பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 17, 2012

அசைவ நியூஸ்


6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்திவே' என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அசைவ உணவுப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படியா ? என்றால் தெரியாது அப்படி தான் செய்தி வந்திருக்கிறது.


2006ல் இட்லிவடை பதிவிலிருந்து...

"இந்து சமயம் என்றால் அது சைவ சமயம் தான். திருமாவளவன் சைவ உணவு தான் சாப்பிடுகிறேன் என்றார். அவரை நாம் ஆசீர்வதிக்கிறோம். தலைவன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி! தன் தொண்டர் களும் சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் என திருமாவளவன் உத்தரவிட வேண்டும். விடுதலை சிறுத்தைகள் சைவ உணவை உட்கொள்ள வேண்டும். மீனை விட்டு விடுங்கள். மாடு, ஆடு, ஒட்டகத்தை வெட்டாதீர்கள். இதுதான் ஜீவகாருண்யம்..." - மதுரை ஆதீனம்

"உணவுக்கு காய்கறிகளை மட்டுமே நாம் எடுத்துக் கொண்டால் அது நடக்காத காரியம். சைவ உணவு என்பது பல இடங்களில் மாறுபடுகிறது. வங்காளத்தில் பிராமண ஓட்டலுக்குச் சென் றால் அங்கே சைவ உணவு விடுதியில் மீன் இருக்கும். மீன் அங்கே சைவம். ஆதீனம் கொல்கட்டாவிற்குப் போய் பார்க்க வேண்டும். இல்லையேல் அவரை நான் அழைத்து போகிறேன். திருமாவளவன் சைவம் என்பது ஆதீனம் மூலம் தான் தெரிந்தது. சிறுத்தைகள் சைவமாக இருக்கக் கூடாது. கூண்டில் உள்ள சிறுத்தைகள், புலிகள், சிங்கங்களுக்கு சைவ உணவு கொடுக்க முடியாது..." - தி.க., வீரமணி.
( செய்தி: தினமலர் )


2004ல் இட்லிவடை பதிவிலிருந்து...

திருக்குறளில்..
"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்."

தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக்
கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.(கலைஞர் உரை)
(புலால் மறுத்தல்-1)

படைகொண்டார் நெஞ்சம்போல நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை உண்டார் மனம்

ஒருமுறை சுவைத்த பின் கையில் கத்தி வைத்திருப்பவன் போல நல்லதையே நினைக்கத் தோன்றாது ( சுஜாதா உரை )

புதிய நீதி: ஆடு மாடு கோழியை சாகடிக்கும் போது அவை கத்தும். அதே மாதிரி புலி, சிங்கம் நம்மை கடிக்கும் போது நாம் கத்துவோம்.

16 Comments:

கானகம் said...

சரி, அதுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்? :-)

IdlyVadai said...

ஏன் அவருக்கு அந்த அதிர்ச்சி வரக்கூடாதா ?

poornam said...

படத்தில் மிரட்டும் அம்மையார் சைவமா, அசைவமா? முறைப்பது சைவர்களையா, அசைவர்களையா?

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

தலைப்பாக்கட்டி.......
அஞ்சப்பர்........
காரைக்குடி......
அம்மா..........
மிலிட்டரி.........

மேற்கூரிய அமைப்புக்களின் சார்பில், இட்லிவடை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு....

சர்ச்சைக்குறிய பகுதிகளை நீக்காத வரை தொடர் போராட்டம்.....

எங்கள் ப்ளாக் said...

எனி சந்தேகம் .. நோ ப்ராப்ளம் - மதுரை முனியாண்டியையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க.

Anonymous said...

யோவ் எங்கே ப்ளாக்

அபுதுல்காதருக்கும் அம்மாவசைக்கும் என்ன தொடர்பு நீர் எதுக்கு முனி பத்தி பேசுறீர்

வால்பையன் said...

இட்லிவடையும் குள்ளநரித்தனமும்!

http://valpaiyan.blogspot.in/2012/11/blog-post_18.html

dr_senthil said...


மஸ்ட் ரீட் இட்லி வடை
http://valpaiyan.blogspot.in/2012/11/blog-post_18.html

Anonymous said...

