பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 11, 2012

புத்தகக் கண்காட்சி புத்தக லிஸ்ட்

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 4 முதல் 21 வரை.
வழக்கம் போல இதை பற்றி டிவிட்டர், வலைப்பதிவு என்று பதிவுகள் வர ஆரம்பித்துவிட்டது.
என்ன புத்தகம் வாங்கலாம் என்று மக்கள் லிஸ்ட் போட ஆரம்பித்துவிடுவார்கள்.என்ன புத்தகம் வாங்கலாம் என்று நீங்கள் முடிவு செய்திருக்கீறீர்கள் என்று பின்னூட்டதில் சொன்னால் என்னை போல நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்.

பின்னூட்டத்தை உடனே பிரசுரிக்க போவதில்லை... :-) ஆனால் கடைசியில் டாப் 10 புத்தகங்கள் என்று போட உத்தேசம் !
25 Comments:

ஸ்ரீராம். said...

அவ்வப்போது புத்தக விமர்சனங்களில் படித்து வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்ட புத்தகங்களின் பெயர்கள் நினைவுக்கு வரவில்லை. எனக்கும் கூட ஒரு லிஸ்ட் தேவை. கிழக்குப் பதிப்பகத்தின் வைஷ்ணவம் வாங்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு நல்ல உள்ளம் அந்தப் புத்தகத்தைப் பரிசாக கொடுத்து விட்டார்! இங்கு வெளியாகும் லிஸ்ட்டுக்கு நானும் வெயிட்டிங்!

Benjamin David said...

1)Oru Manidhan Oru Vidu Oru Ulagam
by Jayakanthan
2)Mystic Musings by Jaggi Vasudev

R. J. said...

Please see that the list is provided befre Jan. 4th!

Another request, please do publish the 'pinnoottams' as we can see every reader's opinion. Like Mr. Sriram, if people who will comment have bought / got good books already, they will not include in their list! - R. J.

சிந்திப்பவன் said...

இதோ என் லிஸ்ட்..

1."ஒன்பதாம் நூற்றாண்டில் சமணமும்,சைவமும்"...ஆறுமுக ஓதுவார்.

2."என் கோழி வளர்ந்துவிட்டது"..அமீர் பஷீர்.(தமிழாக்கம்)ஸ்ரீதரன்

3"ஸ்டாலின் ஸ்வெட்லானவிற்கு எழுதிய கடிதங்கள்"...கஷோபிஷ்.(தமிழாக்கம்)பார்த்தசாரதி

4"எங்க அப்பா இன்னும் பிறக்கவேயில்லை"..அமூல்ய காண்டேகர்.(தமிழாக்கம்)சிவப்பிரகாசம்.

5"இந்த புத்தகத்தை கழுதைக்கு போடுங்கள்"..."நானா நீயா" புகழ நாகராஜன்.

6."வடதுருவத்தில் ஆறுமாதம்"..
காசிக்.

7."ரிக் வேதம் மூலமும் விளக்கமும்"..நாராயண கனபாடிகள்.உரை..பா.ரா.

8."Operation Bin Laden"..Louis Spell

9."Riches,poor and Bourgeois"..Samuel Butler

10."My Life"..U.V.Swaminatha Iyer.


ஆனால் வாங்கப்போவது (என்னமோ)...

."சமைத்துப்பார்"..மீனாட்சி அம்மாள்.

:யவன ராணி" ..சாண்டில்யன்

"வாழ்க்கை இனிப்பானது"..ரமணி சந்திரன்.

"மேஷராசிக்கு 2013 ஆண்டுக்கான பலன்கள்"..ஜோதிட திலகம்.ஆழியூர் அய்யாசாமி.

மேலும்..
மிளகாய் பஜ்ஜிகள்,புரோட்டாக்கள்,
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா,ஒரு கிலோ handbills,

and

கண்காட்சிக்கு வெளியே,
ஒரு strip Gelucil pills.

பி.கு:முதல் லிஸ்ட் முழுவதும் என் கற்பனையே..சும்மா ஒரு கெத்திற்கு.(geth)

Nilofer Anbarasu said...

கடலோடி (ஆசிரியர்: நரசய்யா)

IdlyVadai said...

Dear RJ, Yes I will release the book list before Jan 4th. I would like to keep the comments hidden for some reasons.

dr_senthil said...

1.கிருஷ்ணன் வைத்த வீடு- வண்ணதாசன்(சிறு கதை தொகுப்பு)
2.கன்னா பின்னா கதைகள்- ரா.கி.ரங்கராஜன்(காதல் - நகைச்சுவை)
3.யூதர்கள்-முகில் (வரலாறு )
4.பெயரற்ற யாத்ரீகன்- யுவன் சந்திரசேகர்(ஜென் கவிதைகள்)
5.அறம்- ஜெயமோகன் - நண்பர்களுக்கு பரிசளிக்க

விருபா - Viruba said...

