பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 29, 2012

66(A)

சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே இறந்த பிறகு நடந்த கடையடைப்பைக் கண்டித்து, ஒரு பெண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இட்ட கமெண்டினால், கைது செய்யப்பட்ட சர்ச்சையே இன்னும் ஓய்ந்தபாடில்லாத நிலையில்,
சமூக வலைத்தளங்களில் ஆர்வலர்களை ஒடுக்கும் விதமாக 66 A சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் பரவால அடிபடுகின்ற நிலையில், ஷ்ரேயா சிங்கல் என்ற ஒரு மாணவி, இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கொன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்
சமீபகாலமாக, 66 A சட்டம் கருத்து சுதந்திரத்திற்கெதிராக மிகவும் பரவலாக அரசாங்க இயந்திரத்தால் பயன்படுத்தப்படுவதால், இதன் முக்கியத்துவம் கருதி, இவ்வழக்கை உடனே விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளார், இந்தியாவின் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர். மேலும் கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி, இவ்வளவு நாளாக ஏன் இதுபோன்ற ஒரு மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது எங்களுக்கே ஒரு ஆச்சர்யகரமான விஷயம் என்று குறிப்பிட்டார் இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் எடுக்கும் நிலைபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.1 Comment:

Shankari said...

Hope the outcome is good...

Its a kind of situation where no one can say anything... we have to choose our words!

Eg., Pondicherry business man also who had 5 or 6 FB friends that too his relatives!!