பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 13, 2012

துப்பாக்கி FIR


மேதாவித் தனமான வசனமோ, ஸ்டைலுடன் பஞ்ச் டயலாக்கோ இல்லாமல் வெற்றி படம் எடுக்க முடியும் என்று மீண்டும் ஒரு முறை முருகதாஸ் நிரூபித்துள்ளார். தமிழ் படத்துக்கு இந்த கதை அரதப் பழசு என்றாலும் கதையை சொல்லிய விதம் அருமை.

தீவிரவாதித் தலைவன், ராணுவத்திலிருந்து விஜய், மும்பை, வெடி குண்டு என்ற மூன்று வார்த்தையை சொன்னாலே கதை முடிந்துவிடும். ஆனால் படம் நெடுகிலும் சஸ்பென்ஸ் வைத்து விஜய் விளையாடும் விளையாட்டு சூப்பர். இந்த விளையாடில் நாமும் ஆங்காகே உள்ளே போவதால் லாஜிக் ஓட்டை எல்லாம் மறந்து போய்விடுகிறது.


விஜய் படத்தில் கூட இருப்பவர்களே காமெடி செய்வார்கள் அதே மாதிரி தான் இந்த படத்திலும் தங்கைகள், அப்பா, நண்பன் சத்தியன் என்று எல்லோரும் அளவாக செய்துள்ளார்கள்.

வழக்கம் போல படத்தில் தீவிரவாதிகள் எல்லாம் இஸ்லாமியர்கள். ஆனால் கூடவே அவர்களுக்கு இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் உதவி செய்ய வேண்டும் என்ற செக்யூலரிசம் எதுவும் செய்யாமல் படம் எடுத்ததற்கு சபாஷ்.

இசை ஹாரிஸ் ஜெயராஜ், பாடல் வரிகள் எல்லாம் நமக்கு கேட்கிறது, புரிகிறது. கடைசி பாடல் வெண்ணிலவே தாளம் போட வைக்கிறது. பல சஸ்பென்ஸ் இடத்தில் தம்பூராவின் இசையை உபயோகப்படுத்தியிருக்கிறார்.ஓவர் ஆக்டிங்கிற்கு நிறைய சான்ஸ் இருந்தும் அளவாக நடித்திருக்கிறார் விஜய். பல தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று தன் தங்கையை மீட்டுக்கொண்டு வரும் இடத்தில் ட்ராப்பிகானா ஜூஸ் குடிக்கும் அந்த இடத்தில் விஜய், முருகதாஸ் தெரிகிறார்கள்.

காஜல் முட்டிக்கு மேல் உடை அணிந்துக்கொண்டு வருகிறார், பாடல் பாடுகிறார். சில இடத்தில் காமெடியும் செய்கிறார்.

சாதாரணமாக ஆரம்பிக்கும் ஓபனிங் சாங், சாதாரண ஒரு பஸ் குண்டுவெடிப்பு அதற்கு பிறகு ஜெட் வேகத்தில் போகும் படத்தில் விஜய் ஸ்டைலாக சுட்டுத்தள்ளுகிறார்.

ஜெயராம் காமெடி செய்கிறார். படம் ஆரம்பத்தில் 'படத்தில் வரும் மிருகங்களை சித்திரவதை செய்யவில்லை' என்று போடுகிறார்கள். எவ்வளவு பொய் :-)

இட்லிவடை மார்க் : 8/10

பிகு: "இந்த முறை தீபாவளிக்கே துப்பாக்கி பார்க்கவேண்டாமென்று முடிவெடுத்துவிட்டதால், டிக்கெட் ரிசர்வ் செய்ய ஆர்வம் காட்டவில்லை" என்று ஒரு பிரபலம் எழுதியுள்ளார். அவரே இந்த படத்தை இரண்டு முறை பார்ப்பார் என்று நினைக்கிறேன்.

துப்பாகியால் கில்லியும் அடிக்கலாம் என்று நிரூபித்துள்ளார்கள்.



19 Comments:

s suresh said...

அட இப்படி பாராட்டி தள்ளியிருக்கீங்க! விஜய் காட்டுல மழைதான்!

Ravi Chander said...

காஜல் முன்ன மாதிரி இல்லப்பா. ஏதோ குறையுது .

முத்தரசு said...

சரி பாப்போம்

Unknown said...

//ஓவர் ஆக்டிங்கிற்கு நிறைய சான்ஸ் இருந்தும் அளவாக நடித்திருக்கிறார் விஜய்//

idhu enna kindala paaraata :-)

VIkram. said...

//ஓவர் ஆக்டிங்கிற்கு நிறைய சான்ஸ் இருந்தும் அளவாக நடித்திருக்கிறார் விஜய்//

idhu enna kindala paaraata :-)

This was from me - forgot to include my name ;-)

Anonymous said...

இப்படி புளுக எவ்வளவு கொடுத்தார்கள். படமாய்யா இது. உண்மையான விமரிசனம் இங்கே:
http://www.searchindia.com/2012/11/13/thuppakki-review-whopping-nonsense/

Anonymous said...

