பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 22, 2012

நட்பின் வரலாறு


வழக்கமாக கோபிநாத் நீயா நானாவில் வரும் சிறப்பு விருந்தினர் பேசுவதைவிட அதற்கு முன்பும் பின்பும் வரும் விளம்பரங்கள் அதிக நேரம் வரும். ஆனால் நேற்று பார்வையாளர்களை விட கவிஞர் மனுஷ்யபுத்திரனும், திருச்சி சிவாவும் நிறைய பேசி, நட்பை போஸ்ட்மார்ட்டம் செய்தார்கள்.

வரலாறு முக்கியம் அதானால் நட்பு குறித்து சில கவிதைகள் இங்கே

சிநேகிதிகளின் கணவர்கள்

சிநேகிதன்களின் மனைவிகள்

கணவனின் சினேகிதி


யாரும் நட்பு குறித்து பயப்பட வேண்டாம். டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ...!

2 Comments:

dr_senthil said...

Your friend is your needs answered. Kahlil Gibran

Anonymous said...

கடன் கொடுத்தவர்கள்
- அமனுஷ்யபுத்திரன்


கடன் கொடுத்தவர்களை நினைத்தால்
எனக்குக்
கவலையாக இருக்கிறது.

காலங்கார்த்தாலேயே வந்து விடுகிறார்கள்.
பல் விளக்காமல்
கொல்லைக்குப் போகாமல்.

பரிதாபத்திற்குரியவர்கள்.

எத்தனை நாள்தான்
பாத்ரூமில் ஒளிவது?
எத்தனை நாள்தான்
சுவரேறிக் குதிப்பது?

இரக்கமற்றவர்கள்.

கடன் வாங்கினால்
திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று சொன்னவனைக்
கல்லால் அடிக்க வேண்டும்.

செலவு செய்யத் தெரியாதவனிடம் இருக்கும் காசு
செத்த பிணம் போல.
ஆகவே,
கடன் கொடுங்கள் கஞ்சர்களே.