பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 14, 2012

ஒரே ஒரு ஊரிலே ... ஜெ குட்டி கதை

ஒரு ஊரில் ஒரு பெரும் வியாபாரி இருந்தார். அந்த வியாபாரி சில காலம் வேறொரு சிறிய வியாபாரியுடன் இணக்கமாக இருந்து வியாபாரம் செய்து வந்தார். சில காலத்திற்கு பின் அவர்களுக்கிடையே பிணக்கு ஏற்பட்டது. உடனே அந்த பெரும் வியாபாரி, இந்த சிறிய வியாபாரி தவறு செய்ததாகவும், தன்னை ஏமாற்றியதாகவும், அவரிடம் பணிபுரிபவர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாகவும் கூறி அவர் மீது புகார் கூறினார்.

இந்த குற்றச்சாட்டினால் கவலை அடைந்த அந்த சிறிய வியாபாரி, தனது நண்பன் மூலம் ஒரு பெரிய வழக்கறிஞரை அணுகினான். ஆனால் அந்த வழக்கறிஞர் தன்னால் இந்த வழக்கை ஏற்று நடத்த முடியாது என்று கூறிவிட்டார். இருப்பினும் அன்று மாலை அந்த சிறிய வியாபாரி, வழக்கறிஞர் வீட்டிற்கு சென்று காத்துக்கொண்டிருந்தார்.


வழக்கறிஞர் வந்தவுடன், தன் வழக்கிற்காக வாதாட வேண்டும் என்று அவரிடம் மீண்டும் மன்றாடினார் அந்த வியாபாரி. அந்த வியாபாரியின் மீது பரிதாபப்பட்டு, வழக்கினை ஏற்று நடத்த சம்மதம் தெரிவித்தார். அந்த வழக்கறிஞர் வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்து வருமாறு அந்த வியாபாரியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மறுநாள் வழக்கு தொடர்பான ஆவணங்களை வழக்கறிஞரிடம் ஒப்படைத்தார் வியாபாரி. ஆவணங்களை படித்து பார்த்த வழக்கறிஞர் இந்த வழக்கினை தன்னால் நடத்த முடியாது என்றும், நீங்கள் வேறொரு வழக்கறிஞரை பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினார். ஆனால் அந்த வியாபாரி உங்களைத்தான் நம்பி வந்துள்ளேன். இந்த வழக்கினை நீங்கள் தான் வெற்றிக்கரமாக முடித்து தர வேண்டும் என்று வேண்டினான். வியாபாரியின் இந்த வேண்டுகோளினை கேட்ட வழக்கறிஞர், தனது பிற பணிகளை ரத்து செய்துவிட்டு வியாபாரியின் வழக்கை எடுத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

வெகுவிரைவில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கறிஞரின் வாதத்தால் அந்த சிறிய வியாபாரி வழக்கில் இருந்து விடுபட்டார். ஆனால் பிறகு அந்த வழக்கறிஞரை சந்திக்கவும் இல்லை; நன்றியும் கூறவில்லை. அந்த வியாபாரியின் நண்பன், வழக்கறிஞரின் வாதத்திறமையால் தான் இந்த வழக்கு வெற்றி பெற்றது என்றார்.

அதற்கு அந்த வியாபாரி என் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு உண்மையிலேயே பலவீனமானது. இதில் வழக்கறிஞரின் பங்கு ஒன்றும் இல்லை. பணத்திற்காக தான் இந்த வழக்கறிஞர் இதர பணிகளை விட்டு விட்டு வாதாடினார் என்று அந்த வியாபாரி கூறினான்.

கதையில் வரும் இந்த வியாபாரி கருப்பாக இருப்பார். அவர் நிறம் மட்டும் கருப்பாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அவர் உள்ளமும் கருப்பு என்பதை அவர் நிரூபித்துவிட்டார். இதுபோன்று தான் ஒரு சிலர் காரியம் கைகூடும் வரை உடன் இருந்து விட்டு பின் நம் மீதே பழிச்சொற்களை நாள்தோறும் அள்ளி வீசி வருகிறார்கள். ஆனால் யார் என்ன பேசினாலும், என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற குறிக்கோளுடன் மக்கள் நலத்திட்டங்களை நான் செயல்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

இந்த கதையை ஜெயலலிதா சொன்னவுடன் அரங்கில் பலத்த கைத்தட்டல் ஏன் தட்டினார்கள் என்று யாருக்காவது தெரியுமா ?

