பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 28, 2012

தாண்டவம் FIR

ஜனவரி 1, லண்டன் பாலம் பக்கம் குண்டு வெடிக்கிறது. நம்ம தமிழ் சினிமாவில் இந்தியாவிற்கு வெளியே ஏதாவது நடந்தால் உடனே கீழே சப்-டைட்டில் போட்டுவிடுவார்கள். இந்த படத்திலும் போடுகிறார்கள் ஆனால் சாதாரண சென்னை தமிழர்கள் பேசும் ஆங்கிலத்துக்கு கூட சப்டைட்டில் போடுவது எரிச்சலாக இருக்கிறது. .

லண்டனில் ராத்திரி எம்.ஜி.ஆர் பாட்டு கேட்டுக்கொண்டு டாக்ஸி ஓட்டும் சந்தானம் ( இப்ப நீங்க சிரிக்க வேண்டும்). ரோட்டில் நின்றுகொண்டு இருக்கும் விக்ரமை கூட்டிக்கொண்டு போகிறார். அங்கே விக்ரம் ஒரு கொலை செய்கிறார். அட படம் நல்லா இருக்கே என்று நிமிர்ந்து உட்காரும் போது டைரக்டர் நம்மீது இரக்கப்பட்டு திரைக்கதையில் தாலாட்டி தூங்க வைக்கிறார்.

நாசர் முதல் சீனில் இந்த கொலையை துப்பு துலக்க வருகிறார். நல்லா செய்கிறாரே என்று நினைக்கும் போது இலங்கை தமிழ் பேசி பேசி உசிரை எடுக்கிறார். இவர் பேசும் அச்சு பிச்சு தமிழுக்கு சப்-டைட்டில் போட்டால் தேவலாம் என்றாகிவிட்டது. லண்டனில் எல்லா போலிஸும் தமிழ் பேசுகிறார்கள். சபாஷ்!.

கண் பார்வை தெரியாத விக்ரம் என்பதை காட்ட எல்லா இடத்திலும் காமெராவை பார்க்காமல், ஒரு சைடாக கீழே பார்த்துக்கொண்டு சண்டை போடுகிறார். பேசுகிறார், பியானோ வாசிக்கிறார். கண் பார்வை தெரியாதவர் ஏதாவது வித்தியாசமாக செய்வார் என்று நினைத்துக்கொண்டு போன நமக்கு ஏமாற்றமே!. வாயில் டக்கு டக்கு என்று சத்தம் மட்டும் போட்டு இசையமைப்பாளருக்கு வேலை வைக்கிறார். .

படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் அனுஷ்காவை காணவில்லை என்ற ரசிகர்களின் கவலையை போக்க எமி ஜாக்சன் வருகிறார். வழக்கமாக எல்லா தமிழ் பட கதாநாயகியும் செய்யும் வேலையை இவரும் செய்கிறார். பார்க்க அழகாக இருக்கிறார் என்பது தான் ஒரே ஆறுதல்!.

லட்சுமிராய் எவ்வளவு படத்தில் தான் ஹீரோவுக்கு உதவி செய்துவிட்டு கடைசியில் செத்துப்போவார் ? அவரை பார்த்தால் பாவமாக இருக்கு.

இடைவேளியின் போது கொத்தாக சந்தானம் மற்றும் அவருடைய கார் தண்ணீரில் விழ காபி சாப்பிட்டு வந்த பார்த்தால் அதே காரில் அசால்டாக போகிறார்.  லாஜிக்கில் ஓட்டை இங்கு மட்டும் இல்லை, படம் முழுவதும் இருக்கிறது.எது பெரிசு என்று கண்டுபிடிப்பது தான் கஷ்டம்.

கல்யாணம் செய்துக்கொண்ட பிறகு விக்ரமும் அனுஷ்கா வும் இருவரும் தொட்டுக்கொள்ளாமல் ... முடியலப்பா.


இசையும் பாடல்களும் பரவாயில்லை ரகம். படத்தில் விக்ரம் கல்யாண கூட்டத்தோட போகும் போது பீலாவிடும் போது அவர் மனைவியின் தங்கை பார்க்க 'ஆனந்தவிகடன், குமுதம்,..." என்று பேசும் இடம் மட்டும் தான் சிரிப்பு வருகிறது, மற்ற இடங்கள் எல்லாம் சிரிப்பாய் சிரிக்கிறது.

திரை இருக்கிறது, கதை இருக்கிறது ஆனால் திரைக்கதை ?


