பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 09, 2012

சன்டேனா இரண்டு (9-12-12) செய்திவிமர்சனம்


இந்த வாரம்....சன்டே "சூப்பர் ஸ்டார்கள்"னா இரண்டு.

செய்தி # 1

12 - 12 - 12 ; இப்படி ஒரு நாள்,மாதம்,வருடம் இனி அமையப்போவது சாத்தியமே இல்லை. இந்த தேதியில் பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டாருக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சமிபத்தில் ஒரு டிவி சேனலில் 'நீங்கள் விருப்பும் பாடல்" சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி பார்த்தேன். ஒரு குடும்பத்திடம் பிடித்த நடிகர் குறித்து கேள்வி கேட்டார்கள். அந்த குடும்பத்தில் உள்ள ஒரு ஐந்து வயது குழந்தை தனக்கு மிகவும் பிடித்த நடிகராக சொல்லி குறிப்பிடப்பட்டவர்....ரஜினி அவர்கள்.

யோசித்து பாருங்கள். இந்த வயதுக்குள் அது எத்தனை படங்களை பார்த்து, புரிந்து கொண்டிருக்கும்? அதற்க்கு எப்படி,எதனால் ரஜினியை பிடித்து இருக்கிறது?


அதுதான்...எத்தனை நடிகர்கள் வந்தாலும் தலைமுறைகள் கடந்து அசைக்கமுடியாத இடத்தில் இருக்கும்.....நம் தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார்.


இனி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை யாருமே சூட்டிக்கொள்ள முடியாது. லிட்டில் சூப்பர்ஸ்டார் என தொடங்கி இன்று யங் சூப்பர்ஸ்டார் என்று டைட்டிலில் போட்டுக்கொண்டாலும், நடிகர் சிம்பு இன்னும் கொஞ்சம் வருடங்கள் கழித்து நேரடியாக சூப்பர் ஸ்டார் என்று தன்னை சொல்லிக்கொள்ள முடியுமா என்ன??


நம் தமிழ்சினிமாவுக்கு ஒரே ஓரு சூப்பர் ஸ்டார்.. ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே.

சில வருடங்களுக்கு முன்னால், மும்பையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில்,ராகுல் காந்தி, ஷாருக் உள்ளிட்ட பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் கோட்சூட் சகிதம் படுபந்தாவாக கலந்து கொள்ள, அதில் புகழ் பெற்ற நடிகருக்கான விருது பெற சாதாரண கதராடையில்,எந்தவித மேக்கப்பும் இல்லாமல் வழக்கம்போல வந்த ரஜினியை பார்த்து வியந்துபோனார்கள் அதில் கலந்துகொண்ட அனைவரும்,வட இந்திய மீடியாவும்.

ரஜினிகாந்த் - இன்று ஆசியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக கூறப்படுபவர். "ரஜினி குறைவாகதான் சம்பாதிக்கிறார்.மொத்தமாக பார்த்தால் கடந்த ஆறு வருடங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த(குசேலன் தவிர்த்து) ரஜினியை விட,வருடத்திற்க்கு மூன்று படங்களில் நடிக்கும் நடிகர் விஜய் சம்பாதித்தது அதிகமாகவே இருக்கும். " என்றார் ஒரு நண்பர்.


"என்னை வாழவச்சது தமிழ்ப்பாலு", "என் உடல்,பொருள்,ஆவியை தமிழுக்கும்,தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா". என தொடர்ந்து "இப்போ நான் பச்சைத் தமிழன்" என தமிழக சூப்பர் ஸ்டாராக இவரின் பட பாடல்கள் அடையாளப்படுத்தினாலும்,தமிழகம் தாண்டி தென்னிந்தியாவின் நம்பர்.ஓன் நடிகராக அனைத்து மாநில ரசிகர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டவர்.

இந்த உயரம் சும்மா வந்துவிடவில்லை. இனி ஒரு நடிகருக்கு இப்படி ஒரு உயரத்தை சினிமா ரசிகர்கள் தருவார்களா என்பது சந்தேகம்.

"இந்த நிலையில் இருக்கும் ஒருவர் தன்னை ஆன்மிகவாதி என்று அடையாளப்படுத்திக்கொள்ள தனி துணிச்சல் வேண்டும்" என்பார் அவரது நண்பரான சோ.

எவ்வளவு உண்மையான வார்த்தைகள் இவை.


ரஜினியின் சறுக்கல் என்றால் அது அரசியல் குறித்து அவரின் கருத்துகள். அவரின் அரசியல் ஆர்வத்தை, வாய்ஸ் அல்லது வசனங்களை ரஜினியின் தனிப்பட்ட ரசிகர்கள் ஏற்றுக்கொண்ட அளவுக்கு,பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே இதுவரை நிதர்சனம். ஒவ்வொரு முறை தனது படம் ரீலீஸாகும் சமயங்களில் மட்டுமே அவர் 'அரசியல்' குறித்து பேசுவது ஏன் என்று தெரியவில்லை?