26 Comments:

பழனி.கந்தசாமி said...

நான் ஒரு மாங்கா மடையன். ஏன் கை தட்டினார்கள் என்று சொல்லிவிடுங்கள். இல்லையென்றால் நான் அழுவேன்.

dr_senthil said...

கதை சொன்ன எடம் ஒன்றும் மேலாண்மை கருத்தரங்கு இல்லையே எதாவது கல்யணம் அல்லது கட்சி அரங்கோ (இல்லை சட்டமன்றமோ) இருக்கும் இதில் எதுக்கு வெட்டி குழப்பம் - தட்ட சொல்லிருபாங்க கை தட்டிடாங்க.. விடுங்க வடை

jaisankar jaganathan said...

ஜெயலலிதாவுக்கு உள்ளம் கருப்பு. அதனால் பாக்குறது எல்லாம் க்ருப்பா தெரியுது

kg gouthaman said...

நான் அரங்கத்தில் இருந்திருந்தால், நானும் நிச்சயம் பலமாகக் கை தட்டியிருப்பேன்.
ஏனென்றால், எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

kothandapani said...

அடுத்த முறை இந்த கருப்பு வியபாரிக்காக அந்த வழகறின்ஜர் அல்லது அவரது நண்பரோ வாதாட மாட்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியுமா ............... அட அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.......

எந்த சந்தேகத்தையும் தீர்ப்பவன் said...

இது தெரியாதா இட்லிவடை.........

செகப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டாங்கிற.........

ஒப்பற்ற தத்துவத்தை.... பழமொழியத்தான் அம்மா இன்னொரு விதமா சொல்றாங்க....

பாலாஜி said...

ஏன் தட்டினார்கள்ன்னு சொன்னால் ஒரு புக் பார்சலா.......

tamil Naththam said...

தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaththam@gamil.com

please visit: www.tamilnaththam.blogspot.com

sagar said...

தட்டாதவங்கள அம்மா தட்டிருவாங்கள்ல!!!!!

VS said...

தட்டாதவங்கள அம்மா தட்டிருவாங்கள்ல!!!!!

Rangu Pescu said...

அடடே அம்மா அந்த ரங்கனாத ஸ்வாமியை ஸ்ரீரங்கம் அரங்கனை தான் கருப்பு என்றார்களோ? ரங்க உனக்கு இது தேவையாடா?

Rangu Pescu said...

இந்த பொம்பிளை அந்த ஸ்ரீரங்கம் வாழ் அரங்கனை தான் குறிப்பிடுதோ என்ன சோதனையடா ரங்கா

Anonymous said...

who is periya viyabaari here?

Anonymous said...

அந்த கருப்பு வியாபாரி யாருமில்ல நாண்தான் கருப்பு எம்.ஜி.ஆர் னு சொல்லிட்டுருக்காரில்ல அவர்தான்.....

Anonymous said...


SUTHTHA MADAIIANAA IRUKKIYE; AMMA VAAI THIRANTHA KAI THATTANUM; IDHUKOODAVA THERIYALLAIYE

suppamani

பொன்.முத்துக்குமார் said...

அமெரிக்காவா இருந்தா இந்த பேச்சுக்கு இந்நேரம் உள்ள தள்ளி இருக்கலாம்.

சிவப்பு நிறமே உயர்வு கருப்பு நிறம் தாழ்வு-ன்னு தாழ்வு மனப்பான்மை ஆழமா விதைக்கப்பட்டுள்ள மனோவியாதி கொண்ட நம்ம சமூகத்துல இந்த பேச்சுக்கு கை தட்டுதான் கிடைக்கும்.

அதிமுக தொண்டன் said...