இத்த எல்லாம் பாத்து ஒருத்தன் விமரிசனம் எயுதியிக்கறான் பாருங்க!

இட்லிவடயனுக்குள்ள ஒரு இட்லிமடயன் இக்கிறது இத்தினி நாளா தெரியாம பூடுசே நைனா!!!

Anonymous said...

2020 Vision !!!
http://www.tubetamil.com/watch-cinema-videos/thuppaki-opening-at-udhayam-theatre.html

Anonymous said...

/*இப்படி புளுக எவ்வளவு கொடுத்தார்கள். */
கட்டிங் எப்பவோ போயாச்சு ... ஹா ஹா ஹா ....

dr_senthil said...

என் ரசிகர்களுக்கு இதுபோதும் என்று நடிகரும்,முந்தய மொக்கையை விட இது தேவல என்று ரசிகர்கள் பெருமிதபட்டுகொள்வதும் #என்னவிதமான தமிழ் சூழல்?

dr_senthil said...

நல்லபடம் என்று யாரும் சொல்வதில்லை,அவரின் முந்தய படங்களை விட பரவாவில்லை என்று அவரின் படங்களோடு கம்பேர் செய்து சந்தோசப்பட்டு கொள்ளவேண்டியததான்

Anonymous said...

Murugadoss will usually copy a HWood film and remake it in Tamil with Masala. This time, he copied one of the DMDK Thalaivar films with some Gilli like climax...

Kajal Agarwal, Jayaram both are waste characters. Sathyan is used to narrate the logic of the scene to rural audience...

Gopinath said...

manushyaputhran :)

Gopinath said...

Haran Prasanna

Nilofer Anbarasu said...

ennathu ettu maarkaa !!!!!!!

UNMAI said...

DEAR ALL...PLEASE FOLLOW THE LINK WILL UNDERSTAND ABOUT THUPPAKKI FILM.

http://kavithaiveedhi.blogspot.com/2012/11/blog-post_14.html

Anonymous said...

DEAR ALL...PLEASE FOLLOW THE LINK WILL UNDERSTAND ABOUT THUPPAKKI FILM.

http://kavithaiveedhi.blogspot.com/2012/11/blog-post_14.html

Shiva Bakthan said...

துப்பாகியால் கில்லியும் அடிக்கலாம் என்று நிரூபித்துள்ளார்கள். ///

விஜய்க்கு பதிலா நீங்க பேசுரிங்களா.....punch dialogue

crazypaja said...

முருகதாஸின் அதிரடி இயக்கத்தில், துப்பாக்கி படம் தோட்டா மாதிரி சீறிப்பாய்கிறது. “ஸ்லீப்பர் செல்” ஜிஹாத் தீவிரவாதிகளை பற்றிய கதை.விஜய்,ஒரு மிடுக்கான ஆர்மி ஆபீசர் .அவருக்கு, இது ‘இருட்டுக்கடை’ அல்வா சாப்பிடரா மாதிரி வேஷம்! கேட்கணுமா? மனுஷன் பட்டையை கிளப்புகிறார். துடுக்கு பெண்ணாக க’ஜொள்’. ஹிஹி...அழகாய் இருக்கிறார்...பயமாய் இருக்கிறது.(இந்திக்கு போய் விடுவாரோ என்று )
வித்தியாசமாக,ஜெயராம் கதையோடு ஒன்றிய நல்ல காமெடி பண்ணி இருக்கிறார். (சில பழைய விஜய் படங்கள்ல “கதை”யே காமடிதான்! ‘சுறா’ ஞாபகம் இருக்கா? ஆத்தாடி...நல்லவேளை,இதுல அப்படி இல்ல!).விறுவிறுப்பான திரைக்கதை. இசை? ..ம்ம்ம்...பசை இல்லை. செயராசு தம்பி, ஆன மட்டும் ”கூகிள்” பண்ணி பார்க்கிறார்...கடைசியில் ஒலிக்கும் “போய் வரவா’ மட்டுமே நெஞ்சில் நிற்கிறது.மற்றவை – கேப்’பில் போய் பாப்கார்ன் வாங்கி வர உதவும் ரகம்.பின்னணி இசை சில இடங்களில்,முன்னணியில் வந்து ரொம்பவே படுத்துகிறது. சந்தோஷ் சிவனின் கேமரா, மும்பை நகர வீதிகளில் விஜய்யை இயல்பாக காட்டுவது அழகு. பீச்சில் பலூன் சுடுவது போல, நெத்திப்பொட்டில் தீவிரவாதிகள் பலரை கேஷுவலாக சுட்டு தள்ளுகிறார் விஜய்&கோ. க்ளைமாக்ஸில், அத்தனை அடியாட்களும் “கீரி பாம்பு” வித்தை பார்ப்பவர்கள் போல வேடிக்கை பார்க்க, விஜய் வில்லனை அடித்துநொறுக்கி ,கடத்தி கொண்டு போய்,கப்பலை வெடித்து, கலக்குகிறார்....

லாஜிக்?

அதெல்லாம் எதுக்கு ?

விஜய் மேஜிக் !

அது !!!

படம் சூப்பர் ஹிட்டு சார்.

I liked it.