பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 29, 2012

பெருமாளுக்குத் தீட்டு


கடலூரில் உள்ள வைணவ திவ்யதேசமான திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி எழுந்தருளியிருக்கிறார். நேற்று பதினெட்டு வயது பெண் ஒருத்தி பக்திப் பரவசத்தில், “கோவிந்தா கோவிந்தா” என்று உரக்க சொல்லியபடி பெருமாளின் சன்னதிக்குள் சட்டென்று நுழைந்து, உத்சவ மூர்த்தியை தொட்டு வழிபாடு செய்த காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயிலின் மூத்த அர்ச்சகர், கோயில் நிர்வாகிகள் அப்பெண்ணை போலீசிடம் ஒப்படைத்து விட்டதாகவும், அப்பெண்ணின் செய்கையால், தீட்டு ஏற்பட்டு கோயிலின் பவித்திரத்திற்கு தோஷம் உண்டானதால் கோயிலை உடனடியாக மூடி விட்டதாகவும் தெரிவித்தார்!

கோயிலின் நிர்வாக அதிகாரி, அப்பெண்ணின் மீது திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், புலவனூரில் இருக்கும் கண்ணன் பட்டாச்சாரியர் என்பவரை வரவழைத்து, பவித்திரோத்சவ காரியங்களை மேற்கொண்டதாக அவர் கூறினார் (இவ்விஷயத்தில் கண்ணன் வாத்தியார் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கக்கூடும்!). ஒரு 2 மணி நேர ஜல சம்ரோக்‌ஷண பூஜைக்குப் பின்னர் 4.45 மணி அளவில் கோயில் மீண்டும் திறக்கப்பட்டது.

சன்னதிக்குள் நுழைந்த பெண்ணுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே ஏதோ பிரச்சினை இருந்ததாகவும், ஒருவித மோன நிலையில் அப்பெண் அப்படி செய்து விட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருப்பதிக்கே லட்டா என்பது போல பெருமாளுக்கே தீட்டா (அவன் அண்டசராசர அதிபதி என்பதால், அந்த 2 மணி நேரம் சகல லோகங்களும் தீட்டு தோஷத்தில் இருந்திருக்க வேண்டும் அல்லவா?) என்பது ஒரு புறமிருக்க, ஒரு சாதாரண விஷயத்தை போலீஸ் வரை எடுத்துச் சென்று ஒரு பெரிய செய்தியாக்க வேண்டுமா என்பதும் தொக்கி நிற்கிறது! ஆண்டாள் என்ற சிறுமி அணிந்த மாலையை (விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார்) அதை தவறான செயலாக கருதியபோதும்) மனமுவந்து ஏற்றுக் கொண்டவன் அந்த திருவரங்கப் பெருமாள்! வைணவ வாழ்த்தே, “அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ” என்று அடியார்களுக்கு முதல் மரியாதை செய்கிறது!

அதே நேரம், பக்தியில் மனமுருகி ஒரு அடியவர் தன்னைத் தொடும்போது, கருணாகர மூர்த்தியான பெருமாளுக்கு மனம் குளிர்வதோடு, தீட்டும் தோஷமும் ஏற்படும் என்பதை வைணவ அடியார்கள் புரிந்து கொள்ள வேண்டும்!!

- எ.அ.பாலா

21 Comments:

Anonymous said...

//கருணாகர மூர்த்தியான பெருமாளுக்கு மனம் குளிர்வதோடு, தீட்டும் தோஷமும் ஏற்படும் என்பதை வைணவ அடியார்கள் புரிந்து கொள்ள வேண்டும்!!//

என்னய்யா இது. தப்பும் தவறுமா? கடவுளுக்குத் தீட்டா? கர்மம் கர்மம்

Anonymous said...

