பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 04, 2012

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

விடுதலைப் புலிகளுக்கு சிங்கள அரசு ஒரு முற்றுப் புள்ளி வைத்த பிறகு தமிழ் நாட்டில் திடீர் என்று தேர்தலுடன் தமிழ் பற்றும் வர தொடங்கியது.

அடையாள உண்ணாவிரதம், போராட்டம், மாநாடு என்று பலவிதங்களில் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்று தினமும் யாராவது கிளம்புகிறார்கள். அப்பாவி மக்களுக்கு தலையில் கொத்தமல்லி மிளகாயை அரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.

வைகோ, ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாஸ் என்று எல்லோரும் இதில் ஒற்றுமையாக இருப்பது வேடிக்கை!

இதன் விளைவாக நேற்று தமிழகத்தில் சிங்களர்களுக்கு எதிராக தஞ்சை அருகே மாதா ஆலயத்துக்கு சாமி கும்பிட வந்த சிங்களர்களை வெளியேற்றகோரி பல்வேறு அமைப்புகள்(மதிமுக, வி.சிறுத்தைகள்) போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டம் நடத்த வேண்டும் என்றால் பிரதமருக்கு கடிதம் எழுதுங்கள், இல்லை பீச் பக்கம் 0.5 நாள் இரண்டு ஏர் கூலர் உடன் உண்ணாவிரதம் இருங்கள், இல்லை இலங்கை தூதரகம் முன் ஆர்பாட்டம் செய்யுங்கள் அதை விட்டுவிட்டு பொதுமக்களை விரட்டும் இந்த கோஷ்டியை என்ன செய்வது ? தமிழ்நாட்டிலிருந்து தினமும் இலங்கைக்கு பலர் போய் வருகிறார்கள், அவர்களின் கதி என்ன ஆகும் தேவை இல்லாத வம்பை விலைக்கொடுத்து வாங்குகிறார்கள் ? சில மாதங்களுக்கு முன் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது பொங்கி எழ இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ?

நிச்சயம் எல்லா அரசியல் பெரிய தலைவர்களும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்... ஆனால் செய்யமாட்டார்கள்..

41 Comments:

இட்லிவடை ரசிகன் said...

அடிச்சான்யா இட்லி வடை சிக்ஸ்ரு....

டேய்...சுட்டித்தம்பி... இத மாதிரி தைரியமா, நியாயமா கருத்து சொல்றதுக்கு நெசமாலே தில்லு வேணும் ... உனக்கு இருக்குது...

சூப்பர் மாமு...
செம கில்லி மாமு நீ...

வெளாட வந்தவங்கள ரிட்டர்ன் அனுப்புனது தப்பு.... நம்மாளுங்க மட்டும் அங்க போறாங்கள்ல, போய் வெளாடுறங்க இல்ல.....

என தலைவர் சோக்கா சொல்லியிருக்காரு கவுனிச்சியா...

எனக்கு தெரிஞ்சு... தமிழ் நாட்டுல.... கருணா நிதி... அப்பாலிக்கா இட்லி வடை இவங்க ரெண்டு பேரும் தான் உண்மை பேசுறவங்க...

ஏம்பா.. நான் கரெக்ட்டா பேசுறேனா...

Vishweshwaran R said...

கச்சத்தீவை காணவில்லை !

கூகுள் மேப்சில் யாரவது கச்சத்தீவு என்று தேடிப்பாருங்கள்!

உங்களால் காண இயலாது !!

எந்த ஒரு செயற்கைக்கோள் புகைப்படங்களிலும் கச்சத்தீவை காண முடிவதில்லை.

கச்சத்தீவு எங்கே போனது? என்ன ஆனது? யார் செய்த சதி?

ConverZ stupidity said...

நம்மூரானுங்க திருந்தவே மாட்டனுங்களா? ஊரை சுத்தி எதிரிய சம்பாதிச்சாதான் இவனுங்களுக்கு தூக்கமே வரும்போல... இவனுங்களுக்கு என்னைக்குதான் அறிவு வருமோ தெரியல. தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டுன்னு இராமலிங்க கவி எழுதிவச்சத இவனுங்க தப்பா புரிஞ்சிகிட்டு நடந்துக்கிறத பார்த்தா ஒன்னும் சொல்லுராப்புல இல்ல. வந்தவங்கள்ள அடிக்கிறதுக்கு பதிலா, இலங்கை பிரச்சனைய தப்பு தப்பா தமிழ்நாட்டுல காமிச்சு ஈனபிழைப்பு நடத்துறதுமட்டுமில்லாம நம்ம தலையில மிளகாய் அரைக்கிற அரசியல் வியாதிகளை அடிசாலாச்சும் நம்ம நாட்டுக்கு விமோசனம் பிறக்கும்.

oநம்மூரானுங்க என்னைக்கு மிளகாய் அதிகமா திங்கிறத நிப்பாட்டிடுட்டு மூளைக்கு வேலை குடுக்கபோரானுங்களோ

ConverZ stupidity said...

