பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 23, 2012

சாப்பா குருஸ் - மலையாளம்


இட்லி வடை (22 ஃபிமேல் கோட்டயம்) பதிவு பார்த்து, டிவிடி தேடும் அன்பு வாசகர்களே, உங்கள் லிஸ்ட்டில் இப்படத்தையும் தேடலாமே. நல்ல தரமான, ஒரு விருவிருப்பான படம் பார்த்த திருப்தி உங்களுக்கு கிடைக்கும்…. இது பற்றி சொல்லி தான் பெற்ற இன்பத்தை பகிர்ந்தளித்த திருப்தி இட்லிவடைக்கும் கிடைக்கும்.

கதை என பார்த்தால், அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட், வில்லன் ஹீரோ சடுகுடு, பாம் வைப்பது எடுப்பது என இல்லாமல், யதார்த்த நடைமுறை வாழ்வை சொல்லி, எளிமையாய் ஆழமாய் சுவாரசியமாய் சொல்லப்பட்ட படம். ஒரு நுண்ணிய உணர்வை சுற்றி பின்னப்பட்டதே இப்படத்தின் பலம்..வாழ்வில் நம் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது நம் மன ஓட்டமே. வெற்றி தோல்வி என்பது நம் கையில் உள்ளது என ஆழமாய் சொல்லும் படம். குட்ட குட்ட குனிய தொடங்கும் போது தான் கோளாறே, நிமிர்ந்து நின்றால் நிச்சயம் ஜெயிக்கலாம் என அழுத்தமாய் சொல்லும் படம்.

கதை இரு இளைஞர்களை சுற்றி பின்னப்படுகிறது. ஒருவன் தொட்டதெல்லாம் துலங்கும், கோல்டன் மிடாஸ் டச் உள்ள இளைஞன். கோடிகளில் புரளும் ரியல் எஸ்டேட்டு பிசினசில் கொடி கட்டி பறக்கிறான். பளபளப்பான வீடு, கார், இளம் பெண்கள் என வாழ்க்கை ஓஹோ என ஓடுகிறது. இன்னொருவனோ, ஏழ்மையின் புண்ணியத்தில், அடிப்படை வசதிகள் இல்லாது அழுக்கு குடித்தனத்தில் ஒடுங்கி வாழ்கிறான். காலையில் வெறும் பரோட்டாவை சக்கரை துணையுடன் தின்னும் அளவுக்கு வசதியே அவனுக்கு. உணவகத்தில் இருக்கும் அனைவருமே, அதை கேலி செய்து கிண்டல் கிண்டுகிறார்கள். உலகின் கேலியை பொறுட்படுத்தாமல், அவன் தன் பாட்டுக்கு தன் வேலையை செய்கிறான். வேலை செய்யும் இடத்தில், அவன் மானேஜர் அவன் இளக்காரத்தை பார்த்து பச்சை குதிரை தாண்டுகிறார். சக ஊழியர் கூட அவனை கீழாகவே பார்க்கிறார்கள்.

மலைக்கும் மடுவுக்கும்மான இரு இளைஞர்களை பற்றி சொல்லும் ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் வேகக்குறைவு என்றாலும், அந்த காட்சிகள் பார்த்து பழகி, நம்மை தயார்படுத்துதல் நலம் என்றே சொல்லலாம்.

இப்படி தனித்தனி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பம்.

இரு வேறு திசைகளில் பயணித்து கொண்டிருக்கும் அவர்களது வாழ்க்கை, ஒரு புள்ளியில் இணைகிறது. அவர்களை ஒன்று சேர்க்கிறது.

அது எப்படி அவர்கள் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது என்பதுதான் அதிரடி திருப்பம்.

அதிரடி திருப்பம் என்றதும், கொலை, கொள்ளை, பாம் என்றெல்லாம் ஜேம்ஸ் பாண்டு ரேஞ்சுக்கு யோசிக்காமல், நடைமுறையில் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வுதான் என நினைவு படுத்திக் கொள்வோம்.

நடப்பது வேறோன்றுமில்லை. பணக்கார இளைஞனின் செல்போன் (ஐ பாட்) நழுவி தரையில் விழ, அதை ஏழை இளைஞன் எடுத்து கொள்ள என நடக்கும் சிறு திருப்பமே அந்த தடாலடி.

அதன் பின் சங்கிலித் தொடர் போல் நடக்கும் காட்சிகள் ஒரு ரோலர் கோஸ்டர் துடிப்புடன் நகர்கிறது. ஒரு துப்பறியும் கதையை ஒத்த திரைக்கதை அதன்பின் நம்மை கட்டிப் போடுகிறது.

நடிப்பவர் புதியவர்கள், பஞ்ச் டயலாக்குவதில்லை. பறந்து பறந்து ஃபைட் பண்ணுபவர்கள் இல்லை. என்றாலும் நம்மை ரசிக்க வைக்கிறார்கள்.

ஒரு ஒன்றரை அணா ஃபோனை சக ஊழியன் ஒருவன் கும்பலில் காட்டி, ஃபிலிம் காட்டுவதை பார்த்து விட்டு, நம் ஏழை இளைஞன் கால்சட்டை பையை தொட்டு அதை விட காஸ்ட்லியா நான் வைச்சிருக்கேன், என பெருமிதம் கொள்வானே. அதை வெளியில் எடுக்க முடியாமல் திணறுவானே…

அந்தரங்கமான தன் படுக்கை அறை கிளிப்பிங்கை ஃபோனோடு தொலைத்து விட்டு திணறுவதில் ஆகட்டும். அல்லது தொலைத்த ஃபோனை மீட்க துடிக்கும் உணர்வை கட்டுப்படுத்தி சமரசம் பேச இறங்கி வரும் சாதுர்யம், என சுவாரசியமாய் அமைத்த காட்சிகள் அற்புதம்.

பயந்து பயந்து, டிராபிக்கில் ரோடு கிராஸ் செய்யும் அதே இளைஞன், இன்று எப்படி தன்னம்பிக்கையுடன் சாலையை கடக்கிறான். அவ்வளவுதான் வாழ்க்கையின் ரகசியம் என ஒற்றை காட்சியில் காட்டிய இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும்.

உணர்வுகளை மெனக்கெட்டு செல்லூலாய்டில் கொண்டு வந்து, ஒரு ரசிக்கத்தக்க மூன்று மணி நேர சினிமாவாக தந்தது இயக்குனரின் புத்திசாலித்தனம் பாராட்டுதற்குறியது.

பொழுது போக்கும், சுவாரசியமும் தத்துவ சிந்தனையும் தரமான திரைப்படமும் வேண்டுவோர் நம்பி செல்லலாம்.

- லாரன்ஸ்4 Comments:

globetrotter said...

http://www.youtube.com/watch?v=Kc9ILtYTvm0&feature=related

இராஜராஜேஸ்வரி said...

வாழ்வில் நம் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது நம் மன ஓட்டமே. வெற்றி தோல்வி என்பது நம் கையில் உள்ளது என ஆழமாய் சொல்லும் படம்.

அருமையான விமர்சனப்பகிர்வுகள்..

Anonymous said...

Two South Indian films have been made, whose plots have close resemblance to Handphone but no credits have been given. The films are Chaappa Kurish (Heads or Tails; Malayalam; 2011) and Only Vishnuvardhana (Kannada, 2012).

-------- Malayalam movies used to escape their blatant copy ways. with google, it's much more easy to call their bluff
Anonymous said...

waste