பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 10, 2012

விகடனின் வலைபாயுதே

பத்திரிகையாளர் ஞாநி அவர்களுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கார்.

முக்கியமான அறிவிப்பு இது:

தங்கள் நிறுவன ஊழியர்கள் சமூக தளங்களில் கருத்து சொல்லக் கூடாதென்று ஆனந்த விகடன் குழும நிர்வாகம் அவர்களுக்கு அண்மையில் ஒரு விதியைப் பிறப்பித்திருப்பதாக் அறிகிறேன். அதன் பின்னர் வழக்கமாக இங்கே அதிகம் உலவும் சில விகடன் ஆசிரியர் குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். இந்த விதி தனி நபரின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் அத்து மீறல் என்பதும் இதைப் பிறப்பிக்க விகடன் குழுமத்துக்கு எந்த உரிமையும் அதிகாரமும் கிடையாது என்பதே என் கருத்து. தங்கள் இதழில் வெளியாகும் விஷயங்களையே இது பத்திரிகையின் கருத்தல்ல என்று நீதிமனறத்தில் சொல்லி நழுவக்கூடிய பத்திரிகைகள் , தங்கள் ஊழியர்கள் வலை தளங்களில் சொல்லும் கருத்துகள் பத்திரிகையின் கருத்துகள் என்று கருதப்பட்டுவிடும் என்று சாக்கு சொல்வது அபத்தமானது; அநீதியானது. பதுங்கியிருக்கும் அனைத்து விகடன் ஆசிரியர் குழுவினரையும் திரும்ப வந்து வழக்கம் போல இங்கே இயங்கும்படி வேண்டுகிறேன். விகடன் நிர்வாகம் போட்டிருக்கும் விதி நீதிமன்றத்துக்குச் சென்றால் அடிபட்டுவிடும். அதற்கு அஞ்சவேண்டாம்.

ஞாநி சொல்லுவது சரி என்று ஒத்துக்கொண்டாலும், நடைமுறையில் இது சாத்தியம் இல்லை. விகடனில் வேலை பார்ப்பவர்கள் ஒன்றாம் தேதி சம்பளம் வாங்குபவர்கள். அவர்களுக்கு குழந்தைகள் இருக்கு ஃபீஸ் கட்ட வேண்டும், மின்சாரம் இல்லை என்றாலும் அதற்கு கட்டணம் கட்ட வேண்டும். யார் நீதிமன்றம் போக போகிறார்கள் ? போன வாரம் ராம் ஜெத்மலானி கட்சிக்கு எதிராக பொதுவில் பேச அவரை வெளியே துரத்தினார்கள்.... தனி நபர் கருத்து சுதந்திரம் என்ற ஒன்று இருக்கு ஆனால் தங்கள் பத்திரிக்கைக்கு எதிராக அது இருக்க முடியாது என்பது தான் நிதர்சனம்.

விகடனில் ஒரு தலையங்கம் அல்லது விகடன் தயாரிக்கும் ஒரு டிவி சீரியலை பற்றி விகடன் டீமில் இருக்கும் ஒருவர் தன்னுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் தலையங்கம் தனக்கு உடன்பாடு இல்லை என்றோ சீரியல் மொக்கை என்றோ பொதுவில் எழுதினால் அவருக்கு பல 'லைக்' வரும் ஆனால் விகடன் நிர்வாகம் அவருக்கு 'டிஸ்லைக்' அனுப்பிவிடுவார்கள். லைக் போட்டவர்கள் அவருக்கு சம்பளம் கொடுக்க போவதில்லை.

பத்திரிக்கை ஜாம்பவான்கள் அவர்கள் பத்திரிக்கையில் வேலை செய்தவர்களை எங்காவது பொது நிகழ்ச்சி அல்லது வேறு எதிலாவது எழுத வேண்டும் என்றால் இவர்களிடம் பர்மிஷன் வாங்கிய பிறகே செய்யலாம் என்ற ரூல் இருந்திருக்கிறது. ஏன் தங்கள் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்றால் கூட அவர்களிடம் கேட்க வேண்டியிருந்திருக்கிறது.

