பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 10, 2012

பத்ரி, வன்மையாக கண்டிக்கிறேன் !

கார்ட்டூன் அரசியலில் இந்த வாரம் இரண்டு கார்ட்டூன்கள் பற்றியது. ஒன்று முதல்வர் ஜெயலலிதா , இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் குறித்து மிகவும் ஆபாசமான , அருவருக்கத்தக்க ஒரு கார்ட்டூன் ஒன்றை இலங்கை பத்திரிக்கை போட்டுள்ளது. அடுத்து இந்திய நாடாளுமன்றத்தையும் தேசியச் சின்னத்தையும் அவமதித்து கார்ட்டூன் வரைந்ததாக அசீம் திரிவேதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதை பற்றிய செய்திகளை நீங்களே படித்து தெரிந்துக்கொள்லலாம். இது சரியா தவறா என்ற விவாதம் தனியாக வைத்துக்கொள்ளலாம்

தற்போது வைஷ்ணவம் படிக்கும் பத்ரி தன்னுடைய பதிவில் ஒருவருக்கு இப்படி கமெண்ட் எழுதியுள்ளார்.

தேசிய கீதத்தை அவமானம் செய்வதை, தேசியக் கொடியை எரிப்பதை அல்லது கேவலப்படுத்துவதை எல்லாம் முழுமையாக அனுமதிக்கவேண்டும் என்பது என் கருத்து. - பத்ரி

என்ன படித்து என்ன பிரயோஜனம். நான் அறிவுஜீவி எனக்கு எல்லாம் தெரியும், நான் ஐ.ஐ.டியில் படித்த அதே அறிவுடன் தான் எல்லாவற்றையும் அணுகுவேன் என்று வீம்பு பிடித்தால் என்ன செய்வது ?

மும்பையில் கொடி எரிந்துவிட கூடாதே என்று போராடியதை டிவியில் பார்க்கும் இவர் போன்றவர்களுக்கு அந்த உணர்வு எப்படி தெரியப் போகிறது ? சட்டம் எல்லாமே மக்களின் உணர்வுகளின் வழியாக வடிவம் பெற்றவையே அன்றி டேபிள் சேர் போட்டு எழுதப்பட்டவை அல்ல. எங்கே, முகமது நபிக்கு படம் போட்டது சரி என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். அப்போது மதம் மக்கள் நம்பிக்கை எல்லாம் வந்துடிவும் அதுவே ஹிந்து இந்தியா இந்தியன் என்றால் முற்போக்கும் அறிவுமே முன்னிற்கும். இது செக்யூலர்களின் முற்போக்கு வியாதி

ஒரே நல்ல செய்தி: நல்ல வேளை பத்ரி தமிழ் புத்தகம் பதிப்பிக்கும் தொழிலை தேர்ந்தெடுத்தார், ஏதாவது கல்லூரி அல்லது பள்ளிக்கு டீச்சராக போயிருந்தார் ? அவரிடம் பயிலும் மாணார்களுக்கு கொஞ்ச கூட தேச பக்தியே இல்லாமல்.... நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

பத்ரியின் இந்த பின்னூட்டத்தை இட்லிவடை வன்மையாக கண்டிக்கிறது

26 Comments:

கானகம் said...

பத்ரி எனும் மாமேதையை கண்டிக்கும் இட்லிவடையை நான் கண்டிக்கிறேன். அவருக்கு தெரியாத விஷயமே உலகத்தில் இல்லை. தேசிய சின்னங்களை அவமதிப்பதை ஆதரிப்பதைத் தொடர்ந்து அடுத்ததாக பல மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்து அல்லது அவமதிப்பதை ஆதரித்து தனது மேதைமையை காண்பிப்பார். அதன் பின்னர்...

பத்ரி வெறும் காலி டப்பா என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்துக்கொண்டே இருக்கிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து தொடர்ந்து உண்மையை திரித்துச் சொல்வதுதான் முற்போக்குத்தனம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்.

இனி இவரை பொருட்படுத்துவது நம்மை நாமே அவமதிக்கும் செயல்.

s suresh said...

தேசிய கீதத்தை ஏற்கனவே பலர் அவமதித்து (பாடும்போது அசைந்தும் உட்கார்ந்தும் தேவையற்ற இடங்களில் ஒளிபரப்பியும்)வரும் வேலையில் இது போன்ற கருத்துக்கள் மேலும் கொச்சை படுத்துகின்றன. வண்மையாக கண்டிக்கிறேன்!

