பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 25, 2012

சன்டேனா இரண்டு (25-11-12) செய்திவிமர்சனம்

இந்த வாரம்....முதல் செய்தியில் அநாதை ஈழத்தமிழர்களும், ஆதரவு அற்ற இந்திய தமிழர்களும். இரண்டாவதில் 'அம்போ" ஆன அண்ணாமலை பல்கலைகழகம்.


செய்தி # 1நவம்பர் 26 மற்றும் நவம்பர் 27. தமிழின தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நினைவு நாள்.இலங்கை ராணுவத்தின் கொடுர தாக்குதலால் பலியான புலிகள் இயக்கத்தை மட்டுமில்லாமல் அவர்களை விட பலமடங்கு


எண்ணிக்கையில் பலியான,அப்பாவி தமிழ்மக்களை நாம் நினைவு கூர்வது நம் ஒவ்வொருவரின் கடமை.இன்றும் வாழ்வாதாரம் இல்லாமல் அநாதைகளாக நிற்கும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க நம்மைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?ஆனால், "எங்களை வைத்து அரசியல் செய்யும் உங்கள் தமிழகத்து அரசியல்வாதிகளை விட ராஜபக்சே மேல்" என்பதே பெரும்பாலான ஈழத்தமிழர்களின் தற்போதைய வாதமாக மாறிவிட்டது.இந்த தினத்தில் நம் தமிழகத்தில் தமிழினத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அனைத்து அரசியல்வாதிகளின் அறிக்கைகளை நீங்கள் பத்திரிக்கைகளில் எதிர்ப்பார்க்கலாம்.


“நாம் தமிழர்” தலைவர் சீமான் ஒரு படி மேலேபோய் இந்த நாட்களில் புதுவை உட்பட்ட நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்தி, வீர உரை நிகழ்த்தப்போகிறார்.பிரபாகரன் அவர்களை ஈழத்தமிழர்களில் பாதிப்பேர் தங்களின் ஒரே தலைவனாக ஒப்புக்கொள்ளவில்லை என்பது நிதர்சனம். விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு முதல் முக்கிய காரணம் கருணா தலைமையில் இயக்கம் உடைந்ததே. இவை

