பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 13, 2012

ஞாநி பதில்கள்


இட்லிவடை 10ஆம் ஆண்டு ஸ்பெஷலாக பத்திரிகையாளர் திரு ஞாநி அவர்களின் பேட்டியை போட வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரை அணுகிய போது அவர் உடனே ஒத்துக்கொண்டார். பல கேள்விகள் வந்தது அதிலிருந்து சுமார் 50 கேள்விகளை தேர்ந்தெடுத்து அவரை யார் தைரியமாக பேட்டி எடுப்பார்கள் என்று யோசிக்கும் போது நமது நினைவில் பத்ரி மட்டுமே வந்தார். பத்ரியை கேட்ட போது உடனே ஒத்துக்கொண்டார். இருவருக்கும் இட்லிவடை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சுமார் 2.5 மணிநேரத்துக்கு மேல் ஒரு விதமான உரையாடலாக இந்த பேட்டி அமைந்தது மகிழ்ச்சி.

பேட்டியில் உள்ள Keywords : இட ஒதுக்கீடு, ராகுல் காந்தி, மோடி, படித்த புத்தகம், கழிவறை புனிதமான இடம், கடவுள், மூடநம்பிக்கை, ஜெயமோகன், துக்ளக், பாரதி, பிள்ளையார் பூஜை, பார்ப்பனீயம், காந்தி, பெரியார், சோ, தலித், இலங்கை தமிழர், ராஜிவ் படுகொலை, கூடங்குளம், கலைஞர் செய்த நல்ல காரியங்கள்...

பேட்டியில் கேள்விகேட்டவர் பெயர்கள் சில இடங்களில் விடுபட்டு இருந்தால் அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. கேள்விகளை தொகுக்கும் போது விடுபட்டிருக்கலாம்...

இரண்டு ஆடியோவையும் இங்கே போட்டுள்ளேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.
கேள்விகள் - இட்லிவடை வாசகர்கள், பேட்டி & படம் : பத்ரி

பேட்டி ஒலி வடிவம் கீழே:


டவுன்லோட் வடிவம் இங்கே
http://archive.org/download/IdlyvadaiInterviewBadriSeshadriInterviewingJournalistGnani/Gnani_Idlyvadai_Interview_Part_01.mp3
http://archive.org/download/IdlyvadaiInterviewBadriSeshadriInterviewingJournalistGnani/Gnani_Idlyvadai_Interview_Part_02.mp3


40 Comments:

Unknown said...

//அவரை யார் தைரியமாக பேட்டி எடுப்பார்கள் என்று யோசிக்கும் போது //

அதென்ன அத்தனை கஷ்டமான காரியமா என்ன.. ?

NAGARAJAN said...

Please put the audio in downloadable format.

dr_senthil said...

எழுத்து வடிவம் கிடைத்தால் நன்றாக இருக்கும் முயற்சி செய்வீர்களா

IdlyVadai said...

மௌளீ எங்களுக்கு கஷ்டம் உங்களுக்கு ஈஸியாக இருக்கலாம்

நாகராஜன் - அப்டேட் செய்துவிட்டேன்.

செந்தில் - கலந்துரையாடல் மாதிரி இருக்கு. எழுத்து வடிவம் கொஞ்சம் கஷ்டம் என்று நினைக்கிறேன். முயற்சி செய்கிறேன்.

Unknown said...

அதென்ன ஒரே பதிலில் இரண்டு பேருக்கு

செய்துவிட்டேன், செய்கிறேன் என்று ஒருமை அடையாளம்

என்னை விளித்து சொல்லும் போது எங்களுக்கு என பன்மை அடையாளம்

எதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா இட்லி வடை

Anonymous said...

அட சந்திர மெளளீஸ்வரா. எப்படியெல்லாம் உங்களை பத்தி உயர்வா நெனச்சு புளகாங்கிதம் அடையுறீர்.செய்துவிட்டேன்...செய்கிறேன் என்பது ஒருமை அடையாளமா? உமக்கு யாருய்யா தமிழ் இலக்கணம் கற்று கொடுத்தது. ஹூம்.. நெனப்புதான் பொழப்ப கெடுக்குமாம்.

benjamin david said...

