பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 30, 2012

மேலும் நான்கு பேர்


சில நாட்கள் முன் அருண்பாண்டியன் மற்றும் சிலர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். தொகுதி பிரச்சனை என்று குழந்தை கூட நம்பாத காரணம் சொன்னார்கள்.

அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் 4 எம்எல்ஏக்கள், தொகுதிப் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரம் வாங்கித் தரும்படி சபாநாயகர் தனபாலிடம் அக்கட்சியின் கொறடா சந்திரகுமார் மனு அளித்தார்.

இன்று காலையில் மேலும் 4 எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் அலுவலக அதிகாரிகளைச் சந்தித்து, தாங்களும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தங்களுக்கும் நேரம் ஒதுக்கித் தரும்படி மனு கொடுத்தனர். ஆனால், அவர்களது மனுவை வாங்க, அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால், தாங்கள் மனுவை முதல்வருக்கு தபாலில் அனுப்ப உள்ளதாக நிருபர்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.

திடீர் என்று எல்லோருக்கும் தொகுதி மேல் பயங்கர பற்று வந்துவிட்டது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சும்மாவா சொன்னார்கள் ?

4 Comments:

kg gouthaman said...

நாடாளுமன்றத் தேர்தல் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே பிளாட்ஃபார்ம் எண் பதின்மூன்றில் (2013) வந்து சேருமோ?

Madhavan Srinivasagopalan said...

நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க அதெல்லாம் கண்டுக்கப்டாது...

Madhavan Srinivasagopalan said...

தாங்கள்தான் 'ரங்கராஜன் நம்பி'யோ? (Ref. to 10th picture shown at the top here)

jaisankar jaganathan said...

பச்சை மஞ்சள் ஒரே கலரா இருக்கு