பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 10, 2012

ஜெ மேடையில், ரஜினி கூத்து - குமுதம்

நன்றி: குமுதம்
இந்த நிகழ்ச்சி ஜெயா டிவியில் வரும் போது ரஜினி பேச்சு எடிட் செய்யப்படுமா/படாதா ?

16 Comments:

jaisankar jaganathan said...

ஏன்பா குமுதம்
எனக்கு ஒரு டவுட்

இதே ரஜினி ஜெயலலிதா எதிர்கட்சில இருந்து கலைஞர் முதல்வரா இருந்திருந்து ஜெயலலிதாவை பாராட்டி பேசியிருந்தா உங்களுக்கு ஜில்லுன்னு இருந்திருக்கும். இப்போ வலிக்குதா?

jaisankar jaganathan said...

//இந்த நிகழ்ச்சி ஜெயா டிவியில் வரும் போது ரஜினி பேச்சு எடிட் செய்யப்படுமா/படாதா ?
//

ஹா ஹா ஹா. கண்டிப்பா எடிட் பண்ணுவாங்க. இனிமே ரஜினிக்கு ஆப்புதான். எத்தனை படத்துல ஜெயலலிதாவ நக்கல் அடிச்சிருக்கார்

Subramanian said...

previously a zoom button used to appear when you published some images but now we cannot read anything beyond the heading.can you correct this feature.

ஹாரி பாட்டர் said...

அட போங்கப்பா

இரா. சத்தியமூர்த்தி said...

ரஜினி ஒரு வெத்து வேட்டு. கலைஞரைப்போல இவரையும் தமிழக மக்கள் புரிந்து கொண்டு நாளாகிறது. பத்திரிகைகள்தான் இன்னும் கட்டிக்கொண்டு மாரடிக்கின்றன.

ஜெ. said...

குமுதம் போன தேர்தலுக்கு முன் யாரை ஆதரித்தது, தேர்தலுக்குப் பின் யாரை ஆதரிக்கிறது - இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தால், இந்த ஜிங்-சக் சத்தம் தொல்லையாகத் தெரியாது!

குமுதமும் ரஜினி பேசின ஒரு வார்த்தைக்குத் தான் 1 3/4 பக்கம் எழுதியிருக்கிறது, விழாவைப் பற்றி கடைசியில் 2 வரி! அட போங்கப்பா..

-ஜெ.

ஜெ. said...

டாக்டர் குரியன் மறைவுக்கு அஞ்ஜலி உண்டா? (அமுல் அஞ்ஜலி கார்ட்டூனைப் பிரசுரித்ததற்கு நன்றி. அவருக்கு பாரத ரத்னா தருவதற்கு முன் சச்சினுக்குக் கொடுப்பார்களா? - ஜெ.

Krishna Kumar said...

Kumudham 100% Jalra for Jay

Krishna Kumar said...

Kumudham 100% Jalra for Jay

காரிகன் said...

ரஜினிகாந்த்துக்கு சபை நாகரீகம் தெரியாது என்பது இப்போதுதான் எல்லோருக்கும் தெரிய வருகிறது. குமுதம் இதழில் வந்த இந்த கட்டுரை சரியாகத்தான் இந்த மனிதரை விமர்சனம் செய்துள்ளது. ரஜினி ஜால்ராக்கள் இதை எதிர்த்து கூப்பாடு போடுவது எதிர்பார்த்ததே. எந்த மடையனாவது சாதனையாளர்களுக்கு புகழ் விழா எடுக்கும் நிகழ்ச்சியில் சாவைப்பற்றி பேசுவானா? ரஜினிகாந்த்துக்கு எண்பதுகளின் ஆரம்பத்தில் பைத்தியம் பிடித்ததாக அப்போது பெருவாரியாக செய்திகள் வெளிவந்தன. இன்னும் தெளியவில்லை போலும்.

Parthi said...

காரிகன் போன்ற சில்லறைகள், சின்னபுத்திகாரர்களுக்கு நான்கரீகம் என்றாலே என்னவென்று தெரியாது போலும். இவர் சபை நாகரீகத்தைப் பற்றி பேசுவது வியப்பாக இருக்கிறது. அப்படி என்ன ரஜினி தப்பாக பேசிவிட்டார்? மற்றவர்களைப் போல ஜெயாவை ஜால்ரா அடிக்காமல், அவர் மனதில் பட்டதை நேர்மையாக பேசினார். இவ்வுலகில் எந்த ஒரு கருத்தாக இருந்தாலும், அதை பெரும்பான்மையானவர்கள் ஏற்றாலும், சில பைத்தியங்கள் (காரிகனைப்போல்) மறுத்து பேசத்தான் செய்யும். குமுதமும், காரிகனும் குப்பைகள்.

காரிகன் said...

ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் பெரிய நடிகர் என்று பெயர் எடுத்தவர். பல விழாக்களில் நிறைய பேசுபவர். நானோ இணையத்தில் சில கருத்துக்கள் சொல்வபன். நான் ஒரு செலிபிரிட்டி கிடையாது. எனக்கு சபை நாகரீகம் தெரியாது என்று என்னையும் ஒரு ஸ்டார் அளவுக்கு திரு பார்த்தி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. சரி. அது கிடக்கட்டும். ரஜினி தப்பாக என்ன பேசிவிட்டார் என்று குதிக்கும் ரஜினிவிசில்களுக்கு..முதலில் அது அரசியல் விழாவே அல்ல. எம் எஸ் விக்கும் டி ஆர் ராமமூர்த்திக்கும் மரியாதை செய்யும் பாராட்டு விழா. அதில் தேவை இல்லாமல் கிறுக்குத்தனமாக அரசியல் பேசியது முதல் தவறு.இரண்டாவது ஒரு பாராட்டு விழாவில் சாவைப்பற்றி சம்பந்தம் இல்லாமல் உளறிக்கொட்டியது அடுத்த தவறு.ஜெவுக்கு ஜால்ரா அடிக்காமல் உண்மையை பேசினாராம் ரஜினி..அப்படி இருந்தால் சாகாவரம் பெற்றவர்கள் லிஸ்டில் கலைஞர் என்று சொல்லிவிட்டு உடனே ஜெயலிலிதா பெயரையும் சேர்த்து சொன்னது எதற்கு?ஒருவேளை ஜெவின் பெயரை சொல்லாமல் இருந்திருந்தால் ரஜினி ஜெவுக்கு ஜால்ரா அடிக்கவில்லை என்று சொல்லலாம். கருணாநிதி பெயரை சொல்லிவிட்டு ஜெவை சொல்லாவிட்டால் தனக்கும் வடிவேலு நிலைமை வந்துவிடும் என்று தெரிந்துதானே இந்த உளறல் மன்னன் அப்படி பல்டி அடித்தார்?ரஜினிகாந்துக்கு மாட்டும்தான் பைத்தியம் பிடித்தது என்று பார்த்தால் ரஜினி ரசிகர்களே அதே ரகம்தான் போலிருக்கிறது.இனம் இனத்தோடுதான் சேரும் என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்?

காரிகன் said...

ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் பெரிய நடிகர் என்று பெயர் எடுத்தவர். பல விழாக்களில் நிறைய பேசுபவர். நானோ இணையத்தில் சில கருத்துக்கள் சொல்வபன். நான் ஒரு செலிபிரிட்டி கிடையாது. எனக்கு சபை நாகரீகம் தெரியாது என்று என்னையும் ஒரு ஸ்டார் அளவுக்கு திரு பார்த்தி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. சரி. அது கிடக்கட்டும். ரஜினி தப்பாக என்ன பேசிவிட்டார் என்று குதிக்கும் ரஜினிவிசில்களுக்கு..முதலில் அது அரசியல் விழாவே அல்ல. எம் எஸ் விக்கும் டி ஆர் ராமமூர்த்திக்கும் மரியாதை செய்யும் பாராட்டு விழா. அதில் தேவை இல்லாமல் கிறுக்குத்தனமாக அரசியல் பேசியது முதல் தவறு.இரண்டாவது ஒரு பாராட்டு விழாவில் சாவைப்பற்றி சம்பந்தம் இல்லாமல் உளறிக்கொட்டியது அடுத்த தவறு.ஜெவுக்கு ஜால்ரா அடிக்காமல் உண்மையை பேசினாராம் ரஜினி..அப்படி இருந்தால் சாகாவரம் பெற்றவர்கள் லிஸ்டில் கலைஞர் என்று சொல்லிவிட்டு உடனே ஜெயலிலிதா பெயரையும் சேர்த்து சொன்னது எதற்கு?ஒருவேளை ஜெவின் பெயரை சொல்லாமல் இருந்திருந்தால் ரஜினி ஜெவுக்கு ஜால்ரா அடிக்கவில்லை என்று சொல்லலாம். கருணாநிதி பெயரை சொல்லிவிட்டு ஜெவை சொல்லாவிட்டால் தனக்கும் வடிவேலு நிலைமை வந்துவிடும் என்று தெரிந்துதானே இந்த உளறல் மன்னன் அப்படி பல்டி அடித்தார்?ரஜினிகாந்துக்கு மாட்டும்தான் பைத்தியம் பிடித்தது என்று பார்த்தால் ரஜினி ரசிகர்களே அதே ரகம்தான் போலிருக்கிறது.இனம் இனத்தோடுதான் சேரும் என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்?

Parthi said...

