பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 27, 2012

ஏர்டெல் சூப்பர் சிங்கர் யார் ?

கட்சி-1: நல்ல சங்கீதம் தெரிந்தவர்கள் ஓரம்கட்டபட்டு உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ஓட்டு மூலம் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற பட்டத்தை எஸ்.எம்.எஸ் மூலம் தேர்ந்தெடுப்பது எப்படி நியாயமாகும்? ரஜினி மாதிரி ஸ்டைல் பண்ணும் ஒருவரை தேர்ந்தெடுப்பதும், கமல் மாதிரி நல்ல கலைஞர்களை ஓரம்கட்டுவதும் சரியா ?

கட்சி-2: ஆஜித் கமல் மாதிரி ஒரு பிறவி கலைஞன், அவனுக்கு சங்கீத பின்புலம் எதுவும் இல்லை, ஆனால் வெளுத்து வாங்குகிறான். முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டால் அவன் இருக்க வேண்டிய இடமே வேற.

நான் இதை எல்லாம் டிவியில் ஒருநாளும் பார்த்து அழுகாத கட்சி. நீங்கள் எந்த கட்சி?

15 Comments:

Anonymous said...

சாய் சரண், கிருஷ்ண மூர்த்தி போன்ற பிராமணர்கள் ஜெயித்தால் கேட்க மாட்டீங்க. ஆஜித் ஜெயித்தால் கேட்பீங்க அதுவும் நான் பார்ப்பதே இல்லை என்கிற பொய்யோடு . பார்க்கா விடில் மற்றவர்கள் பேசியதை எப்படி சரியே உள் வாங்கி அதை மேலே இரண்டு பக்க கருத்து என போட முடிந்தது ?

நீங்கள் சூப்பர் சிங்கர் பார்ப்பதில்லை என்பது பொய். அடுத்து நீங்கள் அரை குறை விஷய அறிவோடு உங்களுக்கு புரியாத விஷயத்திலும் கருத்து சொல்ல கிளம்பிடுவேள் ...

நன்னாருக்கன்னா பிராமணாள் ஜெயிக்கலை என நீங்க அழுது புலம்பும் அரசியல். இது விஜய் டிவி பண்ற அரசியலை விட அசிங்கமான்னா இருக்கு !

- Ramesh.

sury Siva said...



இரண்டு கட்சிகளுமே நியாயம் தான்.

இலக்கணத்துக்கு உட்பட்ட இசை குரல் வளம் கூடியது ஒரு பக்கம்.
எது மனதை ஈர்க்கிரதோ அதுவே இசை. இது மறு பக்கம்.
சுஹாசினி சிந்து பைரவியில் சொல்லும் நியாயம்.



இருந்தாலும் ஒரே ஒரு பாயின்ட் மட்டும் தான் சொல்ல ஆசை.
இந்த களத்திலே மக்கள் ஓட்டு மூலம் தான் ஜெயிக்கவேண்டும் என்றால்,
அதை இந்தப் போட்டியின் துவக்கத்திலிருந்தே ஒவ்வொரு கட்டத்திலும் கொண்டு
வந்திருக்கலாம்.

இசைக் கலைஞர்களைத் தவிர்த்திருக்கலாம்.
பாவம் அவர்கள் !! ஒவ்வொரு கட்டத்திலும் இந்த பல்லவி எடுப்பிலே
அங்கன காந்தாரம் நொடிக்குது. சரணத்திலே இந்த சட்ஜமம் சரியில்லே என்னு
சொல்லிட்டு இருந்தாங்க....

அஜீத்தும் ப்யூரிடன் ஜட்ஜஸ் முடிவுகளால், வெளியே போய்விட்டு
வைல்டு கார்டு மூலமாகத் தான் திரும்ப வந்தார் என்பதை
நினைவில் வைத்துக்கொண்டால் ,
அவருக்கு திரும்பவும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்
என முடிவின் பின்னணியில் பார்த்தால்,

இசை என்பது மக்களை எது அசைக்கிறதோ அதுவே
எனத்தெளிவாகப் புரிகிறது.

