பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 05, 2012

தாவுத் கட்கரி

பிஜேபி கட்சிக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை, அவர்கள் கட்சி தலைவர் சகட்டு மேனிக்கு உளர ஆரம்பித்துள்ளார். வீடியோ ஆடியோ என்று வந்துவிட்ட இந்த காலத்தில் சுவாமி விவேகானந்தருடன் கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகீமை ஒப்பிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். முன்பு ஜின்னா பற்றி அத்வானி பேசினார் இப்போது கட்கரி. இவர்களை காட்டிலும் தினமும் கேள்வி பதில் அறிக்கை விடும் தலைவர் எவ்வளவோ மேல். இவருக்கு இரண்டாவது தடவை தலைவர் பதவி கொடுக்கும் கட்சியின் IQ எப்படிப் பட்டதாக இருக்கும் ?

நிச்சயம் இவர் பிஜேபி தலைமை பொறுப்பிலிரிந்து ராஜிநாமா செய்ய வேண்டும். விவேகானந்தர் பற்றி சொன்னதற்கு இல்லை, இவர் மீது சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு!


தாலிபான் மாதிரி தான் ஆர் எஸ் எஸ் என்று நாளைக்கு சொல்லுவதற்குள் இவர் ராஜிநாமா செய்வாரா ?

5 Comments:

Anonymous said...

தாலிபான் மாதிரி தானே RSS!! இதை எதுக்கு நாளைக்கு சொல்லணும்? அது தான் இப்பவே தெரியுமே!!!

jaisankar jaganathan said...

தாலிபான் மாதிரி தான் ஆர் எஸ் எஸ்

R. J. said...

Please elaborate what is wrong in what Nitin Katgari has said. He after all compared the two personalities for the two extremes ie., to explain the contrast. I wonder why did he apologise later? Media - particularly the English visual media, have gone mad and harp on one word or one phrase and spend the whole day on it. Sickening. - R. J.
siva said...

கட்கரி சொன்னதில் ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு எல்லாரும் மூடர்களைப் போல பினாத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இட்லி வடையும் அப்படியா ?

அவர் விவேகானந்தரும் தாவூதும் ஒண்ணுனு சொன்னாரா? மூளையை உபயோகப் படுத்துவதில் அவர் ஒரு எக்ஸ்ட்ரீம் என்றால் இவன் ஒரு எக்ஸ்ட்ரீம் என்று சொன்னார். அது தப்பா?

Anonymous said...

If you give a knife to a surgeon, he will perform surgery and save many life. If you give knife to a thief, he will use it for burglary and kill innocent people.

With this statement, can you say that I am comparing a Doctor to a Thief?