பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 31, 2012

புயல் பெயர் கதை


புயலுக்கு யார் பெயர் சூட்டிகிறார்கள் என்று தேடியதில் கிடைத்த விஷயம் இது. புயலுக்கு 1945 ஆம் ஆண்டு முதல் பெயர் சூட்ட ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு பிராந்தியத்திற்கேற்ப அந்தந்தப் பகுதிகளில் உள்ள நாடுகள் இணைந்து இந்த பெயர்களைச் சூட்டி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து, மியான்மர், ஓமன், ஆகிய நாடுகள் இணைந்து பெயர்களை முடிவு செய்கின்றன. இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றாக சூட்டப்பட்டு வருகின்றன.

கடைசியாக முர்ஜான் என்று ஓமன் நாடு பெயர் வைத்தது. இந்த முறை பாகிஸ்தான். அடுத்து இலங்கை மகாசேன் என்று பெயர் சூட்டியிருக்கிறது (அது எப்போது வரும் என்று தெரியாது )

புயல்கள் பேரழிவை ஏற்படுத்துபவை. இந்த நிலையில், அவற்றுக்கு சூட்டுகிற சில பெயர்கள் குறிப்பிட்ட சாதி, மதம் கொண்ட மக்களின் உணர்வுகளை காயப்படுத்தக்கூடும் என்பதால் பொதுவாக புயலுக்கு பெயர் சூட்டுவதை தவிர்த்து வந்திருக்கிறோம் என்கிறார் இந்திய வானிலை ஆராய்ச்சி அதிகாரி.

பொதுமக்கள் இப்படி புயலுக்கு பெயரை சூட்ட விரும்பினால், அது குறித்து டெல்லியில் உள்ள வட்டார புயல் எச்சரிக்கை மைய இயக்குனருக்கு அனுப்பி வைக்கலாம் என்கிறார் சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் எஸ்.ஆர்.ரமணன்.

என்ன என்ன பெயர் சூட்டலாம் ?

25 வருடம் கழித்து வருவது என்றால் கமல்-முக்தா என்று வைக்கலாம்.
நேற்று வந்து இன்று கரையை கடக்கும் புயலுக்கு அருணகிரி-நித்தி என்று பெயர் சூட்டலாம்.


உங்களுக்கு தெரிந்த புயல் பெயர்களை கீழே பின்னூட்டத்தில் கொடுக்கலாம் !

8 Comments:

kothandapani said...

ஐந்தாண்டுக்கு ஒரு முறை தமிழகத்தை தாக்கும் புயலுக்கு DMK or ADMK என்று பெயர் வைக்கலாம்

kothandapani said...

தமிழகத்தை தா க்க வேண்டிய நேரத்தில், டெல்லியை தாக்கும் புயலுக்கு என்ன பெயர் வைக்கலாம்............இட்லி வடை

kothandapani said...

இந்த புயல் 'அடித்தால்' தமிழகமே அமோகமா இருக்கும்............. கேப்டன் .

dr_senthil said...

மரபுப்படி பெண்களின் பெயர்தானே வைக்கவேண்டும் - எதாவது சினிமா கதாநாயகி பெயர் வைக்கலாம்- அனுஷ்கா!!!

shamimanvar said...

யாரைச் சுழன்றடிக்கப்போகிறதோ என்று ஊழல்வாதிகளிடையே பீதியை உருவாக்கி அடிக்கடி உருவாகும் புயல் கேஜ்ரிவால்

balhanuman said...

தமிழகத்தைப் பங்கு போட்டுக் கொள்ளத் துடிக்கும் புயலுக்கு அஞ்சா-நெஞ்சன் - தளபதி என்று பெயர் வைக்கலாம்...

சூனிய விகடன் said...

( 1 ) ஒரு ஊரில் மட்டும் இடிச்சத்தம் நல்லாக் கொடுத்திட்டு, பக்கத்திலிருக்கும் பெரிய ஊரை ஒன்னும் பண்ணாமல் போய் சாதுவாக இருந்த இடம் தெரியாமல் அடங்கிவிடும் புயலுக்கு "கைவைப் புயல் " என்று பெயர் வைக்கலாம்

( 2 ) பெரும்புயல்....கோரத்தாண்டவம் ஆடப்போகும் புயல் ...பேயாட்டம் ஆடப்போகும் புயல் என்றெல்லாம் பீதியக் கெளப்பிட்டு பின்னர் வெறும் தென்னை மர உச்சிய மட்டும் ஆட்டிவிட்டுப் போகும் புயலுக்கு " ஆனந்தசூரிய மாற்றான் புயல் " என்று பெயர் வைத்துப் பெருமூச்சு விடலாம்

(3 ) உருவாகி ரொம்பநாள் கழித்து கெழடு தட்டிப்போய் சாவகாசமாக வந்து நாலு துளி மட்டும் மழை பெய்து வைக்கும் சவ சவ புயலுக்கு "தாண்டவப் புயல் என்கிற லண்டன் புயல் " என்று பெயர் வைக்கலாம்

(4 ) அடுத்த வருஷம் ஜூலை மாதம் முதல் இருபத்து நாலு மணி நேரமும் புயல் என்று ரொம்ப அட்வான்சாகக் கண்டுபிடிக்கக் கூடிய புயலுக்கு " எலெக்ட்ரிசிடியா புயல் " என்று பெயர் வைக்கலாம்

(5 ) வருஷம் முன்னூத்தி அறுபத்தஞ்சு நாளில் முன்னூறு நாள் காதில் சப்ளாக்கட்டை இடி இடித்து படிக்க விடாமல், தூங்க விடாமல், பேச விடாமல் பண்ணும் நூறு டெசிபல் சத்தப் புயலுக்கு " ரசிக்கும் சீமானேப் புயல் " என்று பெயர் வைக்கலாம்



Kalyanaraman S said...

கரையை கடக்கும்முன் வலுவிழந்த புயல் - "கலைஞர்"
எங்கே அடிக்கும், எப்போது அடிக்கும் என யாருக்கும் தெரியாத புயல் - "அம்மா"
உள்நாட்டிலே உருவாகி, சென்னையை நோக்கி வரத்துடிக்கும் (ஆனால் டெல்லியை நெருங்காத புயல்) - "அழகிரி"
கடலோரத்தில் உருவானாலும், மதுரையை தாக்கும் புயல் - "ஸ்டாலின்"
கரையை கடந்து, மரங்களை சாய்த்து, ஆனால் தோட்டத்தினை மட்டும் விட்டுவைக்கும் புயல் - "(மருத்துவர்) அய்யா"
அய்யா புயலின் விளைவாக வரும் குட்டிப்புயல் - "சின்ன அய்யா"
திடீரென்று திசை மாறும் புயல்கள் - "MLAக்கள்"
எல்லா அரசியல்வாதிகளும் பயப்படும் புயல் - "தேர்தல்"