பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 23, 2012

ஐயங்கார் செய்திகள்

'அடியேன் வருதபா ரங்கப்ரியதாசன்’ என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அவர்! தோள்களில் சங்கு-சக்கர குறிகளும், நெற்றியில் திருமண்ணும், வாய்நிறைய நாராயண நாமமுமாக அவரைப் பார்க்கும்போது, வெளிநாட்டவர் என்றால் நம்பமுடியவில்லை!

ஆமாம்... அவரது இயற்பெயர் பெட்ரிகோ. 1979-ல் அர்ஜென்டினாவில், போனாசயஸ் எனும் ஊரில் பிறந்தவர். ரோமன் கத்தோலிக்க பாப்டிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர். வருதபா ரங்கப்ரியதாசன் எனும் பெயர், 2 மாதங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் கொங்கிலாச்சான் ஸ்ரீதர நரசிம்மாச்சார்யரிடம் தாஸ்ய நாமமாகப் பெற்றது.

தினமும் சந்தியாவந்தனம், ஏகாதசி தோறும் முறைப்படி விரதம், பெருமாள் ஸ்துதி என வைணவ அடியாராகவே வாழ்கிறார் வருதபா ரங்கப்ரியதாஸன்.

சரி, இந்து மதத்தில் குறிப்பாக வைணவத்தின் மீது இவருக்கான ஈர்ப்புக்குக் காரணம்?

''சிறு வயதில் வழக்கம்போல பள்ளிப் படிப்புடன் மதம் சார்ந்த கல்வியைத் தொடர்ந் தேன். ஆனாலும், படிப்பது ஒன்று செய்வது ஒன்று என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனாலேயே சமய கோட்பாடுகளின் மீது பிடிப்பில்லாமல் இருந்தது. கடவுளைப் பற்றியும் தெளிவில்லாத நிலை. நான் எதிர்பார்த்தது எல்லாம் யதார்த்தமும் நம்பகத் தன்மையுமான ஒரு வழிகாட்டல். அந்த தருணத்தில்தான், இந்து மதத்தின் 'ஈசாவாஸ்ய உபநிடதம்’ படிக்கக் கிடைத்தது. சப்தம், பிரமாணம் ஆகிய அடிப்படைகள் பற்றிய அதன் விளக்கங்கள் என்னைக் கவர்ந்தன. தொடர்ந்து படித்தேன். சில அத்தியாயங்களுக்கு பிறகு உபநிடதம் கடவுளைப் பற்றி பேச... அட, இதுவும் மற்ற நூல்களைப் போலத்தான் என்று படிப்பதை நிறுத்திவிட்டேன். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் அந்தப் புத்தகத்தை தொடவே இல்லை!

எனக்கு பதினைந்து வயது இருக்கும். பள்ளியில் வைணவ தோழர்கள் சிலர் கிடைத்தார்கள். பரஸ்பரம் நிறைய பேசுவோம்.  அவர்களது சித்தாந்தத்தை அறிய முற்பட்டபோது, ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி நிறையவே சொன்னார்கள். பகவத் கீதையும் தந்தார்கள். அவர்களுடன் பேசப் பேச கண்ணன் மீது அதீத காதலே வந்துவிட்டது'' என்று கூறிவிட்டு பெரிதாகச் சிரிக்கிறார் வருதபா ரங்கப்ரியதாசன்.

அவரே தொடர்ந்து, ''பிறகு என்ன நடந்தது தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். அன்று இரவே கீதையை முழுவதுமாகப் படித்து முடித்தேன். எனக்குள் பெரிய தாக்கம். இந்து மத வழிபாடுகளும் கோட்பாடுகளும் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும்படியே கற்றுத் தருகின்றன என்பது புரிந்தது. அதன் விளைவு, நான் பாதியில் விட்ட உபநிடதத்தையும் படிக்க ஆரம்பித்தேன்.'' - எனச் சிலிர்ப்புடன் சொல்கிறார்.

பகவத் கீதைகளின் சூத்ரங்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் வரதப்ப ரங்கப்ரியதாசன். 'கீதையின் 18 அத்தியாயங்களிலும் ஆயிரக் கணக்கான சூத்ரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவசியமானது. ஆகவே, ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று முக்கியமானது எனக் குறிப்பிட்டுச் சொல்வது சாத்தியம் இல்லை. அதன் ஒவ்வொரு அட்சரமும் மகத்துவமானது’ என்பது இவர் கருத்து. பகவத் கீதை மட்டுமல்ல; இன்னும் பல ஞான நூல்களையும் படித்திருக்கும் இவர், அவை கூறும் கதைகளையும், விஞ்ஞான ரகசியங்களையும், சூரிய சித்தாந்தம் முதலான அபூர்வ தகவல்கள் குறித்தும் பெரிதாகச் சிலாகிக்கிறார்.

கிட்டத்தட்ட 38 திவ்யதேசங்களுக்கு பயணித்திருக்கிறார் இவர். ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு உணர்வு கிடைத்ததாகச் சொல்லும் ரங்கப்பிரியதாசன், அதிகம் தங்கியிருந் தது ஸ்ரீரங்கத்தில்தான்.

வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசிக்கு தவறாமல் திருவரங்கம் வந்துவிடுவாராம். இங்கே 6 மாதங்கள் தங்கியிருந்து, கொங்கிலாச்சான் ஸ்ரீதர நரசிம்மாச்சார்யரிடம் தேவலகரிகளை கற்றுக் கொண்டதும் சமாஸ்ரானத்தைப் பெற்றுக் கொண்டதும், தனக்குக் கிடைத்த பெரும் பேறு என்கிறார்.

