பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 25, 2012

'புது' டெல்லி

23 வயதுப் பெண் பாலியல் வன்முறை செய்தி கடந்த ஒரு வாரமாக எல்லா டிவியிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் ஊர்வலம் என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஞாயிறு அன்று நடைபெற்ற ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த சுபாஷ் சந்த் தோமர் என்ற காவலர் மருத்துவமனையில் இன்று மரணம் அடைந்தார்.

சில கேள்விகள்:

1. இந்த போராட்டத்துக்கு காரணம் மீடியா தான். நேற்று, அதற்கு முன் தினம், ஏன் என்று கூட இந்த மாதிரிச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் மீடியா இந்த ஒரு சம்பவத்தை மட்டும் ஏன் எப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது? மீடியாவில் ஜீன்ஸ் டீஷர்ட் போடும் மேல்தட்டு நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பெண்மணிகள் மட்டுமே வந்து பெண்ணுரிமைக்குக் கூவியதற்கு பதிலா பட்டி தொட்டிகளில் இருக்கும் சிலபல ஆம் ஆத்மிகளை ஏன் கூப்பிடலை?

2. ஏன் குஜராத் தேர்தல் முடிவு அன்று மட்டும் மீடியா இந்த செய்தியைக் கண்டுக்கொள்ளவில்லை ?

3. மாணவர்கள் இந்த மாதிரி போராட்டம் நடத்தும் போது அதில் தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து ஏதாவது அசம்பாவிதம் நடத்தினால் என்ன ஆகும்? யாரை குறை சொல்லுவார்கள் ?

4. போலீஸ் தங்கள் கடமையை செய்கிறார்கள். ஆனால் போலீஸை ஏதே ஒரு வில்லன் போல ஏன் மீடியாக்கள் சித்தரிக்கிறது ? உதாரணம் சர் தேசாய் போலீஸ் உயர் அதிகாரியை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரும்ப திரும்ப கேட்டது. போலீஸ் மீது எப்படி நமக்கு மதிப்பு வரும்?

5. பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதில் மற்றுக் கருத்து இல்லை ஆனால் பஸ், கார்களில் இந்த மாதிரி தப்புகள் நடக்கும் போது அங்கே போலீஸ் இருக்க வேண்டும் என்பது எப்படி சாத்தியம் ? குற்றத்துக்கு முக்கிய காரணம் நாம் தான்.

6. அப்படியே போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் - பெண்கள் பாதுகாப்புக்கு என்ற தீமுக்கு பதில் நல்ல கல்விக்காகவும் , மதுஒழிப்புக்காகவும் நடத்த வேண்டும். நகரங்களில் யுவதிகள் சம உரிமை என்ற போர்வையில் சரக்கடிப்பதையும், தம்மடிப்பதையும் கண்டித்துத் திருத்த வேண்டும். சும்மா ஃபேஸ்புக்கில் கருத்து சொல்லி 'லைக்' போடுவதால் தீர்வு காண முடியாது.

7. எல்லாத்துக்கும் மேலாக நீதித் துறையில் அரசியலோ போலீசோ தலையீடு கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். செய்வார்களா ?

டெல்லி சி எம் அடக்கமா ஷிண்டேக்கு லெட்டர் எழுதின மாதிரி எல்லாப் பெண்களும் அடக்கமாக இருக்க வேண்டும் என்றால் நம்பளை பிற்போக்கு வாதிகள் என்பார்கள்.


16 Comments:

பழனி.கந்தசாமி said...

எல்லாப் பெண்களும் அடக்கமாக இருக்க வேண்டும் என்றால் நம்பளை பிற்போக்கு வாதிகள் என்பார்கள்.

சரி.

கொடும்பாவி said...

எல்லாம் பணம்தான்.. இது கூட பாக்கிஸ்தான் சதியோ?? அல்லது பார்ப்பனர்களின் கூட்டு வேலையோ?? நாம தான் படத்துல பாக்கறோமே தப்பு நடக்கற இடத்துல ஹீரோ போலீஸ் எப்படி வருவார்.. அது போல ஏன் நடைமுறையில் நடப்பதில்லை?? இலவசத்திற்கு இளிக்க வைத்த மக்களை ஒரு பொட்டி முன் உட்கார வச்சு யோசிக்க விடாம செஞ்சாச்சு..
நாலவது தூ(த்தூ)ணும் கொஞ்சம் ஆட ஆரம்பிச்சாச்சு..!
- கொடும்பாவி

Anonymous said...

