பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 26, 2012

துப்பறியும் கதை - சதீஷ்

விகடனில் தற்போது வரும் துப்பறியும் கதைகள் மாதிரி நாமும் எழுதலாம் என்று முடிவு செய்தேன். எங்கள் ஊர் பக்கம் மின்சாரம் மாதிரி கிணறு கிடையாது. ஏன் தண்ணீர் தொட்டி கூட கிடையாது. வெறும் குடம் தான். குடத்தில் யாரும் விழுந்து இறந்து போக முடியாது. அதனால் என்ன எழுதாலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்த போது விகடனில் வந்த இந்த அறிவிப்பை என் நண்பர் சுட்டிக்காட்டினார்.


அந்த அறிவிப்புக்கு கீழே 'பெயர் வேண்டாமே ப்ளீஸ்' என்ற பெயர்(?)க்கு கீழே இருக்கும் இந்த கேள்வி என்னை அதிகம் ஈர்த்தது.

எனக்கும் இதே  பிரச்சனை இருப்பதால் இதை எழுதியது யார் என்று துப்பறிய முடிவு செய்தேன்.

முதலில் விகடன் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து உங்க 24.10.12 விகடனில் பக்கம் 75ல் இந்த கேள்வியை எழுதியது யார் என்று கேட்டேன்.
"நீங்க யார் ?"
சொன்னேன்
"சாரி உங்களுக்கு பதில் சொல்ல முடியாது அது ரகசியம்" என்று போனை வைத்துவிட்டார்.
நான் "ஹலோ ஹலோ" என்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு நானும் வைத்துவிட்டேன்.

விடவில்லை திரும்பவும் போன் செய்தேன்.
இந்த சமயம் பெண் குரலில் பேசினேன். ஆனால் விகடனில் இருப்பவர்கள் புத்திசாலிகள். அவர்களும் பெண் குரலில் பேசினார்கள்.
திரும்பவும் அதே சாரி.

விகடனில் எனக்கு தெரிந்த நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் 'டைம் பாஸ்' இதழுக்கு பிஸியாக கூகிளில் படம் சேகரிப்பதாக ஜகா வாங்கினார்கள்.

விடவில்லை

அடுத்தது தமிழகத்தில் இருக்கும் எல்லா கல்லூரிகளுக்கும் கடிதம், ஈ-மெயில் எழுதினேன். எல்லோரிடமும் பதில் கேள்வி வந்தது. "எந்த வருஷம் படிக்கும் மாணவர், எந்த குருப்..." இது தெரிந்தால் நானே கண்டுபிடித்துவிடுவேன்.

கடைசியாக அந்த கேள்விக்கு பதில் சொன்ன டாக்டரை தொடர்பு கொண்டேன். அவர் நேரில் கன்சல்டேஷனுக்கு வாங்க பேசலாம் என்றார்.
ஊசி போட்டுவிட போகிறார் என்று பயந்துக்கொண்டு அங்கே போகவில்லை.

என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது....துப்பறியும் கதைகளை பற்றி ஆய்வு செய்து முழம் நீளம் எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது. தப்பு செய்தவன் ஏதாவது ஒரு தடையத்தை வைத்துவிட்டு போவான் என்று அதில் ஒரு வரி இருந்து. திரும்பவும் அதே விகடன் பக்கத்தை படித்தேன்.

கண்டுபிடுத்துவிட்டேன்.

முழு விகடன் பக்கத்தையும் கீழே கொடுத்துள்ளேன். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள் !

சதீஷ்
மதுரை

சரியான விடையை கண்டு பிடிப்பவர்களுக்கு அடுத்த வாரம் சக்தி விகடன் இலவசம் :-)

28 Comments:

jaisankar jaganathan said...

சதீஷ்

சந்தேகம் வேண்டாம்டா சதீஷ். வாழ்க்கை மாறி போயிடும்.

எனக்கு சக்தி விகடன் மட்டும் இல்லாமல் தாயுமானவர் புக்கும். ரமண மகரிஷி எழுதின நான் யார் புத்தகமும் வாங்கி அனுப்பவும்

balhanuman said...