2010-ல் சம்ஸ்கிருதம் பயின்றதுடன், பஞ்சசுத்தம், உபநிடதம், ஆபஸ்தம்ப சூத்ரம் ஆகியவற்றை இவர் கற்றுக் கொண்டதும் ஸ்ரீரங்கத்தில்தான். ''திருவரங்கத்தில் இருக்கும்போது என் தாய் வீட்டில் இருப்பதுபோல் உணர்கிறேன்!'' என்கிறார் பெருமிதத்துடன்.

''புத்தகங்கள் நிறைய கற்றுத் தந்தன என்றாலும், அவற்றை எனக்கு அறிமுகம் செய்ததும் படிக்கும் வாய்ப்பை தந்ததும், நான் சிறு வயதில் சந்தித்த அந்த வைணவ நண்பர்கள்தான். அவர்களால்தான் இஸ்கான் (மிஷிரிசிளிழி) முதலாக எனது ஆன்மிக பயணத்தைத் துவங்க முடிந்தது'' என்று நன்றிப்பெருக்குடன் குறிப்பிடுகிறார் ரங்கப்ரியதாசன்.

தற்போது இவர் வசிப்பது பார்சிலோனாவில். ஆனாலும் தினமும் காலையில் நீராடல், இரண்டுவேளை சந்தியாவந்தனம், ஜபம், திருவாராதனம்... என குறையின்றி தொடர்கிறது இவரது வழிபாடு. ஏகாதசி தினம் என்றால், அரிசி, கோதுமை ஆகியவற்றைத் தவிர்த்து பால்- பழங்கள் மட்டுமே உணவு.

''சம்ஸ்கிருதம் நன்கு தெரியும். தமிழ் கொஞ்சம் கடினம் என்றாலும் அழகு'' என்றவர்,  நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் முதல் பாசுரத்தை பிறழாது பாடுகிறார்!

''வாழ்க்கைக்கு உதவாத கண்கட்டி வித்தைகளை எனக்குக் காட்டவில்லை வைணவம். மாறாக மது, மாமிசம் ஆகிய தீங்குகளை என்னிடமிருந்து முற்றிலும் நீக்கி, ஆன்ம பலம் தந்து என் வாழ்க்கைத் தரத்தையே மாற்றியுள்ளது' என்று நெகிழ்ந்தவர் தொடர்ந்து கூறினார்:

''இந்தியர்களுக்கு நான் சொல்லும் செய்தி... உங்களில் பலர் தங்களின் ஞானப் பொக்கிஷங்களின் மகிமையை உணராமல் சட்டென்று தங்களின் மதம் மற்றும் கலாசார்த்திலிருந்து வெளியேறி விடுகிறீர்கள். முதலில் நீங்கள் உங்கள் கலாசாரத்தின் மேன்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.' என்றார்.

சரி.. எதிர்காலத்தில் இவரது ஆன்மிக பாதை?

''அது ஸ்ரீமந் நாராயணன் விட்ட வழி' என்கிறார் மெல்லிய சிரிப்புடன்!

அனா என்ற ஆனந்தினி வருதபா ரங்கப்ரியதாசனின் மனைவி. சமீபத்தில்தான் இவர்களின் திருமணமும் இந்து மத முறைப்படியே நடந்துள்ளது.

ஆனந்தினி ஸ்பெயினில் கட்டடக் கலை பயின்றவர். கணவரைப் போலவே வைணவத்தில் பற்றுள்ளவர். ஸ்ரீமகா விஷ்ணுவே கண்கண்ட தெய்வம். காரணம்? ''அண்ணன் காட்டிய வழி'' எனச் சிரிக்கிறார். ஆமாம். ஆனந்தினியின் அண்ணன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது, நம் பண்பாடு கலாசாரத்தின் மீதான ஈர்ப்பாலும், பிருந்தாவன தரிசனத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களாலும் விஷ்ணு பக்தராகி

விட்டார். அவர் தாய்நாடு திரும்பியபோது, அவரிடம் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் சகோதரிக்கு வியப்பளித்ததாம். அவர் மூலம் ஆன்மிகப் பெரியவர்களது சந்திப்பும் அவர்களது சொற்பொழிவுகளும் தன்னை விஷ்ணு பக்தையாகிவிட்டதாகச் சொல்லிச் சிரிக்கிறார் ஆனந்தினி. எப்போதும் புன்னகை, பக்தி, பணிவு... என கணவருக்கு மிகச் சரியான இணையாகத் திகழ்கிறார் ஆனந்தினி!

நன்றி: சக்தி விகடன்

ஸ்ரீரங்கம் டு அமெரிக்கா - ஸ்கைப் வழியாக தர்ப்பணம்!
‘சுக்லாம் பரதரம் விஷ்ணும்...’ என ஸ்ரீரங்கத்தில் இருக்கும் தமது இல்லத்திலிருந்து பூஜையைத் தொடங்குகிறார் மாதவன். அமெரிக்காவில் இருந்தபடியே ஹரிகிருஷ்ணன் குடும்பத்தினர் அந்த பூஜையில் பயபக்தியோடு கலந்து கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்கின்றனர். அதெப்படி ஸ்ரீரங்கத்தில் நடக்கும் பூஜையில் அமெரிக்காவில் இருந்தபடி கலந்துகொள்ளமுடியும்.