கடந்த ஆண்டு ஒவ்வொரு கடையாக புத்தகக் கண்காட்சி அரங்கில் அலைந்து ஒரு படிவத்தைக் கொடுத்து உங்கள் கடையில் அதிகமாக விற்பனையான புத்தகங்கள் 3 எவை என்று குறித்துக்கொடுங்கள் என்று கேட்டபோது பல கடைக்காரர்கள் அத்தகவலைத் தரவில்லை. இதனால் இவற்றை இணையத்தில் இணைக்கவில்லை.

BalHanuman said...

என்னுடைய லிஸ்ட் இதோ...

1- கம்பனில் ராமன் எத்தனை ராமன் - விகடன் பிரசுரம்
2- மௌனியின் மறு பக்கம் - விகடன் பிரசுரம்
3- கம்பன் தொட்டதெல்லாம் பொன் - விகடன் பிரசுரம்
4- ஸ்ரீ ரமண மகரிஷி - விகடன் பிரசுரம்
5- காமகோடி பெரியவா - விகடன் பிரசுரம்
6- மஹா பெரியவர் - விகடன் பிரசுரம்
7- ரமண பகவானும் திருக்கோயில்களும் விகடன் பிரசுரம்
8- இட்லி, ஆர்கிட், மனஉறுதி! விகடன் பிரசுரம்
9- மூங்கில் மூச்சு - விகடன் பிரசுரம்
10- நினைவு நாடாக்கள் - விகடன் பிரசுரம்
11- தென்னாட்டுச் செல்வங்கள் - விகடன் பிரசுரம்
12- அவன் - வானதி பதிப்பகம்
13- திரைச்சீலை - திரிசக்தி பதிப்பகம்
14- தமிழ்நாடு பயணக்கட்டுரை - ஏ.கே.செட்டியார்
15- ஸ்ரீ வைஷ்ணவம்
16- என்ன ஊரில் என்ன ருசிக்கலாம் ?
17- சக்கரவர்த்தி திருமகன் - ராஜாஜி
18- வியாசர் விருந்து - ராஜாஜி
19- ராமானுஜ காவியம் - வாலி
20- பால் நிலாப் பாதை - இளையராஜா
21- அப்பா - சிவசங்கரி
22- கம்பர் தரும் ராமாயணம் - டி.கே.சி. 3 volumes
23- அன்-சைஸ் - பா.ராகவன் - மதி நிலையம்
24- பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - என்.சொக்கன்
25- வெற்றிக்கு சில புத்தகங்கள் - என்.சொக்கன்
26- கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கதை - என்.சொக்கன்
27- மென்கலைகள் (முக்கியமான Soft Skills பற்றிய சிறு கட்டுரைகள்) - என்.சொக்கன்

R. J. said...

Thank you, - R. J.

sury Siva said...

ஒரு முதியோனின் வேண்டுகோள்.

வருடா வருடம் வழக்கமாக வருகின்ற இந்தப் புத்தக விழாவினில் நாம் தேடுகின்ற புத்தகங்களை வாங்குவதிலும்
அவற்றினைப் படிப்பதிலும் இருக்கும் இன்பமே தனி.

நானும் பல ஆண்டுகளாக, ஒரு ஐம்பது வருடங்களாக, புத்தகங்கள், மோஸ்ட்லி ஆன்மீகம், தத்துவம், தமிழ் இலக்கியம்
ஆனவற்றில் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வருகிறேன்.

நேற்றும் ஒரு கிடைத்ததற்கரிய புத்தகம் ஒன்று சிருங்கேரி ஜகத்குரு கட்டுரைகளை அடங்கிய ஸ்ரீ குரு கிருபா விலாசம்
2003 ல் வெளியிடப்பட்டது. 3 பாகங்கள் அடங்கிய தொகுப்பில் இரண்டாவது கிடைக்கவில்லை. அதனால் அதற்கு ஒளி நகல்
எடுத்தேன்.

அதெல்லாம் இருக்கட்டும். புத்தகங்களை வாங்குகிறோம். படிக்கிறோம். அதற்குப்பின்னே அது ஒரு அலமாரியில் தூங்குகிறது.
எல்லோர் வீட்டிலுமே. என் வீட்டிலும் ஒரு வாசக சாலை இருக்கிறது எனப்பெருமையுடன் பேசுவதைத் தவிர அந்தப் புத்தகங்கள்
பலர் வீட்டிலே தூசு படிந்தே காணப்படுகிறது.

நாம் வாங்கும் புத்தகங்கள் தலைப்பிலும் நம் சந்ததியருக்கு பெரும்பாலும் இன்டரஸ்ட் இருப்பதில்லை. அவர்கள் நோக்கு வேறாக‌
இருக்கிறது.

