பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 26, 2012

பிஜேபியின் துணிச்சல்


கட்சி கட்டுப்பாட்டை மீறி செய‌ல்ப‌ட்டதாக கூ‌றிய மூத்த தலைவர் ராம் ஜெத்மலானியை க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து தற்காலிகமாக நீக்‌கியு‌ள்ளது பா.ஜ.க. - செய்தி.

இதே துணிச்சலுடன் எடியூரப்பாவையும்... சரி விடுங்க... இது எல்லாம் அரசியலில்...

8 Comments:

Anonymous said...

இது எனக்கென்னவோ இந்த ஜெத்மலானியோட திட்டம்னு தோணுது. மேலும், பி.ஜே.பி தங்களை களையெடுக்க வேண்டிய அவசியத்திலும் இருக்கிறது. காங்கிரஸ் செய்திருக்கும் ஊழல்களால் மக்கள் பி.ஜே.பிக்கு வாய்ப்பு தரலாம் என்ற எண்ணத்தில் மண்ணைப் போடும் விதமாகத் தான் பிஜேபி செயல்படுகிறது. ஒரு பக்கம் நிதின் கட்கரி மீதெ ஊழல் புகார், இன்னொரு பக்கம் இம்சை பிடித்த இடையூறப்பா. இவரை முதலில் ஒதுக்கி விட்டு, மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்பதில் மாற்றுக் கருத்தில்லாமல் தேர்தலை சந்தித்தால் மட்டுமே பிஜேபி தேசிய அளவில் ஏதும் சாதிக்கலாம். தேச நலன் கருதி இதை அவர்கள் செய்ய வேண்டும்.

முத்தரசு said...

ம்

NAGARAJAN said...

Ram Jethmalani is nothing in BJP. He came to BJP when he was nominated for Rajya Sabha MP election and that too because he was the lawyer engaged by Amit shah in Gujarat cases.

BJP cannot even think of suspending BSY as it involes vote politics.

dr_senthil said...

சில நேரங்களில் காங்கிரஸ் பி ஜே பியை விலைக்கு வாங்கி விட்டதோ என்று என்ன தோன்றுகிறது.. நமோ பேசாமல் ஆர் எஸ் எஸ் கட்சியின் கீழ் நின்று பிரதமர் ஆவது உசிதம்

kothandapani said...

எடியுரப்பா செய்தது ஊழல் தான். அது எப்படி கட்சி கட்டுபாட்டை மீறிய செயலாகும. இவர் அடி மடியிலேயே கை வைக்கின்றார் . ஊழல் நித்காரியை விலக்க
சொல்கின்றாரே . எந்த தன்மான அரசியல்வாதியும் பொருத்து கொள்வானா . ஜெத்மலானிக்கு சங்குதான் ...

R. J. said...

Sri Nagarajan and Sri Kothandapani have said it all! Eddi has half of Karnataka BJP votes with him; whar does Jethmalani have? (We should also be ready for Eddy to appoint Jethmalani to fight his cases in the court!) - R. J.

jaisankar jaganathan said...

காங்கிரஸின் பலவீனத்தை பிஜெபியினால் பயன்படுத்த முடியவில்லை. இதுல அடுத்த பிரைம் மினிஸ்டருக்கு ஆசை வேற?

ரிஷபன்Meena said...

//சில நேரங்களில் காங்கிரஸ் பி ஜே பியை விலைக்கு வாங்கி விட்டதோ என்று என்ன தோன்றுகிறது.. //

சந்தேகமே வேண்டாம் அதே தான்.
லேபிள் தான் வேற....

முட்டாள்களால் கூடச் சந்தர்ப்பங்களை பயன்படுத்தவே மாட்டேன் என்று இருக்க முடியாது. இக் கட்சி இருப்பதை விட அழிந்து மன்னோடு மன்னாவதே மேல்.

சுயநலமிகளின் கூடாரம் “நமோ” மாதிரி ஒன்றோ இரணடோ ஆட்களைத்தவிர.