பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 18, 2012

இட்லியும் நானும் ! - கௌதமன்

எங்கிருந்தோ வந்தார், இட்லிவடை நான் என்றார்!
அவரை நான் பார்த்ததில்லை. அப்பப்போ கூகிள் சாட்டில் வருவார் சுருக்கமாக
ஏதோ கேள்வி கேட்பார். நடப்பது 'கனவா, நனவா' என்று நான் சுதாரிக்கும்
முன்பாக பதிலை வாங்கிக் கொண்டு காணாமல் போய் விடுவார்.

எனக்கு பதின்ம வயதுகளில் இட்லி பிடிக்காது. யாரேனும் கேட்டால், 'அதுல
என்ன இருக்கு? வெறும் மாவு, வேகவைத்த மாவு' என்பேன். ஆனால்
வேலையில் சேர்ந்த பின், அதிகாலை எழுந்திருந்து, காலைக் கடன்கள் முடித்து,
அசோக் லேலண்டுக்கு அவசரம் அவசரமாகக் கிளம்ப வேண்டிய நிர்பந்தத்தில்

இருந்த நாட்களில், இட்லி போன்ற ஒன்று, வரப்ரசாதமாகவும்,
இன்றியமையாததாகவும் போய்விட்டது!

ஆனால், இட்லி வடையைப் பார்த்த மாத்திரத்தில், எனக்குப் பிடித்துப் போனது.
நான் இணையத்தில் உலா போக ஆரம்பித்த வருடம், 1999. அப்போ வலைப்பூ
பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. இ-மெயில் சேவைக்கு மட்டும் இணைய
இணைப்பைப் பயன்படுத்தி எல்லோருக்கும் மெயில் அனுப்பி, பெற்று,
மகிழ்ந்திருந்தேன். அப்பொழுது யாஹூ தேடு பொறியில் எனக்கு வேண்டிய
சில தேடு சொற்களைக் கொடுத்து, அலுவகத்திற்கு, வேண்டிய சில (FMEA, ISO
Audit, ISO certification, competitor's products etc etc) விவரங்களை
தரவிறக்கம் செய்து, அலுவலகத்தில் அச்சிட்டுக் கொண்டது உண்டு.

அலுவலகத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின்பு, கி பி இரண்டாயிரத்து
ஆறாம் ஆண்டிலிருந்து இணைய உலா நேரம் அதிகரித்தது. ஆனால்
அப்பொழுதும், தமிழ் வலைப் பக்கங்கள் அதிகம் என் கண்களில் படவில்லை.

ஆகஸ்ட் இரண்டாயிரத்து ஏழில், இணையத்தின் உதவியோடு, இட்லி சுடலாம்
என்று எதேச்சையாக தேடு பொறியில் இட்லி என்று கொடுத்து, தேடிய பொழுது
என் க(ண்)ணினியில் பட்டதுதான் இட்லிவடை பதிவு. சொடுக்கிப் படித்துப்
பார்த்தேன். ஆஹா சுவாரஸ்யமான பதிவுகள்!

நகைச்சுவை, கிண்டல், புதிய விவரங்கள், அரசியல், சினிமா, புகைப்படங்கள் -
'எல்லாமே இருக்கு, நல்லாவே இருக்கு' என்று தெரிந்தவுடன், என்
நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு எல்லோருக்கும் இ வ பதிவை
பரிந்துரைத்தேன்.

ஆகஸ்ட் இருபதாம் தேதி இரண்டாயிரத்து ஏழாம் வருடம், உறவினர்
எல்லோரும் உறுப்பினராக இருக்கும் யாஹூ குழுவுக்கு நான் அனுப்பிய
மின்னஞ்சல் இது:

On 8/20/07, kggouthaman [kgg0114@dataone.in] wrote: (இந்த
மின்னஞ்சல் முகவரி இப்பொழுது புழக்கத்தில் இல்லை)

http://idlyvadai.blogspot.com/
just try the link above for swarasyam + humour in tamil
kgg.

