பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 16, 2012

சன்டேனா இரண்டு (16-12-12) செய்திவிமர்சனம்இந்த வாரம் : முதல் செய்தியில்..ஒரு புடவையில் காயப்பட்ட கடவுள். இரண்டாவதில்.... கல்லினுள் உள்ள கடவுள் காயப்டுவதில்லை.


செய்தி # 1குஷ்பு - வடமாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய சமூகப்பெண்ணான நக்கத், குஷ்பு என்ற பெயரில் தமிழ்சினிமாவில் நடிகையாகி, இயக்குனர் சுந்தர்.சியை கைப்பிடித்து இந்துவாக மாறி,பின்னர் கருணாநிதி முன்ணணியில் திமுகவில் இணைந்து, தற்போது அக்கட்சியின் "பிரச்சார பீரங்கி" என்று வடிவெடுத்துவிட்டவர்.


இவரை திமுகவில் சேர்த்துக்கொள்ள, அப்போது கருணாநிதி அவர்கள் சொன்ன காரணம், "பெரியார் படத்தில் குஷ்பு, மணியம்மையாக சிறப்பாக நடித்து இருந்தார்" என்பதே.

சில வருடங்களுக்கு முன்னால், சென்னையில் நடந்த ஒரு சினிமா பூஜையில், ஒரு அம்மன் சிலையின் முன்பு கால் மீது கால் போட்டு உட்கார்ந்துகொண்டார். அதுவும் செருப்பு கால்களோடு. இந்து மத கடவுள்களை அவர் அவமதித்துவிட்டதாக, இந்து முண்ணனி போன்ற அமைப்புகள் கொதித்து எழுந்தன. இது சம்பந்தமாக அவர் மீது வழக்கும் அப்போது தொடரப்பட்டது.

"பஸ்ஸில் கடவுள் படம் இருக்கிறது என்பதற்க்காக, காலில் செருப்பு இல்லாமல் இவர்கள் பயணம் செய்வார்களா?" என்று அவருக்கு வக்காலத்து வாங்கின திராவிட கழகத்தினர்.

மீண்டும் குஷ்பு இது போன்ற ஒரு "அவமதிப்பு" விவகாரத்தில் சிக்கி இருக்கிறார்.

ரசிகர்களால் கோயில் கட்டி கும்பிடப்பட்ட முதல் நடிகை என்ற உலக சாதனைக்கு உரித்தான குஷ்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உடுத்தி இருந்த புடவைதான் சர்ச்சைக்கு காரணம்.

அவர் அணிந்து இருந்த புடவையில், கிருஷ்ணபகவான், ராமர் மற்றும் ஹனுமான் ஆகிய கடவுளின் உருவங்கள் இருந்தன.

"திட்டமிட்டே குஷ்பு இந்த புடவையை அணிந்து வந்து இருக்கிறார். யாருமே ராமர் மற்றும் பிரம்மசாரிய கடவுளான அனுமார் ஆகிய உருவங்கள் படைத்த சேலையை அணிவது இல்லை. இப்படி இந்து கடவுள்களை அவமதித்தற்க்காக, அவர் மக்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால்,அவருக்கு எதிராக போராட்டாங்கள் நடத்துவோம்" என்று அறிவித்து இருக்கிறது இந்து மக்கள் கட்சி.

"இது போன்ற எதிர்ப்புகளை நான் பொருட்படுத்தவில்லை" என்கிறார் குஷ்பு.

"இந்த பிரச்சினையை நான் கண்டு கொள்ளவே இல்லை. வேலை வெட்டி இல்லாதவர்கள் இதை பெரிதுப்படுத்துகிறார்கள். சிலர் என் மூலமாக விளம்பரம் தேட முயற்சிக்கின்றனர்," என்றார் குஷ்(!).

ஆனால், குஷ்பு சொன்னது நமக்கு அப்படியே 'உல்டா'வாக தெரிகிறது.

குஷ்பு, 'சீப் பப்ளிசிட்டி' க்காக திட்டமிட்டே, எதிர்ப்பு வரும் என்று தெரிந்தே, இந்த புடவையை உடுத்திவந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

முதல் காரணம், ஏற்கனவே அவர் இது போன்ற காரியத்தை செய்து இருக்கிறார். இரண்டாவது காரணம், தற்போது அவர்,

"வாழும் பெரியார்" அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் "கொள்கை பரப்புச் செயலாளர"’.செய்தி # 2
சென்ற வாரத்தில் குமுதம்,விகடன் போன்ற பத்திரிக்கைகளின் கவர்ஸ்டோரி தொடங்கி, சன் டிவி தனது வழக்கமான அழுமூஞ்சி சீரியல்களுக்கு எல்லாம் முழுக்கு போட்டுவிட்டு


இந்த கொண்டாட்டத்தில் ஒரு ஒரத்தில் கூட செய்தி வராமல் முடங்கிப்போனவர்....கடந்த 11 ஆம் தேதி பிறந்த நாள் கண்ட மகாகவி பாரதியார்.