ஒசத்தியான தீபாவளி அன்பளிப்பு இந்த பேட்டி தான் .இட்லி வடைக்கு நன்றி.பதில்கள் ஞாநியின் குரலிலே கேட்பதற்கு மிக சுவாரஸ்யமாய் இருந்தது .கருத்துக்களை மிக இலகுவாக புரியும்படி சரளமாக பேசியிருக்கிறார் .நல்ல அனுபவ பகிர்தல் .

benjamin david said...

ஒசத்தியான தீபாவளி அன்பளிப்பு இந்த பேட்டி தான் .இட்லி வடைக்கு நன்றி.பதில்கள் ஞாநியின் குரலிலே கேட்பதற்கு மிக சுவாரஸ்யமாய் இருந்தது .கருத்துக்களை மிக இலகுவாக புரியும்படி சரளமாக பேசியிருக்கிறார் .நல்ல அனுபவ பகிர்தல் .

Unknown said...

அனானிக்கு பதில் சொல்வது அசிங்கம் என நினைப்பவன் நான்.. பெயர் சொல்லாமல் எழுதுவது பேடித் தனம்

இருந்தாலும் தொல்காப்பியம் பெயரியல் செய்திகளில் இருக்கும் செய்யுள்களைக் குறித்து பேசலாம் என நினைக்கிறேன்.. என்னைப் பெயரிட்டு அழைத்த அந்த அனானிமஸ் ஆசாமி என்னை தொடர்பு கொள்ளலாம் ( 9840656627 அல்லது 9940001120)

அவர் தைரியமான பேடித்தனம் இல்லாதவராக இருப்பார் என நினைக்கிறேன்

Unknown said...

இந்த முறை ரெகார்டிங் க்வாலிட்டி மிகவும் நன்றாக இருந்தது.. சில இடங்களில் வால்யூம் குறைந்தது.. மற்றபடி ரெக்கார்டிங் க்வாலிட்டி நல்லாவே இருந்தது

Anonymous said...

ஆடியோ தரம் சரியில்லை. அந்தக் காலத்தில் செகண்ட் பேண்டில் சிலோன் ரேடியோ கேட்பதுபோல இருக்கு. பிண்ணனியில் ஏ.சி. ஓடுவதுபோல ஒரு ஹம்மிங் வேறு கேட்கிறது.

சரவணன்

சிந்திப்பவன் said...

உங்கள் முயற்சிக்கு நன்றி.ஆனால் இனி ஆடியோ பேட்டி வேண்டாமே!
ஏனெனில் இவை ஒரு ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டால்தான் நன்றாக இருக்கும்.மேலும் முகம் தெரியாமல் இருவர் பேசுவதை கேட்கும்போது வெகு சீக்கிரத்தில் ஒரு ஆயாசம் உருவாகி விடுகிறது.முடிந்தால் எழுத்து வடிவில் பதிவிடவும்.

Badri Seshadri said...

ஞாநி பேட்டி பற்றிய சில பின்னூட்டங்களை வாசித்தேன்.

எழுத்துமூலம் பேட்டி என்றால் இவ்வளவு விரிவாக வந்திருக்காது. உரையாடல் இல்லை என்றால் சில விஷயங்கள் பற்றி இவ்வளவு விளக்கங்களும் சுவையான தகவல்களும் இருந்திருக்காது. நீங்கள் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பியிருந்தால் அவர் பதிலுக்குக் கைவலிக்கும் அளவுக்கு எழுதியிருப்பார். பின் ஒரு கட்டத்தில் போதும் என்று அனுப்பியிருப்பார்.

சீரியஸ் வாசகர்களுக்கு 2.5 மணி நேர ஆடியோவில் நிறைய விஷயங்கள் உள்ளன. எதற்கெடுத்தாலும் அலுப்புப்படும் வாசகர்களுக்கு 2.5 நிமிஷமே ஜாஸ்தி. துப்பாக்கி, தோட்டா, வெடி, வேங்கை என்று ஏதேனும் சினிமாப் படம் பார்க்கப் போகலாம்.