இதைப் பார்த்த என் சகோதரியின் பையன் கோபுலு, உடனடியாக இட்லிவடை
பதிவின் ரசிகன் ஆகிவிட்டான். தமிழ் படிக்கத் தெரிந்த உறவினர்கள்,
நண்பர்கள், எல்லோருக்கும் இட்லிவடை பதிவு பற்றி சொல்ல ஆரம்பித்தேன்.
அதற்கப்புறம் சுமார் ஓராண்டு காலம், இணைய இணைப்பு/ தொலைபேசி
இணைப்பு கிடைக்காத ஒரு 'மூலைக்காடு' அபார்ட்மெண்டில் இருக்கவேண்டிய
நிலைமை. ஒரு ஏர்டெல் டேடா மோடம் வைத்துக் கொண்டு, சிக்கனமாக சில
பைட்டுகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்து பிழைத்துக் கொண்டிருந்தேன்.

இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டிலிருந்து, புதிய வீட்டில், எல்லா இணைப்புகளும்
கிடைத்தன. நாள்தோறும் இட்லிவடை (இணையத்திலும்) காபி (வீட்டிலும்)
சுவைக்கக் கிடைத்தன. சற்றேறக் குறைய அந்த நேரத்தில்தான், 'நெட்டிலே
தமிழில் தட்டச்சுவது எப்படி?' என்று அழகி முதல் கலப்பை வரை அகலமாக
உழுது கண்டுபிடித்துக் கொண்டிருந்தேன்.

பதிவுகளில் கருத்துரைகள் பதிக்கும் வழி தெரியாமல், இட்லிவடை பதிவில்,
என்னென்னவோ முயற்சிகள் செய்து கொண்டிருந்தேன். அப்போ கூகிள
என்னுடைய உதவிக்கு வந்தது. ஏதோ சில கேள்விகள் கேட்டு, என்னை ஜி
மெயில் கணக்கு ஆரம்பிக்கச் சொல்லி, ப்ளாகர் ப்ரொபைல் உருவாக்கி, எனக்கு
நல்வழி காட்டியது. அன்று தொடங்கி இட்லிவடை பதிவில் கருத்துரைகள் பதிய
ஆரம்பித்தேன். வலைப்பூ உலகில் என்னுடைய (கருத்து) எழுத்துப் பயணம்
இட்லிவடையில்தான் தொடங்கியது. அது மட்டும் அல்ல, திசைகள் பற்றி,
'ஆரம்பப் பாடங்கள்' என்ற தலைப்பில், ஒரு (நகைச்சுவை?) கட்டுரை எழுதி,
அதை இட்லிவடை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தேன். அது ஜூன்
மாதம் (2009) இட்லி வடையில் பதிவாக வெளிவந்தது. அது பதிவுலகின் மீது
எனக்கு பயங்கரக் காதலை ஏற்படுத்திவிட்டது!

கட்டுரையை முடிக்கும் முன்பாக, எனக்கு இட்லி வடை பதிவில் பிடித்தவை
எவை, பிடிக்காதவை எவை, எதிர்பார்ப்பது என்ன என்று சொல்ல
முயற்சிக்கிறேன்.

பிடித்தவை:
* நகைச்சுவை பதிவுகள் (காப்பியடித்தவை / காப்பி அடிக்காத ஒரிஜினல்கள்
எல்லாமே!)
* புதிய தகவல்களை அளிக்கின்ற பதிவுகள் - எந்த துறையாக இருந்தாலும்.
* இட்லி / முனி கடிதங்கள் - அப்போதைய செய்திகளை, அந்தாதி போல
கோர்வையாக கொடுக்கின்ற நேர்த்தி.
* பரபரப்பு செய்திகளை உடனுக்குடன் பதிவாக்கி விடும் சுறுசுறுப்பு (இப்போ
இது கொஞ்சம் மிஸ்ஸிங்)
* பிரபலங்கள் இறந்துவிட்டால், இட்லி வடையில் உடனே அஞ்சலி படத்தில்
தோன்றுவார்கள். (பிரபலங்கள் காலமாவது பிடித்த செய்தி இல்லை, அதற்கு
இட்லிவடை சுறுசுறுப்பாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவதுதான்
கவனத்தை ஈர்க்கும் அம்சம்)
* கருத்துரைகள் எதையும் இ வ மறைப்பதோ மாற்றுவதோ இருட்டடிப்பு
செய்வதோ இல்லை (என்னைப் பொருத்தவரை)

