பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 11, 2012

இன்பாவின் Love Anthem


வாசக நண்பர்களுக்கு,

வணக்கம். என்னை(யும்) நினைவில் வைத்து இருப்பிர்கள் என்று நம்புகிறேன்.

இட்லிவடைக்கு இவ்வளவு லேட்டாக பிறந்த நாள் வாழ்த்து சொன்னவன் நானகவே இருப்பேன். "இட்லிவடையும், நானும்" என்று எழுதுவதற்க்கு பதிவுகள் தேவைப்படும். என்னை எனக்கே அடையாளம் காட்டியவர் இட்லிவடை என்று ஒரே வரியில் முடிக்கிறேன்.

தொடர்ந்து 50 வாரங்கள் வரை வெற்றிகரமாக வந்துகொண்டிருந்த எனது "சன்டேனா இரண்டு" தொடர் மீண்டும் விரைவில்.அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வழக்கமான கட்டுரைகள் தவிர்த்து, இட்லிவடை - 9 ஸ்பெஷல் பதிவுக்கு ஒரு கவிதை அதுவும் யங் சூப்பர்ஸ்டார் (அதாங்க,சிம்பு) பாணியில் ஒரு 'காதல் ஆன்தம்' எழுத நான் செய்த ஒரு விபரித முயற்சி கீழ்வரும் பதிவாக முடிந்து விட்டது.


அன்புடன்,
இன்பா

Love Anthem

கல்விக்கடனுக்கு
அலையும்
கிராமத்து
ஏழை மாணவனாய்..
உன்
கடைக்கண் பார்வைக்கு
காத்திருக்கிறேன்.

யாருக்கும் தெரியாமல்
நள்ளிரவில் உயரும்
பெட்ரோல் விலை போலவே
ரகசியமாய்
என்னை பார்க்கிறாய் நீ.

பத்துமணி நேர
மின்வெட்டை விட
பத்து நொடி வரும்
உன்
கண்வெட்டுதான்
அதிகம்
வியர்க்கவைக்கிறது
என்னை.

தேங்கிய மழைநீரில்
தத்தளிக்கும்
தெருவாக்கிவிடுகிறது
என் மனதை
அது.

மக்கள் நலனுக்கு
அரசு போடும் திட்டங்கள்.
உனனை நினைத்து
நான் எழுதிவைத்திருக்கும்
காதல் கடிதங்கள்.
இரண்டும் ஏனோ
இலக்கை எட்டுவதேயில்லை.

மகளிர் இடஒதுக்கிடு
லோக்பால்
டெசோ
இப்படி
'இத்து'ப் போன வரிசையில்
சேர்ந்துவிட்டன
கொடுக்காமல் போன
என் 'லவ் லெட்டர்ஸ்'.

தனியார் பள்ளிக்கட்டணம்
குறைவது எப்பொழுது?
தனிமையில் நாம்
சந்திப்பது எப்பொழுது?

ஊழலை
ஒப்புக்கொள்ளாத
அரசியல்வாதி போலவே
என் மீதான
காதலை
ஒப்புக்கொள்வதில்லை நீ.

மதிய உணவுக்கும்
இரவு உணவுக்கும்
இடையில்
முன்னாள் முதல்வர்
இருந்த
உண்ணாவிரதமே
காதலை மறைக்கும்
உன் பாசாங்கு.

'சிறந்த மௌனம்'
என்னும் தலைப்பில்
போட்டி வைத்தால்
முதலிடம் உனக்கே.
இரண்டாமிடமே
இந்திய பிரதமருக்கு.

மணமேடையில்
இல்லாவிட்டாலும்
மருத்துவமனையிலாவது
சேர்த்துவைத்து
நம் பிரிவுக்கு
'சங்கு' ஊதுமா
'டெங்கு'?

-இன்பா


கவிதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, சுபத்ரா அல்லது ஹரன்பிரசன்னா தான் இதை பற்றி சொல்ல வேண்டும் :-)

15 Comments:

சுபத்ரா said...

கவிதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, சுபத்ரா அல்லது ஹரன்பிரசன்னா தான் இதை பற்றி சொல்ல வேண்டும் :-)

தலை(இ.வ.) இருக்கும் போது வால் ஆடலாமா?

Sh... said...

Super, romba rasithen.

Anonymous said...

/* கவிதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, சுபத்ரா அல்லது ஹரன்பிரசன்னா தான் இதை பற்றி சொல்ல வேண்டும் :-) */

அங்க கை வச்சு, இங்க கை வச்சு, கடைசியில அடிமடியிலேயே கை வச்சுப்புட்டானுங்களே!.....

நல்லா இருங்கடே...!

;-)

இன்பாவின் கவிதை இன்பமாகவே இருக்கிறது. இந்த காதல் கத்திரிக்காயத் தாண்டி இன்னும் பல விஷயங்களை எழுதுவாராக.

kothandapani said...

அன்புள்ள இனியா
எங்கு போனாய் நண்பா
கேட்கின்றேன் நான் அன்பா
எழுத துடிக்கின்றாய் வெண்பா
அது என்ன பெரிய தப்பா
இதோடு போதும் ஆளை விடுப்பா
அது என்ன கவிதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று .............. உமக்கு எதைபற்றியும் ஒன்றும் தெரியாது என்று ஊருக்கே தெரியுமே.....

kg gouthaman said...

காதல் கீதம் நல்லா இருக்கு. காலத்திற்கேற்ற யதார்த்தமான கவிதை.
"இட்லி வடை போல முகம் காட்டாமல் முத்தம் கேட்கிறாய் நீ!" என்றும் சேர்த்திருக்கலாம்!

சிந்திப்பவன் said...

இதற்கு பெயர் "Enter-key" கவிதை.

இதை எழுதும் விதம்:

1)முதலில் சுமார் 200வார்த்தைகளில் ஒரு கட்டுரையை கணினியில் தட்டச்சு செய்து கொள்ளவும்.

2)பிறகு ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு வார்த்தைகளுக்கு இடையில் cursor ஐவைத்து Enter-key ஐ தட்டவும்

ஒரு 40 வரி கவிதை ரெடி.

Anonymous said...

அங்க கை வச்சு, இங்க கை வச்சு, கடைசியில அடிமடியிலேயே கை வச்சுப்புட்டானுங்களே!.....

This is very vulgar.

Anonymous said...

இட்லிவடை,

அப்ப ஹரன் பிரசன்னாவும் சுபத்ரா மாதிரி கவிநயமே இல்லாத கவிதை எழுதறவரு தானா ?? ஒன்றும் புரியலை சார்.

அப்புக்குட்டி

Anonymous said...

கவிதை / கற்பனை அருமை. கெளதமனின் வரியையும் ரசித்தேன்

ச.சங்கர்

Anonymous said...

vulgar?!!

நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. அது ஒரு தமாஷான தெற்கத்திய சொலவடை.

சென்னை நகரில் தெருவுக்குத் தெரு ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சினிமா சுவரொட்டிகளை விட இது ஒன்றும் வல்கர் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

அ. வேல்முருகன் said...

காதல் ஒன்றும்
சமூக அவலமல்ல

Anonymous said...

//இட்லிவடை,

அப்ப ஹரன் பிரசன்னாவும் சுபத்ரா மாதிரி கவிநயமே இல்லாத கவிதை எழுதறவரு தானா ?? ஒன்றும் புரியலை சார்.

அப்புக்குட்டி//

very absurd comment about subhadra. read the following

http://subadhraspeaks.blogspot.in/2012/02/blog-post.html

http://subadhraspeaks.blogspot.in/2012/09/blog-post.html

http://subadhraspeaks.blogspot.in/2012/08/blog-post.html

கவிதையின் அடிமடியில கைவைச்சவன் said...

நண்பா

இன்பா

பண்பா

நீ

பாடிய வெண்பா

சூப்பர்ப்பா........

இதற்கு முன்பா

எழுதிய சண்டேனா

இரண்டு எழுதுப்பா....

நாங்க ரெடிப்பா.....

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

முகம் காட்டாமல்
முத்தம் கேட்ட
...
,...
.....
,,,,,,

இட்லி வடை

சாரே... கௌதம் பின்னிட்டீங்க.... ரொம்ப ரசிச்சேன்...

Cinema Virumbi said...

ஒபாமா ஜெயிச்சிட்டார் அங்கே !
ஒங்கப்பாம்மா நம் காதலை ஜெயிக்க விடுவாங்களா இங்கே ?!
(நன்றி: விவேக் ஏதோ ஒரு படத்தில் சாமியாராக வந்து அடிக்கும் ஜோக்!)

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in