Well said. But not sure how many people will accept the last point. Also we have to see whether we can stop these 24 hour news channels because only channels make a big fuss always out of these kind of situations just for the sake of their own publicity.

Ranjo said...

தூத்துக்குடி பாலியல் குற்ற சம்பவத்தில் கருணாநிதி ஜெயாவை தாக்கி அரசியல் செய்கிறார்.
கலைஞர் டிவி யும் இதில் அரசியல் செய்கிறது. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ... என்றல்லாம் ஜெயாவை விமர்சனம் செய்து கொண்டு வருகிறது..

ஒரு புள்ளி விவரம் (http://www.hindu.com/2010/05/08/stories/2010050863121000.htm).
2007இல் தமிழகத்தில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 523, அதுவே 2009 இல் 596.
2006 முதல் 2011 வரை கருணாநிதி தான் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் ....
இதில் எத்தனனை முறை பதிக்கப்பட்ட பெண்களிடம் கலைஞர் ஆறுதல் சொல்லி இருக்கிறார் .

இந்த சம்பவத்தில் ஒரு பொதுவான கண்ணோட்டம் தேவை .

ConverZ stupidity said...

//நகரங்களில் யுவதிகள் சம உரிமை என்ற போர்வையில் சரக்கடிப்பதையும், தம்மடிப்பதையும் கண்டித்துத் திருத்த வேண்டும்.//

இட்லிவடை இது ஆணாதிக்க மனோபாவம் :D

Anonymous said...

" நகரங்களில் யுவதிகள் சம உரிமை என்ற போர்வையில் சரக்கடிப்பதையும், தம்மடிப்பதையும் கண்டித்துத் திருத்த வேண்டும்"- Is it k if guys drink and misbehave? The problem arises only because of girls drinking?

"எல்லாப் பெண்களும் அடக்கமாக இருக்க வேண்டும் என்றால் நம்பளை பிற்போக்கு வாதிகள் என்பார்கள்"- What are trying to say? Girls are raped and molested because they come out of home and move in the society.So for there security the should sit at home draping saree and doing household chores? They should come out only with the husband/father???
A 13 yr old girl child has been sexually assaulted near Salem this week. Will you say the same yellow highlighted reasoning in this situation also.
Please stop criticising girls and take some moral responsibility.As said media and society should change.Kindly don't propagate these sort of ideas like" எல்லாப் பெண்களும் அடக்கமாக இருக்க வேண்டு"

Anonymous said...

"எல்லாப் பெண்களும் அடக்கமாக இருக்க வேண்டும்"

இது கண்டிக்க தக்கது!! ஆண்கள் மட்டும் எந்த நேரமும் வெழியே செல்லலாம், ஆணால் பெண்கள் கூடாதா??

இந்தியாவை விட்டு கொஞ்சம் வெழியே வந்து பாருங்கள், அப்பவாது பாதுகாப்புனா என்னானு உங்களுக்கு புரியும்.

-ரமேஷ்

Rajalakshmi said...

There is no discrimination point in sex.the sufferer is the female.If you want not to suffer be safe within the guarded society.We cannot change the criminal sect.Going out in odd hours does not bring equality with the male sex.

R. J. said...

நான் இங்கேயே 'லைக்' போடுகிறேன்! இந்த மீடியாவும் வேலை அற்ற இத்தனை மக்களும் போராட்டத்தை இத்தனை நாட்கள் இழுத்து அதன் வீரியத்தைக் குறைத்து விட்டார்கள். கும்பலில் விஷமிகளும் சேர்ந்துகொண்டு திசை மாற்றிவிட்டார்கள். நடந்த விஷயம் மன்னிக்கக் கூடாத குற்றம், குற்றவாளிகள் உடனடியாக, அதிக பக்ஷமாக தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே போல் காவலர் உயிரும் விலை மதிக்க முடியாதது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அப்புறமும் தினம் 3 கேஸ்கள் (தமிழ் நாட்டிலும்) பேப்பரில் சிறிய அளவில் வருகின்றன. அவற்றுக்கு டெல்லி கேஸ் அளவு முக்கியத்துவம் கிடையாது. ஏன் என்பது புரியாத புதிர் தான்.