So it seems idlyvadai simply refers any article which is very favor to him to add his community thoughts. IV (IdlyVada) should do some analysis before posting these kind of posting. Sine our ancestors had a choice to get all kind of vegetables, so some communities survived only with vegs. But think about western countries. Meat was the only choice for them to survive. So it is very clear that eating habit was started based on the availability in the people environment.
In these days, it is very much possible to live as a vegetarian. But as we know, generally a person's culture and food habit is decided by his community. So it is not easy to change his diet habit but we can see few exceptions.
For ex, a vegetarian does not like non-vegetarian. It's not his choice but it's his community choice. The same applies to non-vegetarian eating people.
Just imagine that, if we have the choice to have only vegetables then all will eat vegs only for survival. Like this, if we have the choice to eat only non-vegs then I am not sure that all will eat non-vegs. But only non-veg eating people can survive. ( this choice is not possible, if no vegetables then no animals.. just imagine :)
survival decides the choice!

- SP

Anonymous said...

So it seems idlyvadai simply refers any article which is very favor to him to add his community thoughts. IV (IdlyVada) should do some analysis before posting these kind of posting. Sine our ancestors had a choice to get all kind of vegetables, so some communities survived only with vegs. But think about western countries. Meat was the only choice for them to survive. So it is very clear that eating habit was started based on the availability in the people environment.
In these days, it is very much possible to live as a vegetarian. But as we know, generally a person's culture and food habit is decided by his community. So it is not easy to change his diet habit but we can see few exceptions.
For ex, a vegetarian does not like non-vegetarian. It's not his choice but it's his community choice. The same applies to non-vegetarian eating people.
Just imagine that, if we have the choice to have only vegetables then all will eat vegs only for survival. Like this, if we have the choice to eat only non-vegs then I am not sure that all will eat non-vegs. But only non-veg eating people can survive. ( this choice is not possible, if no vegetables then no animals.. just imagine :)
survival decides the choice!

- SP

Anonymous said...

@ வால் பையன்
வேதங்களில் மாமிஸம் உண்ணுங்கள் என்று சொல்லவில்லை நண்பரே. எதற்கெடுத்தாலும் பார்ப்பனீயம் என்று கூவுவதை விட்டுவிட்டு கொஞ்சம் உங்க வன்னியர், முக்குலத்தோர் இன்னபிற சகோதரர்களின் டவுசர்களை யார் கிழிக்கிறார்கள், அவர்களின் அறியாமையை யார் உபயோகப் படுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். பார்ப்பனர்கள் சைவ உணவை உண்கிறார்கள். அவர்கள் மத மாற்றம் செய்பவர்கள் போல அசைவம் உண்ணாதே என்று யாரிடமும் கோஷம் போடுவதில்லை. உண்மையில் சைவ உணவு உண்பதால் நன்மைகள் உண்டு என்பது வெள்ளைக்காரனே (?!) ஒத்துக் கொள்வது தான்.

கறி சாப்பிடுபவன் பொய் சொல்வான் என்பது வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற அபத்த கருத்துக்கு சற்றும் குறைந்ததல்ல.

கொஞ்சம் கிணற்றிலிருந்து வெளியே வந்து உலகத்தை பார்க்க ஆரம்பிங்க தம்பி...பார்ப்பனீயம் என்ற கோஷமெல்லாம் கறுப்பு கண்ணாடி, கறுப்பு சட்டைக்காரர்கள் கையிலெடுத்தவை, ஏனெனில் உங்களை முட்டாளாக்க அவை போதும், இப்போ அதெல்லாம் செல்லாது, சரியான முறையில் வாதம் புரிய வேணுமப்பா. வேதங்களில் மாமிஸம் இருக்கு என்ற சப்பை கட்டெல்லாம் வேண்டாம். உங்களுக்கு தான் வட மொழி ஆகாதே, இங்கிலீஷு காரன் எழுதிய அரைகுறை மொழிபெயர்ப்பை படித்து விட்டு வேதத்திலே இருக்கு என்று சொல்வது தவறு, சமஸ்க்ருத ஒரிஜினலை படியுங்கள், தக்க ஆசிரியரை வைத்துக் கொண்டு, கறி சாப்ப்டும் ஆசிரியராக இருந்தால் கூட பரவாயில்லை. வெங்காயம்!