அம்மா ! இப்புடி செஞ்சிட்டீங்க ? கருப்பா இருக்கிற எவனும் நமக்கு ஒட்டு போட மாட்டானுங்க அடுத்த தேர்தல்ல ... எனக்கு தெரிஞ்சு நீங்களும், சோவும் மட்டும் தான் தமிழ் நாட்டிலேயே சிகப்பு

Kaliraj said...

கதை ஒருவழியா முடிஞ்சதேன்னு கை தட்டியிருப்பாங்க...

இவர் இந்த மாதிரி கதை சொல்லுறதை நிறுத்தலாம்..

எனக்கென்னவோ இவர் ஜெயா டி.வீ ஆண்டு விழாவுக்கு ரஜினை பேசியதை மனசில் வைத்து ரஜினியைச்சொல்லுறாரோன்னு தோணுது ( நம்ம பங்குக்கு கொளுத்திப்போடுறது)

kokarako gumango said...

manga madaiyan idlyvadaiyae, Amma sonnathu karuppu Vijayakantha pattri. Nee Vijaykanthidam yevalavu kasu vanginae?

arulk8 said...

விஜயகாந்த் தான் அந்த சின்ன கருப்பு வியபாரி..........

சவடால் வைத்தி said...

அன்பு அண்ணன் அரசியல் வியாபாரி சோ என்ன சொல்வார் ;
குமுதம் கிறுக்கன் தலையங்கம் எழுதுவானா ?
மீசைக்காரன் சவடால் வைத்தி ( அதான் தினமணி எடிட்டர்) இதற்கு என்ன சொல்வான் ?
திராவிடக்கருப்பைப்பழித்ததை இட்லிவடையும் ஏற்குமோ ?

கணக்கண் said...

ஆங்கிலக்கலப்பில்லாமல் தமிழ் வார்த்தைகள் எத்தனை அழகாக தினமணியில் வரும் தெரியுமா ? புதிய தமிழ்ச்சொல்லாக்கத்திற்கு தினமணியே முன்னோடி.
தினமணி தன் தகுதியை இழந்து வெகு நாட்கள் ஆகின்றன. ஏ என் எஸ்-ஸின் கட்டுரைகள் எத்துணை தரமானவை; அர்த்தம் பொதிந்தவை இப்போதும் ஜெயா-வின் அடிவருடி வைத்திய நாதன் எழுதும் கட்டுரைகள் நடுநிலைமையானவையா என்பதை யாரும் நிரூபிக்க முடியுமா ?
ஏதோ வைத்யநாதரும் சோ வும் பத்திரிகைத்துறையை தூக்கி நிறுத்துவதாக எழுதுபவர்களே சிறிது நாணுங்கள். கல்கி இராஜேந்திரரோ விகடன் பாலுவோ பத்திரிகை தர்மம் பற்றிப்பேசலாம். சோ ஒரு அரசியல் வியாபாரி. அவர் ஜெயலலிதா வாய்தா வாங்குவதை என்றாவது “ எச்சரிக்கை” பகுதியில் எச்சரித்து இருக்கிறாரா ?
மெய்யாலுமா என்ற தலைப்பில் தினமணியில் மீசைக்காரன் என்ற புனைபெயரில் வைத்யனாதன் எழுதுவதை புதன்கிழமை தோறும் படியுங்கள். மஞ்சள் பத்திரிகை லக்ஷிமிகாந்தன் தோத்தான் இந்த வைத்ய நாதனிடம். இப்படித்தான் தினமணி விற்பனையாக வேண்டுமா ? வெட்கம்.வெட்கம்.
கண்ணதாசன் அடிக்காத கூத்தா ? அவர் இன்றைக்கு தெய்வப்புலவர். எம் ஜி யாரை த்திட்டி எழுத ஆரம்பித்தவுடன் அரசவைக்கவிஞர் பதவி கிடைத்த்து அவருக்கு. அண்ணன் சொத்தைத்தின்று தீர்த்து கடனாளியானவன் கண்ணதாசன். பின் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற தத்துவம் வேறு.
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ தான் சர்க்கரை என்பார்கள். அது போல எத்தனை நாள்தான் இந்த வைத்யனாதரையும் சோ வையும் கட்டிக்கொண்டு அழப்போகிறீர்களோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
துக்ளக்கில் தைரியமாக ஜெயலலிதாவை கிண்டல் செய்து அட்டைப்பட கார்ட்டூன் வெளியிடச்சொல்லுங்கள் பார்ப்போம்.
புரியாத ஜனங்களா...!.போய் பொழப்பைப்பாருங்கய்யா ?
கணக்கண்


Anonymous said...