ஒருபுறம் இருக்க, இங்கே உள்ள பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் பிரபாகரன் அவர்களோடு என்றோ எடுத்துக்கொண்ட போட்டோவை இன்றும் காட்டிக்கொண்டு, அவரை வைத்து தங்களின் அரசியல் பிழைப்பை ஒட்டிவருகிறார்கள்.'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்ற உவமைக்கு, நமது அரசியல்வாதிகளுக்கும், தமிழினம் என்று பேசிப்பேசியே காலம் தள்ளும் தலைவர்களுக்கும் இன்னொரு உதாரணம்...மறைந்த தலைவர் திரு.பிரபாகரன் அவர்கள்.ஈழத்தமிழர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதில் முதலிடத்தில் இருப்பவர்....வேறு யார். மகன்,பேரன்,மகள் உட்பட கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடம் பெற்று இருந்தாலும், உட்கார்ந்த இடத்தில் இருந்தே அறிக்கைகள் விட்டுக்கொண்டு, டொசோ மாநாடு என்று கட்சிக்கூட்டம் நடத்திகொண்டு காலம் தள்ளிவரும்... அவரே தான்.இரண்டாம் இடத்தை பிடித்துவிட்டார் சீமான். தமிழகம் வந்த சிங்கள யாத்திரீகர்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி பேசிய சீமான், தனது "தம்பி" படத்தில் சிங்கள நடிகையான பூஜாவை நடிக்கவைத்து ஏன் என்ற கேள்விக்கு இதுவரை பதில் வந்தபாடில்லை.இந்த பதிவின் சாரமாக நான் எடுத்துக்கொண்ட விஷயம்...இந்த வார ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில், "தருமபுரி கலவர பிரச்சனையில் தமிழ் தேசியவாதிகளின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது?" என்ற ஒரு கேள்விக்கு, திருமாவளவன் அளித்த பதில்தான்."தமிழராக ஒன்றுபடுவோம் என்கிற தமிழ் தேசியவாதிகள் தொடர்ந்து மவுனம் சாதிக்கிறார்கள். அவர்களுக்கு சாதி ஒழிப்பை பற்றிய புரிதலோ, அக்கறையோ இல்லை.வெறும் மொழி உணர்வை, இன உணர்வை அடுக்குமொழியில் பேசி செயல்படுகின்றனர். ஈழத்தில் படுகொலைகளுக்காக கொந்தளிக்கும் இவர்கள் ஓவ்வொரு நாளும் தமிழ்நாட்டு சேரிகள் எரிந்து கொண்டு இருக்கும்போது கண்டும்,காணாமல் இருப்பது ஏன்? மனித நேயம் இருந்தால் இதையும் கண்டித்து களத்தில் இறங்க வேண்டும். இல்லை எனில் அவர்களின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டையே சந்தேகிக்க வேண்டி இருக்கும்."திருமாவின் இந்த கூற்று நூறுசதம் உண்மை.ஆனால், இதே பதில் அவருக்கும் பொருந்தும்தருமபுரி களத்தில் முன்ணணியில் நிறகும் நாடளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் ஏன் வாரம் தவறாமல் நடைபெற்று வரும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத் தாக்குதல்களை கண்டித்து 'களத்தில்' இறங்கவில்லை?நவம்பர் 22, இதே வாரத்தில் ராமேஸ்வர மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே தாக்குதலை நடத்தி உள்ளது இலங்கை.இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தால், முன்பொல்லாம் வெத்து அறிக்கையாவது கொடுத்துவந்த நம் தலைவர்கள், இப்பொது இவை அடிக்கடி நகழும் நிகழ்வாக மாறிவிட்டதால் பெரிதாக எடுத்துக்கொள்ளுவதில்லை.பிரபாகரனை பற்றியும், ஈழத்தமிழர்களை பற்றியும் பேசும் தலைவர்களில்,அரசியல்வாதிகளில் யாராவது நம் தமிழகம் சார்ந்த முக்கிய பிரச்சினைகளான காவேரி,முல்லை பெரியார், பாலாறு, தமிழக மீனவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் எதற்க்காகவாவது நிரந்தர தீர்வை ஏற்ப்படுத்தி தந்து இருக்கிறார்களா??இங்கே இருக்கும் நமது தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கில்லாத இவர்களுக்கு ஈழத்தமிழர்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? என்ன யோக்யதை இருக்கிறது?காவேரி நதி நீர்ப்பங்கிடு சுமார் முப்பது வருடங்களாக தீர்க்கபடாமலே இருக்கிறது. வழக்கு என்ற பெயரில் பல கோடிகளை விழுங்கி வருகிறது உச்ச நீதிமன்றம் நமக்கு சாதகமாக தீர்ப்பு கூறியும், நமக்கு நியாயம் கிடைக்கவில்லை. ஈழத்து நிலை பற்றி உணர்ச்சி பொங்க வீர வசனம் பேசும் அரசியல்வாதிகளுக்கு தமிழகத்து உரிய உரிமையை நிலைநாட்ட முடியாமல் இருப்பது எதை காட்டுகிறது.?"சொந்த மீனவர்களை கூட காப்பாற்ற முடியாத உங்கள் தலைவர்களால் எப்படி எங்களை காப்பாற்ற முடியும்" என்று கேட்கிறார் ஈழ எழுத்தாளர் சமயந்தன்.


உள்ளூரில் இருக்கும் "ஆணிகளை" பிடுங்க தெம்பில்லாதவர்கள், இலங்கையில் இருக்கும் "மலைகளை" பெயர்ப்பது பற்றி வாய்கிழிய பேசுவது எவ்வளவு அருவருப்பான,சாக்கடை அரசியல்?"கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்" - யாழ்ப்பாணப் பழமொழி.செய்தி # 2


"பதினைந்து லட்சம் கொடுங்க. மாதம் முப்பதாயிரம் ருபாய் சம்பளம். காலை பத்து மணிக்கு போய் ஈவினிங் அஞ்சு மணிக்கு வந்துடலாம். அதிகம் வேலை கிடையாது. சுருக்கமா சொன்னா கவர்மெண்ட் வேலையை விட செம ரிலாக்ஸாக இருக்கலாம். ஒரு கைல கேஷ் கொடுத்தா, இன்னொரு கையல அப்பாயின்மெண்ட் ஆர்டர்."