அஜித் ஒரு மேதை.
அதை அறிய முடியவில்லை எனின் இசை உலகில் நாம் ஒரு
ஆமை.


இது போன்ற மேதைகள் இசைத் துறையில் மட்டுமல்ல,
எல்லாத்துறைகளிலுமே இருக்கிறார்கள்.

சுகன்யா ! என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
முதல் இடத்தில் இருந்தீர்கள் . வல்லுனர்கள் கணிப்பில்.
நான்காவது இடத்திற்கு வந்தது
மனசு கொஞ்சம் கனக்கத்தான் செய்கிறது.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.

kothandapani said...

நடந்தது சூபர் சிங்கர் போட்டி...வென்றது ஆஜித்...... இதில் ரஜினி கமலுக்கு என்ன வேலை . அவர்கள் இருவரையும் மூட்டிவிடும் கோயபல்ஸ் வேலை ஏன்.

Hari said...

Nan parthu alugum katchi. My point of view "This is not a carnatic music competition like A.V.Ramanan's Sapatha Swarangal. This is a general music competition with a opportunity to sing in Cinema. To sing in Cinema, your voice and style of singing has to be liked my majority of public. No need of excellent Music knowledge or carnatic background. Carnatic is just an added advantage in this case." The channels moved away from proper carnatic progrmms just because, the TRP rating is low as it is not applying to general public.

Note : I know, listen and love carnatic. It's just a opinion

Hari said...

Nan parthu alugum katchi. My point of view "This is not a carnatic music competition like A.V.Ramanan's Sapatha Swarangal. This is a general music competition with a opportunity to sing in Cinema. To sing in Cinema, your voice and style of singing has to be liked my majority of public. No need of excellent Music knowledge or carnatic background. Carnatic is just an added advantage in this case." The channels moved away from proper carnatic progrmms just because, the TRP rating is low as it is not applying to general public.

Note : I know, listen and love carnatic. It's just a opinion

கீதா லட்சுமி said...

I am in Katchi Number 2 :)

kg gouthaman said...

அழுவதாக இருந்தால், விஜய் டி விக்கு சொல்லி அனுப்புங்கள். அவர்களின் கேமரா முன்பு அழுதால் - அதைப் படம் எடுத்து, அதை ஒரு நாள் முழுவதும் காட்டி கான்பவர்களை உருக்கி விடுவார்கள். நிற்க, நேற்றைய இரவு நிகழ்ச்சியில் பாடிய பழைய சூப்பர் சிங்கர்கள் - உருக்கமாகப் பாடினார்கள்.

ஸ்ரீராம். said...

//நான் இதை எல்லாம் டிவியில் ஒருநாளும் பார்த்து அழுகாத கட்சி. நீங்கள் எந்த கட்சி?//

இதையெல்லாம் படித்து விட்டுக் கமென்ட் சொல்லாத கட்சி!

சுடர்விழி said...

நானும் உங்க கட்சிதானுங்க!

---
www.sudarvizhi.com

Tamil nesan said...

இந்த நிகழ்ச்சி பார்க்கின்ற ரசிகர்கள் அத்தனைப்பேரும் கர்நாடக இசைமேதைகள் என்றா நினைக்கின்றீர்கள். பாடுவது சிறிய குழந்தைகள். பார்ப்போம் ரசிப்போம். எதற்கு வீண்ஆராய்ச்சிகள் எல்லாம். நிகழ்ச்சியில் பங்குபெற்ற குடும்பங்களுக்கே இல்லாத கவலை நமக்கெதற்காக. அஜித்திற்கு பரிசு கொடுத்த இசைப்புயல் கூறிய வார்த்தைகள் முக்கியமானவை. முறைப்படி சங்கீதம் கற்கவில்லையென்றாலும் பாடும்போது பார்ப்பவர்களை ரசிக்கவைக்கிற திறமை அஜித்திற்கு நிறையவே இருக்கிறது.யூடியூப் விஜய்டிவி தளத்தில் அஜித்தின் அனைத்து பெர்ஃபாமன்ஸ்சும் இருக்கிறது. விரும்புகிறவர்கள் பார்த்துரசிக்கலாம்.

