பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 01, 2012

எங்கே அந்த வீடியோ கேசட் ?

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மிக முக்கியமான வீடியோ கேசட் சாட்சியம் ஒன்று பதுக்கப்பட்டதாக, இந்த வழக்கில் சிபிஐயின் தலைமை புலனாய்வு அதிகாரியாக செயல்பட்ட கே. ரகோத்தமன் 'மீண்டும்' குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "ராஜிவ் கொலை வழக்கு- மர்மம் விலகும் நேரம்" என்ற புத்தகத்திலும்
தற்போது "Conspiracy to kill Rajiv Gandhi - From CBI files" என்ற புதிய புத்தகத்திலும் ரகோத்தமன் சொல்வது, ஒரு வீடியோ கேசட் மறைக்கப்பட்டுவிட்டு என்பதுதான்!

தமிழில் வெளிவந்த போது இந்த விஷயத்தை யாரும் அவ்வளவாக கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் (அதே?) புத்தகம் தற்போது ஆங்கிலத்தில் வந்தவுடன் ஆங்கில மீடியா சுமார் 4 மணி நேரம் Sensational நியூஸ் வெளியிட்டார்கள். பிறகு வழக்கம் போல அடுத்த நியூஸை தேட ஆரம்பித்தார்கள்.

டைம்ஸ் தொலைக்காட்சியில் ரகோத்தமனும் கார்த்திகேயனுக்கு நடக்கும் விவாதம்.

http://www.timesnow.tv/videoshow/4413617.cms
http://www.timesnow.tv/videoshow/4413618.cms
http://www.timesnow.tv/videoshow/4413619.cms


எனக்கு என்னவோ கார்த்திகேயன் எனக்கு 21 வருடம் கழித்து சில விஷயங்கள் நினைவில்லை என்று சொல்லுவது நம்பும்படியாக இல்லை. இன்னும் பல விஷயங்கள் வெளியே வந்திருக்காது என்பது என் எண்ணம்.

6 Comments:

Anonymous said...

ராஜீவ் கொலை விவகாரத்தில், சில விஷயங்கள் மறைக்கப் படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகின்றது. யார், ஏன் போன்ற கேள்விகளுக்கு பதில்கள் யாருக்கும் தெரியவில்லை!

Anonymous said...

Not sure if you have seen this.

http://www.rediff.com/news/column/kapil-sibals-law--tweet-and-go-to-jail/20121101.htm

s suresh said...

ராஜிவ் கொலை! ஒரு அவிழ்க்கபடாத புதிராகவே உள்ளது! அவ்வப்போது இப்படி பூத்ங்கள் கிளம்பி பரபரப்பு ஏற்படுத்திவிட்டு போவதோடு சரி!

jaisankar jaganathan said...

ராஜீவ் தற்கொலை செய்து கொண்டார் என்பது தான் இன்னும் வரவில்லை. அதையும் சொல்லிட்டா கேம் முடிஞ்சது

Anonymous said...

Please try to read the belog blog for more insight into this.. http://indianintelligence2009.blogspot.in/

Anonymous said...

Please try to read the belog blog for more insight into this.. http://indianintelligence2009.blogspot.in/