R. J. said...

Can the author of the text in the book or Idly vadai can vouch that all vegetarians are above the list of vices stated to be the qualities of NV-ians? This portion will be shortly removed from the school books and is absurd. - R. J.

வால்பையன் said...

வேதங்களில் இல்லை!

//இந்து சமயம் என்றால் அது சைவ சமயம் தான்//

இதுக்கு பேரு என்ன அனானி?

வேதத்துக்கும் இந்து மதத்துக்கும் சம்பந்தமில்லையோ.

இல்லாமலேயே இருந்துட்டு போகட்டும், உயிரை கொல்லாதிங்கப்பா, அது பாவம். அவைகளும் நம்மை போலன்னு சொல்லியிருந்தா யாருக்கு கோவம் வரப்போகுது.

ஆனால் சொல்லியிருப்பது என்ன? நீங்க உங்க பார்பனீயத்திலிருந்து வெளியே வாங்க, அப்புறம் எனக்கு புத்திமதி சொல்லலாம்!

பார்பனியம் வேற, அய்யய்யோ என்னை பாப்பான்னு திட்டிட்டான்னு ஓலம் இடாதிங்க!

வால்பையன் said...

//உங்களுக்கு தான் வட மொழி ஆகாதே, இங்கிலீஷு காரன் எழுதிய அரைகுறை மொழிபெயர்ப்பை படித்து விட்டு வேதத்திலே இருக்கு என்று சொல்வது தவறு, சமஸ்க்ருத ஒரிஜினலை படியுங்கள், தக்க ஆசிரியரை வைத்துக் கொண்டு, கறி சாப்ப்டும் ஆசிரியராக இருந்தால் கூட பரவாயில்லை. வெங்காயம்! /

வேதங்களில் இருக்கு இல்லை என நான் சொல்லவில்லை, அதை சொன்னது பின்னூட்டத்தில் ஒருவர். எனக்கு வடமொழி மட்டுமல்ல ஆங்கிலமும் தெரியாது.

மேற்கொண்ட பதிவில் முதல்பாராவில் இருப்பதை படித்தால் சைவம் சாப்பிடுபவனுக்கே கூட கோவம் வரனும். சொரணை இருக்குறவனுக்கு வரும்.

உங்க வீட்டு பக்கத்தில் இருப்பவன் அசைவம் சாப்பிடுறான், அதுக்காக தினம் உங்கள் வீட்டை கொள்ளையடித்தும், உங்கள் வீட்டு பெண்களை கற்பழித்து கொண்டும் இருக்கிறானா?

Anonymous said...

@ வால் பையன்

நான் சொல்லியிருப்பதும் இது தான். //கறி சாப்பிடுபவன் பொய் சொல்வான் என்பது வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற அபத்த கருத்துக்கு சற்றும் குறைந்ததல்ல. //

Anonymous said...

@ வால் பையன்

இந்து சமயத்தின் ஆணிவேராகிய வேதங்களில் மாமிஸம் சாப்பிடுவதை ஊக்குவிக்கவில்லை. ஆனால் பின் வந்த புராண இதிகாசங்களில் மாமிசம் உண்டு, அதை உண்டவர்களும் உண்டு. பிராமணர்கள் மாமிஸம் சாப்பிட்டார்கள் என்று புராணங்களில் சொல்வதுண்டு. ஆனால் புராணங்கள் வேதங்கள் ஆகாது. இந்துக்கள் பின்பற்ற வேண்டியது வேதங்களை மட்டுமே, புராணங்களை அல்ல!

கறி சாப்பிடுபவன் மிருக குணத்துடன் இருப்பான் என்பது ஒரு மேலோட்டமான, மட்டமான அபத்தம். அவ்வளவுதான். ஆனால் இந்து மதம் என்பது சைவ உணவு சாப்பிடுவதையே வலியுறுத்துகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பிள்ளைக் கறி கேட்டான் பரமன், அதனால கறி சாப்பிடலாம் என்று சப்பை கட்டினால், அதே பரமன் போல அக்கறியை உயிர்ப்பித்துக் காட்டட்டுமே. கி. வீரமணி, கருணாநிதி போல லாஜிக் இல்லாமல் விவாதம் செய்யக் கூடாது (உங்களை குறிப்பாக சொல்லவில்லை வால் பையரே, பொதுவாக சொன்னேன்) என்பதே என் தாழ்மையான கருத்து.