‘சாட்’ செய்வதற்காக நம்மில் பலர் பயன்படுத்திவரும் ஸ்கைப் தொழில்நுட்பம் மாதவனுக்குக் கைகொடுக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு பூஜை, தர்ப்பணங்களை ஸ்ரீரங்கத்தில் இருந்தபடியே ‘ஸ்கைப்’ வழியாகச் செய்கிறார் மாதவன்.

ஒருமுறை தெரிந்த நபருக்கு கிரஹப்பிரவேசம் செய்து வைக்க சென்னை வந்தாராம். அங்கே சந்தித்த ஒருவர் தாம் அமெரிக்காவில் வசிப்பதாகவும், மிகத் தொலைவிலுள்ள வாத்தியார் (சாஸ்திரிகள்) வீட்டுக்குச் சென்று அமாவாசை தர்ப்பணம் செய்ய சிரமமாக இருக்கிறது என்றும் சொன்னாராம். அதனால், ஸ்ரீரங்கத்திலிருந்தே டெலிஃபோனில் மந்திரங்களைச் சொல்லி தர்ப்பணம் செய்து வைக்க முடியுமா என்று கேட்டாராம். மாதவனும் ஒப்புக் கொண்டாராம். இதுதான் தொடக்கப் புள்ளி. டெலிஃபோனுக்குப் பிறகு மைக், கேமரா, கம்ப்யூட்டர் மூன்றும் இணைந்த ஸ்கைப் தொழில்நுட்பத்தில் தர்ப்பணம், ஆவணி அவிட்டத்தை இந்தியாவில் இருந்தபடியே வெளிநாடுகளில் நடத்தி வருகிறார் மாதவன்.

சார், தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்காகப் போறவங்களுக்கு அரிசி, பருப்பு போன்றவை கிடைச்சுடுது. ஆனால், ஆவணி அவிட்டம், அமாவாசை தர்ப்பணம் செய்யறதுக்கு வாத்தியார் கிடைப்பது அரிது. இந்தக் குறையைப் போக்க ஸ்கைப் டெக்னாலஜி ரொம்ப உதவியாக இருக்கு. நமது இந்துமத சாஸ்திரத்தில் பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம் காரியங்களை எக்காரணம் கொண்டும் ஒருவன் விட்டுவிடக்கூடாதுன்னு சொல்லப்பட்டிருக்கு" என்று சொல்லிக் கொண்டே நமக்கு டெமோ செய்து காட்டுகிறார் மாதவன். அன்று அமாவாசை; இரவு ஒன்பது மணியளவில், கலிபோர்னியாவில் இருந்து மாதவனுக்கு ஒரு ஃபோன். அழைத்தவர் ரெடி என்று சொன்னவுடன், மாதவன் கம்ப்யூட்டரை ஆன் செய்து, பொருத்தப்பட்டிருக்கும் மைக்கையும் ஆன் செய்கிறார். இ-மெயிலை ஓப்பன் செய்து சாட் பகுதியைத் தெரிவு செய்தவுடன் கலிபோர்னியாவில் இருப்பவர் மானிட்டரில் வருகிறார். மாதவன் சொல்லச் சொல்ல தர்ப்பண மந்திரங்களைக் கேட்டுத் திருப்பிச் சொல்லி, தர்ப்பணத்தை அரை மணி நேரத்தில் முடிக்கிறார்.

மந்திரங்களை இரவில் சொல்வது சரியா?"

இங்கே இரவாக இருக்கும்போது அங்கே பகல். கர்மத்தைச் செய்து வைப்பவர் இரவில் சொன்னாலும், செய்பவர் பகலில் செய்வதால் தவறில்லை."

‘பரதகண்டே, பாரதவருஷே’ என பாரதத்தைக் குறிக்கும் சொற்கள் வருகிறதே... வேறொரு கண்டத்தில் இருப்பவர் இதைச் சொல்வது முரண்பாடு இல்லையா?

பாரத தேசத்தின் பெயர் மட்டுமில்லை. ‘யமுனா’, ‘சிந்து’, ‘தப்தி’, ‘சரஸ்வதி’ என நமது நாட்டின் நதிகளின் பெயர்களும் வருகின்றன. எந்த நாட்டில் இருந்தாலும் தமது தாய்நாட்டையும், அதன் வளத்தையும் சொல்லி வழிபடுவதில் முரண்பாடு இல்லை."

இதை சாஸ்திரங்கள் அனுமதிக்கிறதா?

ஒருகாலத்தில் கோயில்களில் மட்டுமே உபன்யாசங்கள் நடந்துகொண்டிருந்தன. இப்போது லைவாக டி.வி.யில் பார்க்க முடிகிறது. மொபைலில் காலர்டியூனாக வேத மந்திரங்களை வைத்திருக்கின்றனர். சி.டி., டி.வி.டி.க்களில் விஷ்ணு சகஸ்ரநாமம், அஷ்டோத்திரங்களைக் கேட்டு பாராயணம் செய்கிறார்கள். நமது சாஸ்திரங்கள் தொழில் நுட்பங்களை எதிர்க்கவில்லை."

ஸ்கைப் மூலமாக வேறு என்ன செய்கிறீர்கள்?