நான் ரஜினி ரசிகன் என்று உனக்கு யார் சொன்னது? அது போகட்டும், ரஜினி பேசியது அரசியல் என்று நீ கூறியது தான் எனக்கு இன்னும் விளங்கவில்லை. புகழ் பெற்றவர்களைப் பற்றி பேசும்போது, கலைஞர், ஜெயலலிதா ஆகியோரும் அழியாப் புகழ் பெற்றவர்கள் என்று கூறினார். அதில் தவறேதும் இல்லையே? ரஜினி ஒரு சிறந்த மேடைப்பேச்சாளர் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவர் சொல்லும் குட்டிக்கதைகளும், கருத்துக்களும் நன்றாகவே இருக்கும். சுந்தரத் தமிழில் மட்டமான கருத்துக்களை, அவதூறுகளை பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில், மேடையில் நல்ல கருத்துக்களை அவர் பேசுவது நல்லதே.

ரஜினி எதைப் பேசினாலும் அதை ஏன் அரசியலாக்குகிறீர்கள்? இதுவே அவர் ஜெ. பெயரை மட்டும் சொல்லியிருந்தால் ஜால்ரா என்று சொல்லியிருப்பாய், கலைஞர் பெயரை மட்டும் சொல்லியிருந்தால், இது தேவையா? என்று கேட்டிருப்பாய்.... உன்னைப் போன்றவர்களுக்கெல்லாம் ரஜினி எது செய்தாலும் அது தப்பாகத்தான் தெரியும். சபை நாகரீகம் என்பது மேடைப்பேச்சுக்கு மட்டும் அல்ல. இந்த மாதிரி இணையதளங்களில் அனைவரும் தத்தம் கருத்துக்களை பரிமாறும் இடங்களிலும் ஏற்புடையதே. நீ கருத்து என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் உளறிக் கொட்டு. அதையெல்லாம் படிக்கவேண்டும் என்பது வாசகர்களுக்கு ஒரு சாபக்கேடு. ஆனால், ஒரு celebrityயாக இருப்பவரை பைத்தியம், அது இது என்று பேசுவது எந்த வகையில் சரி?

நம் தாய் நாட்டை அவமதித்து பத்ரி கருத்து சொல்லியுள்ளார். அவரை பைத்தியம் என்று விமர்சிக்க வேண்டியது தானே? இணையத்தில் கருத்து சொல்லும் நீ, இது போன்ற சமூகப் பிரச்சனைகளுக்கு கொடி பிடிக்க வேண்டியது தானே? ரஜினியை விமர்சித்தது மட்டும் இல்லாமல், அவர் ரசிகர்களையும் விமர்சித்து இருக்கிறாய். போகட்டும். நான் ரஜினி ரசிகன் அல்ல. ஆனாலும், எனக்குத் தெரிந்து ரஜினி ரசிகர்களாக இருக்கிறவர்கள் யாரும் உன்னைப்போன்று கீழ்த்தரமாக விமர்சிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அப்படியே அவர்கள் விமர்சித்தாலும், அதை அவர் ஒருபோதும் விரும்பமாட்டார்.

எது எப்படியோ, ரஜினியை இது போன்ற விமர்சனங்கள் ஒன்றும் செய்யாது. அதனால் தான் அவர் நிறைந்த புகழோடு இருக்கிறார். ரஜினி என்ற மனிதரைப் பழிக்கும் நீ, அவருடைய வாழ்வில் அவர் கடைபிடிக்கும் values ஒன்றையாவது கடைபிடிக்கிறாயா என்று நீயே உன்னை கேட்டுக்கொள். கருத்து சுதந்திரம் இருக்கிறதென்று இஷ்டத்துக்கு எதைவேண்டுமானாலும் எழுதுவது அறிவீனம்.

காரிகன் said...

