பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 23, 2012

சன்டேனா இரண்டு (23-12-12) செய்திவிமர்சனம்இந்த வாரம்...கொஞ்சம் ஆன்மிகம் பேசுவோம்.


செய்தி # 1இன்று ஆன்மிகவாதி என்றாலே, போலித்தனமும், ஆடம்பரமும், பகட்டும்தான் நம் நினைவுக்கு வருகிறது. எளிமையாக வாழ்ந்து,எளிமையான முறையில் ஆன்மிகத்தை பாரபட்சமின்றி மக்களிடம் கொண்டு செல்ல நம்மிடம் இப்பொது கிருபானந்த வாரியார் அவர்கள் இல்லை.விபுதி மணம் - நான் இட்லிவடையில் எழுதி, எனக்கே மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்று. வாரியாரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.அவரது நகைச்சுவை பொதிந்த சொற்ப்பொழிவுகள், கருத்துக்கள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பவை.அப்படிப்பட்ட வாரியாரின் கருத்துக்கள் கொஞ்சம் இங்கே உங்கள் பார்வைக்கு.'கம்' முனு இரு: "கம்முனு சும்மா ஒரு. எல்லாம் தானே நடக்கும்" என்று பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. உண்மையில் "கம்" எனபது

விநாயகரின் பீஜ மந்திரம். "ஓம் கம் கணேசாய நம" எனபதாகும். 'கம்' என்ற விநாயக மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தால், எல்லா காரியங்களும் மங்களமாகவே முடியும் என்ப்தே இதன் பொருள்.உலாவ இடமா இல்லை : "வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்" என்று பாடினார் பாரதியார். அங்கு ஏன் உலாவ வேண்டும்? உலாவ பீச்,

பார்க் என்று எத்தனையோ இடம் இருக்கிறதே? அங்கெல்லாம் உலாவுவோம் என்று ஏன் எழுதவில்லை. காரணம், பாரத தேசத்தின் அந்தப்புற எல்லையாக இருக்கிறது பனிமலை. அங்கே இருப்பவர்கள், நாட்டை காக்கும் இராணுவ வீரர்கள். அவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால், பகைவர்கள் நுழைந்து விடுவார்களே.அதனால்தான் வெள்ளிப் பனி மலையில் உலாவிக் கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் பாரதி இப்படி பாடினான்.வேறுபாடு இல்லா பெண் உலகம் : எல்லா வேறுபாடுகளும் ஆண் உலகிலேயே காணப்படுகின்றன. பெண் உலகுக்கு இந்த வேறுபாடுகள் கிடையாது. ஐயர்,செட்டியார்,நாயுடு, முதலியார் முதலிய ஜாதிப் பெயர்கள் எல்லாம் ஆணின் பெயரை ஒட்டியே வருகின்றன. பெண் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் மீனாட்சி அம்மாள், காமாட்சி அம்மாள் என்றுதானே வழங்குகின்றன.அதிகம் எது? : பாண்டவர்கள் ஐந்து பேர். கவுரவர்கள் நூறு பேர். அந்த காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேரும், கெட்டவர்கள் நூறு பேரும் ஆக இருந்தார்கள். இப்போது கேட்கவா வேண்டும்?கள் தேவை : கள்ளை குடித்தால்தான் போதை எனபது இல்லை. 'கள்' என்று சொன்னாலே பலர் மயங்கி விடுகிறார்கள். "நீ" என்பதற்க்கு பதில் நீங்'கள்' என்று சொல்லிப்பாருங்கள். எல்லாம் அந்த 'கள்' செய்யும் வேலைதான்.சினிமா: இப்போதைய சினிமாக்களை (கவனியுங்க!) பணம் பண்ணும் சாதனமாக ஆக்கிவிட்டார்கள். சினிமாக்கள் மூலம் நல்ல கருத்துக்களை இந்த சினிமாக்காரர்கள் சொல்லாமே? ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? நான் ஆயிரம் சொற்பொழிவு நடத்துவதும் சரி, ஒரு நல்ல சினிமா வருவதும் சரி. பணம் சம்பாதியுங்கள். அதே சமயம் சமுதாயத்தையும் உருப்படவிடுங்கள்.பதவி அலைச்சல்: ராமபிரான், ஆட்சியே வேண்டாம் என்று, பெரிய பதவியை துறந்து தந்தை சொல்லைக் கேட்டு காட்டுக்கு போனார். ஆனால், இப்போது சிலர் பிள்ளையார் கோவில் அறங்காவலர் பதவிக்கே அலையாய் அலைகிறார்கள்.