எனக்குத் தெரிந்த தம்பதிகள் குழந்தைக்கு, பிறந்த பதினைந்தாவது நாளில் புண்ணியாஜனம் ஸ்கைப் மூலம் செய்து வைத்திருக்கிறேன். அமெரிக்கர்களில் சிலர் ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், ஜோசியம் பார்த்து சில ஹோமங்களைச் செய்து தரச் சொல்வார்கள். சதாபிஷேகம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், மஹாலெக்ஷ்மி ஹோமம் போன்றவற்றைப் பதிவுசெய்து, இ-மெயில் மூலம் இந்த அமெரிக்கர்களுக்கு அனுப்புவேன். ஸ்ரீரங்கம் நரசிம்ம அய்யங்கார் என் குரு."

எதிர்காலத்தில் திருமணம் கூட ஸ்கைப் வழியாக நடந்தால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை!

- நன்றி கல்கி

28 Comments:

பழனி.கந்தசாமி said...

அதிசயம் + அபூர்வம்

jaisankar jaganathan said...

//எதிர்காலத்தில் திருமணம் கூட ஸ்கைப் வழியாக நடந்தால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை!//

குழந்தை??????

Anonymous said...

foreign la irunthu ithu maathiri oruthar thaan irupaanga...but namma oor la irunthu atleast 1 latcham peru full time America / english kaaran aayitaanga!

Anonymous said...

இந்து மதம் ஏன் ஒருவரை மதம் மாற்றுவதில்லை என்பதற்கு , புதிதாக வருபவர்க்கு எந்த ஜாதியை ஒதுக்குவது என்ற குழப்பமே காரணம் என்று மாற்று மத நண்பர்கள் கூறுகிறார்களே ? இவரை மற்ற ஐயங்கார்கள் ஒப்புக் கொள்வார்களா ? - யாராவது விளக்கம் சொல்வீர்களா ?

jaisankar jaganathan said...

வெள்ளைக்காரன் ஐயங்காரா மதம் மாறலாம். ஆப்ரிக்க நீக்ரோவுக்கு அந்த சலுகை உண்டா?

அப்பாதுரை said...

பொட்டில் அடித்தீர்கள் jaisankar jaganathan.

MARA THAMILAN said...

பிராமணன் கடல் தாண்டினால் அவன் மிலேச்சன் ஆகி விடுவான் னு சொன்னவங்க இன்னைக்கு கைப் வழியாக வேதம் ஒதுராங்களாம். இப்போ அந்த வேதம் கெட்டுபோகாதா?

Anonymous said...

////வெள்ளைக்காரன் ஐயங்காரா மதம் மாறலாம். ஆப்ரிக்க நீக்ரோவுக்கு அந்த சலுகை உண்டா?////விஷ்ணு பக்தன் என்றாலே அவன் வைணவன் தானே என்று எல்லோருக்கும் பூணூல் போட்டு அடியாராக மாற்றியவர் ராமானுஜர்தான்.

ConverZ stupidity said...

//வெள்ளைக்காரன் ஐயங்காரா மதம் மாறலாம். ஆப்ரிக்க நீக்ரோவுக்கு அந்த சலுகை உண்டா?
//


பூணூல் போட்டவன்லாம் பிராமணன் இல்ல, நினைக்க கூடாதத நினைக்கிறவன் பிராமணன் இல்ல, மறக்க கூடாதத மறக்றவன் பிராமணன் இல்ல, கண்டத்த தின்றவன் பிராமணன் இல்ல. ஞானத்தை தேடுறவன் தான் பிராமணன். ஒழுக்கம் இருக்குரவந்தான் பிராமணன், யாரையும் வெருக்கதவந்தான் பிராமணன்,

பிராமணத்துவம் பிறப்பால் வர்றதில்லை, ஒழுக்கம், எண்ணத்தால, செய்கையால தூய்மை, பிரம்மத்தை தேடுறது, வேதம் தினம் கொஞ்சமாவது ஓதுவது, ஓதிய படி வாழ்வது இதை செய்ரவந்தான் பிரமணன்,

பி.கு: சந்தியா வந்தனம் கடந்த முன்னொரு வருஷமா பிராமணனா பிறந்தவன் மட்டும் செய்துவர்றான்(அதுவும் இன்னைய தேதில சொற்பம்). அதுக்கு முன்ன கூடவே க்ஷத்ரியனும், வைசியனும்
(முதல் மூணு வர்ணமும்) செஞ்சிக்கிட்டுதான் இருந்தாங்க

ConverZ stupidity said...

// jaisankar jaganathan said...
வெள்ளைக்காரன் ஐயங்காரா மதம் மாறலாம். ஆப்ரிக்க நீக்ரோவுக்கு அந்த சலுகை உண்டா?//

// அப்பாதுரை said...
பொட்டில் அடித்தீர்கள் jaisankar jaganathan.//

நீக்ரோ மட்டமானவன்னு என் நினைக்கணும் ? ஒரு வேளை வெள்ளைக்காரன் அவன மட்டமானவன்னு இன்னமும் சொல்றதாலையா ? இல்லை எல்லா விஷயத்துலயும் அவன்தான் சரின்னு நீங்க நினைக்கிரதாலையா? தப்பு இப்போ யாரோட எண்ணத்துல .. வெள்ளயன்கிட்டயா இல்ல
ஜெய்ஷங்கர் ஜெகன்னாதன் கிட்டா... இல்ல அப்பதுரைகிட்டயா ? காரணமே இல்லாம யாரையாவது தாழ்வா நினைச்சிட்டு அவன உயர்துறதா நினைக்கிறதும், அவன சப்போர்ட் பண்றதா நினைக்கிறதும் யாரோட தப்பு?