புத்தகங்களை வாங்கி படித்தபின்னே அதை ஏதேனும் ஒரு பள்ளிக்கு அதை நன்கொடையாகக் கொடுத்தால் என்ன ?

உங்கள் வாசகர்கள் கவனத்திற்கு.

சுப்பு ரத்தினம்.
www.vazhvuneri.blogspot.com

Anonymous said...

இட்லி வடையின் (விருந்தினர்) நட்சத்திர எழுத்தாளர் எழுதிய கவிதைகள் புத்தகமாக வந்து விட்டதா ? அது எங்கே கிடைக்கும்.

R. J. said... said...

Welcome, - R. J.

சிந்திப்பவன் said...

IV,
I had also replied (on 11th) but the same is not seen here.Is it reserved for Jan 4th or rejected ?

IdlyVadai said...

சிந்திப்பவன்,
வருட கடைசியில் எந்த புத்தகம் வாங்கலாம் என்று ஒரு லிஸ்ட் போடுகிறேன். நன்றி
இட்லிவடை

R. J. said...

To Mr. Suri Siva: School children may not be interested in the type of books grown ups read - particularly -
ஆன்மீகம், தத்துவம், தமிழ் இலக்கியம், சிருங்கேரி ஜகத்குரு கட்டுரைகளை அடங்கிய ஸ்ரீ குரு கிருபா விலாசம்

etc.

Better you can give it to your friends / neighbours and ask them to return when they finish reading it.

-R. J.

dr_senthil said...

இந்த முறை நந்தனம் கிரௌண்டில் கண்காட்சி

dr_senthil said...

இந்த முறை நந்தனம் கிரௌண்டில் கண்காட்சி

aegalaivan said...

The dates mentioned for coming year's book fair in bapasi.com is 11-01-2013 to 23-01-2013

Venkatramanan Vasan said...

புத்தக மதிப்புரைகள் (1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9 , 10 , 11 , 12 , 13)

Anonymous said...

Publish the list soon. We need to check the price and prepare

hakkim said...

புத்தகங்களில் ரெண்டே வகை வாசகனுக்கு மகிழ்ச்சி தரும் / தராத என்று .குறிப்பிட்ட வயதில் இருந்த உணர்ச்சி எப்போதுமே இருக்க அவசியமில்லை - அதாவது அன்று பிடித்த படித்த எல்லாம் இன்றும் பிடிக்க வேண்டியதில்லை ...[உதாரணம் சுஜாதாவின் குப்பைகள்]ஏன் சுஜாதா என கேட்கும் .....ளுக்கு அந்தாளை சொன்னாதான புரியுது இன்னும் நிறைய சொல்ல ஆசை நம்ம சொல்லுறது புரியனுமில்லே !!!!!!!!!!!!!!!!!!!

hakkim said...

புத்தகங்களில் ரெண்டே வகை வாசகனுக்கு மகிழ்ச்சி தரும் / தராத என்று .குறிப்பிட்ட வயதில் இருந்த உணர்ச்சி எப்போதுமே இருக்க அவசியமில்லை - அதாவது அன்று பிடித்த படித்த எல்லாம் இன்றும் பிடிக்க வேண்டியதில்லை ...[உதாரணம் சுஜாதாவின் குப்பைகள்]ஏன் சுஜாதா என கேட்கும் .....ளுக்கு அந்தாளை சொன்னாதான புரியுது இன்னும் நிறைய சொல்ல ஆசை நம்ம சொல்லுறது புரியனுமில்லே !!!!!!!!!!!!!!!!!!!

hakkim said...

புத்தகங்களில் ரெண்டே வகை வாசகனுக்கு மகிழ்ச்சி தரும் / தராத என்று .குறிப்பிட்ட வயதில் இருந்த உணர்ச்சி எப்போதுமே இருக்க அவசியமில்லை - அதாவது அன்று பிடித்த படித்த எல்லாம் இன்றும் பிடிக்க வேண்டியதில்லை ...[உதாரணம் சுஜாதாவின் குப்பைகள்]ஏன் சுஜாதா என கேட்கும் .....ளுக்கு அந்தாளை சொன்னாதான புரியுது இன்னும் நிறைய சொல்ல ஆசை நம்ம சொல்லுறது புரியனுமில்லே !!!!!!!!!!!!!!!!!!!

Antony Sesurajan M said...

My list..

1. Oru porulaathaara adiyalin oputhal vaakumoolam..

2. Puthumai pithan kathaigal..

3. Vaelaan Iraiyaanmai..

4. Anu Aattam..

5. Puyalilae oru Dhoni..

6. Ivan oru Varalaaru..

7. Srimath Bagavath Geetha..