பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 22, 2012

இட்லிவடையும் நானும் - ஸ்ரீராம்

எத்தனை புது 'ஐட்டங்'கள் வந்தாலும் அப்புறமும் மனம் நாடுவது.

அதாவது இட்லிவடையில் இன்று எதுகுறித்து பதிவு வந்திருக்கிறது என்று பார்க்காமல் விடுவதில்லை! ஹோட்டலில் 'நான்', மலேஷியன் பரோட்டா என்று வெட்டினாலும் சம்பிரதாயமாக ரெண்டு இட்லி ஒரு வடையில் தொடங்குவது போல!

இட்லிவடைக்குத் தொட்டுக் கொள்ள எத்தனையோ ஐட்டங்கள்... சினிமா முதல் இலக்கியம் வரை. எல்லாமே ஒவ்வொரு சுவை.

ஸ்பெஷல்கள் மூன்று!

-நிறைய பேருக்கு ப்ளாக் தொடங்க முன்னுதாரணம். 'எங்களு'க்கும் இன்ஸ்பிரேஷன்!

-இதுவரை முகம் காட்டாத சுவாரஸ்யத்தைத் தொடர்வது ஸ்பெஷல்!

-வாசகர்களின் படைப்புகளை வெளியிட்டு சிறப்பிப்பதிலும் முன்னோடி.


பிடித்தது...

பயமில்லாத அல்லது தயக்கமில்லாத விமர்சனங்கள்...

மனம் நோகாத நகைச்சுவைகள்..

பதிவுகள் சுருங்கச் சொல்லி நிறைய விளங்க வைப்பது..


நீண்ட நாள் கேள்வி...

-ஏன் இட்லிவடை யார் பதிவிலும் பின்னூட்டமிடுவதில்லை?!
பதில்: திண்டுகல் தனபாலனிடம் டியூஷன் எடுத்திவிட்டு வருகிறேன்
-மற்ற தளங்களைப் படிப்பதுண்டா?
பதில்: உண்டு
-'எங்கள்' பற்றி என்ன அபிப்ராயம்?
பதில்: லிங்க் கொடுங்க படித்துவிட்டு சொல்லுகிறேன் :-)


சந்தோஷம்..

என்னுடைய கேள்வி ஒன்றுக்கு இட்லிவடை பதிலளித்திருப்பது!


ஆர்வம்..1

மண்டே மர்மங்கள், சண்டேன்னா ரெண்டு, மை டியர் பாடி கார்ட் முனீஸ்வரன், போன்ற பதிவுகள் தொடருமா என்று..

ஆர்வம் 2

கதைகள் இட்லிவடையில் போட மாட்டீர்களா?

முதலிரவு கதை படித்திருப்பீர்கள். அது சரி இப்ப கதை யார் எழுதுகிறார்கள் ?


கவிபாடு..

இட்லிவடை..
எத்தனை ஈடு?
சமீபத்தில் இல்லை சூடு..
ஆனாலும் இன்னும்
இதற்கில்லை
ஈடு!
கேட்கலாம் எல்லோரும் சேர்ந்து
பழைய மாதிரி பதிவுகள் போடு! (ங்கள்)
இதைப் போடுவதும் போடாததும்
உங்கள் பாடு!


இட்லி வடையுடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நேரத்தில் ஒன்று தோன்றுகிறது. பிடித்த லிஸ்ட், காபி பேஸ்ட் பதிவுகள் (உதாரணத்துக்கு, விகடனில் வந்த அசோகமித்திரன் பேட்டி, துக்ளக்கில் வந்த கட்டுரைகள்) என்று சொல்லப் போகும் நேரத்தில் இங்கு இட்லிவடை பற்றி எல்லார் எழுதுவதும் ஒன்றுபோல் இருக்கும் சாத்தியக் கூறுகள்.

அரசியலுக்கும் அண்மைச் செய்திகளுக்கும் நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.கதைகளோ கவிதைகளோ சமையல் பகுதிகளோ இல்லை. இதை வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று கொள்கையாகவே வைத்திருக்கிறீர்களா?

பதில்வராது என்று தெரிந்தாலும் ஓரிரு கேள்விகள்.

நீங்கள் யார்?!! ஆனால் இதைத் தெரிந்து கொண்டு எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லைதான்! தெரிந்து கொள்ளாதவரைதான் கவர்ச்சி என்பதும் புரிகிறது.

துக்ளக்கில் உங்கள் பங்கு என்ன?! (வாரா வாரம் வாங்கிப் படிப்பதைத் தவிர! நிறைய கொடி பிடிப்பது போலப் படுகிறது!)

புத்தகக் கண்காட்சி பற்றி பதிவுகள் படித்திருக்கிறேன். படித்த அல்லது புதிய புத்தகங்கள் பற்றிய பதிவுகள் உங்களிடமிருந்து வரவேண்டும் என்று விருப்பம். அறிமுகம் போலவோ அல்லது விமர்சனமாகவோ...
பதில்: இருக்கவே http://omnibus.sasariri.com/ அங்கே போய் பாருங்கள்.

இட்லிவடையில் அதிகம் ஹிட் வாங்கும் பகுதி ராசிபலன் பதிவு தான் அதை யாரும் வெளிப்படையாக சொல்லுவதில்லை :-)

5 Comments:

jaisankar jaganathan said...

அடுத்து இட்லிவடையும் பறவை முனியம்மாவும்.

முதல்ல சின்மயி கேசு என்ன ஆச்சுன்னு சுடச்சுட நியூஸ் போடுங்க இட்லிவடை.

பின்குறிப்பு: இட்லிவடையும் நானும் (நான்) எழுதலாமா?

IdlyVadai said...

jaisankar jaganathan - அனுப்புங்க :-)

kg gouthaman said...

//இட்லிவடையில் அதிகம் ஹிட் வாங்கும் பகுதி ராசிபலன் பதிவு தான் அதை யாரும் வெளிப்படையாக சொல்லுவதில்லை :-) //
ஓ? அப்படியா? ஆச்சரியமா இருக்கு!

Anonymous said...

திரட்டிகளில் இணைக்காமல், மற்ற பதிவுகளில் பின்னூட்டம் போடாமல் பிரபலமானது ஒரு சாதனையே!

ஸ்ரீராம், ஹரன் பிரசன்னாதான் இட்லி வடை!

ஆனா ஒன்னு... இட்லிக்கு ஸ்பெல்லிங் தப்பு. ஒய் போடக்கூடாது, போட்டால் வேறு அர்த்தம்! ஐ- தான் போட வேண்டும். தெரியாவிட்டால் ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரியைப் பார்த்திருக்கலாமே.

சரவணன்

Anonymous said...

இன்னொரு சாதனை(?) மூனு பதிவு போட்டதும் தன் பெயரில் தனி உரலி ஏற்படுத்திக்கொள்பவர்கள் நிறைந்த பதிவுலகில் பிளாக்ஸ்பாட் அட்ரஸையே தொடர்ந்து மெயின்டைன் பண்ணுவது. இதன் மூலம் பெயரில் (உரலியில்) ஒன்றும் இல்லை என்பதற்கு நிரூபனமாக இருப்பது! கீப் இட் அப்!

சரவணன்