பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 30, 2012

எச்சரிக்கை - வங்க கடலில் புயல் அபாயம்

கேள்வி:- “நக்கீரன்” வார இதழிலேயே “யாருக்கு யார் எதிரி” என்ற தலைப்பில்தங்கள் துணைவியாரைப் பற்றியும், மகளைப் பற்றியும், மகன்களைப் பற்றியும் பரபரப்பு காட்சிகள் என்றெல்லாம் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்களே?

கருணாநிதி:- தம்பிகள் டி.ஆர். பாலு, பழனி மாணிக்கம் இருவருக்கும் இடையேஉருவான பிரச்சினையில் நான் உடனடியாக எழுதிய “உடன்பிறப்பு” கடிதத்திற்குப் பிறகு இருவருமே அமைதியாகி விட்டார்கள். பிரச்சினையும் முடிந்துவிட்டது. ஆனால் “நக்கீரன்” போன்ற பத்திரிகைகள் நம்முடைய இயக்கத் தலைவர் களின்பால் பரிவு கொண்ட ஏடுகள் என்று வெளியிலே சொல்லிக் கொண்டாலும், உள்ளூர அவர்களுக்கு இருக்கின்ற உணர் வினை வெளிக்காட்டிச் செய்தி வெளியிட்டிருக் கிறார்கள். இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், இந்தப் பிரச்சினை பேசப்பட்ட போது, இதில் துளியும் சம்மந்தம் இல்லாத என் துணைவியார் ராஜாத்தி அம்மையார் பற்றியும், என் மகள் கனிமொழியைப் பற்றியும் எழுதியிருப்பது வேதனை அளிக்கக் கூடியது. என் செய்வது? இருவரும் பார்ப்பன சாதியிலே பிறந்த பெண்களாக இருந்திருந்தால், தங்கள் மீது முன்போலப் பயங்கர வழக்குகள் பாயுமே என்ற பயம் இருந்திருக்கும். ராஜாத்தி அம்மாளும், கனிமொழியும், நானும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே; அதனால் எதையும் எழுதலாம் என்ற நெஞ்சுரமும் மனப்பான்மையும் “நக்கீரன்” போன்ற ஏடுகளுக்கு ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை. வாழ்க; தமிழ்ச் சமுதாயம்! வாழ்க, வாழ்கவே!

நன்றி: தினமணி

வங்க கடலில் மையம் கொண்டிருக்கும் புயல் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில், பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் புயல் உண்டாக கூடும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

9 Comments:

Anonymous said...

Off late, the yellow comment is getting more and more stupid.

Anonymous said...

//“நக்கீரன்” போன்ற பத்திரிகைகள் நம்முடைய இயக்கத் தலைவர் களின்பால் பரிவு கொண்ட ஏடுகள் ..//

//அவர்களுக்கு இருக்கின்ற உணர் வினை வெளிக்காட்டிச் செய்தி வெளியிட்டிருக் கிறார்கள்.//

//இருவரும் பார்ப்பன சாதியிலே பிறந்த பெண்களாக இருந்திருந்தால், தங்கள் மீது முன்போலப் பயங்கர வழக்குகள் பாயுமே என்ற பயம் //

//ராஜாத்தி அம்மாளும், கனிமொழியும், நானும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். //

என்னதான் சொல்ல வராரு இவுரு!

எப்படியாவது சமுதாய பிரச்னை எதையாவது கிளப்பி விட்டு அதுல குளிர் காய நினைக்குறாரு தாத்தா.

Anonymous said...

..Off late, the yellow comment is getting more and more stupid.//

when one says what is obvious it is also stupid.

Anonymous said...

Yellow comment is not interesting & very monotonous...

Anonymous said...

http://subadhraspeaks.blogspot.com/2012/10/blog-post_640.html

கஷ்டமான சூழ்நிலைகளில் , கலைஞர் இதுமாதிரி கவிதைகளைப் படித்து மன அமைதி அடையலாம்.

