பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 16, 2012

22 ஃபிமேல் கோட்டயம்.

பெண்ணின் பொறுமையை பலவீனம் என எடைபோடக்கூடாது என்பதே இக்கதையின் மையக்கருத்து.

தனக்கு நடக்கும் அநியாயங்களுக்கு அவள் பொறுமையாய் இருப்பதாய் நினைத்தாலோ அல்லது என்ன செய்துவிடப் போகிறாள் எனநினத்தாலோ என்ன மாதிரி பழிவாங்கப்படலாம் என்பதை அருமையாக சொல்லி இருக்கின்றனர்.

டெஸ்ஸா.கே.ஆப்ரஹாம் போனில் டிகே என்றழைக்கப்படும் தினேஷுக்கு நன்றியும், தனது அன்பையும் சொல்கிறாள், முதல் காட்சியில்.
ஏன் இதெல்லாம், அவள் எங்கு செல்கிறாள், எதற்கு நன்றி என்பதுதான் மொத்தக்கதையும்.

கேரள சினிமாவில் அதிகம் தெரியாத முகங்கள்தான் படம் முழுக்க. எனக்குத் தெரிந்த ஒரே முகம் பிரதாப்போத்தன் மட்டுமே.

பெண்களை காதல் செய்வதுபோல வளைத்து சமூகத்தில் பலத்துடனும், வசதியுடனும் இருப்பவர்களுக்கு கூட்டிக்கொடுக்கும் நாகரிக பிம்ப் சிறிலுடன் காதல் வருகிறது டெஸ்ஸாவிற்கு. நர்ஸாக பணிபுரியும் டெஸ்ஸா, கனடா சென்று நர்சாக வேலை செய்ய முயல்கிறாள். அதற்காக ஏஜென்ஸிக்கு வரும்போது சிறிலை சந்திக்கிறாள். பின்னர் அது காதலாகி, அதன் பின்னர் காதலனால் அவள் அனுபவிக்கும் கொடுமைகளும், இவ்வளவு நம்பிய தனது காதலனின் நம்பிக்கைத் துரோகத்திற்கும், தன்னை கொடூரமாய்க் கற்பழித்த பிரதாப் போத்தனையும் பதிலடியாக பொறுமையாக டெஸ்ஸா பழிவாங்குகிறாள்.

பிரதாப் போத்தனுக்கு வித்தியாசமான மரன தண்டனையும் காதலனுக்கு வேறுவிதமான தண்டனையை கொடுக்கிறாள்.

பிரதாப்போத்தன் சமீபகாலமாக நிறைய திரைப்படங்களில் தலைகாட்டுகிறார். இந்தப்படத்தில் வித்தியாசமான வில்லன் வேடம். ஹெக்டேவாக வருகிறார். டெஸ்ஸாவிடம் கேன் ஐ ஹாவ் செக்ஸ் வித் யூ? எனக் கேட்கிறார். பதறும் டெஸ்ஸாவை அதிகபட்ச வன்முறையுடன் கற்பழிக்கிறார். மிக வன்முறையான காட்சி இது. பூந்த்தொட்டியால் டெஸ்ஸாவின் பின்மண்டையில் அடிக்கும்போது நமக்கு மயக்கம் வருகிறது.

உடலெங்கும், கடித்த தடமும், விரல்கள் உடைக்கப்பட்டு, கழுத்தில் காயமும் ஏற்படும் அளவு வன்முறையாக கற்பழிக்கப்படுகிறாள் டெஸ்ஸா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டுக்கு வருகிறாள். சிறில் அவளை மிக ஆதூரமய்க் கவனித்துக் கொள்கிறான். டெஸ்ஸா எழுந்து நடமாடியதும் சிறில் பிரதாப் போத்தனுக்கு She is Ready என தகவல் அனுப்புகிறான். அப்போதுதான் சிறில்தான் வில்லன் என்பதே நமக்குத் தெரிய வருகிறது. சிறில் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு மன்னிப்பு கேட்க வரும் ஹெக்டே “Can I have sex with you one more time, please” எனக்கேட்கும்போது பகீரென்றிருக்கிறது. பிரதாப் போத்தன் வில்லனாக அருமையாக செய்திருக்கிறார்.

இரண்டாம் முறை கற்பழிக்கப்பட்டு டெஸ்ஸாவால் பிரச்சினை வரும் என்ற நிலை வரும்போது நம்மூர் ஸ்டைலில் அவளது கைப்பையில் போதைப்பொருளை வைத்து அவளை சிறைக்கு அனுப்புகின்றனர், சிறிலும், ஹெக்டேவும்.

சிறையில் கிடைக்கும் ஒரு தமிழ்ப்பெண் நட்பால் எப்படி காதலனையும், பிரதாப்போத்தனையும் பழிவாங்குகிறாள் என்பதே மீதிக்கதை.

பெங்களூரில் வாழும் கேரள நர்ஸ்களின் வாழ்க்கை கான்பிக்கப்படுகிறது. எப்படி பல பெண்கள் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்கின்றனர் என்பதும், அவர்களுக்குள் நடக்கும் குறும்புகள், எல்லாம் இயல்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களில் சிலர் பனத்துக்காக சோரம்போவதுபோல கான்பித்திருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. மலையாளப்படத்தில் அவர்கள் ஊர்ப்பெண்களைத்தான் காட்டியுள்ளனர். இருப்பினும் இப்படி சித்தரித்திருக்க வேண்டாம்.