ஆடியோ குவாலிட்டி ஸ்டுடியோவில் எடுத்தால் நன்றாகத்தான் வரும். ஆனால் இதற்காகக் காசு செலவழித்து யாராவது ஸ்டுடியோவை புக் செய்து ரெகார்டிங் செய்வார்களா? நானும் பல ஆண்டுகளாக நிறைய ஆடியோ, பின் நிறைய வீடியோ நிகழ்ச்சிகள் என்று போட்டுவந்திருக்கிறேன். தமிழ் வலைப்பதிவுலகில் வக்கணையாகக் கொனஷ்டை பேசும் பலரும் ஒரு துரும்பையாவது கிள்ளிப்போடுவதில்லை.

ஆடியோ தரத்தை நிச்சயமாக மேம்படுத்தலாம். ஐபேடில் நன்றாக ரெகார்ட் செய்யக்கூடிய சாஃப்ட்வேர் எது என்று உங்கள் வாசகர்களைக் கேளுங்கள்.

ஆமாம், பின்னால் ஃபேன் ஓடிக்கொண்டிருந்தது. (ஏசி அல்ல.) அந்தச் சத்தத்தையெல்லாம் நீக்கக்கூடிய திறன் உள்ள சாஃப்ட்வேர் இருந்தாலும் நல்லதுதான்.

R. J. said...

I can only read. Will be nice if there is a text post of this interview with Gnani. - R. J.

IdlyVadai said...

பத்ரியை தொடர்ந்து என்னுடைய பாயிண்ட்ஸ் - கலந்துரையாடல் மாதிரி இருப்பதால் தான் சில சென்சிடிவ் கேள்விகளை கேட்க முடிந்தது. ஞாநி கோபப் படாமல் அதற்கும் பதில் சொல்லியது பாராட்டத்தக்கது. ஆடியோ குவாலட்டி நன்றாக தான் இருந்தது, ஹெட் போன் போட்டு கேட்டால் அப்படி ஒன்றும் மோசம் இல்லை. பேட்டியில் உள்ள கண்டெண்ட் தான் முக்கியம் என்பது என் எண்ணம். ( திருட்டு விசிடியில் பலவற்றை சகித்துக்கொண்டு பார்க்கிறோம்:-) )

Unknown said...

Audio quality is good .. with headphone it was more clear also

with the very minimum facility the effort and results are good..

Unknown said...

இட்லி வடை இப்போதெல்லாம் என், என்னுடைய , செய்தேன் என பரவலாக தன்னை ஒருமையில் அடையாளம் செய்து கொள்ள முயற்சிப்பதும்

சில இடங்களில் எங்களுக்கு, எங்களால் என பன்மையில் அடையாளம் செய்து கொள்ள முயற்சிப்பதும்

... யோசிக்க வைக்கிறது

IdlyVadai said...

//
... யோசிக்க வைக்கிறது//

எப்படியோ யோசித்தால் நல்லது தான் !

Jawahar said...

மொபைலில் டவுன்லோட் செய்து கொண்டிருக்கிறேன். கேட்டதும் கட்டாயம் எனக்கு நிறைய கேள்விகள் எழும். பேட்டியின் கண்டெண்ட்ஸ் குறித்து விவாதம் ஆரம்பமானால் ஆரோக்யமாக இருக்கும். இதர விஷயங்களை விவாதிக்கும் குழாயடிச் சண்டையில் எனக்குத் திறமை போதாது! :)

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

ஐயா சந்திர மௌலி. உணர்ச்சிப் பிழம்பாவது உடம்புக்கு நல்லதல்ல. அனானியா எழுதுவது பேடித்தனமுமல்ல. எமோஷனை கண்ட்ரோல் பண்ணாதவருடன் பேச, அதுவும் தொல்காப்பியம் பேசுகிற அளவுக்கு எனக்கு மறை கழன்று விடவில்லை. ஆனானப்பட்ட கடவுளே அனானிதாம்பா!

Jawahar said...

தைரியம் என்றால் எதை வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசுவது அல்ல. அப்படிச் செய்வதற்குப் பெயர் அசட்டு தைரியம் (அ) குண்டு தைரியம்.
Sensitive விஷயங்களை assertive ஆக அணுகும் சாதுர்யம் உள்ளவர்களை தைரியசாலி என்று குறிப்பிடுவது பொருத்தமே. அந்த வகையில் IdlyVadai யின் தைரியமாக என்கிற Description மிகச் சரியானது என்பது இந்த பேட்டி (அ) விவாதத்தைக் கேட்டதும் புரிகிறது.

