பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 05, 2012

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு!


பேட்டி:

கேள்வி :- இன்றையதினம் கருப்பு சட்டை அணிந்து வந்திருக்கிறீர்கள். நாளையதினம் தான் போராட்டம் அறிவித்திருந்தீர்கள். பொதுவாக உங்களை வெள்ளுடை பார்த்துதான் எங்களுக்குப் பழக்கம். இன்றைக்கே கருப்பு சட்டை அணிந்திருப்பதற்கு ஏதாவது முக்கிய காரணம் உண்டா?

பதில் :- தமிடிநநாட்டிற்கு சில மாதங்களாக ஏற்பட்டிருக்கின்ற இழிவை எடுத்துக்காட்டவும், அந்த இழிவைப் போக்குவதற்கு எடுக்கின்ற முயற்சிகளுக்கு கருப்புச் சட்டங்களைக் கொண்டு இன்றைய ஆட்சியாளர்கள் அதை அடக்க முனைவதைக் கண்டிப்பதற்கு இந்தக் கருப்புச் சட்டையை இன்றைக்கே அணிந்திருக்கிறேன். நாளை தான் கழகத்தின் தொண்டர்கள், தோழர்கள், உடன்பிறப்புகள் அனைவரும் அணிய வேண்டும் என்றுதான் முடிவெடுத்தோம். 

கேள்வி :- திராவிட இயக்கப் போராட்டங்களில் கருப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பைத் தெரிவிப்பது என்பது நீண்ட காலமாக தொடர்ந்து வந்த ஒரு மரபு. இதற்கு முன்பு எப்போது கருப்புச் சட்டை போராட்டம் நடைபெற்றது?

பதில் :- கருப்புச் சட்டை அணிவதையே பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தில் நாங்கள் எல்லாம் இருந்த போதே அறிமுகப்படுத்தி, 'கருப்புச் சட்டை படை' என்று ஒன்றை உருவாக்கினார். அந்தக் கருப்புச் சட்டைப் படையில் அப்பொழுதே படைவீரர்களில் ஒருவனாகச் சேர்ந்தவன் நான். அதன் முதல் வரிசையிலே கருப்புச் சட்டை தொண்டனாக நான் இடம் பெற்றிருக்கிறேன். அப்போது அந்தக் கருப்புச் சட்டை படைக்கு செயலாளர்களாக இருந்தவர்களில் ஒருவர் மறைந்த நண்பர் ஈ.வி.கே. சம்பத் அவர்கள் ஆவார்கள். சம்பத்தும், நானும் குடியரசு அலுவலகத்திலே இருந்த போது, அவர் முன்னிலையிலே நான் கையெழுத்திட்டு - இருவரும் கை குலுக்கிக் கொண்டு - இந்தப் படையில் நான் அன்றைக்குச் சேர்ந்திருக்கிறேன்.

பேச்சு:

 மணிச்சுடர் பத்திரிகையின் 25வது  ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது.  திமுக  தலைவர் கலைஞர் இவ்விழாவில் பங்கேற்றுப்  பேசினார். அப்போது அவர்,  ‘’பெரியார் எடுத்துக்கொடுத்த கருப்புச் சட்டைக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது.  தமிழகத்தின் இழிவு நீங்கும் வரை கருப்புச்சட்டையை கழற்ற மாட்டேன்.  மதவாதத்திற்கு திமுக என்றும் துணை  போகாது’’ என்று ஆவேசமாக பேசினார்.

கேள்வி:
ஏன் கருப்பு சட்டைக்கு வெள்ளை துண்டு ? ஏன் அதுவும் கருப்பாகவோ மஞ்சளாகவோ இல்லை ? ஏதாவது ஜோசிய காரணம் இருக்கா ? 

நன்மை:
இனிமேல் தமிழ்நாட்டு அம்மாக்கள் பசங்களுக்கு சுலபமாக உணவு ஊட்டலாம் !
 

சில வருஷம் முன்பு பச்சை கலர் புரளி ஒன்னு இருந்தது....அதாவது அண்ணன் தங்கைகளுக்கு பச்சை கலரில் புடவை வாங்கிக் கொடுக்கணும்னு.....அது தான் ஞாபகம் வருது...

11 Comments:

ConverZ stupidity said...

back to square one

Anonymous said...

//மதவாதத்திற்கு திமுக என்றும் துணை போகாது

அப்பா ஒரு நிம்மதி...

dr_senthil said...

Simple, Jupiter dasha over and Shani dasha started.. yellow to black.

dr_senthil said...

Jupiter Dasha over and now Shani Dasha started.. so yellow to black.. Pagutharivu pagalavan allava!!

Anonymous said...

He is beyond any josiyam and stuff now. Thalaikku mele vellam types. During his regime, all the people and things should have painted black. That much is his corruption.

சான்றோன் said...

இந்த மணிச்சுடர் விழாவை டி.வி.யில் பார்த்தேன் .........அது ஒரு இஸ்லாமியப்பத்திரிக்கை.......அந்த விழாவில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள்.....அந்த விழாவில் கருணாநிதி சொல்கிறார் ''மத வாதத்தை அனுமதிக்க மாட்டேன் என்று "...அதாவது ஹிந்து மதவாதம் மட்டும் ஆகாது.....மற்ற மதவாதம் ஓ.கே....[ கிறித்தவர்கள் கூட்டத்தில் ''ஹிந்து என்றால் திருடன் '' என்று சொன்னவர்தானே இவர்?]

இந்த பித்த‌லாட்ட பேர்வழிகளுக்கு மீண்டும் மீண்டும் ஒட்டுப்போடும் நம்மை சொல்லவேண்டும்.......

Suresh V Raghav said...

Bayangara nakkal...
Than commenting to the gesture of kalignar and the reason for it, i like the punch you narrated about the mother feeding its child ... Poochandiiiiiiiii

சிந்திப்பவன் said...

இதுக்கு மேலும் நாம இதுகளுக்கு ஒட்டு போட்டால்,நமக்கு கருப்பு பெயின்ட் தான் அடிச்சுக்கணும்..

Anonymous said...

//தமிழகத்தின் இழிவு நீங்கும் வரை கருப்புச்சட்டையை கழற்ற மாட்டேன்.//
தமிழகத்தின் இழிவே கோடி கோடியாக ஊழல செய்த தி மு க தானே!

nellai அண்ணாச்சி said...

ஆஹா இப்பத்தான் தலைவர் அவருடைய மனசுக்கு மேட்ச்சா டிரஸ் போட்டு இருக்காரு

Raj said...

Why idlyvadai is not talking anything about ADMK,,,Defamation case...Payama????