பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 16, 2012

சாட்டை FIR(?)


சாட்டை படத்தின் விமர்சனம் இல்லை. ஆனால் அந்த படம் சம்பந்தமாக போலீஸ் போட்ட நிஜ FIR !

அந்த செய்தி எந்த நாளிதழ்களிலும் வரவில்லை அதனால் இங்கே .... 

செய்தி இது தான் - சென்னை சிதம்பரம் போகும் தனியார் பேருந்து ஒன்று கிளம்பிய அரை மணி நேரத்தில் 'சாட்டை' படத்தை பேருந்தில் ஓட விட்டிருக்கிறார் கண்டக்டர். கொஞ்ச நேரத்தில்.... நடுவழியில் பேருந்தை நிறுத்தி போலீஸ் திருட்டு டிவிடியில் (விசிடி எல்லாம் இப்போது இல்லை ) படத்தை போட்ட கண்டக்டரை கைது செய்தனர்.


போலீஸ் இவ்வளவு துரிதமாக செயல்பட்டதற்கு காரணம் பஸ்ஸில் இருந்த ஒருவர் - அவர் தான் அந்த படத்தின் தயாரிப்பாளர் !

8 Comments:

kg gouthaman said...

இனிமேல் பேருந்தில் படம் போடுபவர்கள், பயணிகளின் பட்டியலை
கண்காணித்து, பிறகு படம் காட்டுவது நல்லது!

வல்லிசிம்ஹன் said...

நல்ல யோசனை:)

kothandapani said...

ஒரு பட தயாரிப்பாளர் பஸ்ஸில் பயணிதரா நம்ப முடியவில்லை . சாட்டை எடுத்ததால் இந்த நிலையா

dr_senthil said...

நல்ல விஷயம் தானே - பாராட்டுக்கள் காவல்துறைக்கு. அப்புடியே சட்டம் ஒழுங்கையும் இதே வேகத்தில் கவனிக்கும் மாறு வேண்டுகிறேன்

cho visiri said...

The Conductor's after thought might be this - "I thought he had only produced Whip. I never thought he would whip too...."
BTW, was he the same conductor who showed " Whistle" the other day" ( hi....hi... conductor and whistle combination....

R. J. said...

No wonder the producer of an acclaimed film has to travel in a bus. Such small budget Films run rarely for a week or two and it is sad that the rightful revenue is denied to the producers. - R. J.

Anonymous said...

விளம்பரத்தில் 'சாட்டை' என்பது மட்டும்தான் தமிழில் இருக்கிறது. மற்றதெல்லாம் இங்கிலிபீஸில். இதுக்கு ஒருபயலும் சாட்டையைத் தூக்கவில்லையே? அது ஏன்?

Anonymous said...

அதே பஸ்ஸில் ஒரிஜினல் ஆலிவுட் தயாளிப்பார் பயணித்திறுந்தால் என்ன நடந்திருக்கும்?