இதைவிட கொடுமையான சம்பவம் இவரது பிறந்த நாளில், புதுச்சேரி நகரில் நடந்து இருக்கிறது.

புதுவையில் உள்ள ஈஸ்வரன் கோவில் வீதியில் இருக்கிறது பாரதி அவர்கள் வசித்த வீடு. அந்த வீடு பின்னாளில்,"பாரதி அருங்காட்சியகம்" என்று விளங்கியது. மகாகவி அவர்கள், புதுவையில் வாழ்ந்த காலக்கட்டங்களில் அவர் பயன்படுத்திய பேனா, புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு அங்கு வைக்கப்பட்டன.

ஐந்து வருடங்களுக்கு முன், பராமரிப்பு என்ற பெயரில் இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டது. பாரதியாரின் பிறந்த நாள் மற்றும் அவரது நினைவு நாள் ஆகிய நாட்களில் மட்டுமே அதன்பிறகு திறந்து விடப்பட்டது.

ஆனால், கடந்த 11, அவரது பிறந்த நாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்தும்பொருட்டு, இந்த வீட்டிற்க்கு வந்த உள்ளூரை சேர்ந்த பாரதி மன்றம் என்ற அமைப்பினர் அதிர்ச்சிக்கு ஆளாகினர். இந்த தினத்தில் கூட, அந்த வீடு நாள் முழுவதும் பூட்டப்பட்டே இருந்தது.

'இதெல்லாம் ஒரு பிரச்சினையா?' என்னும் அளவுக்கு போய்விட்டது மக்கள் மனமும், அரசும்.

“எல்லாமே தெய்வீகம் என்பதால் சக மனிதரைக் கொல்வதோ ஏன் அடிப்பதோகூடத் தெய்வக் குற்றமும் பாவமுமாகும்.


ஆனால் ஒரு கல்லை உடைப்பதென்பது பாவமன்று. ஏனெனில் மனிதருள் உள்ள கடவுள் காயப்படுவார்; கல்லினுள் உள்ள கடவுள் காயப்படுவதில்லை. எந்த ஒரு சிருஷ்டியையும் தார்மீகமற்றதெனக் கூறக் கூடாது. எல்லாமே தெய்வீகமானதால், அனைவரும் கடவுளைப் போல் சிந்தித்து, பேசி, செயல்பட வேண்டும். “

-சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் 2 மார்ச் 1919 ஞாயிற்றுக்கிழமையன்று, மகாகவி அவர்கள் முதன்முதலாக ஆற்றிய உரையில் இருந்து.


மகாகவியின் சிந்தனைப்படி, கல்லை உடைத்தாலும் 'உள்ளே' உள்ள கடவுள் காயப்படுவது இல்லை. கேவலம், ஒரு முன்ணாள் சினிமா கவர்ச்சி நடிகையின் புடவையா அவரை காயப்படுத்திவிடும்??


(நன்றி, இனி அடுத்தவாரம்)-இன்பா

14 Comments:

சக்கர கட்டி said...

என்ன பன்றது மக்கள் மனது கூட மாறிகிட்டு இருக்கு

dr_senthil said...

ஹிந்து மத கடவுள்கள் எல்லாம் எல்லோருக்கும் இளக்காரமாக போய்விட்டது .. இதயே முஹம்மது நபிகள் அல்லது இயசு கிறிஸ்து உருவ படங்களை சட்டையில் அல்லது பான்ட் பின்புறம் அணித்து வந்தால் சம்பந்தப்பட்ட சமய காவலர்கள் சும்மா விடுவார்களா ? ஹிந்து மதம் அனைத்தையும் தாங்கி கொண்டிருப்பதால் மேலும் மேலும் அதை அவமதிபதாக நினைத்து தங்களை மேலும் கீழதரமான நபர்களாகவே நிருபிகின்றார் குஷ்பு என்ற நக்கத்..இவர்களுக்கு கடவுள் எதிர்ப்பு என்பது வெறும் ஹிந்து எதிர்ப்பு மட்டுமே அல்லாவும் ஏசுவும் மைனாரிட்டி தெய்வம் ஆகையால் வோட் விழும் தெய்வங்கள்... சந்தர்பாவாத சுயநலமிகள் அந்த ஆண்டவன் இவர்களை மன்னிக்கட்டும்

Barari said...

ந்த புடவையை தயாரித்த நிறுவனம் மற்றும் விற்பனை செய்த கடை இவர்களையெல்லாம் எதிர்க்காமல் இதை அணிந்த குஷ்புவை மட்டும் எதிர்க்கும் காரணம் எதுவும் உள் குத்து இருக்குமோ?சங் பரிவார அவாள்கள் சிந்திக்கவும்.

Anonymous said...

We people don't have a steady mind. Our mood keeps oscillating and so what appears wrong today will look right tomorrow. As a matter of fact, this is true all over the world.

Advanced countries have well written law to handle these situations. In the Gulf, the laws are well written and strictly enforced too. Due to this, individuals are very much afraid to break the law.