எனக்குப் பிடிக்காதவை?
* சினிமா செய்திகளுக்குக் கொடுக்கப்படும் அதிக முக்கியத்துவம்.
* (நகைச்சுவை கலக்காத) சீரியஸ் விளையாட்டு விமரிசனங்கள்.
* சில விஷயங்களைத் தொடங்குவார்கள். ஆனால் தொடர மாட்டார்கள்.
சன்டேனா ரெண்டு, திங்கட்கிழமை கட்டுரைகள் (ய ரா ஜ ச?) etc etc - no
consistency in purpose. (As if I am like that !!)

எதிர்பார்ப்பது என்ன?
தினமும் ஒரு பதிவு - அதுவும் மேலே கூறப்பட்டுள்ள, எனக்குப் பிடித்த வகைப்
பதிவுகளாக!!

ஒற்றை இலக்க (ஒன்பது) ஆண்டுகள் முடித்து, இரட்டை இலக்க ஆண்டினைத்
தொடங்கும் இட்லிவடை பதிவை இன்று போல் என்றும் வாழ்க என்று
வாழ்த்துகின்றேன்.

அன்புடன்,
கௌதமன்.
எங்கள் ப்ளாக்.
engalblog.blogspot.in


"விருப்ப ஓய்வு பெற்ற பின்பு..." இட்லிவடை படிக்க தானோ என்று ஒரு நிமிஷம் பதறினேன் ... நல்ல வேளை அப்படி எதுவும் இல்லை!

25 Comments:

kg gouthaman said...

மிக்க நன்றி இ வ.
முன் காலத்தில் டாட்டா வண்டிகளில் ரோடு கிங் என்று சாசிஸ் பின்புறத்தில்
பெயிண்டர்கள் எழுதி வைத்திருப்பார்கள். அசோக் லேலண்டு வண்டிகளின்
பின்புறத்தில், டாட்டாவை தூக்கி சாப்பிடுவது போல, கிங் ஆப கிங்ஸ் என்று
பெயிண்டர்கள் எழுதுவது வழக்கம். நான் பதிவர்; இட்லிவடை பதிவர்களின் பதிவர்!

Anonymous said...

அப்படியே "நானும் விகடனும்" படித்தது போல ஒரு உணர்வு, என்ன, விகடனின் சுய பிரதாபங்கள் போல இல்லாமல் ஒரு வாசகர் மனதிலிருந்து எழுதியது போல உள்ளது. எல்லா பிரபலங்களும் நானும் விகடனும் எழுதியது அவ்வாறு இல்லை, ஒரு சிலரின் கட்டுரைகளைப் படிக்கும் போது, அட போங்கய்யா எனலாம் போலிருக்கும். நல்ல வேளை இதை நிறுத்தி விட்டார்கள்.

Anonymous said...

இட்லிவடை பிராமணர் சங்கத்திலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிக்கை போன்ற உணர்வையே தருகிறது.

தமிழ் பிராமணர்களின் ஒரு சாம்பிள் தான் இட்லிவடை! கலைஞர் பிடிக்காது. அம்மா பிடிக்கும். பீ. ஜி. பி என்றால் உயிர். துக்ளக் தான் நல்ல பத்திரிக்கை இதெல்லாம் தமிழக பிராமணர்களின் (இட்லிவடை உட்பட) குணாதிசயங்கள் !