- இப்படி என்னிடம் மார்கெட்டிங் செய்தார் ஒரு நபர்.

அவர் குறிப்பிட்ட அந்த ஜாலி(?) வேலை - லெக்சரர். இடம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம்.

உங்களிடம் இரண்டு அல்லது மூன்று லட்சம் மட்டுமே இருக்கிறதா? அதற்கு ஏற்றார்போல கூட்டுற அல்லது பெருக்கிற வேலையோ உங்களுக்கு அங்கு ஏற்பாடு செய்துவிடலாம்

அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்களில் 90 சதவீதம்பேர் இப்படி வேலையை "வாங்கியவர்கள்தான்" என்பது நூறுசதவீத உண்மை (நான் சிதம்பரத்துக்காரன்).

இங்கு என்ஜினியரிங், டாக்டர் போன்ற உயர்படிப்புகளில் சேர, Marks தேவையில்லை. Money மட்டுமே தேவை.

பெரிய இடத்து பிள்ளைகள் சும்மா ‘பெயருக்கு’ படிக்க தேர்ந்தெடுக்கும் இடமே இப்பல்கலை கழகம்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். இவ்வாறு சம்பாதிக்கும் பணத்தில்தான் ஒட்டுமொத்த நிர்வாகமே நடைபெற்று வருகிறது. ஒரளவுக்கு சிறப்பாக செயல்படுவது உலகமெங்கும் மாணவர்களை கொண்ட தொலைதூர கல்வி.

ஒவர் ஊழலின் விளைவாக பாரம்பரியமிக்க அண்ணாமலை பல்கலைகழகம் திவாலாகும் நிலைக்கு போய்விட்டது. பணிபுரியும் எல்லா ஊழியர்களுக்கும் அறுபது சதவீத் சம்பள குறைப்பு மற்றும் ஆள் குறைப்பு என நிர்வாகம் அறிவித்தது. இதை அடுத்து, காலவரையின்றி பல்கலைகழகம் மூடப்பட்டது,

பல்கலைகழக ஊழியர்களும், அவர்களின் வாக்குகளை கவர அனைத்து கட்சிகளும் தொடர் போராட்டத்தில் இறங்க, நிர்வாகமும் தற்போது பல்கலைக்கழத்தை திறக்கவும், ஊழியர்களுக்கு எதிரான அறிவிப்புகளை திரும்ப பெற நடவடிக்கை எடுப்பதாவும் அறிவிக்க, தற்காலிகமாக பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

"படிக்க ஸீட், படிக்காமலே டிகிரி, படித்தவுடன் வேலை - எல்லாவற்றுக்கும் பணம்".

இதுதான் அண்ணாமலையின் தாரக மந்திரம்.

நிதி நெருக்கடி குறித்து தற்பொது தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறது இதன் தலைமை.

இந்த நிலையை முற்றிலுமாக உடனடியாக மாற்றுவது என்பது இயலாத காரியம். .

"அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்" என்று வலியுறித்து இருக்கிறார். கருணாநிதி. இது ஒரு தனியார் பல்கலைக்கழகம்

முடிந்தவரை சுரண்டிவிட்டு, எடுத்துக்கொள்ளுங்கள் என்று அரசிடம் சொல்வதற்க்கு இது ஒன்றும் அரசு கஜானா இல்லை.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தை அந்த நடராஜர்தான் காப்பாற்ற வேண்டும்.


(நன்றி, இனி அடுத்தவாரம்)-இன்பா


16 Comments:

s suresh said...

உண்மையான விமர்சனங்கள் கூரை ஏறீ கோழி பிடிக்க முடியாதவன் விமானம் ஏறி வைகுந்தம் போனானாம்! அது போன்று இருக்கிறது தமிழக அரசியல்வாதிகளின் நிலை! அண்ணாமலை பல்கலைக்கழக்த்தை அந்த அண்ணாமலையான் தான் காப்பாற்ற வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன்பே எளிதாக டிகிரி வாங்க அந்த பல்கலை கழகத்தை நாடுமாறு அட்வைஸ் சொல்லப்பட்டது எனக்கு!