ரஜினியை பற்றி குமுதம் இதழில் வந்த செய்தியை உண்மை என்று சொன்னதற்கு இப்படி காராசாரமாக அநாகரீரமாக கொதித்து எழும் ஒருவர் தான் ரஜினி ரசிகன் இல்லை என்று வாய்கூசாமல் சொல்வது வினோதம்தான். நான் இல்லாததை ஈடுகட்டி எழுதியது போல இப்படி தாம்தூம் என்று குதிப்பது ஏனோ தெரியவில்லை. எண்பதுகளின் ஆரம்பத்தில் ரஜினி பற்றி எல்லா நாளிதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் அப்போது வந்த செய்திகளைத்தான் நான் கோடிட்டு காட்டி இருந்தேன். ரஜினி நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்பில் கே பாலச்சந்தரை கை நீட்டி அறைந்தது,தன் வீட்டில் இருந்த அவரின் படத்தை கிழித்து எறிந்தது, சென்னை விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்களை கண்ணா பின்னா என்று பேசி அடித்து துவம்சம் செய்தது, போன்ற பல சேஷ்டைகளை அப்போது பொதுவாக எல்லோருமே விவாதம் செய்தது உண்மை இல்லை என்று சொல்லவருகிராரோ இந்த பார்த்தி?இதனால்தானே அவரை பற்றி பலவிதமான வதந்திகள் பேசப்பட்டன?நடிகை மனோரமா கூட ரஜினியை பைத்தியம் என்று சொல்லி விமர்சனம் செய்தது பொய்யா? ரஜினியை இன்றுவரை கூட பலர் மெண்டல் என்று அழைப்பது தெரியாதா இவருக்கு? நான் அப்படி எதுவும் இங்கே சொல்லவே இல்லை. ஒரு பாராட்டு விழா நிகழ்ச்சியில் வாய்க்கு வந்ததை உளறியதைதான் இன்னும் இவருக்கு தெளியவில்லை என்று சொன்னேன். ரஜினி நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளவராம்..வேடிக்கைதான்.தமிழ் சினிமா உலகில் நல்ல பழக்கங்கள் உள்ளவர் என்று சிவகுமாரை தவிர வேறு யாரையும் யாரும் சொல்வதில்லை.இந்த ரஜினி என்னென்ன பழக்கங்கள் உள்ளவர் என்று எல்லோருக்குமே தெரியுமே. இவர்தானே சிகரெட்டை வைத்து பல கோமாளித்தனங்களை செய்து பல இளைஞர்களையும் சிறுவர்களையும் அந்த கேடு கெட்ட பழக்கத்திற்கு அடிமை ஆக்கியவர்? இப்படிப்பட்டவர் நல்ல நிலைமையில் இருக்கிறாராம்.நான் எழுதுவதை பத்தில் இரண்டு பேர் படிக்கலாம் அவ்வளவே. உங்கள் ரஜினி செய்வதையும் பேசுவதையும் ஒரு கோடி பேர் பார்க்கிறார்கள் கேட்கிறார்கள். எவனுக்கு அதிக சபை நாகரீகம் அவை அடக்கம் தெரியவேண்டும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.மேலும் நான் எதைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் என்று இவர் எனக்கு சொல்வது எந்த ஊர் நியாயம்? நான் பத்ரி என்ற ஒரு ஆளை பற்றி எதுவும் சொல்லவில்லையாம். அவரை எனக்கு தெரியவே தெரியாதே.இரண்டாவது அது என் விருப்பம்.நீங்கள் என்னத்தை படிப்பது என்று நான் உங்களுக்கு பாடம் நடத்தவா திரு பார்தி? பெரிய பெரிய அரசியல் தலைவர்களையும், மத பெரியவர்களையும் காந்தி, பெரியார் முதற்கொண்டு கருணாநிதி ஜெயலலிதா வரை விமர்சனம் செய்ய எல்லோருக்கும் உரிமை இருக்கும் போது தமிழ் நாட்டில் பிழைக்க வந்திருக்கும் ஒரு சினிமா நடிகரை பற்றி மட்டும் யாரும் எதுவும் சொல்லகூடாதாம்? சரிதான். உங்கள் ரஜினி சும்மா வாயை வைத்துகொண்டு இருந்தால் யார் அவரை பற்றி பேசப்போகிறார்கள்? இசை மேதைகள் இருவருக்கு பாராட்டு விழா மேடையில் அவர்களை வாழ்த்தி பேசுவதை விட்டுவிட்டு சாவு சாகாவரம் கலைஞர் ஜெயலலிதா என்று சகட்டுமேனிக்கு கேட்டவர்கள் எல்லாம் இந்த ஆளுக்கு என்ன ஆச்சு என்று திகைப்படையும் விதத்தில் திகிலடைய வைத்த ரஜினியின் பேச்சை ஆஹா அபாரம் என்று மூளை இல்லாத முட்டாள் மட்டும்தான் சொல்வான். இப்படி ரஜினிக்கு வக்காலத்து வாங்க ஓடி வரும் இந்த பார்தி தான் ரஜினி ரசிகன் இல்லை என்று சுய மறுப்பு வெளியிடுவது தேவை இல்லாதது. நீங்களும் உங்கள் தலைவர் போலவே உளறலாமே?அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதை செய்யுங்கள்.

AshIQ said...

ஹலோ ரஜினைய பற்றி யாராவது பேசினால் நான் தீ குளிப்பேன், என் தலைவனுக்காக நான் தீ குளிக்க தயாராக இருக்கிறேன்...ஆனா நான் மெண்ட்டல் இல்லை.
என் தலைவன் மாதிரியே முன் பக்கம் ரெண்டு சைடும் செரைச்சு விட்டுருக்கிறேன் அதுக்காக என்னை மெண்டல்னு நினைச்சுராதீங்க...