desk top is not working, otherwise my comments would have been in Tamil.) Can you or others hep / guide me?

-R. J.

சுபத்ரா said...

@ Anonymous

முதலில் நான் ஒரு ரமணிசந்திரன் ரசிகை :) ஒத்த ரசனை உடையவர்களின் எழுத்திற்கு இவ்வாறு கருத்திடுவது இயற்கை..

இரண்டாவது, இ.வ.வில் இதற்கு முந்தைய என்னுடைய கமெண்ட்ஸ் எங்கே இருக்கின்றன எனத் தேடிப் பார்த்தால் தான் எனக்கே தெரியும் :)

மூன்றாவது.. இட்லிவடையில் ‘பாலிடிக்ஸ்’ படியுங்கள். என்னை வைத்து பாலிடிக்ஸ் செய்யாதீர்கள் :)

Anonymous said...

உங்கள பத்தி POLITICS பண்ணி அப்படியே உங்களை ஒரு CM இல்ல ஒரு டெல்லி லெவெலுக்கு கொண்டு போலாம்னு பாத்தேன் .
ஐய்ய, ஆசையை பாரு.

Anonymous said...

அனானி சார்- சுபத்ராவின் பதிவு இட்லி வடையில் வந்ததால் தான் பாரட்டுகிறார் என்பது எல்லாம் அநாகரிகம். பின்னூட்டத்துக்கு இப்படி அர்த்தம் கண்டுபிடிக்காதேங்க.

சுப்தரா, இந்த அதிக பிரசங்கி அனானி-க்கு உங்கள் கவிதை ஒன்றை அனுப்புங்கள், படித்துவிட்டாவது திருந்தி வாழ்கிறாரா பார்கலாம்.

Anonymous said...

சுபத்ராவின் கவிதையை படித்தால் தீராத வியாதியும் தீர்ந்துவிடும். உடனே அனுப்புங்கள்.

Anonymous said...

//சுபத்ராவின் கவிதையை படித்தால் தீராத வியாதியும் தீர்ந்துவிடும். உடனே அனுப்புங்கள்.//

ஒரு கேலி கிண்டல் எளிது ஆனால் படைப்பாளிக்குத் தான் தெரியும் ஒரு படைப்புக்கு அவன் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பது.

அவரைப் போல் இரு வரியாவது ஒரு கவிதை எழுதுங்கள் பார்ப்போம் ! அப்போது தெரியும்

Anonymous said...

//அவரைப் போல் இரு வரியாவது ஒரு கவிதை எழுதுங்கள் பார்ப்போம் ! அப்போது தெரியும் //

ஆமாம் நோமாம். ரெம்ப கஷ்டந்தேன் . கவிதை எழுதி அதை தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வெச்சு.....

Anonymous said...

//சுபத்ராவின் கவிதையை படித்தால் தீராத வியாதியும் தீர்ந்துவிடும். உடனே அனுப்புங்கள்//

ஆஹா அதிசயம் !! ஒரு ஆடு பிரியானிக்கடைக்கு அட்ரஸ் தேடுதே

Anonymous said...

//ஆஹா அதிசயம் !! ஒரு ஆடு பிரியானிக்கடைக்கு அட்ரஸ் தேடுதே//

Aadu briyani kadaikku poradhukum neenga kavithai padikarathukum ore result thaan.

Anonymous said...

க்ரெடிட் கார்ட் பற்றி தமிழகத்தில் மக்களுக்குத் தெரிவதற்கு முன்னரே அவர் எழுதி இருக்கிறார். டெம்ளெட் கதை என்று சொன்னாலும், அவரது கதையில் கொஞ்சம் பொது விடயங்களையும் புகுத்தியே எழுதுவார். சாதாரணவர்களும் புரிகின்ற மாதிரி விளம்பரத் துறை பற்றி எழுதிய ஏற்றம் புரிய வந்தாய், சில வியாபார உத்திகள், பற்றி எழுதுவதாலேயே மக்கள் விரும்புகிறார்கள். அதைவிட இலகுவான எழுத்து வழக்கு அவரிடம் உள்ளது.

Anonymous said...

go to this site to type in tamil http://www.higopi.com/ucedit/Tamil.html