Anonymous said...

ஜெயா சிங்கள ஃபுட்பால் டீமைத் திருப்பி அனுப்பியது பற்றி மட்டும் ஒன்றுமே சொல்லவில்லையே அது எப்படி?

சரவணன்

Anonymous said...

இலங்கைப் பிரச்சினை குறித்த உண்மையான புரிதல் 99 சதவீத தமிழ்நாட்டுக்காரர்களுக்கு இல்லவே இல்லை என்று உறுதியாகச் சொல்லுவேன். இதில் திருமாவளவனும் அடக்கம். காசு வாங்கிக்கொண்டு வெற்றுக் கூச்சல் போடும் கும்பலை இதில் சேர்த்துக் கொள்ளமுடியாது. இதைப் பற்றி விரிவாக எழுதும் எண்ணம் இருக்கிறது. திருமாவளவனுக்காக இதை மட்டும் இங்கே சொல்வேன்,

யாழ்பாணத்தில் சாதிக் கொடுமை தமிழ் நாட்டையும் விட மிக அதிகம். 'பஞ்சமர்' என்ற பெயரில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரான சாதிக் கொடுமைகள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது. திருமாவளவன் ஆதரிக்கும் விடுதலைப் புலிகள், உயர் சாதியினருக்கு ஆதரவானவர்கள். இறுதிவரை அவர்கள் உயர்சாதியினருக்கு ஆதரவாகவே நடந்து கொண்டார்கள். ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம்.

சிங்களவர்களால் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்ப பெரிதும் உழைத்தவர் ஒரு தாழ்த்தப்பட்டவர். ஆனால் அதனை அவர் திறந்து வைக்க விடுதலைப் புலிகளால் அனுமதிக்கப்படவில்லை. ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு, ஒரு பஞ்சமருக்கு அந்தப் புகழ் சென்றுவிடக் கூடாது என்பதற்காக.

யாழ்ப்பாணத் தாழ்த்தப்படவர்களால் பெரிதும் மதிக்கப் பெற்ற யாழ் நகர மேயர் ஆல்பர்ட் துரையப்பாவைக் கொன்றவர்கள் விடுதலை புலிகள்.

தாழ்த்தப்பட்டவர்களின் இயக்கமாக அறியப்பட்ட இ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபாவை சென்னையில் வைத்துதானே விடுதலைப் புலிகள் கொன்றார்கள்?

ஒரு தேவாலயத் திருவிழாவில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காமல் கலவரத்தை உண்டு செய்து, பல தாழ்த்தப் பட்டவர்கள் கொல்லப்பட்டபோது, அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று இலங்கைப் பாராளுமன்றத்தில் கூசாமல் பொய் சொன்னவர் மறைந்த அமிர்தலிங்கம் அவர்கள். ஆனால், அந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புக் குரல் சிங்களவர்களிடமிருந்தே வந்தது. பல சிங்களத் தலைவர்கள் தாழ்த்தப்பட்டவர்களைக் கண்டு ஆதரவு தெரிவித்தார்கள் என்பது வரலாறு.

நாடற்றவர்களாக துயறுற்று, கண்ணீருடன் வாழ்ந்த இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் குடியுரிமை வழங்க முன் வந்தபோது, அதனை முழு மூச்சாகத் தடுத்து நிறுத்திய ஜி.ஜி. பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தமிழர்தானே?

தாழ்த்தப்பட்டவர்களின் மீது உண்மையான அக்கறையுடையவராக இருந்தால் கே.டானியல், அந்தோணி ஜீவா, ஷோபா சக்தி, குமாரி ஜெயவர்த்தன போன்றவர்களின் புத்தகங்களைத் திருமாவளவன் படித்துப் பார்க்கவேண்டும்.

இதையெல்லாம் சொல்வதால் நான் இலங்கையில் நடப்பதை நான் நியாயப்படுத்தவில்லை. அது ஒரு மாபெரும் மானுடத் துயரம். இலங்கைத் தமிழர்கள், வெற்றுக் கூச்சலிடும் தமிழ்நாட்டுத் "தலைவர்களை(?!)" இனிமேலும் நம்பி மோசம் போகாமலிருக்க வேண்டும். பஞ்சமர்களை, இந்தியத் தோட்டத் தமிழர்களை தங்களின் சகோதரர்களாக மதித்து நடத்த வேண்டும்.