Erode Nagaraj... said...

பாராளுமன்றமோ, தேசியச் சின்னங்களோ சரியாகத்தான் இருக்கின்றன. அங்கே அழுக்கு மனிதர்கள் கோலோச்சினால் அவர்களைக் கண்டிக்கலாம்;கார்ட்டூன் போடலாம். ஆனால், அதற்கும் ஒரு வரையறை, எல்லை உண்டு.

won't kiss your *ss என்று கூடத்தான் சொல்கிறார்கள் என்று அதையெல்லாம் காட்சிப்படுத்தி படங்களும் கேலிச்சித்திரங்களும் பிரசுரிக்கத் தொடங்கிவிட்டால்? இரண்டாம் முறை யோசிக்கக் கூட அவகாசமின்றி சமூகப் பொறுப்பின்றி வக்காலத்து வாங்குவது கண்டிக்கத்தக்கது.

பொதுவாகவே, ஊடகங்களிலும் மேடைகளிலும் நாகரிகம் குறைந்து வருகிறது. அதை மேலும் ஊக்குவிக்காமல் கௌரவமாக இருப்பது பொறுப்பான மனிதர்கள் செய்யக்கூடியதாக இருக்கும்.

Anonymous said...

டேய்! உங்க உட்டாலக்கடி எல்லாம் எங்களுக்கு தெரியும்டே! பத்ரி தானே ஒரு controversial comment போட்டு அதை யாரும் கண்டுக்கலன்றதுனால, இட்லி வடைங்கற பேருல தானே அதை கண்டிக்கவும் செய்யறது நல்ல தமாஷ். காதுல யாரானும் பூ வச்சுருப்பான் . அவன்கிட்ட போய் சொல்லுடே!

வீரராகவன் said...

இப்படி நாட்டை இழிவுபடுத்துவதை ஆதரித்து எழுதித்தான் பிரபலத்தை தக்கவைத்துக் கொள்ளும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பத்ரிக்கு தேவையா?
தாய்நாட்டைப் பழிப்பது தாயைப் பழிப்பது போல என்பதை பத்ரிக்கு ஒருத்தர் எடுத்துச் சொல்ல வேண்டுமா என்ன?

R. J. said...

If Badri has written this, it is definitely condemnable. I join Idlyvadai in this condemnation.

At the same time, I am awaiting IV's response to the arrest of the cartoonist who modified our National Emblem with 4 wolves. I support the cartoonist fully as he has only stated the obvious. The Country has gone to the power hungry wolfs who don't care about the Nation. Hope the Court hears the cartoonist's argument and clears him; only the corrupt politicians will support a punishment to him. It will be a shame if the cartoonist has to explain his cartoon to any right thinking man, leave alone a judge.

-R. J.

Anonymous said...



யுவர் ஃப்ரீடம் எண்ட்ஸ் வேர் மை நோஸ் பிகின்ஸ் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாம்.

கார்ட்டுன் என்ற பெயரில்
கருத்துக்களுக்கு சுதந்திரம் வேண்டுமே என்ற போர்வையில்
அவலத்தையும் அசிங்கத்தையும்
முன் நிறுத்தி அதன் மூலம்
தன் பையை புகழை அதிகரிக்க நினைக்கும் நபர்களைத்
தண்டிக்க அரசுக்கு உரிமை இல்லை என்றால்,
அந்த அரசாங்க்த் தேர்ந்தெடுத்த குடிமகன் களுக்கு
ஜன நாயகம் என்றால் , கருத்து சுதந்திரம் என்றால், ஆர்டிகில் பதினாலு என்றால்
என்ன என்றே புரியவில்லை என்று தான் பொருள்.

ஒவ்வொரு உரிமைக்கும் பின்னால்
ஒரு பொறுப்பு இருக்கிறது.
அந்த பொறுப்பினைத் தன் மனசாட்சிக்குப் பின்னுக்குத் தள்ளுபவரை
அரசு, கம்பிகளுக்குப் பின் தள்ளுவது நியாயமே.

இருக்கட்டும்.
நீங்கள் குறிப்பிட்ட அந்த sri lanka கார்ட்டூன்
ஒன்று தெளிவாகிறது.
.
வள்ளுவர் சொன்ன
குலத்தளவே ஆகுமாம் குணம் என்பதையே.



Dhas said...