சாமியார் பட்டம்: கலெக்டரிடம் சினேகம் பண்ணுபவனுக்கு மக்கள் மதிப்பு கொடுக்கிறார்கள் அதுபோல, கடவுளிடம் பழகுபவனுக்கும் மக்கள் மதிப்பு கொடுக்கிறார்கள்.ஆனால், தினமும் விபுதி கொடுப்பவனையே சாமியார் ஆக்கி விடுகிறார்களே!.நாத்திகவாதிகள் வாழ்க: இறைவனை எதிர்த்து பேசி வருவதால், இறைவனின் புகழ் மேலும் வளரும். ஆதலால், இறைவனை எதிர்ப்பவரும் இறைத்தொண்டுதான் செய்கின்றனர். குடையை விரித்து யாரும் சூரியனை மறைத்து விட முடியாது.கோவில் எதற்கு? : இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், கோவிலில் உள்ள திரு உருவத்தில் விளங்கித் தோன்றுகின்றான். பசுவின் உடம்பில் பாலைப் பெற முயற்சி செய்கின்ற ஒருவன், பசுவின் கொம்பையோ, காதுகளையோ,வாலையோ வருடினால் பால் கிடைக்குமா? எனவே, பசுவின் பால் பெற விரும்புவோன், பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல, இறைவனின் அருளைப் பெற விரும்புவோன், கோவில் சென்று இறைவன் திருமுன் நின்று வழிப்பட்டு திருவருளைப் பெறுதல் வேண்டும்.வாரியாரின் அர்த்தமிக்க, அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய வார்த்தை விளையாட்டுகள்தான் மக்களிடம் ஆன்மிகம் எளிதாக சென்றடைய காரணம் என்பது உங்களுக்கு விளங்குகிறது அல்லவா?தன் குரலை வைத்து 'மிமிக்ரி" செய்பவர்களை (செய்துவருபவர்களை) பற்றி வாரியார் பின்வருமாறு கூறி இருக்கிறார்."என் குரலை நிறைய பேர் "மிமிக்ரி" கிண்டல் பண்ணுகிறார்களே. அதை நான் கிண்டல் என்று சொல்லமாட்டேன். கஷ்டப்பட்டு பயிற்சி செய்து என்னைப் போலவே பேசுகின்றார்களே. அதை எண்ணி ஆச்சரியப்படுவேன். பேசினால் பேசட்டுமே. "முருகா,முருகா" என்று அவர்கள் சொல்லித்தானே ஆக வேண்டும். அது அவர்களுக்குப் புண்ணியம் அல்லவா? "செய்தி # 2
சித் என்றால் அறிவு, அம்பலம் என்றால் வெட்டவெளி. முன்பு தில்லை என்று வழங்கப்பட்ட இத்தலம் இப்போது சிதம்பரம் என்று அழைக்கபடுகிறது. அப்பர்,சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் என அனைவராலும் பாடல் பெற்ற, சைவர்களின் தலைமை கோவிலாக விளங்குகிறது.

'ஓம்' என்னும் பிரணவ நாதத்தின் வடிவாக நடராஜர் ஆனந்த கூத்தாடும் மூலவரின் பெயர் சபா நாயகர்.தில்லை திருகோவிலுக்கு மேரு என்ற பெயரும் உண்டு. இந்த கோவிலின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

: கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு என நான்கு ராஜகோபுரங்கள். இவை நான்கும் ஒரே உயரத்தில் இருப்பது ஒரு சிறப்பு அம்சம் ஆகும். ஒவ்வொன்றும் 135 அடி உயரம்.இந்த கோபுரங்களுக்கு, ஏழு தளங்கள், பதிமூன்று செப்பு கலசங்கள், 40 அடி அகலம் கொண்ட கோபுர வாயில்கள் என்று பொதுவாக அமைந்து இருக்கின்றன. ராஜ கோபுர வாசல்களில், நடராஜ முத்திரை எனப்படும் பரத கலை சிற்ப்பங்கள் காணப்படுகின்றன. நடராஜர் தெற்கு முகமாக திருநடம் புரிவதால், தெற்கு கோபுர வாசலில், கொடி ஏற்றப்பட்டு உள்ளது.புனித மரம் தில்லை மரம்.