In India, anything becomes a media sensation that too for a matter of few days. Even in that short period some will make money, some will seek publicity but the vast majority will simply watch.

Some will also read Idly Vadai :)


Anonymous said...

//சக்கர கட்டி said...
என்ன பன்றது மக்கள் மனது கூட மாறிகிட்டு இருக்கு//

சக்கர கட்டி தண்ணில போட்டா கரைஞ்சு போய்டும் , அது மாதிரி.

jaisankar jaganathan said...

பிரபு என்ன சொல்லுறார் இதுக்கு? என்ன இருந்தாலும் அவரோட முன்னாள் காதலியாச்சே

pongalvadai said...

குஷ்பு அணிந்து இருக்கும் புடைவை அவரே தயாரித்தா . எதோ ஒரு கடையில் வாங்கியதுதனே. மற்ற பெண்கள் போட்டால் தவறு இல்லை , குஷ்பு அணிந்தால் மட்டும் தவறா .கடவுள் அவமானபடுத்த படுகின்றார் என்றால் , புடைவை தயாரித்த கம்பெனியை அல்லவா எதிர்க்க வேண்டும். இந்த இந்து முன்னணிக்கு எல்லாம் குஷ்பூ விட்டால் வேறு வேலையே இல்லையா. எது எப்படியோ தனக்கு வேண்டிய புப்ளிசிட்டி
போட்டி போட்டுகொண்டு அதி மேதாவிகள் (இட்லி வடை உட்பட ) கொடுத்து விட்டதால் குஷ்பூக்கு குஷியே.

kothandapani said...

குஷ்பு அணிந்து இருக்கும் புடைவை அவரே தயாரித்தா . எதோ ஒரு கடையில் வாங்கியதுதனே. மற்ற பெண்கள் போட்டால் தவறு இல்லை , குஷ்பு அணிந்தால் மட்டும் தவறா .கடவுள் அவமானபடுத்த படுகின்றார் என்றால் , புடைவை தயாரித்த கம்பெனியை அல்லவா எதிர்க்க வேண்டும். இந்த இந்து முன்னணிக்கு எல்லாம் குஷ்பூ விட்டால் வேறு வேலையே இல்லையா. எது எப்படியோ தனக்கு வேண்டிய புப்ளிசிட்டி
போட்டி போட்டுகொண்டு அதி மேதாவிகள் (இட்லி வடை உட்பட ) கொடுத்து விட்டதால் குஷ்பூக்கு குஷியே.

s suresh said...

நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது! பப்ளிசிட்டிக்காக இந்த வேலையை கட்டாயம் அவர் செய்திருக்கலாம்! பாரதியார் பகிர்வு அருமை! நன்றி!

Anonymous said...

பெருமாள் படத்தை புடவையில் அச்சடித்து இனிமேல் புண்ணியம் கட்டணுமா? பக்தியா, இல்லை, பேஷனுக்காகவா? எதுவானாலும் சரி.அடுத்தவர்கள் உணர்வுக்கு மரியாதை கொடுப்பது அவசியம்.

Anonymous said...

//பிரபு என்ன சொல்லுறார் இதுக்கு? என்ன இருந்தாலும் அவரோட முன்னாள் காதலியாச்சே//

தம்பி, ரொம்ப உளறலாவே எழுதுவதாக கொள்கைரீதியா முடிவு செய்து விட்டாய் போலிருக்கிறதே

jaisankar jaganathan said...

//தம்பி, ரொம்ப உளறலாவே எழுதுவதாக கொள்கைரீதியா முடிவு செய்து விட்டாய் போலிருக்கிறதே
//

அனானி,
நான் சொன்னது பொய்யா உண்மையா?

அத மட்டும் பாரு

R. J. said...

This is not the first time Hindu gods' pictures are printed in sarees. I have seen sarees with Krishnar, Lakshmi shining all along the border.They were once popular too. Kushbu wears sarees often and she was not standing on the saree. Even if she ignores this news item as well as the coments, we won't! We are Indians without work! (I am retired and have not found a serious interest in other activities except reading books . magazines and browsing blogsites.) - R. J.

dr_senthil said...

நுகர்வோர் இல்லையென்றால் விற்பனை இருக்காதல்லவா ?
இதை செய்தால் கட்டாயம் பிரச்சனை வரும் என்று தெரிந்தே செய்வது குற்றம் அல்லவா ? பிரச்சனை ஹிந்து கடவுள் உருவ சேலையை மற்ற மதத்தினர் உடுத்துவது தானே ? அதைத்தான் இங்கே விவாதிக்கிறோம்.. நாளை ஹிந்து பெண் ஒருத்தி மேரிமாதா உருவ சுடிதார் அணிந்தால் பிஷப்கள் சும்மா இருப்பார்களா ? மற்ற மதத்தின் நுண்ணிய உணர்வுகளை மற்ற மதத்தினர் மதிபளிக்கவேண்டும் .. அவ்வோளுதான்