@ கணக்கரே,
சோ ஜெ வை சப்போர்ட் செய்வது தெரிந்தது தான். ஆனால் தமிழர்கள் கடந்த கறுப்புக் கண்ணாடி ஆட்சியில் பட்ட பாடெல்லாம் மறந்து விட்டு, இப்போ ஏதோ கரண்டு போயிவிட்டது, கறுப்பென்று நிறவெறி கொண்டு பேசுகிறார் அது இது என்று கூப்பாடு போடுவதைப் பார்த்தால் ஜெ. மாதிரி ஒரு செயல்படுகிற முதல்வரைப் பெற இவர்களுக்குத் தகுதி இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஜெ இந்த வேண்டாத பேச்சு பேச வேண்டியதில்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஏதோ தமிழர் என்றாலே அது கறுப்பென்பதைத் தான் குறிக்கும் என்பதே ஒரு அழுகிய திராவிட சிந்தனை. அதைத் தூக்கி எறியும் வண்ணம் சிவப்பாய், மாநிறமாய் இருக்கும் எண்ணற்ற தமிழர்கள் (அடிக்கோடிட்டு) தமிழுக்கும் தமிழகத்திற்கும் ஆற்றிய பங்குகள் ஏராளம். அவர் சொன்ன கதையில் அழுத்தம் கொடுத்தது "உள்ளத்தில் கறுப்பாக இருப்பவர்கள்" பற்றித் தானே அன்றி நிறமல்ல.

காமராஜ் அவர்கள் தோலை வைத்து இரண்டு டமாரம் செய்யலாம் என்று கூவிய திராவிடக் கூவல்கள் நன்றாக வேலை செய்கிறது போலும்.

மக்கள் கைதட்டியதன் காரணம் அவர்களுக்கு ஜெ. சொன்ன உள்ளக்கறுப்பர் யாரென்பதும் அவர்தம் நோக்கம் என்னவென்பதும் நன்கு தெரியும், அதனால் தான் கைத்தட்டினார்கள்.

Anonymous said...

கணக்கன் அவர்களே எம்.ஜி.ஆரை திட்டியதால் கண்ணதாசனுக்கு அரசவைகவிஞர் பட்டம் , அவரைத் திட்டியதால் உங்களுக்கு காண்டு கணக்கன் பட்டமளிக்கிறோம்.

கண்ணதாசன் காலத்தால் அழியாத அளவுக்கு தன் பெயரை பொறித்துவிட்டு சென்று விட்டார்.

கறுப்பு, மாநிறம் ,சிவப்பு என்ற எல்லா நிற தமிழர்கள் இருக்கும் வரை அவர் பெயர் இருக்கும்.

அவர் மாதிரி ஒழிவு மறைவு இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவர் யாருண்டு ? தன்னை புனிதப் பசுவாய் மட்டும் அவர் என்றுமே காட்டிக் கொண்டதில்லை.

கணக்காயர்.

Anonymous said...
30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து MGR நீ கவிஞனா? என கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...


...அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து

வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.......


Anonymous said...

கடைசியா போட்டிருக்கும் கவிதையை கணக்கன்குட்டி இட்டிருக்க வாய்பில்லை.

இக் கவிதை அவர் பெருமையை அல்லவா பறை சாற்றுகிறது. வசை பாடினால் கூட எத்தனை நயம். அடடா இத்தனை நல்ல கவிஞனை சிறு வயதில் இழந்துவிட்டோமே! (54 எல்லாம் சாகிற வயதா ?)

கணக்காயர்