>>விகடனில் தற்போது வரும் துப்பறியும் கதைகள் மாதிரி நாமும் எழுதலாம் என்று முடிவு செய்தேன். எங்கள் ஊர் பக்கம் மின்சாரம் மாதிரி கிணறு கிடையாது. ஏன் தண்ணீர் தொட்டி கூட கிடையாது. வெறும் குடம் தான். குடத்தில் யாரும் விழுந்து இறந்து போக முடியாது.

பேயோன் பக்கம் என்ற மொக்கைப் பக்கத்தை நன்றாக நக்கல் அடித்திருக்கிறீர்கள். சூப்பர்....

jaisankar jaganathan said...

சதீஷ் மதுரை.

இது நகைச்சுவை என்றாலும் எனக்கு புக் அனுப்புங்க

IdlyVadai said...

ஜெய்சங்கர் சக்தி விகடன் தான் அனுப்ப முடியும். வேண்டாம் என்றால் விடையை தப்பாக சொல்லவும்.

குரோம்பேட்டை குறும்பன் said...

இந்த மாதிரி 'விரல் சூப்பித்' தனமான கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்வதாக இல்லை.

NIZAMUDEEN said...

செம காமெடி.

பெசொவி said...

Satheesh is the name of the person who asked the question.

:))

Anonymous said...

சதீஷ் அப்பாவுக்கு 3 மகன்கள். ஒருவர் பேர் ஆப்பிள், இன்னொருவர் பேர் ஆரஞ்சு. மூன்றாமவரின் பேர் என்ன? இதுக்கு விடைதான் உங்க கேள்விக்கும் விடை. கண்டுபிடிச்சா சக்திவிகடனை நீங்களே படிச்சுக்குங்க!

சரவணன்

ஸ்ரீராம். said...

எனக்கு சக்தி விகடன் வேண்டாம்!

கடுகு said...

The doctor has addressed the reply to satish.
--thappu ariyum thaambu
( I d o

வீரராகவன் said...

ஒருவரை காதலித்தாலே அது ஸ்பெஷல் உறவுதான் சதீஷ்!?

வீரராகவன் said...

ஒருவரை காதலித்தாலே அது ஷ்பெஷல் உறவுதான் சதீஷ்?!!

பால.சரவணன் said...

என்ன! ஒரு ஆராய்ச்சி நோபல் உங்களுக்குத்தான்

dr_senthil said...

சதீஷ்

dr_senthil said...

சதீஷ்

Anonymous said...

vikatan editir avvalo gavana kuraivanavara?

devams said...

சந்தோஷ். வேறொன்னுமில்ல உங்களுக்கு ஒரு சக்தி விகடன் காசு மிச்சம் அவ்வளவுதான்.

manohar said...

m.vivek trichy

Anonymous said...

சதீஷ் என்று ஒரு பெயரை அந்த மருத்துவர் குறிபிட்டுள்ளார், ஒருவேள கேள்வி கேட்டவர் பெயர் ராஜன் என்றிருக்குமோ??

இராஜராஜேஸ்வரி said...

தப்பு செய்தவன் ஏதாவது ஒரு தடையத்தை வைத்துவிட்டு போவான்

சதீஷ் என்னும் பெயரையும் வைத்துவிட்டு கேள்வியும் கேட்பாரோ !

R.V. Mithun said...

Name is sathish!

R.V. Mithun said...

Name is sathish!

இரா. சத்தியமூர்த்தி said...

இங்கு சதீஷ் என்று பதில் சொன்ன அனைத்து வெள்ளை உள்ளங்களையும் வன்மையாக கண்டிக்கிறேன். இதில் தேமுதிகவை சாடும் சதியிருப்பதாக நினைக்கிறேன்.

எத்த-நாயோ பெயரிருக்க சதீஷ் என்று ஏன் சொன்-நாய்?

Shiva said...

Sathish

Shiva said...

Sathish

Shiva said...

Sathish

 சோ.சுப்புராஜ் said...

நானும் கண்டுபிடிக்கலாம் என்று யோசித்தேன்; மூளையைக் குழப்பிக் கொண்டேன்.... அப்புறம் பரிசு சக்தி விகடன் என்பதால் அதைப் படிப்பதற்கு வேறெதாவது உருப்படியாய் செய்யலாம் என்பதால் வேண்டாமென்று விட்டுவிட்டேன்

Guna Seelan said...

அது சரி
ஜூனியர் விகடன் கேள்வி