ஒரு சிலர் தவிர்த்து இட்லிவடையில் பதிவு எழுதுவோர் பெரும்பாலும் பிராமணர்களே ( இட்லிவடை, பத்ரி, ஹரன் பிரசன்னா. இப்போது எழுதிய கௌதமன் உட்பட)

அதனால் என்ன ! எங்கும் தன் இனத்துக்கு கை தூக்கி விடும் பிராமணாள் இட்லிவடையையும் கை தூக்கி விட்டுடுறா ! அடுத்து முக்குலத்தோர், முதலியார் போன்றோர் இப்படி இணையம் ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கலாம் !

kg gouthaman said...

ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா, ஆரம்பிச்சுட்டாங்க!

Anonymous said...

சுபத்ரா,
இட்லிவடையை பாராட்டி, வாழ்த்தி ஒரு கவிதை எழுதுங்களேன் ப்ளீஸ்!Anonymous said...

//இட்லிவடை பிராமணர் சங்கத்திலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிக்கை போன்ற உணர்வையே தருகிறது.

தமிழ் பிராமணர்களின் ஒரு சாம்பிள் தான் இட்லிவடை! கலைஞர் பிடிக்காது. அம்மா பிடிக்கும். பீ. ஜி. பி என்றால் உயிர். துக்ளக் தான் நல்ல பத்திரிக்கை இதெல்லாம் தமிழக பிராமணர்களின் (இட்லிவடை உட்பட) குணாதிசயங்கள் !

ஒரு சிலர் தவிர்த்து இட்லிவடையில் பதிவு எழுதுவோர் பெரும்பாலும் பிராமணர்களே ( இட்லிவடை, பத்ரி, ஹரன் பிரசன்னா. இப்போது எழுதிய கௌதமன் உட்பட) //

sariyaa sonnaa

Anonymous said...

//இட்லிவடை பிராமணர் சங்கத்திலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிக்கை போன்ற உணர்வையே தருகிறது.

தமிழ் பிராமணர்களின் ஒரு சாம்பிள் தான் இட்லிவடை! கலைஞர் பிடிக்காது. அம்மா பிடிக்கும். பீ. ஜி. பி என்றால் உயிர். துக்ளக் தான் நல்ல பத்திரிக்கை இதெல்லாம் தமிழக பிராமணர்களின் (இட்லிவடை உட்பட) குணாதிசயங்கள் !

ஒரு சிலர் தவிர்த்து இட்லிவடையில் பதிவு எழுதுவோர் பெரும்பாலும் பிராமணர்களே ( இட்லிவடை, பத்ரி, ஹரன் பிரசன்னா. இப்போது எழுதிய கௌதமன் உட்பட) //

sariyaa sonnaa

dr_senthil said...

இனம் இனத்தோடு சேர்வதில் தவறென்ன?

Anonymous said...

அருளானந்தா 'D'பாபா ஆவேசத்துடன் அருளியவை :

யாராவது ஏதேனும் நல்ல விஷயம் எழுதினால், அது பார்ப்பான் எழுதியதா? என்னய்யா கேணத்தனம் இது? மத்தவனுக்கெல்லாம் ஒண்ணுமே எழுத வராதா? தமிழனின் தாழ்வுமனப்பன்மை உலகப் பிரசித்தம்தான். அதற்காக இப்படியா? அனானி, சும்மா இப்படி காற்றில் ..சு விடுவதை நிறுத்தும் ஓய்!

நமக்குத்தான் சினிமா நடிகர்களின் ...த்தை நக்குவதர்க்கே நேரம் போதவில்லை. நாலு நல்ல விஷயங்களை யோசிக்க, எழுத ஏது நேரம்? தப்பித் தவறி எவனாவது நல்லதாக ஏதேனும் எழுதிவிட்டால், உடனே அது பார்ப்பான் எழுதியது!...விளங்கிடும்யா....