-ந.

jaisankar jaganathan said...

சொல்லுவதற்க்கு ஒன்றும் இல்லை. இங்கே இருக்கும் தமிழர்களுக்கு ஈழத்தின் வலி, நிலைமை தெரியாது

நானும் திருமாவளவனின் பேட்டியை பார்த்தேன்.

சிதம்பரத்தின் ஆள் என்னிடமும் பேசினார். ஒரு தடவை பேப்பர் கரைக்‌ஷன் போனால் போட்ட பணத்தை எடுத்துடலாமுன்னு சொன்னார். கொடுமை

snkm said...

முதலில் இருந்தே தவறு நடுக்கும்போது கண்டு கொள்ளாமல் இருந்த பொது மக்களும் இந்த நிலைமையை பல்கலைக் கழகம் அடைந்ததற்கு க் காரணம். இன்னும் நிறைய பல்கலைக் கழகங்கள் தேவைப் படும் நேரத்தில், பல்கலைக் கழகத்தை இயங்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும். வாழ்க பாரதம்.

பழனி.கந்தசாமி said...

//சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தை அந்த நடராஜர்தான் காப்பாற்ற வேண்டும்.//

அவரைக் காப்பாத்திக்கவே அவர் ததிங்கணத்தோம் போடவேண்டி இருக்கிறது, இந்த நிலையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை எப்படிக் காப்பாற்றப் போகிறார்?

Anonymous said...

*** யாழ்ப்பாணத் தாழ்த்தப்படவர்களால் பெரிதும் மதிக்கப் பெற்ற யாழ் நகர மேயர் ஆல்பர்ட் துரையப்பாவைக் கொன்றவர்கள் விடுதலை புலிகள்.

தாழ்த்தப்பட்டவர்களின் இயக்கமாக அறியப்பட்ட இ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபாவை சென்னையில் வைத்துதானே விடுதலைப் புலிகள் கொன்றார்கள்? ****

அனானி, புரியாமல் உளறக் கூடாது. இவர்கள் யாரும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காகவா கொல்லப்பட்டார்கள்? ஏன் ஷோபா சக்திக்கும் புலிகளுக்கும் எற்பட்ட முரண்பாட்டுக்கு அவர் தாழ்த்தப்பட்டவர் என்பது காரணம் இல்லையே?

தமிழ் ஈழத்திலிருந்து சாதி ஒடுக்குதலையும் பெண் அடிமைத்தனத்தையும் ஒழித்தது புலிகள்தான்.

சரவணன்

Anonymous said...

நான் புரியாமல் உளறுகிறேனாம்...இது நான் எதிர்பார்த்ததுதான்.

தாழ்த்தப்பட்டவர்களை என்றும் விடுதலைப் புலிகள் மதித்ததில்லை. 'எங்கட பெடியங்கள்' என்றுதான் யாழ்பாணத்து உயர்சாதியினர்களால் அழைக்கப்பட்டார்கள். உண்டா இல்லையா என்று அவர்களே கூறட்டுமே. உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? சாதி ஒடுக்குதலையும், பெண் விடுதலையையும் விடுதலைப் புலிகள்தான் யாழ்பாணத்தில் கொண்டு வந்தார்களாம்.

விடுதலைப் புலிகள் வருவதற்கு முன்பிருந்தே யாழ்ப்பாணத்துப் பெண்கள், தமிழ்நாட்டுப் பெண்களை விடவும் சுதந்திரமாகத்தான் இருந்தார்கள். அது தெரியுமா உங்களுக்கு? பள்ளிக்குச் சென்ற குழந்தைகளை அபகரித்துச் சென்று அவர்களைக் கட்டாயமாக தங்கள் இயக்கத்தில் சேர்த்தவர்கள் புலிகள். தங்கள் பிள்ளைகளை விட்டுவிடும்படி கெஞ்சியழுத காட்சிகள் யாழ்பாணத்தில் தினமும் சகஜம். தங்களை எதிர்பவர்களை, பிடிக்காதவர்களை மின்சாரக் கம்பத்தில் கட்டிவைத்து இரக்கமேயில்லாமல் சுட்டுத் தள்ளியவர்கள் அவர்கள்.

