பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 16, 2012

நாயன்மார்கள் புதிர் விடை

சிமுலேஷன் மட்டும் தான் சரியான விடை அளித்துள்ளார்

மூவருக்கும் பொதுவான விஷயம் "மஹதி". நாரதர் கையில் உள்ள யாழின் பெயர் "மஹதி". பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் கண்டு பிடித்த ராகத்தின் பெயர் "மஹதி". ஜேசுதாஸ் அவர்கள் பாடிய "அதிசய ராகம்" பாடலின் துவக்க ராகம் "மஹதி"

நாயன்மார்கள் மொத்தம் 63 தலைவருக்கு வயது 63 இந்தப் பதிவு வெளியான நாள் 12-12-12 - ரஜினி படம் என்ற க்ளு வை சிலர் கண்டுப்பிடுத்துள்ளார்கள். ஆனால் விடையை சரியாக சொல்லவில்லை.

நண்பர் சிமுலேஷனுக்கு வாழ்த்துகள். அவருக்கு புத்தம் ஒன்று அனுப்பிவைக்கப்படும்

கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி

The ages of 3 celebrities as follows: Rajini=63=Number Nayanmargal KJYesudas=73 Balamuralikrishna=83 என்று ஒருவர் சொன்ன விடையை ரசித்தேன் நாரதரை விட்டுவிட்டார் ... நாராயணா இந்த ... :-)

11 Comments:

Sundupluseli said...

Congrats to the winner .

Sundupluseli said...

Congrats to the winner .

dr_senthil said...

சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் அன்று சூப்பர் புதிர் சூப்பர் விடை,
சிமுலேஷன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Anonymous said...

நண்பர் சிமுலேஷனுக்கு வாழ்த்துக்கள். இந்த சங்கீத சீசனுக்கு அவர் எழுதிய கதை ஒன்றை நீங்கள் இங்கே படித்து ரசிக்கலாம்...

http://balhanuman.wordpress.com/2012/12/17/

Anonymous said...

போட்டி வைத்தால் அனைவரும் கலந்து கொள்வதற்காக வைக்கணும் . மஹதி எல்லாம் தெரிந்த இசை ஞானிகள் மட்டும் கலந்து கொள்வற்காக மட்டும் என்றால் , சங்கீதம் தெரிந்த வித்துவான்களுக்கு மட்டுமே போட்டி என்று சொல்லி இருக்க வேண்டும். வீனா எங்கள் பொன்னான நேரத்தை வீனடிதிருக்க கூடாது. இட்லி வடை படிப்பதலே நாங்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று எண்ணக்கூடாது.

IdlyVadai said...

சிமுலேஷன் சார் உங்க முகவரியை எனக்கு அனுப்பவும். புத்தகம் அடுத்த மாதம் கண்காட்சி போது அனுப்பி வைக்கப்படும். வாழ்த்துகள்
இட்லிவடை

R. J. said...

Oru vaziyaaka therinthu koNdEn - Naarathar kaiyil Yaazh thaan, Venai illai enru! (adiththuk koNdavarkal srnthu koLvaargaLaa?)

Paadagi Mahathiyin padaththai engaavathu oru koodiyil poottirukkalaam!

-R. J.

Simulation said...

மஹதி என்பது நாரதர் கையிலிருக்கும் வீணையின் பெயராகும். ஆனால், 'எந்தப் படத்திலும் நாரதர் வீணையின வைத்துக் கொண்டு வருவதாகப் பார்த்ததேயில்லையே! தம்புராவைதானே வைத்துக் கொண்டு வருவார்', என்று நீங்கள் வியப்பது புரிகின்றது. முதன் முதலாகத் திரைப்படத்தில் நாரதர் வீணையை வைத்துக் கொண்டு வருவதாகத்தான் காட்சிகள் அமைக்கப் பெற்றிருந்தன. ஆனல் நாரத இரண்டு குடங்கள் கொண்ட வீணையினை வைத்துக் கொண்டுபடும் அவஸ்தையினப் பார்த்த ஆர்ட் டைரக்டர், வீணைக்குப் பதிலாக எளிமையான ஒரே குடம் கொண்ட தம்பூராவினை வைத்துக் கொண்டிருப்பது போலக் காட்சிகளை மாற்றிவிட்டாராம். அதற்குப் பிறகு வந்த எல்லாப் புராணப் படங்களிலும், நாரதர் ஏன் என்று கேள்வி கேட்காமல் மஹதி என்ற வீணையினைத் தூக்கி எறிந்துவிட்டுத் தம்பூராவை மீட்டிக்கொண்டு, "நாராயண; நாராயண" என்று வலம் வர ஆரம்பித்துவிட்டார்.


- சிமுலேஷன்

Anonymous said...

இந்தப் போட்டி சொல்லி வச்சுட்டு நடத்தின மாதிரி இருக்குது...

இது மாதிரி நாங்களும் ’கண்டதை’க் கேட்டால் அதுக்கு எல்லோராலும் பதில் சொல்ல முடியுமா?

//போட்டி வைத்தால் அனைவரும் கலந்து கொள்வதற்காக வைக்கணும் . மஹதி எல்லாம் தெரிந்த இசை ஞானிகள் மட்டும் கலந்து கொள்வற்காக மட்டும் என்றால் , சங்கீதம் தெரிந்த வித்துவான்களுக்கு மட்டுமே போட்டி என்று சொல்லி இருக்க வேண்டும். வீனா எங்கள் பொன்னான நேரத்தை வீனடிதிருக்க கூடாது. இட்லி வடை படிப்பதலே நாங்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று எண்ணக்கூடாது.//

இதை 100% ஆமோதிக்கிறேன்.

R. J. said...

Thanks to 'Simulation' Sundar for a nice comment on Narathar and his Mahathi Veenai. (IV and others - athu Yaazum illai, veenaiyum illai, thamberaa thaan!) - R. J.

dr_senthil said...

சரி, தெரியாத ஒன்றை தெரிஞ்சிகிடோம். நல்ல விசயம் தானே!!
இந்த புதிர் இல்லேன்னா இப்படி ஒரு விசயமே வெளிவந்திருக்கதே