வாழ்க தமிழ்!!

சிந்திப்பவன் said...

நக்கீரன் கோபாலிடம் "நாயகன்" பேரன் கேட்கிறான்:
மாமா,நீங்க உயர்ந்த ஜாதியா,தாழ்ந்த ஜாதியா?
ந.கோ (கண்ணீர் சிந்தியபடி):
தெரியலயேப்பா! தெரியலே!!

dr_senthil said...

பிறப்பில் உயர்வுதாழ்வு இல்லை நடத்தையில்,எண்ணத்தில் தான் உள்ளது

Surya said...

தினமலரில் இன்றைய செய்தி: அமெரிக்காவில் வீசிய "சாண்டி' புயல் காரணமாக, நேற்று முன்தினம், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், எம்.பி.,க்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரின் அமெரிக்கா பயணம், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. "டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தி.மு.க., தலைவர் கருணாநிதி சார்பில், நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., சபையில் அளிப்பதற்கு, நேற்று முன்தினம் நள்ளிரவில், அமெரிக்காவிற்கு ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியை, "சாண்டி' புயல் தாக்கியதால், நியூயார்க் நகரில் வெள்ளம் சூழ்ந்தது. ரயில், பஸ், விமான போக்குரவத்து, அங்கு நிறுத்தப்பட்டது. சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லும் விமானச் சேவை ரத்தானதால், ஸ்டாலின், டி.ஆர்.பாலுவின் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை படித்ததும் முத்தமிழ் வித்தகர் நாளை எப்படி அறிக்கை விடுவார் என்று ஒரு சிறிய கற்பனை!

“சாண்டி” போன்ற புயல்கள் நம்முடைய இயக்கத் தலைவர் களின்பால் பரிவு கொண்ட புயல்கள் என்று வெளியிலே சொல்லிக் கொண்டாலும், உள்ளூர இந்தப் புயல்களுக்கு இருக்கின்ற உணர் வினை வெளிக்காட்டி விட்டனர். இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், தம்பி ஸ்டாலினின் இந்தப் பயணத்தால் நன்மை அடையப் போவது இலங்கைத் தமிழ்ச் சமுதாயம்தானே...இந்தக் கருணாநிதியோ அல்லது என் குடும்ப உறுப்பினர்களோ அல்ல! கருணாநிதிக்கு இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைத்த நல்ல பெயர் கிடைக்கக் கூடாதென்ற நல்ல எண்ணத்தோடு சிலிக்கான் வேலிப் பார்ப்பனர்கள் சேர்ந்து செய்த சதி இது என்பதை எல்லோரும் அறிந்திருந்தாலும் இலங்கைப் பிரச்சினை தீர்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பைத் தவற விட்டது நம் மனத்துக்கு வேதனை அளிக்கக் கூடியது. என் செய்வது? நானோ அல்லது என் மனைவியாரோ அல்லது துணைவியாரோ பார்ப்பன சாதியிலே பிறந்தவர்களாக இருந்திருந்தால், இந்த சாண்டிப் புயல் நியூ யார்க்கைத் தாக்காமலிருந்திறுக்கும். தம்பி ஸ்டாலினின் அமெரிக்கப் பயணமும் வெற்றி கரமாக நடந்திருக்கும்.ராஜாத்தி அம்மாளும், தயாளு அம்மாளும், நானும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே; அதனால் நாட்டுக்குப் பெரும் சேதம் விளைந்தாலும் பாதகமில்லை என்ற பெரிய மனத்தோடு பெருஞ்சதி புரிந்திட்ட சிலிக்கான் வேலிப் பார்ப்பனர்களது இன உணர்வைப் புரிந்து கொள்வாய் உடன்பிறப்பே! வாழ்க; தமிழ்ச் சமுதாயம்! வாழ்க, வாழ்கவே!