உமக்குத் திராணி இருந்தால் நீரும் ஜெயாவைப் பற்றி எழுதி இட்லிவடைக்கு அனுப்பி வையுமேன் ஐயா...இட்லிவடை அதைப் போடாவிட்டால் நானும் உங்களுடன் சேர்ந்து சாத்துவேன்...என்னளவில் நான் ஜெயாவைப் பற்றி எழுதி அனுப்பிய எல்லாவற்றையும் இட்லி வடை போட்டுத்தான் இருக்கிறது.

R. J. said...

I don't remember when did I start viewing IV blog, but I remember clearly that I too recommended the site to my close ones almost immediately! It has become a habit to see access this site first before I move on to browse others' blogs! KGG has been contributing to every post by his sincere comments.

I tend to agree fully with KGG's post - or, shall I call it his comments (which are not in the 'pinnuuttam' section for once!) on IV. Expect IV to keep improving the site with more interesting articles / stories and more frequently!

-R. J.

jaisankar jaganathan said...

சுபத்திரா கவிதை எழுதிடுவாங்க. யாரு படிக்கிறது?

ஸ்ரீராம். said...

வலையுலகை எனக்கு அறிமுகப் படுத்தியவரும், எழுத வைத்தவரும் திரு கௌதமன்தான். இட்லிவடையை அறிமுகப் படுத்தியவரும் அவரே. நான் படித்த, இணைந்த முதல் வலைப் பக்கமும் இட்லிவடைதான்.

சிந்திப்பவன் said...

அனானி,

நீங்கள் சொன்ன மற்ற விஷயங்களைக்கூட ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் ஆனால்,
//தமிழ் பிராமணர்களின் ஒரு சாம்பிள் தான் இட்லிவடை! கலைஞர் பிடிக்காது.//
என்று சொல்லியிருப்பதுதான் ஒண்ணும புரியலே!
கலைஞரை யாருக்கு எதுக்குப்பிடிக்கும் என்று(சும்மா,"அவர் நல்லா வசனம் எழுதுவார்;இந்த வயதிலும் அயராது உழைக்கிறார்" போன்ற பீலாக்களை தவிர்த்து..) யாராவது எழுதி அனுப்பினால் இட்லி வடை அதை நிச்சயம் பதிவு செய்யும் என நம்புகிறேன்.
பாரதியாரை இரவல் வாங்கிச் சொன்னால்..
கருணா என்றொருவரைக் கண்டேன் -அவரை
செந்தமிழ் நாட்டிலோர் தொகுதியிடை வைத்தேன்;
வெந்து தணிந்தது நாடு;- கருணா
ஊழலில் பார்ப்பனனென்ன்றும்,
சூத்திரனென்ன்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

jaisankar jaganathan said...

ஸ்ரீராம் வச்சுருக்கிறது ஒரு கிலோ ஐஸு. நம்பாதீங்க இட்லிவடை

Anonymous said...

கௌதமன் சார்,

இட்லி வடையில் பிடித்தவை மற்றும் பிடிக்காதவை பற்றிய உங்கள் பட்டியல் மிக அருமை...

--இட்லி வடையின் மற்றொரு எளிய ரசிகன்...

Sujatha Gopz Gopz said...

Yes..Naan than andha Gopulu. Idlyvadai is an excellent Tamil blog introduced to us by Mr.gouthaman. A good recommendation, i would say. Even i am a fan of engalblog.

Sujatha Gopz Gopz said...

Yes..Naan than andha Gopulu. Idlyvadai is an excellent Tamil blog introduced to us by Mr.gouthaman. A good recommendation, i would say. Even i am a fan of engalblog.

Anonymous said...

