பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 12, 2012

டைம்பாஸ் - டென்ஷன் ஆகாதீங்க பாஸ்

மின்சார ரயில், பேருந்துகளில் 'டைம்பாஸ்... டைம்பாஸ்' என்று வறுத்த வேர்கடலை விற்பார்கள். சில்லரை விலை. அதில் இருக்கும் சில வேர்க்கடலை நன்றாக இருக்கும், பல சொத்தையாக இருக்கும். சாப்பிட்டு முடிக்கும் போது கடைசி வேர்க்கடலை நிச்சயம் சொத்தையாக நம் வாயைக் கெடுத்துவிடும். ஆனால் அடுத்த முறை பயணம் செய்யும் போது திரும்பவும் வாங்குவோம். வாங்காமல் இருக்க முடியாது, யாராவது பக்கத்து சீட் அல்லது எதிர் சீட் வாங்கும் போது நாமும் வாங்குவோம்.

விகடனிலிருந்து வரும் 'டைம்பாஸ்' அந்த வகை தான். ஒரே வித்தியாசம் இந்த வேர்க்கடலை எல்லாம் (பாதி) உரித்தது!.

சாவி அட்டைப்படத்தில் "அத்தைதான் உங்களுக்கு 'ஆடை'யில்லாம பால் தரச் சொன்னாங்க" ஜோக் வந்த போது, சாவியைக் கைது செய்ததையும், பத்திரிகை சுதந்திரத்தையும் பற்றியும் பேசினார்கள், கண்டித்தார்கள், ஆனால் யாரும் அந்த ஆபாசத்தை கண்டிக்கவில்லை. ஆனால் இன்று சினிமாவிலும், நம் டிவிக்களிலும் வரும் இந்த உரித்த வேர்க்கடலைகளின் ஸ்டில்களை அச்சில் பார்க்கும் போது உடனே நம் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று புலம்புவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. உடனே இது XX போன்ற ஒன்று என்று சொல்லுவது பீர் அடித்துவிட்டு நாட்டு சரக்கு என்று சொல்லுவது மாதிரி தான். டூ மச்.

ஃபேஸ்புக், டிவிட்டர் யுகத்தில் வரும் சினிமா செய்திகள், துணுக்கு, அசட்டு ஜோக், கிசுகிசு எல்லாம் அச்சில் வருகிறது. அவ்வளவு தான். பெரிய இலக்கிய பேட்டியாக இருந்தாலும், பதில் ஐந்து வரிக்கு மிகாமல் தான் இருக்க வேண்டும், இல்லை அதை யாரும் படிக்க போவதில்லை.(உதாரணம் அசோகமித்திரன் பேட்டி) அப்படியே பெரிதாக தான் எழுதுவேன் என்று அடம்பிடித்தால் சிறுபத்திரிக்கை அல்லது எழுத்தாளர்களின் வலைப்பதிவிலேயே தான் போட்டுக்கொள்ள வேண்டும்.

டைம்பாஸ் முதல் இதழில் நித்தியானந்தா, குட்டி சாமியார், சினிமா நாயகிகளின் இடுப்பு அளவு, ஷகீலா 'அரசியலுக்கு வர போகிறேன்' என்ற பேட்டி, விஜய்காந்த் பணம் தராமல் ஏமற்றப்பட்ட மதுரை ராசி ஸ்டுடியோ ஆசைத்தம்பியின் புலம்பல்....லிட்டில் ஜான் என்ற சுமார் பிளேய் பாய் ஜோக்ஸ்... என்று ஐந்து ரூபாய்க்குத் தந்திருக்கிறார்கள். இதில் எதுவும் புதுசு கிடையாது. ஹாசிப் கான் இப்படியே கேரிகேச்சர் போட்டுக்கொண்டு இருந்தால் கொஞ்ச நாளில் அலுத்துவிடும். இந்தப் பத்திரிகையின் டார்கெட் யார் என்று பார்த்தால் காலேஜ், புறநகர் பேருந்து, ரயிலில் போகும் வேர்'கடலை'க் கூட்டம்.

கடைசியாக நான் சாப்பிட்ட சாம்பிள் வேர்க்கடலை - "லிட்டில் ஜான் டாக்ஸி டிரைவராக இருந்தபோது அவனது டாக்ஸியில் ஏறிய ஒரு பெண் ஏர்போர்ட் செல்லச் சொன்னாள். கொஞ்ச தூரம் சென்றதும் "என் டாக்ஸியில் பயணிக்கும் மூன்றாவது கர்ப்பிணி நீ!" என்றான். அதிர்ச்சியடைந்த அவள், "இடியட் நான் ஒன்றும் கர்ப்பிணி இல்லை!" என்றாள். சிரித்துக் கொண்டே ஜான் சொன்னான்.. "நாம் இன்னும் ஏர்போர்ட்டே போகலையே!"