தப்பு உங்க attitude-ல இருக்கு. தேவையே இல்லாம தன்னை தாழ்வா நினைசிக்கிறது.. அப்புறமா சுத்தி இருக்குறவன குறை சொல்றது. கிணத்துல சிங்கம் தன்னோட நிழல பார்த்து அதோட சண்டை போடா கிணத்துல குதிச்ச கதைதான் இது.

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனை யதுயர்வு

Anonymous said...

எங்கே மஞ்சள் கமெண்ட்?

குருவி,
குன்னூர்

Anonymous said...

Ramanujar brought everybody to vaishnavam irrespective of caste.
there is no imam in hindu religion to give fatwa against anybody.
from whom you want recognition.
still most love marriages are accepted in brahmin community only without "honour killing".
if JJ wants to bring some negro into vaishnavam nobody will give fatwa. Gopalasamy

Anonymous said...

ConverZ stupidity -- Well Said!!

The Vedas never reject anyone based on color or creed. It is the people who misunderstood its truths. Be it black, brown or white, be it of any caste, the one who searches for Gnana or Brahmam is Brahmana and not just because he/she is born in a brahminical caste or just that he wears poonal.

Gone are the days when Brahmin-hatred was used to do politics. Now its changed dudes. Wake up and wipe your back.

jaisankar jaganathan said...

//ConverZ stupidity said...//

அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக தடையாய் இருப்பது எது?

கார்த்தி said...

jaisankar jaganathan:

அர்ச்சகராய் இருப்பதற்கு பல்வேறு அனுஷ்டானங்களை மேற்கொள்வது அவசியம்.

பிராமண,க்ஷத்திரிய,வைசிய வருணத்தாருக்கு மட்டும் வேதம் ஓதினர். சூத்திரருக்கு வேதம் ஓதாததன் காரணம், வேதம் ஓத அதிகாலை நேரமே சிறந்தது, அந்நேரத்தில் விவசாய வேலைகளை செய்யும் சூத்திரர்கள் வேதம் ஓதினால் உணவு உற்பத்தி பாதித்து எல்லா வருணத்தாரும் வாடும் நிலையேற்படும். ஆயினும் அவர்கள் விரும்பினால் வேதம் ஓதலாம், தடையேதுமில்லை. தீக்ஷை வாங்க நான்காம் வருணத்தாருக்கு திருவரங்கத்தில் ஒரு மடம் இருக்கிறது.

Anonymous said...

jj >>
unnaipondrorin arivinam.

Anand Ganesh V said...

//jaisankar jaganathan said...
வெள்ளைக்காரன் ஐயங்காரா மதம் மாறலாம். ஆப்ரிக்க நீக்ரோவுக்கு அந்த சலுகை உண்டா?//

The usual bull shit question. There are many African blacks who are converted in ISCKON and other Hindu organizations.

To oppress African-origin people, Hinduism is NOT christianity or Islam.

Jagannathan, you first come out of your colonial mindset.

ConverZ stupidity said...

// Anand Ganesh V said...
//jaisankar jaganathan said...
வெள்ளைக்காரன் ஐயங்காரா மதம் மாறலாம். ஆப்ரிக்க நீக்ரோவுக்கு அந்த சலுகை உண்டா?//


To oppress African-origin people, Hinduism is NOT christianity or Islam.
//

Well said Anand Ganesh

அன்பு said...

Anand Ganesh V said...
//jaisankar jaganathan said...
வெள்ளைக்காரன் ஐயங்காரா மதம் மாறலாம். ஆப்ரிக்க நீக்ரோவுக்கு அந்த சலுகை உண்டா?//

The usual bull shit question. There are many African blacks who are converted in ISCKON and other Hindu organizations.

To oppress African-origin people, Hinduism is NOT christianity or Islam.

Jagannathan, you first come out of your colonial mindset.
//

அப்படின்னா அவா ஒருத்தரோட பேட்டிய போடலாமே, வெள்ளைக்காரன் பேட்டியை போட்டு தன்னை அவனுக்கு இணையாக காட்டுவதற்கு முயல்வது கூட ஒரு வித தாழ்வு மனப்பாண்மை தான்

கார்த்தி said...

அன்பு: மேற்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஆப்பிரிக்க கருப்பினத்தவர் இந்து மதத்திற்க்கு விரும்பி மாறி, ஒரு ஆலயம் கட்டி, நித்திய பூஜைகளை செய்துவருகிறார். தமிழ்ஹிந்து வலைத்தளத்தில் தேடிப்பாருங்கள்

ConverZ stupidity said...

க்ஷத்ரியன் தேசத்தையும், அதன் மக்களையும் தாய் போல் இருந்து காப்பாற்றவேண்டியவன்; போர்கள் புரியும் சூழ்நிலைக்கு அவன் தள்ளபடுபவன், அதற்க்கு கடுமை, வலிமை மற்றும் ரஜோ குணம் தேவை, ஆகவே அவன் மாமிசம் உன்ன, மது அருந்த அனுமதி உண்டு. (இவை இரண்டும் மனதில் கோப உணர்வுகளை தூண்டுபவை). மாமிசம் உண்பதற்கு பிரயச்சிதமாக அவன் போர்க்களங்களில் ரத்தம் சிந்துவான்.