சரி!.. ஒரு பேச்சுக்கு...

திடீர்னு “இந்தியா” திருந்திடிச்சு! எல்லாரும் நல்லவங்களாயிட்டாங்க. பாராளுமன்றத்துல எல்லாருமே “மன்மொகன் சிங்” மாதிரி ரொம்ப ரொம்ப நல்லவங்களா இருக்காங்க.

இப்பொ - நாம அதே - பாராளுமன்றத்துக்கும், அசோக ஸ்தூபிக்கும் “மரியாதை” கொடுத்து கார்ட்டூன் போடணும். இந்தாளு - எப்டி கார்டூன் போடுவாரு?

புறம்போக்க சாப்ட்ட மாதிரி இருக்காது?

அட! மரியாதை கொடுக்கறதுக்கு - கொடுத்துதான ஆகணும். எல்லையே இல்லையா?

snkm said...

பத்ரியை கண்டிக்கிறேன்.

Anonymous said...

கொடி காத்த குமாரனைப்பற்றி பத்ரி கேள்விப்பட்டதில்லை போலிருக்கிறது. அவர் போன்றவர்கள் உயிரைக்கொடுத்து வாங்கிக்கொடுத்த சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு பத்ரி போன்ற அரை வேக்காட்டு நாலாம்படைகள் வெட்கமில்லாமல் சொரிந்து கொண்டு திரிகின்றன.

சுபத்ரா said...

I STRONGLY CONDEMN THIS ACTION OF MR.BADRI

இரா. சத்தியமூர்த்தி said...

இப்படி பத்ரியை கண்டம் - துண்டம் செய்பவர்கள் கொஞ்சம் யோசிக்கணும். சுதந்திரம் வாங்கிக்கொடுத்த தியாகிகளும், கொடிகாத்த குமரனும் இப்பொழுதைய நாட்டு நடப்பைப்பார்த்தால் என்ன செய்திருப்பார்கள்? பாரதி என்ன கார்ட்டூன் போட்டிருப்பார்? இந்த பாதகர்கள் அவர்களையும் சிடிசன் என்று பார்க்காமல் செடிசன் வழக்குப்போட்டிருக்க மாட்டார்களா?

எனக்கு என்னமோ இது கரிக்கதவை மறக்கவைக்க ஏற்றிய புகைவத்தியாக தெரிகிறது.

kokarako gumango said...

I know this is going to happen. When badri published Charu's book itself i suspected badri's brain is going to get damaged.

No country in the world will allow this to happen. Even in USA people who indulge in such stupidity are not tolerated and cannot stand in good stead with the public. They are scorned.

Shame on badri.probably he needs some psychiatric counselling and treatment to get rid of his "maedhavi" headweight.

Anonymous said...

Burning the US flag was considered as an example of freedom of expression by the highest court in USA. Those who did that were not punished.Even if you think that the cartoons are in bad taste there is no need to arrest a person for that.On the other hand a society and a nation should show more tolerance in dealing with diverse views and views that ridicule powers that be.Badri has some views and he has the guts to say that. Let the courts decide on the limits to freedom of expression. Why should a cartoonist be treated like a criminal and charged with sedition.Is that not silly.Why you are not saying anything on this. Just like pseudo-secularist there are pseudo-patriots too like you.

Anand Ganesh V said...


What Badri wrote is correct.

People who do not have prior experience with or knowledge about freedom of expression cannot understand what Badri wrote.

People who know even a little bit about freedom of speech would condemn the Abrahamic approach to cartoons and symbols of nation, religion, or organization.

Badri has NOT said that such cartoon as the typical Buddhist racist cartoons should be encouraged.

He has said that proper legal actions can be taken against such cartoons. He did.

Freedom to cartoon and freedom to criticize/sue cartoonists should co-exist. That is what happened in the case of M.F. Hussein. The approach taken in the M.F. Hussein ensures that both freedom of cartooning and freedom to protect honour co-exist. That is typical Hindutva approach, which everyone must emulate.

This approach is not protecting hate speech, it is protecting freedom of speech.

Again, to reiterate: Badri is correct.

Anonymous said...

Badri is a pseudo secularist and IV is pseudo patriotic

Lenin said...

Idhuvey Saudi Arabiavaa irundhaa...Ek Maar Dho Thukdaa dhaan.

USA naa idhellam OK.

In India....today it is wrong, may be yesterday it was right and may be tomorrow it will become right again.