இட்லிவடை மார்க் 5.5/10

பிகு:இதே வரிசையில் கோச்சடையானை எதிர்ப்பார்க்கலாம் என்று கோடம்பாக்கத்தில் சொல்லுகிறார்கள்.

14 Comments:

Ivan Yaar said...

First review of movie Thandavam on Internet by Idly vadai.

kothandapani said...

இல்லாத திரைகதைக்கா இயக்குனர் சங்கத்தில் இப்படி அடித்துகொல்கின்றான்கள்.

Anonymous said...

இந்த படத்த முதல போய் பார்த்து அதுக்கு விமர்சனமும் எழுதும் அளவிற்கு இவ விற்கு வேறு வேலை இல்லை போல.. ராஜபாட்டை முதல் விக்ரமிற்கு கெட்ட காலம் தான்

பாலாஜி said...

அப்ப கோரத்தாண்டவமா....

R. J. said...

Yaarukku / Etharku 5.5?

General rule: Avoid films with too much hype!

- R. J.

Anonymous said...

cho full interview
http://www.youtube.com/watch?v=J-UXSrbjU5s
s. gurumurthy inerview
http://www.youtube.com/watch?v=tog5X1pfBSs

Anonymous said...

வித்தியாசமான கேரக்கடர் என்று சொல்லியே விக்ரமை புக் பண்ணியிருப்பார்கள்.திரைக்கதையை யோசிக்காமல் ஹீரோவின் கேரக்டருக்காக படம் எடுத்தால் இப்படித்தான்.படம் படுத்தாலும் யுடிவி சமாளித்துக் கொள்ளும்.

kothandapani said...

twenty -20 சூப்பர் சுற்று ஆரம்பித்து விட்டார்களே ... எங்கே பாலாவை காணவில்லை .... டூ விட்டு விட்டீர்களா ....

jaisankar jaganathan said...

//twenty -20 சூப்பர் சுற்று ஆரம்பித்து விட்டார்களே ... எங்கே பாலாவை காணவில்லை .... டூ விட்டு விட்டீர்களா ....
//

அதானே. பாலாவை விட அவரோட பின்னூட்டத்டுக்குத்தான் மதிப்பு அதிகம்

ou^pouoû said...

இலங்கை தமிழ் பேசி பேசி உசிரை எடுக்கிறார். இவர் பேசும் அச்சு பிச்சு தமிழுக்கு சப்-டைட்டில் போட்டால் தேவலாம் என்றாகிவிட்டது.---அதுசரி நாம் பேசும் 10க்கு 8 ஆங்கிலம் கலந்த சுத்தத்தமிழ்.இலங்கையர் பேசுவது அச்சு பிச்சு தம்ழ்??? என்ன கொடுமை சரவணா....

ou^pouoû said...

இலங்கை தமிழ் பேசி பேசி உசிரை எடுக்கிறார். இவர் பேசும் அச்சு பிச்சு தமிழுக்கு சப்-டைட்டில் போட்டால் தேவலாம் என்றாகிவிட்டது.---அதுசரி நாம் பேசும் 10க்கு 8 ஆங்கிலம் கலந்த சுத்தத்தமிழ்.இலங்கையர் பேசுவது அச்சு பிச்சு தம்ழ்??? என்ன கொடுமை சரவணா....

படுக்காளி said...

சூப்பர் விமர்சனம்...
இட்லி வடை கீப் இட் அப்பு......

ஒரு சொத்தை படத்துக்கு சூப்பர் விமர்சனம்...

ஒருவர் : படம் எப்படி யிருக்குங்க..........
மற்றவர் : தலைக்கு மேல வைச்சு கொண்டாடலாம்....
ஒருவர் : ஓ.... அவ்வளவு சிறப்பா இருக்குது...
மற்றவர் : மசுரு மாதிரி இருக்குதுன்னேன்....

அப்புராணி அம்பைதேவா said...

விமர்சனம் எல்லாம் ஒக்கே... கடைசி வரியில....... பின் குறிப்புன்னு போட்டு குத்தியிருக்கீங்களே.. அது எதுக்கு.....

தாண்டவம் ரேஞ்சுலன்னு... சொல்லி.... ஒரு படம் பேர் போட்டீங்களே...... அது எதுக்கு இந்த குசும்பு.....

எங்க தட்டினா வெடிக்கும்ன்னு.... கும்முன்னு அடிச்சுருக்கீங்க......

வேண்டாம் மச்சான் வேண்டாம் இந்த பொல்லாத கமெண்ட்டு....
மூடி தொறக்கும் முன்னே உன்ன கவுக்கும் கௌட்டரு.......

Anonymous said...

5.5 adhigam