இறைவனை, பரம்பொருளை, பெருமானை, பெருமாளை
நம்மைப்போலின்னொரு மனுஷ்ய ஜன்ம ப்ரவ்ருத்திக்குண்டானதுக்குட்பட்டவனாககருதும்போதுதானிதுமாதிரியான மனக்கிலேசங்களினாலுண்டான காரியங்கள் நடைபெறுகின்றனவோ?
இருந்தாலும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஆகம சாத்திர விதிகளுக்குப் புறம்பான காரியங்கள் நடக்கையிலே அதனால் பாதிக்கப்பட்டதாக‌
மனக்கிலேசமடைந்தவர்களதற்குண்டான பரிஹாரார்த்திகளைச்செய்வதிலேதுமாக்ஷேபமிருக்கமுடியாதென்பதும் இன்னொரு வாதமிருக்கிறது.

பெருமாளுக்குத் தெரியாதா என்ன ? எது நடந்ததோ நடக்கிறதோ நடக்குமோ எல்லாமே அவன் செயல் .Anonymous said...

##########################
//கருணாகர மூர்த்தியான பெருமாளுக்கு மனம் குளிர்வதோடு, தீட்டும் தோஷமும் ஏற்படும் என்பதை வைணவ அடியார்கள் புரிந்து கொள்ள வேண்டும்!!//

என்னய்யா இது. தப்பும் தவறுமா? கடவுளுக்குத் தீட்டா? கர்மம் கர்மம்
###################
ஆமாம் கருமம் கருமம் ;-)

ரெங்கசுப்ரமணி said...

எல்லா விதிகளும் மூலவருக்குத்தான், உற்சவர் புறப்பாடு என்று வெளியில் போகும் போது என்ன ஆகின்றது? இதற்கு போலிஸ் எல்லாம் அதிகம். சில கோவில்களில் காவல்துறையினர் உள்ளே வரை போகின்றனர். அவர்களை என்ன செய்ய முடியும்

Anonymous said...

I refrain from commenting normally in any forums. I cant resist this. :)

The dosham and theetu are for the idol and not for the God himself. People find it amusing and also a point of debate when it is said that the idol becomes impure asking How can God be impure. This may not be 100% correct and there may be some aberrations to this. Man tend to overdo/ under-do things over time :)

Lot of temples in Kerala strictly follow these rituals. The idol in the temple is a stone until it is consecrated. The sculptor steps on it while making it, which is not an issue. Once consecrated, few conditions are laid. It is assumed that idols are power houses of energy giving out positive cosmic energy. This is why few temples have a divinity to them than compared to others. Mostly old temples.

It is said that the energy is stored/enhanced due to the rituals. New temples acquire this slowly over time. And then there are power boosters, to nullify and or enhance the energy, which is done specially when there are such impurities. It is nothing but a belief system. ( with may be hidden scientific ways to it) :)

You can google on cosmic energy and temples. Idly vadai may be you should write an article on this, ;)

Anonymous said...

பைத்தியங்கள்!!

keyven said...

கோயிலுக்குள்ளே பேண்டா குற்றம். சத்தமா கத்தி சாமி கும்பிட்டா இப்படியா??? அது அந்த தேவநாத பெருமாளுக்கே அடுக்காது

Thanjavooraan said...

