பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 02, 2012

சன்டேனா இரண்டு (2-12-12) செய்திவிமர்சனம்கடந்த இரண்டு வாரங்களாக 'சென்சிடிவ்' விஷயங்களா எழுதிட்டிங்க..இந்த வாரம் கொஞ்சம் அடக்கி வாசிங்க. என்ற என் அன்பான(?) வேண்டுகோளுக்கு இணங்கி இந்த வார சன்டேனா இரண்டு... சென்சிடிவானவர்களை பற்றியது - எழுத்தாளர்கள் ஸ்பெஷல்.

செய்தி # 1


முன்பெல்லாம் ஆங்கில,இந்தி,தெலுங்கு,மலையாள படங்களை உல்டா பண்ணியது போய், இப்பொதெல்லாம் முன்பு வந்த நமது தமிழ்ப்படங்களையே உல்டா பண்ணும் அளவுக்கு கடும் கதைப் பஞ்சம் நிலவி வரும் கோடம்பாக்கத்தில், முன்பு எப்பொதும் இல்லாத அளவுக்கு எழுத்தாளர்களுக்கு மரியாதை ஏற்பட்டு இருக்கிறது.இன்றைய தமிழ்சினிமாவில் முன்ணணியில் இருக்கும் எழுத்தாளர்களின் “ஹிட் லிஸ்ட்” இங்கே.1. சுபா :-

"சுபா" என்ற பெயரில் எழுதும் இரட்டையர்களான சுரேஷ் அண்ட் பாலகிருஷ்ணன் - இன்றைய தேதியில் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் எழுத்தாளர்கள்.இவர்கள் எழுதிய ஜெய்ஹிந்த் என்ற கிரைம் நாவல் எனக்கு பிடித்தமானது. நாவலின் கரு கிட்டத்தட்ட "ரோஜா" படக்கதை போன்றது. அந்த நாவலின் அட்டைபட போட்டோகிராபர்தான் தேசிய விருது பெற்ற கே,வி,ஆனந்த். சுபா - கே,வி,ஆனந்த் கூட்டணியில் உருவான முதல் படம் "கனா கண்டேன்". அதன் பிறகு அயன்,கோ என தொடங்கி மாற்றான் வரை தமிழ்சினிமாவின் மெகா கூட்டணியில் இடம் பெற்றுவிட்டார்கள் சுபா.நடுவே விஜய் நடித்த வேலாயுதம் படத்திற்க்கும் வசனம் எழுதிய சுபா, அமரர் சுஜாதா அவர்களின் வெற்றிடத்தை ஷங்கருக்கு நிரப்பி இருக்கிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் "ஐ" இவர்களின் எழுத்தில் உருவாகிவருகிறது.


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்திற்க்கும் இவர்கள்தான் வசனம். "வழக்கம்போல வரும் பஞ்ச் வசனங்கள் இதில் இடம் பெறாது” என கூறும் சுபா இதுவரை எத்தனையோ நாவல்கள்,தொடர்கள் எழுதி இருக்கிறார்கள்.


ஆனால், முக்கால்வாசி படம் முடிந்தும் அஜித் - விஷ்ணு படத்திற்க்கு சரியான 'டைட்டில்' எழுதுவதற்க்குதான் திணறிவருகிறார்கள்.
2. ஜெயமோகன் :-

உங்களில் பெரும்பாலானவர்களுக்கு இவர் பரிச்சயம்தான். இவரது 'விஷ்ணுபுரம்" படித்து(பார்த்து) விட்டு மிரண்டு(!) இருக்கிறேன். இவர் எழுதியதில் என் சிற்றரிவுக்கு பிடித்தது அல்லது புரிந்தது "ரப்பர்" என்ற நாவலாகும்.

மறைந்த மலையாள இயக்குனர் லோகிததாஸ் இயக்கிய "கஸ்தூரி மான்" படத்திற்க்கு வசனம் எழுதி,சினிமாவில் காலடி வைத்த ஜெயமோகன், தனது நாவலான "இரண்டாம் உலகத்தை" தழுவி எடுக்கப்பட்ட பாலாவின் "நான் கடவுள்" மூலம் தனி கவனம் பெற்றார்.

தொடர்ந்து "அங்காடித் தெரு" , தற்போது வெளியாகி இருக்கும் சீனு ராமசாமியின் "நீர்ப்பறவை" என தொடர்கிறது இவர் திரைப்பயணம்.

அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை படமாக்க மணிரத்னம் முயற்சி செய்தபோது, அவருடன் விவாதத்தில் இணைந்தார் ஜெ. இந்த வருடத்தின் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான மணிரத்னத்தின் "கடல்" படத்தில் இவரது கைவண்ணம் இருக்கிறது.

கூடுதலாக, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்க்கும் இவர்தான் வசனம் என்கிறது ஒரு செய்தி. "தல" படத்திற்க்கு இவர் எப்படி பொருந்துவார் என்று தெரியவில்லை.

3. எஸ்.ராமகிருஷ்ணன் :- ரஜினியுடன் "பாபா" கதை விவாதம் மூலம் தமிழ்சினிமாவில் நுழைந்த எஸ்.ரா, லிங்குசாமியின் கமர்ஷியல் ஹிட்டான "சண்டைக்கோழி" மூலம் பெரும் கவனம் பெற்றார். தொடர்ந்து "தாம்தூம்", பாலாவின் "அவன் இவன்" என படங்களுக்கு வசனம் எழுதினார். அவன் இவன் படத்தில் இவர் போட்ட மொக்கையால் தற்போது படம் எதுவும் 'புக்' ஆகவில்லை என்று நினைக்கிறேன்.

சண்டைக்கோழி படத்தில், ஒரு கதாபாத்திரற்க்கு சக கவிஞ்சரான ஒருவருடைய பெயரை அப்படியே வைத்து, "ஆளும்,மூஞ்சியும், பெயரை பாரு " என்கிற ரீதியில் கடுமையாக விமர்சனம் எழுதியது ஏன் என்றும், சினிமாவில் சேர்ந்தது முதல் இவர் எழுத்தின் தரம் தாழ்ந்தது குறித்தும் இவர்தான் விளக்கவேண்டும். தற்போது சினிமா சொற்பொழிவு நடத்திக்கொண்டு இருக்கிறார்.


4. ஜேடி குருஸ் :- அதிகம் அறியப்படாதவர். அடிப்படையில் ஒரு மீனவர். இவரது முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்டு, எழுத்துலகுக்கு இவரை அறிமுகம் செய்தவர் மதன் அவர்கள். இவரது 'கொற்கை" நாவலை படித்து பாருங்கள். குமரிபக்கம் ஒரு விசிட் போகும் எண்ணம் உங்களுக்கு வருவது திண்ணம்.

தற்போது , 'வந்தே மாதரம்" ஆல்பத்தை இயக்கிய பரத்பாலாவின் இயக்கத்தில்,ஏ.ஆர்.ரகுமான் இசையில், தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் "மரியான்" படத்தின் மூலம் வசனகர்த்தாவாக சினிமாவில் காலடி வைக்க போகிறார் குருஸ்.5. இ.ரா.முருகன் : - இந்த லிஸ்டில் அடுத்து நம்ம முருகன்தான். "உன்னைப்போல் ஒருவன்" படத்திற்கு இவருடைய வசனம் கமலின் பிம்பத்திற்க்கு பின்னாலும் இணையத்தில் பேசப்பட்டது. அடுத்து, அஜித்தின் "பில்லா 2" படத்திற்க்கு சில பளிச் வசனம் எழுதானாலும், அப்துல் ஜாப்பர் என்ற வேறு ஒரு நபருடன் இவர் பெயர் பங்கு போடப்பட்டது. போதாகுறைக்கு படமும் சரியாக போகவில்லை.


மீண்டும் கமல் இவரை சேர்த்துக்கொள்வரா என்று தெரியவில்லை. ஒருவேளை இவரின் ஆஸ்தான இயக்குனர் சக்ரிடோலடிக்கு இனி படம் இயக்க வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இவருக்கும் வசனம் எழுத வாய்ப்பு வரலாம்(!!).


செய்தி # 2


இவ்வளவு எழுத்தாளர்கள் பற்றி எழுதிவிட்டு, "எழுத்துலகின் பவர்ஸ்டார்" (எப்புடி?) சாரு நிவேதிதாவை பற்றி நான் எழுதாமல் போனால், புத்தக பரிசு பெற்ற வாசகர் dr_செந்தில் போன்ற அவரது ரசிகர் மன்றத்தினர் என்னை அடிக்க வந்துவிடுவார்கள்.


அகில உலக நாவல் வரலாற்றில், தான் எழுதிய "எக்ஸல்" என்ற நாவலுக்கு, நாவல் வெளிவரும் முன்பே ஒரு 'டிரைலர்' ரிலீஸ் செய்த ஒரே எழுத்தாளர் சாரு அவர்கள்தான்.


