
அன்புள்ள பேயோன்,
எனக்கு நீங்கள் யார் என்று தெரியாது, ஆனால் நீங்கள் வார வாரம் விகடனில் எழுதிவருவதை பார்க்கிறேன். எனக்கு தமிழ் படிக்க தெரியாது அதனால் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளேன். அப்படியே படிக்க தெரிந்தாலும் விகடனில் படிக்க ஒன்றும் இல்லை பார்க்க தான் நிறைய இருக்கிறது. தமிழ் படிக்க தெரியாது என்ற ஒரே ஒரு குறை தான், மற்றபடி ரொம்ப சந்தோஷமாகவே இருக்கிறேன்.
சரி கேள்விக்கு வருகிறேன். முதல் பேயோன் பக்கத்தில் மேலே உள்ள படத்தை பார்த்தவுடன் உங்கள் மீது காதல் கொண்டேன். அதே படத்தில் உங்கள் பின்னாடி இருக்கும் உங்கள் மனைவி என்னை முறைப்பது மாதிரியே தெரிந்ததால் காதலிக்கும் ஆசையை உடனே கைவிட்டேன். இது எனக்கு பழக்கம் தான்.
( 0 0 0 0 0 - 5 சொட்டு கண்ணீர் )
ஆனால் வாசகர் கடிதம் எழுதாமலேயே என்னை மாதிரி படம் பார்க்கும் வாசகர்களின் ஆசையும் பூர்த்தி செய்துவிட்டீர்கள். அடுத்த இதழிலிருந்து பேயோன் பக்கத்தில் இந்த அம்மணியை கட் செய்து போட்டுவிட்டீர்கள். ( முதல் பேயோன் பக்கத்துக்கு பிறகு மற்றவை சுமார் என்ற விமர்சனம் இதனால் கூட இருக்கலாம், அதை பற்றி கவலைப்படாமல் தொடந்து உங்கள் பக்கத்தை பார்த்து வருகிறேன்). நிற்க.
விகடன் ஆபீஸில் வேலை செய்யும் ஒருவரை நேற்று டிராபிக் சிக்னல் சிகப்பாக இருக்கும் போது 60 செகண்டுக்கு பார்த்தேன். படம் விஷயத்தை பற்றி கேட்டதற்கு "உங்களுக்கு பாம்பு கண்கள் சார் எப்படி கண்டுபிடித்தீர்கள் ? " என்றார். அதற்குள் சிக்னல் பச்சையாக மாற போகிறபோக்கில் "பேயோன் சார் தான் எடுக்க சொல்லிவிட்டார்" என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் என்று அடிக்கடி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் நீங்கள் அப்படி இல்லை என்று நிருபித்துவிட்டீர்கள்.
இஞ்ஞனம்,
Mrs.வெற்றிவேல் ஐயங்கார் ஐ.பி.எஸ்.
( ஐ.பி.எஸ் என்று போட்டதற்கு காரணம் கேஸ் வராமல் தடுக்க தான் )
மற்ற எழுத்தாளர்களுக்கு வாசகர் கடிதங்கள் தொடரும்... ( இட்லிவடைக்கும் வரவேற்கப்படுகிறது
!)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, September 15, 2012
பேயோன் பக்கம் - ஒரே ஒரு கேள்வி
Posted by IdlyVadai at 9/15/2012 01:50:00 AM
Labels: வாசகர் கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)











17 Comments:
இதுக்கு Kamatari Fujiwara -இவருக்கே லட்டர் போட்டிருக்கலாம்.
Mrs.வெற்றிவேல் ஐயங்கார் ஐ.பி.எஸ்.என்பது பேயோனின் மற்றொரு பெயர் என்று நினைக்கின்றேன்.
எனக்கு தமிழ் படிக்க தெரியாது அதனால் பார்க்கிறேன் // ஓஹோ? ஆனால் தமிழ் எழுத மட்டும் தெரியுமா! ஆச்சரியமா இருக்கு!
பிளஸ் உலகில் நடப்பதை இட்லி வடையும் எட்டி பார்க்கிறது போலும் (கேஸ் பற்றி சொன்னதால் சொல்கிறேன் ) :))
"உங்களுக்கு பாம்பு கண்கள் சார் எப்படி கண்டுபிடித்தீர்கள் ?
Mrs.வெற்றிவேல் ஐயங்கார் ஐ.பி.எஸ்.
சார், Mrs. இடிக்குதே இட்லி...
//"உங்களுக்கு பாம்பு கண்கள் சார் எப்படி கண்டுபிடித்தீர்கள் ?
Mrs.வெற்றிவேல் ஐயங்கார் ஐ.பி.எஸ்.
சார், Mrs. இடிக்குதே இட்லி...//
மதம் மாறிய கொஞ்சம் பெண்மை போய் ஆண்மை வந்துவிட்டது. வேற ஒன்றும் இல்லை. !
இந்த எழுத்து நடை சாருவைப்போல் இருக்கிறது.
enna karumam da..indu..
அய்யங்கார் எந்தக்காலத்தில் வெற்றிவேல் என்று பேர் வைத்திருக்கிறார்.
ஐ பி எஸ் என்பது கூட கிண்டல் ரகம்தான் ( இன்டியன் பூணூல் ஸர்வீஸ்).
யாரோ புனை பெயரில் ( அசிங்கமாச்சொன்னா அனானி) எழுதியிருக்கிறார். எல்லாம் திராவிட மாயை.
விகடனில் பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது என்பது 100% உண்மை. ஒரே மொக்கை, அதிலும் இந்தப் பேயோனின் படம் ஒரிஜினல் அல்ல. கலைப்பித்து பிடித்து ஃப்ளிக்கரில் பையன் மூச்சா போவதை எல்லாம் படமாகப் போடுவார்களே, அது போல எங்கோ கிராமத்தானை படம் பிடித்து ப்ரொஃபைல் பிக்சராக போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். விகடனின் மொக்கைப் பக்கங்களில் மற்றுமொரு இணைப்பு இது.
திவாகர் கலக்குறார்
ஓய் அனானி..
இங்க போய் பாரும் ஓய். பேயோன் யார் என்பது தெரியும் :-))))))))
http://www.google.co.in/search?q=kamatari+fujiwara&hl=en&prmd=imvnso&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=P2ZVUJiDNcfhrAf39YGYAw&sqi=2&ved=0CCoQsAQ&biw=1366&bih=655
இன்னாடா நாடகம் இது?
ஒண்ணிமே பிரியமாட்டேங்குதேடா இட்லி...
super!
ஆளப்பாரு
என் அளகப்பாரு!
ஆத்தி!
சூப்பரோ சூப்பரு!
(எண்டு நான் கதச்சது அந்த போட்டோவில் இருக்கிற அம்மணிக்காக்கும். கேட்டுக்கிடுங்கோ!)
இப்ப எல்லாம் விகடன் படிக்கிறதுக்கு பதில் இன்டர்நெட் ஒரு மணிநேரம் பார்த்த போதும் .பேயோன் என்ன எதுக்கு எழுதுகிறார் என்று தெரியவில்லை.ரொம்ப ஓவர்.
அந்த பேயோன் ஸ்டில் செவென் சாமுராய் படத்தில் வருவது ..
Post a Comment