Sh... said...

I agree with Sury Siva - public should have taken part in the elimination process in every round. However, that is impossible because no one will spend for SMS for each round. I think Aajeedh was purposely eliminated considering his come back through wildcard so airtel can make good money through voting. He was shown the way out for forgetting lyrics but he won the title even when he forgot the lyrics in his final performance - it appears absurd to me. I am a lover of good music and I can not think Aajeedh could outperform Pragathi. And same with Sukanya - She is certainly a better singer than Yazhini.

Sh... said...

Well said K G Gouthaman

ராமகிருஷ்ணன் said...

பிரகதியின் தாயார் ஒவ்வொரு எபிசோடுகளிலும் காட்டிய மகிழ்ச்சி வெளிப்பாடும், துள்ளலும், முக அழகும், பாவனைகளும் மற்ற பேரன்ட்ஸ்கலைக்காட்டிலும் சற்று அதிகம்தான். அதை ஓவர் ஆக்டிங், அலட்டல் , ஆபாசம் என கருதிவிடக்கூடாது. இது அவாளுக்கே உரிய சிறப்பம்சம்கள் என்பதால் விட்டுவிடலாம். ஜீன்ஸ் பேண்ட்டும்- டி சர்ட்டும் போடுவது தவறில்லை என்றாலும் பொது நிகழ்ச்சி எனும் போது எளிமையை கடைபிடித்திருந்தால் தன்னடக்கமாயிருந்திருக்கும். பிரகதி மட்டும் வெற்றி பெற்றிருந்துருப்பாறேயானால் தமிழ் கூறும் நல்லுலகிற்கு சில காண கிடைக்காத காட்சிகள் கிட்டியிருந்திருக்குமென நினைக்கிறேன்.

கிழவிகள் கூட ஷாப்பிங் மாலில் ஆடி களித்தது இந்தியா எவ்வளவு சுபிட்சமாக உள்ளது என்பதை உலகுக்கு உணர்த்துவதாக இருந்தது. அதிலும் ஒரு பாடலுக்கு கெஸ்ட்டாக பாடவந்தவர் பாடும்போது கையை முன்பக்கமும் பின் பக்கமும் இழுத்து இழுத்து தேய்த்து ஆடி பாடியது, அவரை போலவே செய்ய சொல்லி பப்ளிக்கையும் ஆட்டுவித்தது இந்த டீகேடின் அழகோ அழகு. வாழ்க இசை விஜய் டிவி.

crazypaja said...

இந்த குட்டிப்பையன் ஆஜீத் பாடிய 'போ நீ போ' பாட்டை You Tube-இல் பார்த்தேன். He deserves the title...No doubt !

C.Kumar said...