"எக்ஸல்" நாவலின் டிரைலரை இயக்கியவர் நம்ம இட்லிவடை வாசகரான லாரன்ஸ் பிரபாகர் .(சாப்பா குருஸ் விமர்சனம்). நாவல் குறித்து இயக்குனர் சீனுராமசாமியின் பாராட்டுக்கள்(முடியல!) அதில் இடம் பெற்று இருந்தன,


இந்த டிரைலருக்கு, ஆனந்தவிகடன் உபயத்தில் கிடைத்த மெகா வெற்றியை(!?) தொடர்ந்து, தான் எழுதும் சிறுகதை,துணுக்கு இவ்வளவு ஏன், வலைப்பதிவுக்கு(!) கூட இப்படி ‘டிரைலர்’ போடுவதற்க்கு சாரு முடிவு செய்ய, இந்த செய்தி அறிந்தவுடன் தனது குடும்பத்திற்க்கு கூட சொல்லாமல் ராவோடு ராவாக துபாய்க்கு பிளைட் ஏறிவிட்டார் லாரன்ஸ்.இது ஒரு பக்கம் இருக்க, யாரி சுகி கோ ஜி - அர்பன் லெஜன்ட்ஸ் ஸ்பெஷல்' (Yari-sugi ko-ji -Urban Legends Special) எனும் தலைப்பில் நடைபெற்ற ஒரு சிறப்பு ஓளிபரப்புக்காக இந்தியாவுக்கான அழகியாக கடந்த நவம்பரில், நடிகை நமீதாவை தேர்வு செய்தது டேக்கியோ தொலைக்காட்சி.இது குறித்து, யாரோ ஒரு செய்திக்கு அலையும் பத்திரிக்கை நிருபர், நம்ம சாருவிடம் வந்து அவரது பொன்னான கருத்தை கேட்க, அதற்க்கு சாரு அளித்த பதில் இதுதான்."தாய்லாந்தில் 'மங்கீஸ் ஐலண்ட்' என்று ஒரு குட்டித்தீவு இருக்கிறது. பொதுவாக கடல் சார்ந்த இடங்களில் குரங்குகளை காண்பது அரிது. ஆனால் அந்த தீவில் குரங்குகள் நிறைய இருக்கும். எனவே அந்த தீவு மக்களுக்கு விநோதமாக தெரிகிறது. அதுபோல டோக்கியோ சேனல்காரர்களுக்கு நமீதா வித்தியாசமாக தெரிந்திருப்பார் போல".
சரி.அது கிடக்கட்டும். டிரைலர் வெளியிட்ட அளவுக்கு அந்த "எக்ஸல்" நாவலில் அப்படி என்னய்யா இருக்கு என்பவர்களுக்கு,

வேலை மெனக்கெட்டு அந்த நாவலை படிப்பதற்க்கு பதில், நீங்கள் பேசாமல் ஷகிலா நடித்த "கிண்ணாரத் தும்பிகள்" படத்தை 'டவுன் லோட்' செய்து பார்த்துவிடலாம்.இரண்டில் இருப்பதும்....ஹி...ஹி..ஒரே "சமாச்சாரம்"தான்.(நன்றி, இனி அடுத்தவாரம்)-இன்பா

பதிவு எடிட் செய்யப்பட்டது.15 Comments:

Anonymous said...

Excellent posts

hats off to Inba

Power Star engal annan
Saaru vaalga

Anonymous said...

/* You are lucky that MMS is not Jaya or Mamata! Else, we would have known the identity of IV by now!!! (Or, will IV cover his face when arrested?!) Don't worry, if it happens, more than half of your compatriots will give you company!(May be that's the reason MMS baiters get away!) - R. J.
*/

R.J.,

If I were you, I would never dare to pass such irresponsible and pathetic comments like the one above. We must encourage people to fight back. Rather, you are not only discouraging others but also trying to scare them. Have you ever realized that our cowardly previous generation is the reason for all our sufferings today?

Remember, Democracy is an on going process. We must standup and fight for the right causes. Otherwise we will end up like a cockroach under Jaya’s feet and she will merrily squeeze the sh##t out of us.

Please, please for cockroach’s sake, do not discourage others. Let them express their feelings to keep democracy alive and well.

-N.

Anonymous said...