சிறிலின் பின்புறம் குறித்து டெஸ்ஸாவின் அறைநண்பி அடிக்கும் கமெண்ட் இன்றைய இளவட்டங்களின் ஸ்டைல்போல.

பெண்ணின் ஆயுதமும், பலவீனமும் உடம்புதான் என்கிறார் கொலைக்குற்றத்திற்காக உள்ளே இருக்கும் சுபைதா எனும் தமிழ் பெண். அதை வைத்துதான் வில்லன்களைப் பழிவாங்கவும் செய்கிறார் டெஸ்ஸா.

ரீமா கலிங்கல் என்பர்தான் டெஸ்ஸாவக வருகிறார். டைட்டிலில் அவர்பெயர்தான் முதலில். ஃபாஹத் ஃபாஸில் சிறிலாக வருகிறார். சிறிலாக வரும்பவரின் முகம் அந்த கேரக்டரின் பலம். குழந்தைத்தனமான முகத்துடன் வெகுளித்தனமாக காதலும்,வில்லத்தனமும் செய்கிறார்.

திரைப்படங்களில் வில்லன்களின் இலக்கணம் மாறிக்கொண்டே வருகிறது உண்மையில் இதுதான் நிதர்சனம். வில்லன்கள் எனில் கடா மீசை வைத்துக் கொண்டு ஓட ஓட கற்பழிப்பதெல்லாம் பழைய ஸ்டைல். நல்ல உத்தியோகத்தில் இருக்கும் மிகச் சாதாரணமான ஆள் போன்ற தோற்றம் அளிப்பவர்கள்தான் இன்றைய வில்லன்கள்.

மொத்தமே சில கேரக்டர்களை வைத்துக்கொண்டு நல்ல திரைக்கதையின் மூலம் நம்மையெல்லாம் கட்டிப்போடுகிறார், இயக்குனர் ஆஷிக் அபு.

நல்ல ஒளிப்பதிவு. இயல்பான காட்சிகள். தேவையான இசை இவையெல்லாம் படத்தில் நல்ல விஷயங்கள். இவ்வளவுதூரம் தன்னை கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கியவன்மீது இன்னும் கரிசனம் இருப்பதுபோலக் காட்டியிருப்பது கொஞ்சம் நெருடல். அதற்குக் காரணமாக சிறிலின் அம்மாவும் ஒரு நர்ஸ் என்பதால் உனக்கு இந்தத் தண்டனை என்கிறாள்.

மருத்துவமனையில் நோயாளியாக வரும் முதியவர் மனதைக் கவர்கிறார். அவரது சொத்தில் பாதியை டெஸ்ஸாவுக்கு எழுதிவைத்து அவர் டெஸ்ஸாவுக்கு எழுதும் கடிதம் அருமை.

பயங்கரமான ஃபைட் சீன்களோ, வெளிநாட்டு லொகேஷன்களில் பாட்டுகளோ, பஞ்ச் வசனங்களோ ஏதுமில்லை இப்படத்தில். ஆனால் எதோ ஒன்று முழுதும் கட்டிப்போடுகிறது.

கையில் காசும், பலமும் இருக்கிறது என்பதற்காக பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என நினைப்பவருக்கு ஒரு எச்சரிக்கை இப்படம். ஆனால் அதே ஆட்களைக் கொண்டுதான் தனது பழிவாங்கலையும் செய்கிறாள் என்பது ஒரு நகைமுரன்.

வெளியூர்களில் தனியாக வாழும் பெண்களுக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்பதையும் காதல் என்ற பெயரில் தவறான ஆட்களிடம் சிக்கினால் என்ன ஆகும் என்பதையும் இது கோடி காட்டுகிறது. இது கேரள பெண்ணின் கதை மட்டுமல்ல. இந்தியாவில் எந்த ஒரு பெண்ணுக்கும் இது நடக்கலாம்.

முதலில் ஒருமுறை பார்த்திருந்தேன். மீண்டும் ஒருமுறை பார்க்கத்தூண்டியது, இந்தப்படம்.

- ஜெய் ஹனுமான்

எச்சரிக்கை: இட்லிவடையில் பழைய ஆட்கள் திரும்ப வருகிறார்கள்...:-)

6 Comments:

Anonymous said...

என்ன காந்தி செத்து போயிட்டாரா ?

Suresh Kumar said...

This movie is based on the first half of the famous sidney sheldon book if tomorrow comes..but this one is a nice movie though..

Suresh Kumar said...

This movie is based on the first half of the sidney sheldon book if tomorrow comes..this one is a nice movie though

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

மலையாளப் படம்ன்னா.......... எல்லா மலையாளப் படத்துக்கும் விமர்சனம் போடோணும்....

அதுதான் முறை.............

என்ன இட்லிவடை ரெடியா............

Dhas said...

Its also the same theme of HINDI Film :: Ek Hasina Thee. Urmila Madonkar. Very good performance by Urmila!

crazypaja said...

ஒ..ஓமனே....22 பீமேலோ?? வல்லிய படமாக்கும்...அப்ப, பின்னே நான் வரும்.