சென்னையில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் நடத்திவரும் "ஆஸ்ரம்" பள்ளியின்.பெயரை பார்த்து அது எதோ ஏழை,எளிய மாணவர்களுக்கான பள்ளி என்று முன்பு நான் தவறாக நினைத்து இருக்கிறேன்.

ஆனால், அது சென்னையில் அதிக நன்கொடை வாங்கும் பள்ளிகளில் ஒன்று என்றும், மேல்தட்டு மற்றும் மேல் நடுத்தர வர்க்க மாணவர்கள் மட்டுமே அங்கு படிக்கமுடியும் என்றும் பிற்பாடுதான் எனக்கு தெரியவந்தது.

ரஜினிகாந்த் - சினிமா சூப்பர் ஸ்டார். மிக எளிமையான மனிதர், ரமணர், இமயமலை என வாழும் ஒரு நல்ல. ஆன்மிகவாதி. இத்துடன் அவர் ஒரு சிறந்த வியாபாரியும் கூட. ஆனால், 'அரசியல்வாதி அவதாரம்' மட்டுமே அவரால் எடுக்கமுடியாது என்பது கடந்தகால சம்பவங்கள் மூலம் நமக்கு புலனாகிறது.


செய்தி # 2


தஞ்சாவூர் அருகே அய்யம்பேட்டையில் இருந்து நான் ஒரு முறை கணபதி அக்ரகாரம் கோவிலுக்கு போகும் போது, வழியில் மகாளிபுரம் என்று ஒரு ஊர் வந்தது. அங்கு உள்ள ஒரு திரைஅரங்கில் பெரும் அளவிலான கூட்டம் திரண்டு இருந்தது. நான் ரஜினி,கமல் போன்ற முன்ணணி நடிகர்கள் அல்லது எம்.ஜி.ஆர் நடித்த படம் போலும் என்று என்னுடன் வந்த நண்பரிடம் பேசிக்கொண்டு வந்தேன். தியேட்டர் அருகே வந்தபோதுதான் தெரிந்தது...அது ஜாக்கிசான் நடித்த “WHO AM I”:

இந்தியாவின் கிராமப்புறங்களிலும் நமது முண்ணனி நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை கொண்டவர் ஜாக்கி. இன்டோ ஓவர்சீஸ், கோல்டன் ஹார்வெஸட் என்ற நிறுவனங்களின் பெயர் வரும்போதே ரசிகர்களின் விசில் சத்தம் திரை அரங்குகளை அதிரவைக்க தொடங்கிவிடும்.

காமெடி ஆக்க்ஷன் என்னும் அவர் உருவாக்கிய ஃபார்முலாவே, அவரது இந்த வெற்றிக்கு காரணம்.

அவருக்கு பெரும் திருப்புமுனையை தந்த படங்களில் ஒன்று.....ஆர்மர் ஆஃப் காட்(Armour of God).

ஐந்து கவர்ச்சிப் பெண்களுடன் கிளைமாக்ஸில் அவர் மோதும் சண்டைக்காட்சி படத்தின் ஹைலைட்.அதன் இரண்டாம் பாகமாக வெளிவந்த படம்.. "ஆபரேஷன் கான்டோர்" (Operation Condor). ராட்சத காற்றாலைகள் வீச,ஜாக்கிசான் அந்தரத்தில் பறந்துகொண்டு வில்லன்களோடு அவர் போடும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிதான் இதிலும் ஹைலைட்.


இந்த வரிசையில். “ஆர்மர் ஆஃப் காட்”படத்தின் மூன்றாம் பாகமாக இந்த டிசம்பரில் வெளிவர இருக்கும் அவரது புதிய படம்.... "சைனீஸ் சோடியாக்". இதை CZ12 என்று குறிப்பிடுகிறார்கள்.

சீன அரசின் பொக்கிஷத்தை ஸ்பெய்ன் மற்றும் பிரிட்டிஷ் படைகளிடம் இருந்து மீட்கும் முந்தைய படங்களின் கதைதான் இதுவும். படத்தை தயாரித்து,இயக்கியவரும் ஜாக்கிதான்.

இந்த படத்திலும் ஹைலைட்டான விஷயம்....கிளைமாக்ஸ் என்கிறார்கள். இந்த இறுதிக்காட்சிக்கு மட்டும் சுமார் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாம்.

இரண்டு, முக்கிய செய்திகள். 58 வயதான ஜாக்கிசான் இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் வழக்கம்போலவே 'டுப்' போடாமலே நடித்து இருக்கிறார்.

இன்னொன்று, அவருக்கு இதுதான் கடைசி ஆக்க்ஷன் படம்.