நடராஜர் சந்நிதியை பொன்னம்பலம் என்றும் அழைக்கிறார்கள். இக்கூரையின் மீது, ஒன்பது சக்திகளை குறிக்கும் ஒன்பது தங்க கலசங்கள் அமைந்து உள்ளன.மேலும், இதில், 64 கலைகளை குறிக்கும் வகையில் 64 கைம்மரங்கள், ஒரு நாளில் வெளிவரும் மனிதனின் சுவாசங்களை குறிக்கும் வகையில் 21600 ஓடுகள், மனிதனின் நாடிகளின் எண்ணிக்கையை உணர்த்தும் வகையில் 72000 ஆணிகள் ஆகியவை பொருத்த பட்டு உள்ளன.


மனிதனின் இருதயத்தில் இருக்கும் இறைவனே, இந்த பொன்னம்பலத்தில் இருக்கிறான் என்று உணர்த்தும் விதமாக மனித உடல் போல இந்த பொன்னம்பலம் அமைக்க பட்டுஉள்ளது.

: ஆலயத்தின் சித்சபையில், நடன கோலத்தில் இறைவன் காட்சி தர, அவர்க்கு இடப்பக்கம் சிவகாம சுந்தரி அம்பாள் வீற்று இருக்கிறார். வலது பக்கம் திரை போட்ட வாயில் உள்ளது. அங்கு தங்கதினால் ஆன வில்வ தள மாலை ஒன்று தொங்க விட பட்டு உள்ளது. நடராஜருக்கு, ஆரத்தி எடுக்கப்படும் போது, அந்த வாயிலின் திரை விளக்கப்படும். இதன் அர்த்தம், இறைவன் ஆகாய உருவில் அங்கு இருக்கிறார் என்பது. இதையே சிதம்பர ரகசியம்என்கிறார்கள்.

மூலவரே வீதி உலா வரும் இரு பெரும் திருவிழாக்கள் மார்கழி திருவதிரையிலும், ஆணி உத்தரதிலும் நடை பெறுகிறது.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் கடந்த புதன் அன்று கொடியேற்றத்துடன் துவங்கி இருக்கிறது.வரும் டிசம்பர் 27 வியாழன் அன்று தேர் உத்ஸவமும், வெள்ளி அன்று ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.விழாக்கோலம் பூண்டு உள்ள சிதம்பரம் சென்று, மார்கழி மாதத்தின் சிறப்பு மிக்க ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஆருத்ரா தரிசனம் கண்டு வாருங்கள்.(நன்றி, இனி அடுத்தவாரம்)-இன்பா

11 Comments:

Dhas said...

இன்பா: மிக நன்று!

இந்த ஆங்கில தேதி மட்டும் நம்மிடம் வாழ்க்கையில் ரொம்ப ஒட்டிக்கொண்டுவிட்டது! இந்த மாதிரி இடுகைக்கு மட்டுமாவது - மார்கழி மாதம், தேதி 13, திருவாதிரை நட்சத்திரம், வெள்ளிக்கிழமை என்று விரிவாக தமிழ் தேதியில் கூறலாம்.


Following site provides some inputs for better planning:

http://www.chidambaramnataraja.org/index.html

28.12.2012,Friday,AARDHRA ABHISHEKAM 3.30a.m.to 6.00a.m. @ RAJASABHAI
28.12.2012,Friday,AARDHRA DHARSANAM AT 12.00 noon
28.12.2012,Friday,AARDHRA MAHAABHISHEKAM 3.30p.m.

snkm said...

நன்றி. ஆனி உத்திரம் என்று இருக்க வேண்டும். வாழ்க பாரதம்!

kothandapani said...