கல்கத்தா காளி கோயிலிலும், பகவான் இராமகிருஷ்ணர் பூஜை செய்த கோயில்களிலும், மக்கள் வந்து தொட்டு அர்ச்சித்து நீர் ஊற்றி மலர் தூவி வழிபடுகிறார்கள். அங்கு உள்ள அதே கடவுள்தானே இங்கும் இருக்கிறார். மக்களின் இன்ப துன்பங்களுக்குக் காரணமானவரும், அவற்றைத் தீர்த்து வைப்பவரும் அவரே அல்லவா? அப்படிப்பட்ட இறைவன் உத்சவ மூர்த்தியை ஒரு பெண் பக்தி பரவசத்தில் தொட்டு வணங்கியதில் என்ன தவறு? காஞ்சிபுரத்தில் கர்ப்பகிருகத்தில் ஒரு அர்ச்சகர் பெண்ணொருத்தியோடு சல்லாபம் செய்யவில்லையா? அந்தக் கோயிலை என்ன இடித்தா தள்ளிவிட்டார்கள். மக்களுக்காகத்தான் இறைவன். அவரை பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்காகவோ அல்லது பக்தியைத் தங்கள் சொந்த சொத்தாக நினைக்கும் ஆஷாடபூதிகளுக்காகவோ அல்ல. இறைவனை காலால் மிதித்த கண்ணப்பனை அதே இறைவன் ஆட்கொண்டான். கல்லால் அடித்த சாக்கியரை நாயனார் ஆக்கினான். வில்லால் அடித்த அர்ஜுனனைத் தன் சகாவாக ஆக்கினான். என்ன இன்னும் இதுபோன்ற முட்டாள்தனம். அந்தப் பெண் போலீசில் பிடித்துக் கொடுக்கும் அளவுக்குச் செய்த குற்றம் என்ன? தீண்டாமை என்பதை சற்று விரிவுபடுத்த வேண்டும். இறைவன் சிலைகளைத் தொடுபவர்கள் எல்லோரும் புனிதர்களா என்பதைக் கூறவேண்டும்? நாடு விழித்துக் கொள்ள வேண்டும்.

Shankari said...

Thanjavooran, Anonymous -1, Rengasubramai all are correct. Going to police is inhuman.
Anonymous -2 is correct to some extent.. but cannot be applied to dis case!

Anonymous said...

ஆங்கிலத்தில் எழுதிய அனானி கருத்து சரியானதே. இந்த விஷயத்தில் தீட்டு என்பது விக்ரகத்திற்கே. பெரும்பாலான கோவில்கள் ஆகம விதிப்படி இயங்குகின்றன. அந்த விதிகளின்படி யார்வேண்டுமானாலும் இறை உருவத்தை தொட்டு வழிபடமுடியாது. முறைப்படி தீட்சை பெற்றவர்களே கருவறையின் உள்ளே செல்லலாம். இது போன்ற விதிமீறல்கள் அடாத செயல்களாகவே கருதப்படுகின்றன

Anonymous said...

காஞ்சியில் தேவநாத அர்ச்சகரால் ஏற்பட்ட களங்கத்தைவிட, இந்தப் பெண் தேவநாத பெருமாள் கோவிலில் செய்தது‍ ஒன்றும் மன்னிக்க முடியாத குற்றமில்லை. காவல்துறையிடம் ஒப்படைப்பு என்பதெல்லாம் 2 மச். (நாங்களும் ரவுடிதாம்ல...! என்று‍ எக்குதப்பாக ஏதோ யோசித்து‍(!) செய்திருப்பார்களோ?)

பாபு
கோவை

R. J. said...

Bala definitely would have known the reactions to this happening will generate in a public forum. Religion, God, worship are all matters of faith and belief; the temple activities are also followed as per traditions. The faithfuls follow these without question while there always is another section which has been questioning these from time immemorial. This sort of action and reaction will lead only to man's intolerance and lack of peace and happiness. Wish these 'news' items are not publicised much. Leave it / Restrict it to the local temple authorities / regular visitors to temple. - R. J.

கொடும்பாவி said...

கலிகாலம்.!
பெண்ணிற்கு சமநீதி பேசுபவர்கள் கூத்தடிக்கும் நாடு இது.!
-கொடும்பாவி

Gopalan said...

If there is rules, then it must be adhered. Only Hindus are questioned.. go and question other caste for their belief..no one can do it.. Since Hindus never hurt others they are always questioned..

Every thing in this world are running based on certain rules.. If you dont want to follow the rules, then question every rule..Not just belief of hindus..

Thanjavooraan said...