So Idly is one person Vadai is another. Both are Brahmins. They cannot write like Vinavu Brahmins. How many of you know that Vinavu is run by Bramins. See Mammallans blog http://www.maamallan.com/2012/08/blog-post_26.html Quote Mamallan "அதுவும் நம்பளவாளான மருதையன் என்கிற வல்லபேச ஐயரும் வீராச்சாமி என்கிற ரங்கராஜ ஐயங்காரும் தலைமைதாங்கி வழிநடத்தும் பேரியக்கத்தின் இணைய ஊதுகுழலான வினவு தளத்தில்"

Keep up the good work Idly Vadai

Anonymous said...

//உமக்குத் திராணி இருந்தால் நீரும் ஜெயாவைப் பற்றி எழுதி இட்லிவடைக்கு அனுப்பி வையுமேன் ஐயா...இட்லிவடை அதைப் போடாவிட்டால் நானும் உங்களுடன் சேர்ந்து சாத்துவேன்.//


சுத்தம். ஜியன் ஸ்கூல் மேலாளர தூக்கி உள்ள போட்டாங்களே அங்க ஒரு குழந்தை இறந்த பொது அது மாதிரி padmaseshadri ஸ்கூல் correspondenta ஏன் போடலன்னு ஒரு கமெண்ட் போட்டேன். இவா அதை பப்ளிஷ் பண்ணலை. இந்த அழகுல செயாவ பத்தி பதிவு போட்டுட கீட்டுட போறாங்க.

ஏன் தமிழ்நாடே கஷ்டபடர கேவலபடர மின் வெட்ட பத்தியே எதுவும் பதிவு போட்ட மாதிரி தெரியல. அவா ஆளுக்குனா ஒரு ஞாயம். மத்தவாக்குணா ஒரு ஞாயம்.

Anonymous said...

// அனானி //

மறுபடி அழுகிப் போன பார்ப்பன எதிர்ப்பு. இதெல்லாம் திராவிடக் (மு) கட்சி எறிந்த மலத்தின் மிச்சம். அதை இன்னமும் சுமக்கிறீரா? இது, ஆரியர்கள் கைபர் வழியாய் வந்த கதை, இதெல்லாம் சமாதிக்குப் போய் ரொம்ப நாளாச்சு ஐயா, ஒடைச்சு, நொறுக்கி டிஸ்ப்ரூஃப் பண்ணிட்டாங்க. தெரியுமா தெரியாதா? தமிழுக்கு பிராமணர்கள் செய்த தொண்டு பற்றி முடிந்தால் வரலாறு படித்துத் தெரிந்து கொள்ளவும். இங்கே ஒரு அன்பர் வினவியது போல கலைஞரை எதற்காகப் பிடிக்க வேண்டும்? அவர்தான் தமிழகத்தையும் இந்தியாவையும் நிரந்தரச் சனியாய் பிடித்திருக்கிறாரே (சனீஸ்வரன் கூட ஏழரை ஆண்டுகளில் விட்டு விடுவார், அதுவும் நன்மை செய்து விட்டு).

Anonymous said...

ஏனிந்த பாரபட்சம் இட்லி? எல்லா கருத்துக்களையும், தனிப்பட்ட முறையில் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதனை இட்லிவடையர்கள் வெளியிட வேண்டுகிறேன். அதுதான் நியாயம்.

- அருளானந்தா 'D'பாபா


அனானியே,
அண்ணலே,
அறிவுச் சுடரே,
அறிந்துகொள்வீர்....

பார்ப்பனனை "Higher" என்கிற காலம் போச்சு!
.......... "Lower" என்கிற காலமும் போச்சு!
ஆமாமா,
போயே போச்சு!!

jaisankar jaganathan said...