சண்டே ன்னா இரண்டு
ஒன்று. இன்பாவுக்கு இப்படி ஒரு முகமா
இரண்டு .. கட்டுரை எதுவாக இருந்தாலும் ஒரு தமன்னா அல்லது அனுஷ்கா படத்தை போட்டு ஜொள்ளு விடும் இட்லிவடை வாரியார் படத்தை போட்டு இருப்பது.

jaisankar jaganathan said...

வாரியாரைப்பற்றீ இன்னுமெழுதியிருக்கலாம். வயலூரைப்பற்றி அவர் பேசாத நாள் இல்லை. அருமையான சொற்பொழிவாளர்

சிந்திப்பவன் said...

Excellent!

s suresh said...

ஆன்மீக பதிவுகள் இரண்டும் சிறப்பு! வாரியாரின் வார்த்தை விளையாடலை ரசித்தேன்! நன்றி!

dr_senthil said...

இது இந்த பதிவர்க்கு சம்பந்தம் இல்லாதது தான் இருப்பினும் மற்ற வாசிபாளர்களின் கவனத்தை கவருவதற்காக இங்கே பதிவு செய்கிறேன்.. இட்லிவடைக்கு இதை வெளியிடவோ மறுக்கவோ முழு உரிமை உள்ளது..
நம் சமுகம் எதை நோக்கி செல்கிறது என்ற பயத்தில் மற்றும் ஒரு பெண் மகவின் தந்தை என்ற பதட்டத்தில் இதை பதிவு செய்ய விரும்புகிறேன்

பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அதை போதையால் செய்தேன் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத வாதம். குடித்த பிறகு தாயிக்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாமலா போகும்? நிச்சயமாக தெரியும் போதை வெறும் ஒரு சாக்கு மட்டுமே..குடியின் போதையில் வன்புணர்ச்சி செய்பவன், குடிக்காவிட்டால் புணர மாட்டானா? மனோதத்துவ நிபுணர்கள் ஆராயவேண்டியது இது..குடிபோதையில் மற்ற எல்லா உணர்சிகளும் சீராக இயங்கும் போது பாலின வேறுபாடு தெரியாமலா போகும்?
சுய உணர்வில் இல்லாத போது செய்த தவறு என்று வக்கீல் வைத்து சட்டத்தில் பிடியில் இருந்து தப்பவே இதுபோல குடியின் மீது பழி போடுவது நடக்கிறது.. இந்திய குற்றவியல் சட்டம் மறுபரிசிலினை செய்யவேண்டியது அவசியமாகிறது.. கோவையில் நடந்தது போல என்கவ்ன்டர் தான் சரியோ ?
நம்மில் பாதிக்கு மேல் ஒரு பெண்ணை பெற்ற பெற்றவர்களாக இருக்கிறோம் அவர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு என்னவிதமான சமூக அமைப்பு செய்துளோம்?
சட்டம் எயற்றுவோர் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும்.. இஸ்லாம் நாட்டில் உள்ளது போல் நடு வீதியில் வைத்து தண்டனை நிறைவேற்றினால் இது போல குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளதா ?
மகனை பெற்றவர்கள் பாட புஸ்தகத்தில் உள்ளவற்றை தாண்டி ஒரு பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் சொல்லிதர வேண்டும்
நாகரிகம் வேண்டாம் இது சாதாரண மனித உணர்வு மட்டுமே!!!
இதுபோல் குற்றங்கள் தொடர்ந்து நடக்குமாயின் இந்த உலகம் அழிந்தால் தான் என்ன ??

Anand said...

nice one from INBA and IV

expecting more like this

Anonymous said...

நாற்பதுகளில் வாரியார் சுவாமிகள், காங்கேயநல்லூர் கோவிலுக்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து இருக்கிறார்.(இன்றைய மதிப்பில் கிட்டதட்ட1 கோடி என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்) == மணா

Right Off Center said...

good. Along with Vaariyaar, we also had Pulavar Keeran, Therazhandhur Dr.Ramabhadran etc who spent their entire lifetime for the cause of Tamil and divinity.

Right Off Center said...

good. Along with Vaariyaar, we also had Pulavar Keeran, Therazhandhur Dr.Ramabhadran etc who spent their entire lifetime for the cause of Tamil and divinity.