"சினிமாவில் வன்முறை அதிமாகிவிட்டது. இனி, என் வயதுக்கு தந்த மென்மையான வேடங்களில் மட்டுமே நடிப்பேன்" என்று அறிவித்துவிட்டார் அவர்.

ஒரு சிறு செய்தி : இப்படத்தின் தமிழ் பதிப்பில், சில கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் தந்து இருக்கிறார் நமது இட்லிவடை வாசகர் லாரன்ஸ் பிரபாகர்.

ஜாக்கிசானின் கடைசி காமெடி ஆக்க்ஷன் கலாட்டாவை காண நிறைய எதிர்ப்பார்ப்போடும், அவரின் 'ரிட்டையர்மென்ட்"அறிவிப்பால் வருத்ததோடும் நாம் "சைனீஸ் சோடியாக்" படத்தின் வெளியிட்டுக்காக காத்திருப்போம்.

(நன்றி, இனி அடுத்தவாரம்)
-இன்பா

ஏம்பா கமல் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டது நியாமயா ?


14 Comments:

snkm said...

ரஜினி நினைத்தால் இன்னும் நிறைய தமிழகத்துக்காக செய்ய முடியும். ஆனால் வேண்டுமென்றே தன் நிலையை காப்பாற்றிக் கொள்ள மட்டுமே பாடுபடுகிறார்.
இன்னும் மக்கள் மனதில் உள்ளவர்களிடமும் இந்தியா , இந்தியன் என்னும் உணர்வுகள் குறைவாகத் தான் உள்ளது.
வாழ்க பாரதம்!

snkm said...

ஜாக்கி சானைப் பற்றி இன்னும் நிறைய விவரங்கள் எழுதி யிருக்கலாம் . இரண்டு கின்னஸ் சாதனைகளை செய்து இருக்கிறார்.
நன்றி. வாழ்க உலகம் அன்பு மயமாக!

kothandapani said...

மஞ்சள் கமெண்ட் அடுத்த வார சண்டே ன்னா இரண்டுக்கு லீடா .ரஜினி பற்றி எழுதி விட்டால் கமல் பற்றியும் எழுத வேண்டும். இல்லை என்றால் சினிமா பற்றி
தெளிவான அறிவு இல்லாத ஞான சூனியம் ஆகிவிடுவோம்.

Anonymous said...ரஜினி நினைத்தால் இன்னும் நிறைய செய்ய முடியும். this is what dhanush and co also expect of rajini

ஸ்ரீராம். said...

//ஆன்மிகவாதி. இத்துடன் அவர் ஒரு சிறந்த வியாபாரியும் கூட//

True! :))

Madhavan Srinivasagopalan said...

// 12 - 12 - 12 ...இப்படி ஒரு நாள்,மாதம்,வருடம் இனி அமையப்போவது சாத்தியமே இல்லை. //

பூனை கண்ண மூடிட்டா போலோகம் இருந்து போச்சுன்னு நெனைக்குமாம். ..?
12 - 12 - (21)12 வரும்... (நாம இல்லேன்னாலும் )

anand said...

பூனை கண்ண மூடிட்டா போலோகம் இருந்து போச்சுன்னு நெனைக்குமாம். ..?
12 - 12 - (21)12 வரும்... (நாம இல்லேன்னாலும் )//

கேணத்தனமா எதையாவது உள்ராதீரும் ஒய்


Anonymous said...

Dont say lie about Ashram School..
Its reachable for lower class people too..

Compare than all other schools, this is good and providing lunch..

You can not see this in other school which is getting 7 times more money compare than ashram to teach lower quality

jaisankar jaganathan said...

ரஜினி ஒரு வியாபாரி மட்டுமே

jaisankar jaganathan said...

ரஜினி ஒரு வியாபாரி மட்டுமே

Madhavan Srinivasagopalan said...

திருத்தம்

'போலோகம் இருந்து' என்பதை 'பூலோகம் இருண்டு'திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்

@ ஆனந்த் சார் இப்பவும் இது உளறலா இருக்குதா ? .... அப்படின்னா.. உங்க தன்னம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன்.

jaisankar jaganathan said...

மாதவன் ஸ்ரீனிவாச கோபாலன் 2012 டிசெம்பர் 21 அன்னைக்கு உலகம் அழியப்போவுது. அதனால உங்க கணிப்பு பொய்

Madhavan Srinivasagopalan said...

@ Jaishankar Jagannaathan,

பொய், பித்தலாட்டம், கொலை, கொள்ளை, வஞ்சம், வன்முறை, பாலியல் பலாத்காரம்...உள்ளிட்ட அனைத்து கேடுகளும் உடைய உலகம் அழியட்டும்...

நல்லுகம் ஆரம்பமாகட்டும்..

jaisankar jaganathan said...

உங்க நல்ல மனசுக்கு (மாதவன் ஸ்ரீனிவாச கோபாலன்) உங்க பேரை சொல்லி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு ஒரு அர்ச்சனை பண்ணுறேன்