ராஜனி திரணகம என்ற பெயரையாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா சரவணன்? ராஜனி இங்கிலாந்தில் படித்துப் பட்டம் பெற்ற யாழ்ப்பாணத்துப் பேராசிரியை. தமிழ்ப் பெண். அவர் "முறிந்த பனை" என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். முழுவதும் விடுதலைப் புலிகளின் கொலை வெறியாட்டங்கள் பற்றிய தகவல்கள்தான். படிக்கப் படிக்க குலை நடுங்கும் செய்திகள். இந்திய அமைதிப் படையின் வெறியாட்டங்கள் பற்றிய தகவல்களும் அதில் உண்டு. அந்தப் புத்தகம் எழுதியதற்காகவே விடுதலைப் புலிகள் ராஜனி திரனகமவைச் சுட்டுக் கொன்றார்கள்.

ஆதர பூர்வமான, அறிவு பூர்வமான, அமைதியான விவாதத்திற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.

நான் சொல்லும் அத்தனைக்கும் என்னிடம் ஆதாரம் உண்டு.

I'm ready. Let us start.

Anonymous said...

Dear I.V,
After a long time, I see a sharp article from you(செய்தி # 1). Expecting more like this.

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

சண்டேணா இரண்டு...... களை கட்டுகிறது....

இட்லிவடை சுவாரசியமாகிறது. கார சாரமாக சாம்பாருடன் மொளகா பொடி கிடைக்கிறது...(என்ன.........மொளகா அரைக்காம இருந்தா சரி........)

தொட்டால் சுடும்...... எனும் நிலையில் உள்ள இரு பிரச்சனைகளை பேசுகிறது..

1. ஈழத்தமிழ்........ குறித்த சில மேற்கோள்கள் ஆழமானவை, நடு நிலையானவை, சிந்திக்க தூண்டுபவை...

/// "எங்களை வைத்து அரசியல் செய்யும் உங்கள் தமிழகத்து அரசியல்வாதிகளை விட ராஜபக்சே மேல்"////

//// பிரபாகரன் அவர்களை ஈழத்தமிழர்களில் பாதிப்பேர் தங்களின் ஒரே தலைவனாக ஒப்புக்கொள்ளவில்லை என்பது நிதர்சனம். ////

//// பிரபாகரன் அவர்களோடு என்றோ எடுத்துக்கொண்ட போட்டோவை இன்றும் காட்டிக்கொண்டு, அவரை வைத்து தங்களின் அரசியல் பிழைப்பை ஒட்டிவருகிறார்கள். ////

//// மனித நேயம் இருந்தால் இதையும் கண்டித்து களத்தில் இறங்க வேண்டும். இல்லை எனில் அவர்களின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டையே சந்தேகிக்க வேண்டி இருக்கும்."///////

////உள்ளூரில் இருக்கும் "ஆணிகளை" பிடுங்க தெம்பில்லாதவர்கள், இலங்கையில் இருக்கும் "மலைகளை" பெயர்ப்பது பற்றி வாய்கிழிய பேசுவது எவ்வளவு அருவருப்பான,சாக்கடை அரசியல்?////

மிக நல்ல பதிவு... கலக்கல்ஸ்....

2. அண்ணாமலை பல்கழைக்கழகம் குறித்த பதிவு........ ம்.... நல்லாயிருக்கும்... ஆனால்.... இன்னும் செழுமையாக இருந்திருக்கலாம்...

kothandapani said...

அனானி சொல்லிவிட்டார் சரவணன் என்ன சொல்ல போகின்றார் ................... I am waiting............................

Anonymous said...