Sidharth said...

/*ஆனானப்பட்ட கடவுளே அனானிதாம்பா! */
அனானி தல இட்லி வடைய விட்டுட்டீங்க

Anonymous said...

ஸ்டுடியோ ரெகார்டிங் வேண்டாம்; இருந்தாலும் 3 முறை அழைப்பு மணி ஒலிப்பது, ஒரு முறை செல்பேசி ஒலிப்பது, பின்னால் சில சமயம் பேச்சுக் குரல்கள் கேட்பது போன்றவற்றை சற்று முயன்றிருந்தால் தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன்!

சரவணன்

ConverZ stupidity said...

//திருட்டு விசிடியில் பலவற்றை சகித்துக்கொண்டு பார்க்கிறோம்:-//

அது வேற இது வேற இட்லி. அவை கற்பனை கலந்தவை. முடிவை ஓரளவுக்கு கணிச்சிடலாம். ஆனா இந்த பேட்டி தினப்படி நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றிய ஒரு மனிதரின் கருத்து பகிர்வு.

ஆடியோ தரம் இன்னம் கொஞ்சம் நல்ல இருந்திருக்கலாம். பத்ரி வெள்ளோட்டம் பார்த்துட்டு பதிவு செய்தாரான்னு தெரியல. பட், ப்ரோபர் ரெகார்டிங் எக்விப்மென்ட்ஸ் இல்லாம இந்த அளவுக்கு குடுத்ததுக்கு உங்களிருவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.

Shankari said...

Hello IV,

Listened to both d audio files. Yes, audio could have been better but its ok.

Very informative n lot of new things to know!

I suggest u not to try documenting d conversation as it would take huge amount of time n I'm sure many of them won't read. [Listening is easy as we can do multitasking!]கானகம் said...

பேட்டி முழுதும் கேட்டேன். நல்ல கேள்விகள் மற்றும் சுற்றி வளைக்காத பதில்கள். ஜெயமோகன் குறித்த விமர்சனம் பொத்தாம் பொது. வழக்கமாய் நிறைய எழுதுபவர்கள் தரமாய் எழுத மாட்டார்கள் என்ற பொதுப்புத்தியின் விளைவு.

சோ ராமசாமி குறித்த கருத்தையும் தவிர்த்திருக்கலாம். நடந்ததாய் சொல்லப்படும் நிகழ்ச்சியின் முக்கியமான ஆள் மறைந்த திரு. பாலசுப்ரமணியன் அவர்கள். கட்டிய வேட்டியுடன் சோ ஓடிவந்தார் என்பதெல்லாம் கேட்க சுவையாய் இருக்கிறது. உண்மையின் அளவு சோவுக்கு ஞ்நிக்கும் மட்டுமே தெரிந்தது.

இடஒதுக்கீடு குறித்த விரிவான விவாதம் நன்று. என்னதான் படித்திருந்து கை நிறைய சம்பாதித்தாலும் தலித்துகளுக்கு இன்றைக்கும் சமூக ஏற்பு இல்லை என்பதை விவரித்துச சொன்னார்.

கருணாநிதி செய்த நல்ல விஷயங்கள் என பெண்களுக்கு சொத்தில் பாகம் கிடைக்கச் செய்தது, அரவாணிகள் வாரியம் அமைத்தது ரேஷன் கார்டு கிடைக்கச் செய்தது என..

பாரதியின் விநாயகர் நான்மணி மாலையில் விநாயகரிடம் எதுவும் கேட்காமல் நான் இன்னின்ன செய்யப்போகிறேன் அதற்கு உனது அருளைத்தா என்று கேட்பது குறித்து விவரித்தார். கடவுள் என எதைப் பாரதி சொல்கிறான் என்றால் அறிவே தெய்வம் என்கிறான். இவனை விடவா நாத்திகம் பேசிவிட முடியும்? புதிய ஆத்திச் சூடி போன்றவை பற்றி சொல்லி, எப்படி பாரதி தவறாக ஆன்மிகவாதியாக கருதப் படுகிறான் என்பதையும் சொன்னார்.