Indians show their patriotism only by saluting the national flag. Otherwise they are the ones who spoil the nation.

Anonymous said...

லெனின் சொன்ன கருத்து முற்றிலும் உண்மை. நம் அவல நிலை இதுதான்.

Samir said...

I strongly condemn Mr. Badri.

By the way, Who is Mr. Badri and what he did? Any problem?

Note: Since everybody is condemning him. I also did.
This is our social typology.

Anonymous said...

கற்பு என்பது எப்படி ஒரு குறியீடோ, அதுபோல கொடி என்பதும் ஒரு குறியீடே. புனிதம் என்றால் புனிதம்; இல்லை என்றால் இல்லை.

அமெரிக்காவில் கொடியை எரித்தால் ஆப்படித்துவிடுவார்கள். இந்தியா போன்ற சொங்கி நாடல்ல அமெரிக்கா. எனவே கதை விடுவதை நிறுத்துங்கள்.

ConverZ stupidity said...

http://t.co/OnysRTyA

விவேகானந்தன் said...

Cartoon about the parliament is accepted. bcz they(MP's) are did/do the worst thing also. but, I am not compromised with National Anthem/Bharath Matha and National Symbols. Bcz I am an Indian.I love my India but not the politicians.

Anonymous said...

United States
The flag of the United States is sometimes symbolically burned, often in protest of the policies of the American government, both within the country and abroad. The United States Supreme Court in Texas v. Johnson, 491 U.S. 397 (1989), and reaffirmed in U.S. v. Eichman, 496 U.S. 310 (1990), has ruled that due to the First Amendment to the United States Constitution, it is unconstitutional for a government (whether federal, state, or municipality) to prohibit the desecration of a flag, due to its status as "symbolic speech." However, content-neutral restrictions may still be imposed to regulate the time, place, and manner of such expression.
In 1862, during the Union army's occupation of New Orleans in the American Civil War, the military governor, Benjamin Franklin Butler, sentenced William B. Mumford to death for removing an American flag. In 1864 John Greenleaf Whittier wrote the poem Barbara Frietchie, which told of a (probably fictional) incident in which Confederate soldiers were deterred from defacing an American flag. The poem contains the famous lines:
"Shoot, if you must, this old gray head,
But spare your country's flag," she said.
During the United States involvement in the Vietnam War American flags were sometimes burned during war protest demonstrations.[68]
After the Johnson and Eichman decisions, several flag burning amendments to the Constitution were proposed. On 22 June 2005, a Flag Desecration Amendment was passed by the House with the needed two-thirds majority. On 27 June 2006, another attempt to pass a ban on flag burning was rejected by the Senate in a close vote of 65 in favor, 34 opposed, one vote short of the two-thirds majority needed to send the amendment to be voted on by the states.[69]
Flying an American flag upside down is not necessarily meant as political protest. The practice has its origin in a distress signal; displaying a flag in this manner is "a signal of dire distress in instances of extreme danger to life or property";[70] it has been used by extension to make a statement about distress in civic, political, or other areas. Upside-down flying of the flag was ruled constitutional in Spence v. Washington, a 1974 Supreme Court ruling.[71]
Actions portraying the flag being flown upside down can be witnessed through American rock band Rage Against The Machine at the Democratic Convention in 2000.
http://en.wikipedia.org/wiki/Flag_desecration
'அமெரிக்காவில் கொடியை எரித்தால் ஆப்படித்துவிடுவார்கள். இந்தியா போன்ற சொங்கி நாடல்ல அமெரிக்கா. எனவே கதை விடுவதை நிறுத்துங்கள்'
என்று எழுதிய முட்டாளுக்காக மேலே உள்ள தகவல்.இது போன்ற தேசபக்த முட்டாள்களுக்கு ஆத்திரம் 99% அறிவு 1%.

Anonymous said...

சுபத்ரா,

இதுக்கு நீங்க ”பத்ரி”யை பாராட்டி ஒரு கவிதை எழுதியிருக்கலாம், அது இதை விட ஸ்டராங்கான கண்டனமா இருந்திருக்கும்

வள்ளுவர் said...

// வள்ளுவர் சொன்ன
குலத்தளவே ஆகுமாம் குணம் என்பதையே //

It is not Valluvar.


மூதுரை;
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்

Anonymous said...

நீரளவே ஆகுமாம் நீராம்பல்,கொண்ட குலத்தளவே ஆகுமாம் குணம்