///மறுபடி அழுகிப் போன பார்ப்பன எதிர்ப்பு. இதெல்லாம் திராவிடக் (மு) கட்சி எறிந்த மலத்தின் மிச்சம். அதை இன்னமும் சுமக்கிறீரா? இது, ஆரியர்கள் கைபர் வழியாய் வந்த கதை, இதெல்லாம் சமாதிக்குப் போய் ரொம்ப நாளாச்சு ஐயா, ஒடைச்சு, நொறுக்கி டிஸ்ப்ரூஃப் பண்ணிட்டாங்க. தெரியுமா தெரியாதா? தமிழுக்கு பிராமணர்கள் செய்த தொண்டு பற்றி முடிந்தால் வரலாறு படித்துத் தெரிந்து கொள்ளவும். இங்கே ஒரு அன்பர் வினவியது போல கலைஞரை எதற்காகப் பிடிக்க வேண்டும்? அவர்தான் தமிழகத்தையும் இந்தியாவையும் நிரந்தரச் சனியாய் பிடித்திருக்கிறாரே (சனீஸ்வரன் கூட ஏழரை ஆண்டுகளில் விட்டு விடுவார், அதுவும் நன்மை செய்து விட்டு).//

இந்த கரண்ட் கட் காலத்துல கூட ஒரு காமடி

Anonymous said...

Where is "Manasthan" ? Long ago he was the first person to comment on I.V's article. (Or can it be assumed that "Manasthan" is part of Idly vadai?)

From Aarveeyar - Vellore

Anonymous said...

நான் போட்ட கமெண்ட் காணோம். அவா personal attack பண்ணா அதை பப்ளிஷ் பண்றா நம்ம அது போலவே counter குடுத்தா அதை delete பண்றா. எந்த ஊர் ஞாயம்யா இது?


//மறுபடி அழுகிப் போன பார்ப்பன எதிர்ப்பு. //
இதுல என்னையா 'பூர்பன' எதிர்ப்ப கண்டுடீர்? நான் போட்ட கம்மேன்ட்ல என்ன தப்பு? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்ல?
போ பொய் ஜெயாவுக்கு சொம்பு தூக்கு .

//இதெல்லாம் திராவிடக் (மு) கட்சி எறிந்த மலத்தின் மிச்சம். அதை இன்னமும் சுமக்கிறீரா? //

இதில் அ. திராவிடக் (மு) கட்சி எறிந்த மலத்தின் மிச்சமும் இருக்கும். அதை இன்னமும் நீர் சுமக்கிறீரா?

//தமிழுக்கு பிராமணர்கள் செய்த தொண்டு பற்றி முடிந்தால் வரலாறு படித்துத் தெரிந்து கொள்ளவும். //

நீர் போய் பெரியார் எழுதுகள படிச்சு பாரு. அப்பறம் பேச வாங்கோ .

Anonymous said...

பெரியார்? ஓ...நீங்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கரைச் சொல்லுகிறீர்களா....!

"தமிழர்கள் காட்டுமிராண்டிகள்"
"தமிழ் காட்டுமிராண்டி பாஷை"

என்றெல்லாம் சொல்லிச் சென்ற கன்னடத்துக்காரரைத்தானே? பார்த்தீர்களா...இதைச் சொல்வதர்க்குக் கூட ஒரு கன்னடத்துக்காரர்தான் வரவேண்டியிருக்கிறது....தமிழர்களுக்கு சுய சிந்தனை இல்லை என்பதற்கு இதைவிட என்ன அத்தாட்சி வேண்டும்? இதைச் சொன்னால் உங்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. என்ன செய்ய நமக்குத்தான் சுய அறிவே கிடையாதே.

இதைக் கேளுங்கள் அனானி,

இட்லி வடையில் யாரும் யாரையும் கிண்டல் செய்யலாம். அதனை தனிப்பட்ட தாக்குதல் என்று எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமே இல்லை. இது வெறும் கருத்துப் பரிமாறல் மட்டுமே.

இன்னொன்று...நான் பார்ப்பனன் இல்லை...இதை நம்புவதும் நம்பாததும் உங்களிஷ்டம்....

உஷ்..இட்லிவடையர்களிடம் சொல்லிவிடாதீர்கள்...என்னை இருட்டடிப்பு செய்துவிடுவார்கள்.

--- அருளானந்தா 'D'பாபா