I was IN SRI LANKA AT THAT TIME.WHATEVER ANANI HAS SAID IS TRUE. INFACT JAFFNA TAMILS HAD NO RESPECT FOR TAMILNADU TAMILS ALSO. IHAVE HEARED SEVERAL TIMES THEIR JOKING ABOUT OUR TAMIL AND HABITS. THEY HAD TO ACCEPT US BECAUSE OF THEIR WAR WITH SINHAALAS. THEY HAD NEVER REAL RESPECT FOR US. THE WAY THEY TREATED MUSLIMS WHO WERE ALSO SPEAKING TAMIL IS ATROCIOUS. EVERY WELL TO DO LANKAN TAMIL ALL OVER THE WORLD WAS SO MUCH SCARED OF LTTE NOT KNOWING WHEN THEY WILL BE KID NAPPED FOR FUNDS. MORE THAN 700 SINHALA POLICE MEN WHO SURRENDERED TO LTTE WERE KILLED AT POINT BLANK RANGE. IS THIS HUMAN RIGHTS?
THE PROBLEM IS MANY OF US THINK LTTE IS LANKAN TAMILS. MANY PEOPLE IN INDIA ARE NOT EVEN AWARE OF THE PITIABLE CONDITION OF HILL TAMILS. THEY WERE FIRST LET DOWN BY LALBAHADUR SASTRY AND EVEN TODAY BY ALL OF US.
THE BEST THING WE ALL CAN DO FOR LANKAN TAMILS IS TO KEEP QUIET. EVERY CHALLENGING WORD UTTERED IN TAMILNADU WILL AFFECT ATLEAST TEN TAMILS THERE.
HAVING FOUGHT A WAR FOR THIRTY YEARS THEY KNOW HOW TO REBILD AND REHABILITATE.IT MAY BE SLOW AND PAINFUL BUT LET US LEAVE IIT TO THEM.
THEY ARE EXTREMELY INTELLIGENT AND INNOVATIVE AND WILL SOLVE THEIR PROBLEMS. LET US NOT COMPLICATE.
THIS IS A PRAYER AND APPESL WITH FOLDED HANDS AND BOWED HEAD.
SIRAM THALTHI KARAM KOOPI VENDUKIREN

Anonymous said...

remember 66(a).


One more Anony.

Anonymous said...

Good post about two sensitive & hot topics

sa.sankar

Anonymous said...

அதானே?....;-)

எனிவே, என் நெருங்கிய நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க (அன்பான வேண்டுகோள்தான். மிரட்டல் இல்லை!) இந்தத் திரியில் இருந்து விலகிக் கொள்ள முடிவுசெய்துவிட்டேன்.

இறுதியாக இதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்,

இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகள், அபிலாஷைகள் மிகவும் நியாயமானவை. தங்கள் பிறந்த நாட்டில், சிங்களவர்களுக்கு இணையான உரிமை அவர்களுக்கும் இருக்கிறது. அந்த உரிமையைப் பெற்றுத்தர, இந்தியர்கள், குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் அவர்களுக்கு எல்லாவிதமான ஆதரவும் தரவேண்டும்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒருபோதும் தனித் தமிழ் ஈழத்தை ஆதரிக்கவே கூடாது. அது ஒரு கொடுங்கனவு. இலங்கையில் வாழும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களையும், தமிழ் பேசும் முஸ்லிம்களையும், தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கிடைக்கும் ஈழம் ஒருபோதும் அமைதியானதாக இருக்கப் போவதில்லை. தனித் தமிழ் ஈழத்தை ஆதரிப்பது நமது எதிர்கால சந்ததிகளின் தலையில் மண்ணை அள்ளிப் போடுவது போன்றது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைப் பிரச்சினை குறித்து நான் படித்த புத்தகங்களின் அடிப்படையிலான முடிவு இது.

ஆகவே, நாம் ஆதரிக்க வேண்டியது இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளையே அன்றி தமிழ் ஈழத்தை அல்லவே அல்ல. இலங்கைத் தமிழர்கள் இனிமேலாவது வாய்சவடால் சாமிகளையும், கோமான்களையும் நம்பி மோசம் போகாமல் இருக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டியது உங்களின் பணமே அன்றி உங்களின் நலம் அல்ல. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

இனிமேல் இந்தத் திரியில் வேறு எதையும் நான் சொல்லப் போவதில்லை.

-ந.

Anonymous said...

//ஜெயா சிங்கள ஃபுட்பால் டீமைத் திருப்பி அனுப்பியது பற்றி மட்டும் ஒன்றுமே சொல்லவில்லையே அது எப்படி?

சரவணன்//

-repeatuu