வைசியன் தேசத்தின் முதுகெலும்பான பொருளாதாரத்தை தாங்கி பிடிப்பவன், வியாபாரத்தின் மூலம். அவன் போர்க்களம் போகாமல் நாட்டிலிருந்தே மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது. அவன் பிரம்மத்தை அறிய அல்லும் பகலும் ஈடுபட முடியாது. இவன் அமர்ந்து கொண்டே வேலை செய்வதால் இவனுக்கு மாமிசம் உணவு தேவை இல்லை. புத்தி தெளிவா இருக்கணும் அதனால மதுவும் தேவை இல்லை. மாறாக அதிக வேலை இல்லாமல் எளிதாக ஜீரணிக்க தோதான பால் மற்றும் காய்கறிகளே ஏற்ற உணவு.

சூத்திரன் பயிர்த்தொழிலில் ஈடுபடவேண்டியவன், கடுமையான வேலைகளை செய்பவன். பசும் பால் மற்றும் உணவு வகைகளை அவன் உண்டு வந்தாலே போதும் மாமிசம் உன்ன வேண்டியதில்லை. பசும் பால் உட்கொள்ளுவதன் மூலம் அவன் கடுமையான வேலைகளுக்கு ஈடு கொடுக்க முடியும் கவனிக்கவும், அவன் மாமிசம் உன்ன தேவையில்லை. அதீத களைப்பை போக்குவதற்காக தேவையெனில் மது உட்கொள்ளலாம்.

மேற்கூறிய காரணங்களால் இவர்களால் (பூஜை புனஸ்காரங்களுக்கு தேவையான உச்சபட்ச)அனுஷ்டானத்துடனோ, சாத்வீக மன நிலையிலோ இருக்க முடியாது. க்ஷத்ரிய, வைசிய, சூத்ரர்கள் அவர்தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்வதன் மூலமே இறைவனின் திருவடிகளை அடைந்திட முடியும்,

ஆனால் பிராமணன் வேதா அத்யாயனம் செய்யணும், அதுக்கு புத்தி தெளிவா இருக்கணும், அதுக்கு அதிகமா சாப்பிட கூடாது,வேதத்தை சாத்வீகமான மனநிலையில இருந்து புரிஞ்சு அதுபடி நடக்கணும் அதுக்கு மாமிசம், மது உட்கொள்ள கூடாது (உட்கார்ந்து படிக்கிறவனுக்கு எதுக்கு இதெல்லாம்), உலக க்ஷேமத்துக்கு தெளிவான பிரார்த்தனைகளோட பூஜை புனஷ்காரங்களை செய்யணும். இதுக்காகவே கோயில் பூஜை முறைகள் இவ்வனுக்கு உரித்தானது.

முக்கியமான விஷயம் பொதுவாவே மனுதர்மத்தை எல்லோரும் குறை கூறுவதுண்டு. ஆனால் அந்த மனுதர்மம் அனுஷ்டானம் தவறும் பிராமணனுக்கு மற்ற மூவர்ணத்தாரை விட தண்டனையை அதிகமாகவே விதிக்கிறது. அதே மனுதர்மம் நாலாவது வர்ணத்தாரை மற்ற மூவர்ணத்தாரும் காப்பாற்ற வேண்டிய கடமையை உறுதியாக வலியுறுத்துகிறது. இதைதான் மோடி சில மதங்களுக்கு முன்னாள் கூறினார், உடனே நம்ம ஊரு சிக்குளார் பத்திரிக்கை எல்லாம் மோடி ஜாதிவெறிய தூண்டுராருன்னு திரிச்சு நியூஸ் போட்டானுங்க.

மேலும் ,
விஷ்ணு பிராமணனை முகத்திலிருந்தும், க்ஷத்ரியனை தோளிலிருந்தும், வைசியனை தொடையிளிருந்தும், சூத்ரனை திருவடிகளிளிருந்தும் பிறக்க வைத்தார் என்று வேதம் கூறுகிறது.

திருவடிகளில் இருந்து பிறந்ததால் சூத்திரன் தாழ்வானவன் என்று ஒரு கருத்து நிலவுகிறது. சற்று யோசிக்கவும், இது சரியெனில் பகவானின் முகத்தை விட, தோள் கேவலமானதேன்றும், தோளை விட தொடை கேவலமானதேன்றும் ஆகிறது. அனைத்து கல்யாண குணங்களுக்கும் பிறப்பிடமாகவும், தர்மத்தின் உறவாகவும் உள்ள இறைவனின் அங்கங்களை எவ்வாறு அப்படி கூறமுடியும்.