திராவிடர்க் கழக குஞ்சுகளான திமுகவும் அதிமுகவும் எப்படி இட ஒதுக்கீடை மட்டும் எடுத்துக்கொண்டு பெரியாரின் இதர முயற்சிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என்பதையும் சொன்னார்.

தன்னை ஜனநாயக வாதியாக மட்டுமே பார்ப்பதாகவும் லிபரலாக அல்ல எனவும் சொன்னார்.

பேட்டி கண்ட பத்ரியும் நல்ல உற்சாகமாக பேட்டி எடுத்தார். அவரது கருத்துகளும் கலந்துரையாடலாக அமைந்த இந்தப் பேட்டிக்கு வலு சேர்த்தது.

நல்ல முயற்சி. எங்கோ வீட்டில் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கிழக்கின் அலுவலகத்திலேயே அல்லது அமைதியான ஓரிடத்தில் எடுத்திருக்கலாம். மற்றபடி அருமையான முயற்சி.

இட்லிவடைக்கும், ந்ஜாநிக்கும், பத்ரிக்கும் நன்றி
சிந்திப்பவன் said...

ஆடியோ quality அருமை.
கலக்கல் கேள்விகள்;அசரவைத்த பதில்கள்.
பத்ரி,ஞாநி,இட்லிவடை,tape recorder க்கு நன்றிகள் கோடி.
=============================
எனக்கு வேணும்! எனக்கு வேணும்!!..
வலைத்தளம் முழுக்க விஜயகாந்தும்,ஜெயாவும்!!
இது தெரியாமல் வாய் கொடுத்தது தப்புத்தான்!
============================
:-)

R. J. said...

I understand the difficulty in documenting the entire conversation verbatim in text format. If possible - either IV or any one of its readers - may give a gist of the comments / opinions expressed by Gnani for the benefit of people like me with handicap. If it is too time consuming, please ignore this request. - R. J.

Sivakumar said...

ஞாநியின் பேட்டியில் முக்கியமான ஒன்று... solar water heater பற்றியது. உடனே பத்ரி மறுதலித்து பேசினார். என்னைப் பொருத்தவரை மழைநீர் சேகரிப்பு போன்று இதையும் கட்டாயம் ஆக்க வேண்டும். குறைந்த பட்சம் அடுக்ககங்களில் இதை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். அரசின் ஆணை இல்லாததால் தான் அசோசியேஷனில் உள்ளவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு செய்து விட்டால் அவர்களால் மறுக்க முடியாது.

பெங்களூரில் எங்கள் flat-ல் மொட்டைமாடியில் solar water heater வைத்தேன். உடனே அசோசியேஷன் மெம்பர்கள் வந்து இதை எடுக்க வேண்டுமென்றார்கள். common area-ஐ தனிப்பயன்பாட்டிற்கு வைக்கக் கூடாது என்றார்கள். உடனே நான் DTH connectionகளை எடுக்கச் சொன்னேன். மேலும் SWH உபயோகத்தினை விவரித்தேன். இப்போது பலர் இதை உபயோகிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

Solar Energy கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம். பராமரிப்பு செலவும் அதிகம். நடைமுறைப்படுத்த கொஞ்சம் காலம் ஆகும். SWH மூலம் குறைந்தது 3 யூனிட் மின்சாரம் தினமும் சேமிக்கலாம். மேலும் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம்.

gnani said...

கானகம் தன் பதிவில் மறைந்த திரு பாலசுப்பிரமணியன் என்று குறிப்பிட்டுள்ளார். தவறு. விகடன் இதழின் முன்னாள் ஆசிரியர் பாலசுப்ரமணியன் இதழ்ப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்று இன்னும் நலமாக நம்மோடு வாழ்ந்துவருகிறார். ஞாநி.

Anonymous said...

நீங்கள் இந்த ஆடியோ soundcould.com வலைத்தளத்தில் ஏற்றம் செய்து பகிர்த்து இருந்தால் இதன் நல்ல இருக்கும் என்று நினைகிறேன்.

இது போன்ற கலந்துரையாடல் மடிகணினி முலம பதிவ செய்தால் கூட நல்ல இருக்கும்! Transand MP3 recorder கூட பொது மிக துளியமாக பதிவு செய்ய!