//"எக்ஸல்" நாவலில் அப்படி என்னய்யா இருக்கு என்பவர்களுக்கு,

வேலை மெனக்கெட்டு அந்த நாவலை படிப்பதற்க்கு பதில், நீங்கள் பேசாமல் ஷகிலா நடித்த "கிண்ணாரத் தும்பிகள்" படத்தை 'டவுன் லோட்' செய்து பார்த்துவிடலாம்.//

Link please.

Anonymous said...

பட்டுக்கோட்டை பிரபாகரை விட்டுட்டியே இன்பா.. சுமார் 30 படங்களுக்கு மேல் வசனம் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். அவருக்குத்தானய்யா நீ முதலிடம் கொடுத்திருக்க வேண்டும். ஏய், கண்டேன் காதலை, சாமுராய் எல்லாம் அவர் கைவண்ணத்தில் உருவானதுதான்.

R. J. said...

To 'N': Your response to my comment is appearing in the wrong post.

Let me clarify that I do not discourage any one in raising their voice against any right causes. You have really missed my point or failed to read that 'more than half of your compatriots will give you company'. You cannot even see the satire in my comment to IV's post.

Then again, I live my life pragmatically and not stupidly. Every one has his right in this connection. Have your say, but Don't ever treat my comments as irresponsible.

-R. J.

ரிஷபன்Meena said...

பழைய சண்டேன்னா இரண்டு மாதிரி இல்லை. இன்பா எழுத்து நடையை கொஞ்சம் மாத்தினால் நன்றாக இருக்கும்.

s suresh said...

எழுத்தாளர்களை பற்றிய சிறப்பான பகிர்வு! நன்றி!

dr_senthil said...

அனைத்துலக பவர் ஸ்டார் திராவிட சமத்துவ முற்போர்க்கு ரசிகர் மன்றம் சார்பாக எங்கள் எதிர்கால முதல்வர் பிரதமர் ஜனாதிபதி ஸ்ரீனிவாசன் அவர்களை வெறும் தென் அமெரிக்க எழுத்துலக பரிச்சியம் உள்ள சாரு உடன் கம்பேர் செய்த இன்பா அவர்களை கண்டித்து எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட அணைத்து அங்கன்வாடிக்கும் விடுமுறை அறிவித்து எங்கள் எதிர்ப்பை வரலாற்றில் பதிவு செய்வோம்

Anonymous said...

இன்பா,
கொடுத்துவிட்டாயே இப்படி துன்பா!
இப்படி பயந்தோடுவது பண்பா?
எனவே,
அடுத்தவாரம் என் நண்பா
எழுதிடுவாய் தெம்பா.
இல்லாவிட்டால் உன்மீது
வீசிடுவேன் ஒரு வெண்பா(ம்)!

- சொல்லிக்கினது பாபா.

Anonymous said...

/ Then again, I live my life pragmatically and not stupidly. Every one has his right in this connection. Have your say, but Don't ever treat my comments as irresponsible. */

Sorry. I didn't mean to hurt your feelings.

No big deal. Take it easy.

-N.

R.Gopi said...

எழுத்தாளர் பட்டுக் கோட்டை பிரபாகர் லிஸ்டில் இல்லையே இன்பா...

ஒரு வேளை உங்கள் அபிமான அகில உலக தீவிரவாதிகள் ஒழிப்பு சங்கத்தின் தலைவரான ஆக்‌ஷன் ஹீரோ விஜயகாந்த படமான “சபரி”க்கு வசனம் எழுதியதால் விடுபட்டாரா என்று விளக்கவும்....

நல்லூரான் said...

//"இரண்டாம் உலகத்தை" தழுவி எடுக்கப்பட்ட "// அது ஏழாம் உலகம் ..

எஸ்.ராமகிருஷ்ணன் :-//தற்போது சினிமா சொற்பொழிவு நடத்திக்கொண்டு இருக்கிறார்//
மாற்றிக்கொள்ளவும் ->
இலக்கியப் பேருரை (இது அவரே பிரதாபிதுக்கொல்வது )

Shankari said...

Many info abt writers.. Good post

R. J. said...

To Mr. 'N': Appreciated. - R. J.

Anonymous said...

அய்யய்யோ...
அய்யய்யோ...
அய்யய்யோ...

(இதை கொல்றாங்க.. கொல்றாங்க.. பாணியில் வாசிக்கவும்)

எழுத்தாளர்
பா.ராவ வுட்டுட்டாங்க
பா.ராவ வுட்டுட்டாங்க
பா.ராவ வுட்டுட்டாங்க

இதுல ஏதோ உள்நாட்டுச் சதி அல்லது உள்குத்து இருக்கு.

அம்பி மாமா