மட்டும் ஒரு கோணத்தில் யோசித்தால் நாம் அனைவரும் பகவானை (பொருள், பதவி, வெற்றி, மோக்ஷம்) வேண்டும்பொழுது அல்லது அவனை சரணம் அடியும் பொழுது "உன் முகத்தை பிடித்து கேட்கிறேன், உன் தோளை பிடித்து கேட்கிறேன், உன் தொடையை பிடித்து கேட்கிறேன் என்னை காப்பாற்று" என்று யாரும் கேட்பதில்லை, மாறாக "உன் திருவடிகளில் சரணடைகிறேன் என்னை நீயே ரக்ஷிக்க வேண்டும்" என்று தான் பிரார்த்திக்கிறோம். அப்படின்னா திருவடியை (பொருள், பதவி, வெற்றி, மோக்ஷம் இவற்றை வேண்டி ) பிரார்திக்கிற நாம் கேவலமானவர்களா ? ஆகவே திருவடிகளில் இருந்து தோன்றியவன் தாழ்வானவன் என்பது முற்றிலும் தவறான கருத்து மட்டுமல்ல அவ்வெண்ணத்தை கொள்வது முற்றிலும் முட்டாள்தனமானது. பகவானோ, பகவானோட மூச்சுகாற்றன வேதமோ யாரையும் தாழ்வானவன்னு சொன்னதில்லை. மாற மனித குலம் செம்மையாக இருப்பதற்கு இந்த நால்வரும் அவரவர் கடமையை சுயநலமில்லாமல் செய்யவேண்டியது அவசியமுன்னு அறிவுறுத்துது (வேதம் கட்டளையா எதுவும் சொல்றதில்ல, நல்லத்த சொல்லும், அல்லாதத செய்தா தீமை வருமுன்னு சொல்லும், முடிவெடுக்குற கருத்து சுதந்திரத்த மனிதன்கிட்டாயே விட்டுடும்)

ConverZ stupidity said...

//அன்பு said...

அப்படின்னா அவா ஒருத்தரோட பேட்டிய போடலாமே, வெள்ளைக்காரன் பேட்டியை போட்டு தன்னை அவனுக்கு இணையாக காட்டுவதற்கு முயல்வது கூட ஒரு வித தாழ்வு மனப்பாண்மை தான்//

இது தன்னை அவனுக்கு இணையா காட்டுற முயற்சி இல்லை. நம்ம பழக்க வழக்கங்கள் உயர்வானவை. அதை சிலர் புரிஞ்சுகிட்டு அதையே நம்மவர்கள் பலர் பின்பற்றினார்கள், உயர்ந்தார்கள், இப்போ காலம் மாறி நம்மவர்களில் சிலர் பின்பற்றுகிறார்கள்.

வேறு எதோ ஒரு வாழ்க்கை முறையில் இருந்த ஒருவர் நமது பழக்க வழக்கங்களின் உயர்வை உணர்ந்து அதை ஏற்று கொண்டுள்ளார், ஒருத்தர் உயர ஆரம்பிக்கிறாருங்கிற சந்தோசத்தை பகிர்ந்துக்கிறோம்.

இந்த இடத்துல நாம உயர்ந்தவர்கள்ன்னு சொல்லிக்களை, நாம பின்பற்றுகிற வாழ்க்கை முறை தேடி வருகிற எல்லோரையும் உயர்த்துகிற முறைன்னு சொல்றோம்.

வெள்ளைக்காரன் உயர்வானவன்னு நீங்க நினைச்சிகிட்ட அதுக்கு மத்தவங்க என்ன பண்ண முடியும். பாரதமோ சனாதன தர்மமோ யாரையும் தாழ்வா நினைச்சதில்ல. நாம தான் trignometry, astronomy, metallurgy, Number System போன்றவைகளில் pioneer. அதுக்காக நாம யாரையும் தாழ்வா நினைக்கிறதில்ல, நம்மள உயர்வா நினைசிகிரதுமில்லை, மாறாக எல்லோரும் சமமுன்னு நினைக்கிறோம்

Anonymous said...

//வெள்ளைக்காரன் ஐயங்காரா மதம் மாறலாம். ஆப்ரிக்க நீக்ரோவுக்கு அந்த சலுகை உண்டா?
//

why he should convert toiyengar? he can be a Devan or NADAR or SC/ST.. after that he can be leader of D*.* and generate 100000 times higher than african country income..

குடுகுடுப்பை said...

மேலும் ,
விஷ்ணு பிராமணனை முகத்திலிருந்தும், க்ஷத்ரியனை தோளிலிருந்தும், வைசியனை தொடையிளிருந்தும், சூத்ரனை திருவடிகளிளிருந்தும் பிறக்க வைத்தார் என்று வேதம் கூறுகிறது.

திருவடிகளில் இருந்து பிறந்ததால் சூத்திரன் தாழ்வானவன் என்று ஒரு கருத்து நிலவுகிறது. சற்று யோசிக்கவும், இது சரியெனில் பகவானின் முகத்தை விட, தோள் கேவலமானதேன்றும், தோளை விட தொடை கேவலமானதேன்றும் ஆகிறது. அனைத்து கல்யாண குணங்களுக்கும் பிறப்பிடமாகவும், தர்மத்தின் உறவாகவும் உள்ள இறைவனின் அங்கங்களை எவ்வாறு அப்படி கூறமுடியும். //

Asingama illai.thoo

குடுகுடுப்பை said...

மேலும் ,
விஷ்ணு பிராமணனை முகத்திலிருந்தும், க்ஷத்ரியனை தோளிலிருந்தும், வைசியனை தொடையிளிருந்தும், சூத்ரனை திருவடிகளிளிருந்தும் பிறக்க வைத்தார் என்று வேதம் கூறுகிறது.
//
nee romba nallavan pa.

குடுகுடுப்பை said...