நாம் பேசிக்கொள்ளும் அறையில் மின்காதடி அணைத்து (off) செய்து கொள்ளவேண்டும்! isss noise தவிர்க்க இது உதவும் !

silviamary.blogspot.in said...

நானும் ஒரே ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அது ஞானியிடம் கேட்கப் பட்டதா என்று தெரிய வில்லை. அநேகமாக கேட்கப் பட்டிருக்காது என்று தான் நினைக்கிறேன். என்னுடைய அலுவலக கணிணியில் ஆடியோ கேட்கிற வசதியெல்லாம் இல்லை. எழுத்து வடிவில் வரும் வரைக் காத்திருக்க வேண்டியது தான்; வேறு வழி இல்லை.

கானகம் said...

ஞாநியின் விளக்கத்தை தற்போதுதான் பார்த்தேன். எப்படி இப்படி தவறான தகவலை தட்டச்சினேன் எனத் தெரியவில்லை.மன்னிக்கவும். திரு. பாலசுப்ரமணியன் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நலமுடனும் வாழட்டும்.

Anonymous said...

ஒப்பன் கோட்டாவில் க்ரீமி லேயர் இருக்கே அதில் நலிவுற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் கூடாது என்று வாதத்தை ஞானி முன் வைப்பதை பார்த்ததும் அடடா இவ்வளவு தானா இந்த மனிதர் இவர்கிட்ட பேட்டி எடுக்கத்தான் இட்லி வடை இத்தனை பயம் கொண்டாதா என்று சிரிப்பு வந்தது.

என்ன மாதிரி லாஜிக் அது என்று புரியவில்லை. இவரும் நுனிபுல் மற்றும் வறட்டு வாதக் கேஸ் என்று வெளிப்படுத்தியது தான் இந்தப் பேட்டியின் சாதனை.

TalksinTamil said...

Vanakkam. The audio quality is greatly improved and this talk is re-published in talksintamil.com(இட்லி வடையின் அனுமதியோடு). The admin & audience can download from that site if required. Thanks to Idlyvadai.

Ramadoss Magesh said...

Anon(commenting on Open quota by Gnani),

Yes. that was absolutely hilarious. Inspite of Badri's effort in making him understand that open quota really means "OPEN" fell on deaf ears.

The interview was good(including the audio quality) for the breadth of the topic it could cover. For me I personally liked the interview(rather a discussion as most people refer to)more for the views of the interviewer rather than that of the interviewee.. in-fact interviewer has to restrain elaborating on his views (which were far more intersting) as it is meant to be Gnani's interview..

Gnani does not come across as some one who has a sound knowledge of things about which he has strong opinios about(numerous instances on his lack of nderstanding about sanitation, power de-centralization nd stuffs)..more appears to be an ideologically driven individual who wants to somehow fit in all facts/information in hand to fit an idelogical stand point.. there were some instances where it was nice to hear anectodes about his life/experiences. He also digresses a lot which is per-se not bad, but loses track on a couple of occasions. In-fact his response about Cho was forced..no one asked him of his fight with Cho(credibility of that story is quite doubtful.. because Cho unabashedly wears his anti womens-lib with some sense of pride almost always..so to mention that he came on dhoti with a shirt running to Balasubramiams office because he feels some image loss due to this news leak really makes one feel Gnani has grossly misread the situation..)

Nice efforts and a fitting response by Badri to naysayers..

Best regards,
Magesh

பூவண்ணன் said...