ஆஜீத் டாப் 30 வந்த அந்த நிமிடமே அவனது இறுதி வெற்றி உறுதி செய்யபட்டுவிட்டது. நடக்க வேண்டியதெல்லாம், ஆஜீத் எப்பொழுது இடையில் நீக்கபட்டாலும், Wild cardல் வர வேண்டியது மற்றும் அதன் மூலம் Wild cardலும் அதன் மூலம் இறுதி போட்டியிலும் அவன் வெற்றி உறுதி செய்யபட வேண்டியது தான். அன்றைய இறுதி போட்டியில் ஆஜீத் உடன் யார் பாடியிருந்தாலும், எடுத்துக்காட்டுக்கு, பி.சுசீலா, வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன், L.R.ஈஸ்வரி இந்த நாலு பேரும் (மற்ற நாலு போட்டியாளர்களுக்கு உருவகமாக), ஆஜீத்தான் வெற்றி பெற்றிருப்பான். இதன் பின்னணியில் பலரின் மனம் கவர்ந்தவனாக அவன் இருந்ததும், சிலர் கூறுவது போல், இரண்டு முக்கியமான போட்டியாளர்கள் தமிழர்களில் சேர்த்தி இல்லை என்பது போன்ற எண்ணத்துடன் இருந்ததும் காரணமாக இருந்திருக்கும். (வெளிப்படையாக சொல்லாதது அந்த இருவரின் சாதியை). வேற்று மாநிலத்தை சேர்தந்தவர் என்பது காரணமெனில், தன் எஞ்சிய வாழ்நாளில் அவர்கள் பின் வருபவர்களின் பாடல்களை கேட்காமல் இருக்க வேண்டும். S.P.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, S.ஜானகி, K.J.ஜேசுதாஸ், P.B.ஸ்ரீனிவாஸ், K.S.சித்ரா, ஸ்வர்ணலதா, ஹரிஹரன், சங்கர் மகாதேவன். (இறுதியில் இருக்கும் இருவரும் தமிழகத்தில் பிறக்காத காரணத்தினால் தமிழர்கள் இல்லை, சுகன்யா போல்). தமிழே தெரியாமல் பாடி வெகு தூரம் இந்த போட்டியில் வந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். ஜெயந், செபி, ஷண்முகப்ரியா போன்றவர்கள். அல்கா தமிழ் பேச தெரியாமலே வெற்றியும் பெற்றார். ஆனால் அவரின் திறமையை ஒருவரும் குறைத்துகூறக்கூடாது. இங்குள்ளவர்களுக்கு கூட சிலருக்கு ‘ழ’ சரியாக வராது. ஆனால் அமெரிக்காவில் வளர்ந்தும் இங்குள்ளவர்களை போல் கர்நாடக, ஹிந்துஸ்தானி சங்கீதங்களை கற்ற பிரகதியின் திறமையை வெளிப்படையாக பாராட்டாவிட்டாலும் அவரை பல்வேறு சொத்தை காரணத்தை சொல்லி சிறுமை படுத்த வேண்டாம். ஒரு பாட்டு போட்டி என்றால் எல்லாவிதமான பாடல்களையும் பாட வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒன்றும் தவறில்லை. பின் வரும் பாடல்களில் ஒன்றைக்கூட ஆஜீத் பாடவில்லை என்பது இசையறிந்த அனைவரும் அறிவர். சங்கீத ஜாதி முல்லை, ஒரு நாள் போதுமா, பாட்டும் நானே, இசை தமிழ் நீ செய்த, நீயே உனக்கு என்றும், சொல்லடி அபிராமி, உதயா உதயா, செந்தமிழ் தேன் மொழியாள், சின்னஞ்சிரிய வண்ண பறவை. ஆஜீத்-தான் பாடியவர்களிலேயே அனைத்து வகையிலும் சிறந்தவன் என்று இசையை தெய்வமாக கருதுபவர்கள் அந்த தெய்வத்தின் மீது சாட்சியாக கூறட்டும். அடுத்த பகுதிகளில் விஜய் டிவி சித்ரா போன்ற மேதைகளின் நேரத்தை வீணடித்து இந்த சங்கதி சரியில்லை அந்த சங்கதி சரியில்லை என்று அவரை கூறவைக்காமல் பசங்களை அவர்கள் இஷ்டத்துக்கு கத்த விடுங்கள்!! மேலே ஒருவர் கூறுகிறார் பிராமணர்கள் வெல்லாததால் பலர் குறை கூறுவதாக. ஆனால் இவர் போன்ற பலர் பேசுவதை கேட்கும் போது ஒரு சந்தேகம் வருகிறது. எப்பொழுதெல்லாம் பிராமணரல்லாதோர் இறுதிபோட்டிக்கு வருகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களே வெற்றிபெறவைக்கபடுகிறார்களோ என்று.