மனிதனாக பரிணாமம் அடைந்த காலத்திற்கு முன்பே, என் அறிவிற்கு தெரிந்த வரை மனித இனம், நெத்தியிலோ, தோளாலோ, காலாலோ படைக்கப்படவில்லை, பூலால்தான் படைக்கபட்டிருக்கிறது. அசிங்கமாக எழுதியற்கு மன்னிக்கவும், ஆனால், தூக்கி எறிந்து விட்டு கடக்க வேண்டிய ஆபாச, மனித விரோத கருத்தை தூக்கி சுமப்பதை விட நான் எழுதி இருப்பது ஆபாசம் அல்ல.

தணல் said...

மதம் என்ன போதித்தது என்பது தான் நடைமுறையில் கையாளப்பட்டதா? கையாளப்படுகிறதா? எனில் ஏன் பிராமண சாதியில் பிறக்காதவர்களை ஆனால் அர்ச்சகர் ஆவதற்கான தேர்ச்சி அடைந்தவர்களை ஆகம விதிகளைக் காரணம் காட்டி வேலை அளிக்க மறுக்கிறீர்கள்?

பிராமணன் பிறப்பின் அடிப்படையில் உருவாவதில்லை என்றீர்கள். என்றால் சூத்திரன் எந்த அடிப்படையில் உருவாகிறான்? பிறப்பின் அடிப்படையில் அவன் பிறந்த சாதியின் அடிப்படையில் தானே?

//பாரதமோ சனாதன தர்மமோ யாரையும் தாழ்வா நினைச்சதில்ல. //

ஆனால் அதைப் பின்பற்றுபவர்கள் அப்படித்தானே நினைத்தார்கள்? நினைக்கிறார்கள்?

//மாற மனித குலம் செம்மையாக இருப்பதற்கு இந்த நால்வரும் அவரவர் கடமையை சுயநலமில்லாமல் செய்யவேண்டியது அவசியமுன்னு அறிவுறுத்துது //

அதாவது நான் பீ அள்ளுபவருக்குப் பிறந்தால் எந்தச் சுயநலமும் இல்லாமல் மனநிறைவுடன் பீ அள்ளிக்கொண்டு இருக்கவேண்டும், எனது வம்சமும் அதையே மனநிறைவுடன் செய்ய வேண்டும், அப்படித்தானே?

//ஆனால் அந்த மனுதர்மம் அனுஷ்டானம் தவறும் பிராமணனுக்கு மற்ற மூவர்ணத்தாரை விட தண்டனையை அதிகமாகவே விதிக்கிறது. அதே மனுதர்மம் நாலாவது வர்ணத்தாரை மற்ற மூவர்ணத்தாரும் காப்பாற்ற வேண்டிய கடமையை உறுதியாக வலியுறுத்துகிறது.//

மனுதர்மத்தின் சாதிக் கலப்பு விதிகளைப் படித்திருக்கிறீர்களா? அந்தப் புத்தகத்தைக் கீழே போடாமல் தூக்கிப் பிடித்துக் கொண்டே இருக்கும் வரை விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். விமர்சனங்களே உலக நியதியாகும்!

Anonymous said...

நண்பர்களே...

// ConverZ stupidity //
பல்வேறு மனிதர்கள் கடவுளின் பல்வேறு உடல் பாகங்களிலிருந்து பிறந்தார்கள் என்று வேதங்கள் சொல்லவில்லை - புராணங்கள் சொல்கின்றன. வேதங்களுக்கும் புராணங்களுக்கும் மலையளவு வித்தியாசம் உண்டு.

//குடுகுடுப்பை//
நீங்கள் சொல்வது பாதி சரி :) "அதால்" உருவாக்கப் படுகிறது. படைப்பது இறைவனே என்கிறது வேதங்கள். அதைப் பின்பற்றுவதில் மனிதரிடையே குழப்பங்கள் உண்டே தவிர வேதங்களில் தவறில்லை. ஆகம விதிகளைக் காட்டி பிற ஜாதியினரை அர்ச்சகராக ஆக்க விடாமல் செய்தால், அதுவும் அப்படி யாரும் அர்ச்சகராகலாம் என்பது வேதங்களில் உண்டென்றால் அது கண்டிப்பாக கடைபிடிக்கப் படவேண்டிய ஒன்று தான்.

மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை, அதே போல அவர்தம் வர்ணத்திலும் உயர்வு தாழ்வில்லை.

// தணல் //
சூத்திரனும் பிறப்பால் ஆவதில்லை. விஸ்வாமித்திரர் ஒரு க்ஷத்ரியர், ஆனால் அவர் பிரம்மரிஷி ஆனார். வேதவியாசரும் அப்படியே. வேதங்களின் படி பிராமணருக்குரிய தர்மத்தைப் பின்பற்றாதவர் சூத்திரர் தாம். அப்படிப் பார்க்கையில் பாதிக்கு மேல் பிராமணர் சூத்திரர் தான் இன்று. ஆனால் பீ அள்ளுவது என்பது பிரிட்டிஷ் காரன் கொணர்ந்த ஒரு பழக்கம் என்ற உண்மை இங்கு பலருக்குத் தெரியாது. வேத காலத்தில் மிக பண்பட்ட நாகரிகத்தில் வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். ஆனால் நீங்கள் சொல்வதில் உண்மையில்லை. ஒரு பிராமண பிறப்பில் பிறந்தவனுக்கு போர்க்கலையில் ஆர்வமுண்டானால் அவனால் க்ஷத்ரியனாக ஆக முடியும், துரோணர் அவ்வாறே ஆனவர்.

மேற்சொன்னது போல, வேதங்களைப் புரிதலில் தவறுண்டு, வேதங்களில் அல்ல.