இட ஒதுக்கீடு பற்றி நிறைய குழப்பங்கள்,புரிதல் இல்லாத நிலை இன்றும் அதிகமாக உள்ளது.
ஓபன் கோட்டா என்று ஒன்று எதிலும் கிடையாது.எல்லா பதவி ,படிப்புக்கும் ஏதாவது ஒரு ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் மக்கள் தேர்ந்தெடுக்கபடுவர்
புதுசேரியில் பல மருத்துவ கல்லூரிகள்(மாநில அரசு மருத்துவ கல்லூரி ஒன்று,மத்திய அரசு ஒன்று ,6,7 தனியார் மருத்துவ கல்லூரிகள்) அசாம் தவிர்த்த ஆறு வட கிழக்கு மாநிலங்களில் ஒரே ஒரு கல்லூரி தான் உள்ளது
பக்கத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்தவர்களுக்கு கூட தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் ஓபன் கோட்டாவில் சேருவதற்கு அனுமதி கிடையாது .இங்கு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள்,குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகள் படித்தவர்கள் தான் ஓபன் கோட்டாவில் சேர முடியும்.மாநிலத்தை வைத்து வழங்கப்படும் இட ஒதுக்கீடு அது
நம்மை விட அதிக மக்கள் தொகை,அதிக மாணவர்கள் கொண்ட மேற்கு வங்காளம் மாநிலத்தில் நம்மிடம் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களில் பாதி இடம் கூட கிடையாது .அவர்கள் யாரும் ஓபன் கோட்டா தானே என்று இங்கு வந்து சேர முடியாது.


மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நேபாளம் ,வங்காளதேசம் சேர்ந்தவர்களும் ஓபன் கோட்டா கீழ் வந்து சேர அனுமதி கோர முடியாது


மாநில ,குடியுரிமை அடிப்படையில் மொத்த இடங்களும் இந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனகோவா முதல்வர் அற்புதமாக ஆட்சி செய்து வருவாயை பெருக்கி பல ஆயிரம் அரசு வேலைகளை உருவாக்கினால் அதனால் பலன் அவர்கள் மாநிலத்திற்கு தான்.மாநிலத்தில் யாரும் BPL கீழ் கிடையாது என்று அந்த மாநில காவல்துறை,மாநில அலுவலகங்களில் உள்ள வேலைகளை BPL மக்கள் அதிகமாக இருக்கும் மாநிலங்களுக்கோ,நாடுகளுக்கோ வழங்க முடியுமா


மாநிலவாரி இட ஒதுக்கீடு எனபது நூறு சதவீதம் அல்லது மத்திய அரசு பொது தேர்விற்கு ஒப்பு கொண்ட மாநிலங்கள் என்றால் 85 /75 சதவீதம் .இந்த ஒதுக்கீட்டை தெரியாதது அல்லது புரியாதது போல பேசுவது வியப்பு தான்


இட ஒதுக்கீட்டால் ஒரு சில பிரிவினரே அதிகம் பலன் பெறுகிறார்கள் என்றால் பாதிக்கப்படும் மற்ற பிரிவுகள் போராடி தனி ஒதுக்கீடு,உள் ஒதுக்கீடு பெறுவதும் நாடு முழுவதும் நடந்து வரும் ஒன்று தான்.சாதி ரீதியான இட ஒதுக்கீடு பெரும் குழுக்கள் யாரும் கிரீமி லேயர் பற்றி பேசுவதில்லை .அதை பெறாதவர்கள் தான் அதை பற்றி அதிகம் கவலைப்படுவது

பூவண்ணன் said...

one should have a basic knowledge about allotment of seats,jobs reservation to understand gnani"s argument about creamy layer in open quota
open quota is essentially a state quota,district quota,zonal quota(In andhra 85% seats in colleges and jobs in telengana is for them and remaining for coastal andhra and rayalaseema.viceversa in those areas)quota based on nationality etc
the argument of rich SC/OBC/ST cornering the seat is not different from a rich tamilian or rich mallu or rich candidate from ramnad district cornering the seat in place of a poor candidate from the same group

Hai said...

நல்லதொரு முயற்சி. தொடர வாழ்த்துக்கள்.

நல்ல பல தகவல்கள்.

ஒரு எழுத்துவடிவ கேள்வி பதில் மூலம் கிதைக்காத அனுபவம்.

இட்லிவடைக்கும், ஞாநிக்கும், பத்ரிக்கும் பாராட்டுக்களும் நன்றியும்.

Hai said...

குறைகள் என்று பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை. இன்னும் நன்றாக செய்ய விரும்பினால் ஒலிப்பதிவின் தரத்தை கூட்ட முயற்சிக்கவும்.
மற்றபடி பெரிதாக குறைகள் இல்லை அதுவும் உள்ள விசயங்களும் விவாதிக்கப்பட்ட நீளமும் அசாதரனமானது..