பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 01, 2012

சோனியா, ராகுல் மீது சுப்பிரமணியசாமி புகார்


இன்று மத்தியம் சு.சாமி ராகுல், சோனியா மீது 1600 கோடி முறைகேடு புகார் ஒன்றை சென்னார். அந்த பேட்டியில் 76 சத பங்குதாரர்களாக இருந்துக்கொண்டு ரூ1600 கோடி மதிப்பிலான மற்றொரு நிறுவனத்தை தங்களது நிறுவனத்திற்கு முறைகேடாக அபகரித்தார்கள் என்று குற்றம் சாட்டினார். பத்திரிக்கை சந்திப்பில் ராகுலை 'பச்சா' என்று கூறிய போது காமெடியாக இருந்தது. அபகரித்த்து மட்டும் இல்லாமல் சோனியா மற்றும் ராகுல் காந்தி பொது டிரஸ்ட்டுகளை தனியார் அறக்கட்டளைக்கு மாற்றியதாகவும் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டினார். அரசு கொடுத்துள்ள நம்பர் 10 இல்லத்தில் கம்பெனியின் மீட்டிங் எப்படி நடத்தலாம் என்று கேள்வி கேட்டார். டைம்ஸ் நௌ, சி.என்.என் ஐபிஎன் போன்ற செய்தி ஊடகங்கள் கட்கரி சம்பந்தப்பட்ட டுபாக்கூர் நிறுவனங்களை கண்டு பிடித்த மாதிரி சோனியா, ராகுல் சம்பந்தபட்ட இந்த நிறுவனத்தை கண்டுபிடிக்குமா என்று நக்கல் அடித்தார்.

பத்திரிகை சந்திப்பு இங்கே


அப்டேட்: ராகுல் காந்தி சு.சாமி மீது கேஸ் போட போவதாக கடிதம் எழுதியுள்ளார். அப்படி அவர் நிஜமாக போனால் நன்றாக இருக்கும்.

இது வெறும் செய்தி, இதனால் ஒன்றும் பெரிதாக நடந்துவிடாது என்று எல்லோருக்கும் தெரியும். சு.சாமியே சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்லுவது காமெடியில் பெரிய காமெடி!

3 Comments:

வவ்வால் said...

இட்டலியண்ணா,

இட்டாலியன்னை சு.சாமி மீது ஏன் அவதூறா பேஷினதா வழக்கு போட மாட்டேங்கிறாங்க?

ஆனால் பிலாக்கில் எழுதினால் முட்டை மந்திரம் வைச்சுடுறாங்க எதுக்கு ஒரு நல்ல வக்கீலை பக்கத்தில வச்சுக்கோங்கண்ணா,

அப்பாலிக்கா கமெண்ட் போட்ட எனக்கும் சேர்த்து ஜாமின் எடுக்கோணும் சொல்லிப்புட்டேன் .:-))

Bala said...

He also said that he will approach the court. Looks like it is now 'expose' season.

Anonymous said...

எப்படியோ , நிதின் கட்கரியை மறந்தா சரி..
எப்படி 2G இல் ஆரம்பித்து காமன் வெல்த் , ஆதர்ஷ், அன்றிக்ஸ்-தேவாஸ், கோல் கேட், வாட்ரா, சல்மான் குர்ஷித்,வீர பத்ர சிங் என ஒரு புது பிரச்னை வந்தவுடன் பழையதை மறந்து விடுவது போல் .