விகடன் ஏன் இந்த முடிவை எடுத்தது என்று தெரியவில்லை... ஏதாவது காரணம் இருக்கலாம். தெரிந்தவர்கள் ஆந்தையார், கழுகார் பின்னூட்டத்தில் சொல்லலாம்..

எனக்கு உள்ள ஒரே பயம் இட்லிவடை மாதிரி பொங்கல் வடை, மசால் தோசை, ஆனியன் ரவா என்று இவர்கள் வந்தால் என் பிழைப்பு பாதிக்கப்படும் :-)

அப்டேட்:

ரவி பிரகாஷ் ஞாநிக்கு சொன்ன பதில் இது

அரைகுறையாகத் தெரிந்துகொண்டு இப்படிப் பதிவிட்டிருக்கும் திரு.ஞாநி அவர்களுக்கும், அவருக்கு ஆதரவாக இங்கே கமெண்ட் போட்டிருக்கும் மற்றவர்களுக்கும் இங்கே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சமூக தளங்களில் கருத்து எதுவும் சொல்லக்கூடாதென்று விகடன் குழும நிர்வாகம் தன் ஊழியர்களுக்குக் கட்டளை எதுவும் இடவில்லை. சொல்கிற கருத்துக்கள் தனது சொந்தக் கருத்துக்களே, விகடன் குழுமத்திற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவுறச் சொல்லுமாறுதான் உத்தரவு பிறப்பித்துள்ளது. விகடனுக்குச் சொந்தமான புகைப்படங்கள், தகவல்கள் எதையும் தங்கள் தனிப்பட்ட முக நூலில் பகிர வேண்டாம் என்றுதான் அறிவுறுத்தியுள்ளது. தவிர, புரொஃபைலில் விகடன் ஊழியர் என்கிற முகவரியோடு கருத்து பதியும்போது அது விகடனின் கருத்தாகவே பலரால் பார்க்கப்படும் என்பதால் (பலமுறை அப்படியொரு துரதிர்ஷ்டம் எனக்கே நடந்துள்ளது. விகடனின் கருத்து வேறு, அதில் பணிபுரிகிறவர்களின் கருத்து வேறு என்கிற தெளிவு இங்கே பலருக்கு இன்னும் ஏற்படவில்லை. இங்கே கமெண்ட் போட்டிருக்கும் ஏபி ராஜசேகரனின் ஆதங்கமே அதற்கு ஒரு உதாரணம்.) தங்கள் புரொஃபைலில் இருந்து அந்த அடையாளத்தை நீக்கும்படி சொல்லியிருக்கிறது. மற்றபடி கருத்துக்களைப் பகிரவேண்டாம் என்று விகடன் உத்தரவிடவில்லை. எனவே நீங்கள் சொல்லும் அத்துமீறலோ, தனி நபரின் கருத்துச் சுதந்திரத்தில் தலையீடோ ஏதும் நடந்துவிடவில்லை என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

3 Comments:

snkm said...

நிச்சயமாக இட்லிவடைக்கு மாற்று வருவது ரொம்ப கஷ்டம்!
இட்லிவடையை நே( வா ) சிப்பவர்களுக்கும் இது தெரியும். நன்றி!

R. J. said...

I prefer 'Pongal Vadai' to 'Idly vadai'!

Still, IV's response to Gnani is correct. Who can fight against an establishment and survive? It is one thing to comment on general happenings, against the huge government machinery (hoping no one will take it an offence personally) and another to comment in the name of an establishment. Gnani is right that AV management can easily disclaim responsibility for FB / Twitter comments by its staff. But they wanted to ensure that AV doesn't get into trouble due to some irresponsible comment by its staff. So, I think the circular to the staff can be a pre-cautionary measure. In general, AV has acted responsibly by commenting on issues of importance without fear r favour. Exceptions are always there to any rule! - R. J.

Anonymous said...

My favorite IDLy-VADAI than.......