பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 03, 2012

இன்னொரு சிவகாசியகப்போகிறதா திருமங்கலம்?.

இட்லிவடைக்கு வந்த கடிதம்.

மதுரைக்கு அருகில் உள்ள திருமங்கலத்தில் மிக ஆபத்தான முறையில் வீடுகளுக்கு உபயோகப்படுத்தப் படும் LPG சிலிண்டர்களை கமர்சியல் சிலிண்டர்களில் அடைத்து கொடுக்கும் வேலை நடந்து வருகிறது. அதுவும் மிகவும் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள அரசு ஆண்கள் பள்ளிக்கு மிக அருகில் நடப்பதுதான் வேதனை. தினமும் குறைந்தபட்சம் 50 முதல் 60 சிலிண்டர்கள் வரை வியாபாரம் நடக்கிறது.

அருகில் உள்ள கிராமங்களிலிருந்து 450 முதல் 500 ரூபாய் வரை வாங்கப்படும் சிலிண்டர்கள் மாருதி வேனில் வீட்டுக்கு எடுத்து வரப்படுகிறது. பின்பு அதனை தண்ணீர் இறைக்கப் பயன்படும் பம்ப் உதவியுடன் மிக ஆபத்தான வகையில் கமர்சியல் சிலிண்டர்களுக்கு மாற்றப்படுகிறது. இவை அங்குள்ள கடைகளுக்கு 300 முதல் 400 ரூபாய் வரை இலாபம் வைத்து விற்கப்படுகிறது. இவையனைத்தும் எல்லோரும் பார்க்கும் வகையில் வீட்டின் வாசல் பகுதியில் நடப்பதுதான் ஆச்சர்யம். அருகில் இருக்கும் வீடுகளுக்கு இந்த ஆபத்து எதுவும் தெரியவில்லை. ( அதே தெருவில் வசிப்பவர்களுக்கு 50 ரூபாய் அதிகம்). அங்குள்ள IOC முகவர் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விடுவதால் எந்த தடையும் இல்லை.

நான் LPG தொடர்பிலான ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்வதால் இந்த கொள்ளையின் அபாயம் நன்றாக அறிந்தவன் என்ற முறையில் என்னால் இதை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. சிவகாசியில் சமீபத்தில் நடந்த தீ விபத்தை போல பலமடங்கு அதிகம் ஆபத்து உள்ள ஒரு செயல் இங்கு கவனிக்கப்படாமலேயே உள்ளது.

நாளை எதாவது வெடிவிபத்து நடந்த பிறகு அனைவரும் இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்று புலம்பி என்ன பயன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த அபாயத்தை தடுத்து நிறுத்துவார்களா?.

4 Comments:

Anonymous said...

இது ஏதோ அந்த ஒரு இடத்தில் மட்டும் நடப்பது இல்லை. பல இடங்களில் ஆட்டோக்களுக்கு திருட்டுத்தனமாக கேஸ் நிரப்பித் தரும் வேலை நடக்கிறது. இதற்கு ஒரே தீர்வு, அரசு கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்திவிட்டு, மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்குகளுக்கு அனுப்புவதுதான். அதுவரை இப்படியான வேலைகள் தொடரும்.

சரவணன்

ஜெயக்குமார் said...

நமக்கெல்லாம் 10, 50 பேரு வருஷத்துக்கு செத்தாலே கோவம் வர்ரதில்லை.. இதெல்லம் ஒரு விஷயமா? காசு வாங்கிக்கொண்டு இதையெல்லாம் அனுமதிக்கும் நாய்களை அந்த சிலிண்டரிலேயே கட்டி வெடிக்கச் செய்யவேண்டும்.

Shankari said...

Hope concerned authority take some action against defaulters

Anonymous said...

idly vadaikku anuppiya piragu alladhu anyppum munnar sambandhapatta adhikarikalukku pugaar aLithaagivittadhaa?
avarkalin nadavadikkai enna?