Gopalan said...
If there is rules, then it must be adhered. Only Hindus are questioned.. go and question other caste for their belief..no one can do it.. Since Hindus never hurt others they are always questioned..

Thanjavooraan's opinion:--
Rules are not made by God for themselves. We are making rules to suit our convenience. Uthsavar meant to take out in procession, when all sorts of people touch it and carry it all through the streets. What is the harm in it? Entering Sanctum Sanctorum is offence and we keep the rules in that respect. Making too big an issue which is not even worth noticing is being made BIG by handing over the girl to the Police. It is tooooo much really!

Anonymous said...

இங்கு யாரோ ராம கிருஷ்ண பரமஹம்சரை தொட்டு பூஜை செய்கிறார்கள் என்று சொன்னார்... இருந்து விட்டு போகட்டும்.

அங்கு இருக்கும் கடவுள் தான் இங்கும் இருக்கிறார் என்று பிதற்றல் வேறு.

எதை வைத்து இதை சொல்கிறார் என்று தெரியவில்லை.

முதலில் கடவுள் ஒருவர் என்று சொல்பவர்களை ஊரை விட்டு துரத்த வேண்டும்.

உமக்கு வேண்டுமானால் கடவுள் என்று... எங்களுக்கு கடவுள் ஒன்று கிடையாது.

கடவுள் என்பது நம்பிக்கை உரிய ஒன்று என்று ஆன பிறகு அது முழுக்க
முழுக்க நம்பிக்கை என்ற அடிப்படையிலேயே இயங்க வேண்டும்.

உங்கள் பகுத்தறிவை!!! இங்கு காட்ட வேண்டாம். கடவுள் ஒன்று என்று சொல்பவர்களுக்கு சைவ, வைணவ கோயில்களை விட்டு தாராளமாக விலகி இருக்கலாம்.

SUBBARAMAN. R said...

இந்த கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் மிகவும் பணத்தாசை பிடித்தவர்கள். அவர்கள் பக்தர்களை மிகவும் கேவலமாக நடத்துவார்கள். அவர்கள் தட்டில் நிறைய காசு போடுவோம் என தெரிந்தால் பல் இளிப்பார்கள்.

சுவாமி அந்த கோவிலை விட்டு வெளியேறி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

SUBBARAMAN. R said...

இந்த கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் மிகவும் பணத்தாசை பிடித்தவர்கள். அவர்கள் பக்தர்களை மிகவும் கேவலமாக நடத்துவார்கள். அவர்கள் தட்டில் நிறைய காசு போடுவோம் என தெரிந்தால் பல் இளிப்பார்கள்.

சுவாமி அந்த கோவிலை விட்டு வெளியேறி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

Sriraman said...

Any person be it male or femails are not allowed to touch the idols in the temple other the archakas. This is because, there are certain rules laid down for archakas from food, clothing etc. Also they would need to get the dikshai (like training)without which they are also not allowed to enter the sanctum santorum or touch the idol
Nobody can guarantee if any strangers (be it male or female) follows this. so it has been made a general rule that no other person should touch the idols.
No need to take this to police.

Anonymous said...

*************
Sriraman said...

Any person be it male or femails are not allowed to touch the idols in the temple other the archakas. This is because, there are certain rules laid down for archakas from food, clothing etc. Also they would need to get the dikshai (like training)without which they are also not allowed to enter the sanctum santorum or touch the idol
Nobody can guarantee if any strangers (be it male or female) follows this. so it has been made a general rule that no other person should touch the idols.
No need to take this to police.
***************

Mr. Sriraman,
You can also never guarantee if the so called modern archakas follow the so called "rules". It is a well publicized secret that some archakas from the famous Parthasarathy koil are quite fond of Hotel Masala Dosas and consume them after the kaingaryam...

Sriraman said...

if that is the case, they should be penalized. if one who is holding important position does not follow the defined rules for that position, he or she shd be chucked out, be it a temple or any other place.

That does not mean that everybody can flout the rules