"அச்சு விபசாரம்.. இதில் வேலை செய்வதை விட பிச்சையெடுத்து பிழைக்கலாம்..." என்று ஞாநியும், " வாசகனுக்கு வேண்டுமானால் டைம் 'பாஸ்' ஆகலாம். ஆனால் வருங்கால தமிழ்ச் சமுதாயம் இன்னமும் மோசமாகி 'ஃபெயிலாகி'ப் போகும்" என்று சுரேஷ் கண்ணனும் சமூக அக்கரையுடன் எழுதியுள்ளார்கள். எதுக்கு இந்த டென்ஷன் என்று தெரியவில்லை.

கலர் பிரிண்டரும் கூகிளும் இருந்தால் பத்தே நிமிஷத்தில் இந்த மாதிரி ஒரு புத்தகத்தை நீங்களே தயாரிக்கலாம்.

ஷாம்பு, சோப்பு, மிளகாய் தூள்.. போன்றவற்றின் டப்பா விலை அதிகம் ஆன பிறகு சாஷேவில் 2ரூபாய்க்கு விற்க ஆரம்பித்தார்கள், இதுவும் அது போன்ற ஒரு ஏற்பாடு தான். டைம்பாஸ், டென்ஷன் ஆகாதீங்க பாஸ் !


10 Comments:

R. J. said...

B.Srinivasan wa aware of the reception to this 'Time pause' in advance and hence avoided using Vikatan Thatha emblem. He himself is ashamed of this, but he hopes to mint millions. Vikatan used to be trend setter once, now they ape cheap Kumudam and cheaper blog sites! - R. J.

ஸ்ரீராம். said...

ஆ நொந்த விகடன்! :))

புருஷ் said...

இணையத்தின் பின்-நவீனத்துவ/பெரியாரிய/மார்கிசிய புலியான சுகுணா திவாகர் தான் இந்த இதழுக்கு பொறுப்பாசிரியராமே?! இது தான் அவர் செய்யும் புரட்சியா? வெளங்கிரும்!!

Anonymous said...

இட்லிவடையின் அக்க"ரை" மெய்சிலிர்க்க வைக்கிறது. போங்க பாஸ் இதெல்லாம் வெறும் டைம் பாஸ்.

Anonymous said...

விகடன் குழுமத்தின் பத்திரிக்கைகள் எல்லாமே குப்பைதான்........வாசனுக்குப்பிறகு விகடன் தேசவிரோதிகளின் கைகளில் சென்றுவிட்டது........ வணிகம் , வாகனம் , மருத்துவம் இந்த வரிசையில் மஞ்சள் பத்திரிக்கைக்காக‌ '' டைம் பாஸ் '' அவ்வளவுதான்....எல்லா இடத்துலயும் நாம இருக்கனும் என்ற வியாபார வெறி.......அவ்வளவுதான்.........மற்றபடி , பத்திரிக்கையாவது , தர்மமாவது............வெங்காயம்.......

சூனிய விகடன் said...

ஈழத்தமிழர்...பிரபாகரன்.....வைக்கோ...ரஜினி - என்று ஜூனியர் விகடன் செய்யும் அக்மார்க் அவுசாரித்தனத்திற்கு முன்னால் டைம்பாஸ் செய்வதெல்லாம் ஜுஜுபி தலைவரே.

நண்பர் அனானி சொன்னது போல் அந்தக்குழுமம் இப்போது தேச விரோதிகள் கைகளில் தான் உள்ளது.

பின்குறிப்பு : நான் கடைசியாக ஜூனியர் விகடன் வாங்கியது மூன்று வருடங்களுக்கு முன்பு. பஸ்ஸில் பக்கத்துக்கு சீட்காரர் படித்துக்கொண்டிருந்தாலும் எட்டிப் பார்ப்பது கூடக்கிடையாது

சூனிய விகடன் said...

ஈழத்தமிழர்...பிரபாகரன்.....வைக்கோ...ரஜினி - என்று ஜூனியர் விகடன் செய்யும் அக்மார்க் அவுசாரித்தனத்திற்கு முன்னால் டைம்பாஸ் செய்வதெல்லாம் ஜுஜுபி தலைவரே.

நண்பர் அனானி சொன்னது போல் அந்தக்குழுமம் இப்போது தேச விரோதிகள் கைகளில் தான் உள்ளது.

பின்குறிப்பு : நான் கடைசியாக ஜூனியர் விகடன் வாங்கியது மூன்று வருடங்களுக்கு முன்பு. பஸ்ஸில் பக்கத்துக்கு சீட்காரர் படித்துக்கொண்டிருந்தாலும் எட்டிப் பார்ப்பது கூடக்கிடையாது

நான் மாயா said...

nallathai mattum etuththittu ,ketta vishayangalai namma manmohan mathiri kettum ketkadhathu mathiri irukkanum,
idlivadi yilum appadiththan

D. Chandramouli said...

Time Pass - "This too shall pass"!

Anonymous said...

திரைப்படம், பத்திரிகை ,டிவி என்று எல்லா மீடியாக்களும் வியாபாரமே.டைம் பாஸ் -அதுதான் தெளிவாக நோக்கத்தை தெரிவித்தாயிற்றே? சமூக சிந்தனையாளர்கள் ஏன் வாங்கி பார்க்க வேண்டும்?பிடித்தவர்கள் படிக்கட்டுமே?