இந்த வாரம் ஞானி குமுதத்தில் எழுதியிருக்கும் மன்னிப்புக் கடிதத்தில் இருப்பது போல் நாம் எல்லோரும் ஒருவிதத்தில் குற்றவாளிகள் தான். தனி மனிதன் எதுவும் செய்ய முடியாது - சினிமா ஹீரோ தவிர. மக்கள் குரல் எழுப்பிவிட்டார்கள். அடுத்த கட்ட போராட்டத்திற்கு முன் கொஞ்சம் பொறுமையாயிருந்து அரசும் சட்டமும் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்ப்பது அவசியம். இப்போதைக்கு போராட்டம் நிறுத்தப் பட வேண்டும்.

-ஜெ .

Anonymous said...

Yellow comment is just B** S***...
Do you think this happens only to the girls going to pub or dress provocatively..?

சிந்திப்பவன் said...

இந்த நாட்டில் பிறந்ததைத் தவிர வேறு எந்த ஒரு தவறும் செய்யாத அந்த மலர் இன்று உதிர்ந்து மறைந்தது.இனியும் எந்த ஒரு மலருக்கும் இத்தகைய கதி வராமல் தடுப்பதே நாம் அந்த மலருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.

இட்லி வடையின் மஞ்சள் கமென்ட் பொதுவாக சுவையாகவும் நச்சென்றும் இருக்கும்.ஆனால் இந்தப்பதிவில் என்னஆயிற்று எனத்தெரியவில்லை.

//டெல்லி சி எம் அடக்கமா ஷிண்டேக்கு லெட்டர் எழுதின மாதிரி எல்லாப் பெண்களும் அடக்கமாக இருக்க வேண்டும் என்றால் நம்பளை பிற்போக்கு வாதிகள் என்பார்கள்.//

நாட்டின் தலைநகரத்தில் வசிக்கும் ஒரு பெண்,மாலைக்காட்சி திரைப்படத்தை தன் நண்பனுடன் பார்த்து விட்டு, சுமார் ஒன்பது மணிக்கு பஸ் ஏறி உள்ளாள்.
இதில் என்ன அடக்கமின்மை இருக்கிறது?சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.

பெண்கள் அனைவரும் ஆண்களைப்போல உடை அணிந்து ஒட்டு மீசை வைத்துக்கொண்டுதான் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்ற ஒரு யோசனைதான் இன்னும் வரவில்லை.மற்றபடி சுத்தம்.

அதேசமயம் இந்த கொடுங்குற்றத்தைப் புரிந்த அந்த ஆறு பேரையும் தூக்கிலடவேண்டும் எனும் குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன.அவர்களை தூக்கிலிடும் முன்,ரதோர் என்ற சண்டிகர் மாநில முன்னாள் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலை முதலில் தூக்கிலிட வேண்டும் எண்பது என் வேண்டுகோள்.

Sh... said...

கௌரவமாக, பிற ஆண்களைத் தூண்டாத வகையில் ஆடை அணியும் மற்றும் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பெண்களையும் ஒரு சில மிருகங்கள் சீண்டத்தான் செய்கின்றன. இட்லிவடையும் அந்த மஞ்சள் வரிகளை ஆதரிப்பவர்களுக்கும் இது தெரியாமல் இருப்பது தான் ஆச்சரியம்.

dr_senthil said...

ஒன்று சமூகம் திருந்த வேண்டும் இல்லை நாம் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.. இதில் எது எளிது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.. முன்னது நடந்தால் அடுத்த தலைமுறைக்கும் நாட்டுக்கும் நல்லது ..பின்னது இப்போதைக்கு நமக்கு நல்லது..

dr_senthil said...

ஒன்று சமூகம் திருந்த வேண்டும் இல்லை நாம் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.. இதில் எது எளிது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.. முன்னது நடந்தால் அடுத்த தலைமுறைக்கும் நாட்டுக்கும் நல்லது ..பின்னது இப்போதைக்கு நமக்கு நல்லது..

Anonymous said...

If we come across one more World war probably it could end up, men has to stay home after hours. The point here is who or what is precious. as a Nation We not even free from one family how come we can expect the whole women society is free and safe. They do have to hold their responsibility on their own. There are some place and time we avoided to go only for our safety. not to prove our freedom. We were not able to run a free election in a broad day. How can we expect a young girl in winter late night could be safe out there in places like Munika.Freedom does comes with responsibility.

kala nesan said...

Delhi CM wants to take police dept also in her control. thats why she is repeatedly blaming police....