// Vishweshwaran R said...
கச்சத்தீவை காணவில்லை !

கூகுள் மேப்சில் யாரவது கச்சத்தீவு என்று தேடிப்பாருங்கள்!

உங்களால் காண இயலாது !!

எந்த ஒரு செயற்கைக்கோள் புகைப்படங்களிலும் கச்சத்தீவை காண முடிவதில்லை.

கச்சத்தீவு எங்கே போனது? என்ன ஆனது? யார் செய்த சதி?
//

மஞ்ச துண்டு வழக்குக்கு பயந்து, இந்திராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காம இருந்தாரு, இந்திரா இலங்கைக்கு தாரை வார்த்து குடுத்துச்சு... இலங்கைக்காரன் அத இப்போ சீனனுக்கு ஒத்திக்கு விட்டுட்டான். கூகிள்-காரன் சீனனுக்கு பயந்து அத மேப்-ல காட்டுறதில்ல.

ஆகா மொத்தம் மஞ்ச துண்டு நம்மூரு மீனவனுக்கு சங்கு ஊதினாறு... இந்திரா மொத்த இந்தியாவுக்கு சங்கு ஊதிருச்சு...

Anonymous said...

நெத்தியடி

dr_senthil said...

இந்தியா, இலங்கையில் நடைபெற உள்ள ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட் வேர்ல்ட் கப்பை புறகணிக்க தமிழக கட்சிகள் நிர்பந்திக்குமா?

dr_senthil said...

இந்தியா, இலங்கையில் நடைபெற உள்ள ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட் வேர்ல்ட் கப்பை புறகணிக்க தமிழக கட்சிகள் நிர்பந்திக்குமா?

benjamin david said...

சரியான கருத்து.கொஞ்சம் பொறுப்புணர்ச்சியோடு பெரிய கட்சிகள் செயல்பட வேண்டும்.பின்விளைவுகள் பற்றி யோசனை வேண்டும் .

Vikram said...

\\dr_senthil said...
இந்தியா, இலங்கையில் நடைபெற உள்ள ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட் வேர்ல்ட் கப்பை புறகணிக்க தமிழக கட்சிகள் நிர்பந்திக்குமா?\\

sariya kettenga boss - kodi kodiya thuttu varum - vittruvoma?!

looking at the turn of events, I am reminded of the following s.v.sekar comedy -
reporter : "Illainga prechanai theera enna vali?"
s.v.sekar : "lkg class-ku ellam leave vittudalam!"

:(:(:(:(

ராபின் ஹூட் said...

சிங்களவன் தமிழக மீனவனை நடுக்கடலில் சுடுகிறானே, சுரணையில்லாமல் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமா?

இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்க வேண்டாம் என்று அனைத்துத் தமிழர்களும் கூறிய போதும் அதனை பொருட்படுத்தாமல் செயல்படும் மத்திய அரசை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமா?

சிங்களவனை செருப்பால் அடித்ததற்கே பதிவிடும் நீங்கள், மீனவன் சுடப்பட்டு சாகும் போது என்ன செய்தீர்கள்.

நீங்கள் மீன் சாப்பிடாத பிராமணன் என்பதால் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டீர்களா?

சூனிய விகடன் said...

நாம எதையாவது சொல்லப்போயி அம்மாவும், அய்யனும் இன்ன பிற பரிவார தேவர்களும் " தமிழ்நாட்டிலிருந்து இலங்கை பதினெட்டு மைல் தூரத்திலிருப்பது எங்களுக்கு வாந்தி வருகிறமாதிரி இருக்கிறது ..அதை ஒரு நூறு மைல் தள்ளி வைக்கணும் " அப்படின்னு போராட ஆரம்பிச்சிரப் போறாங்க

சூனிய விகடன் said...

ராஜ பக்ஷே ரத்த வெறி பிடித்த மிருகமா இல்லையா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் இலங்கைக்கு அதிபராக இருந்து தனது நாட்டிற்கு மிகச் சரியான ஒரு காரியத்தைத் தான் செய்து முடித்துள்ளார். எந்த விதமான ஒரு அரசியல் தீர்வுக்கும் வராமல் கொம்பன் நினைப்பில் இருந்த பிரபாகரனை அழித்தொழித்தது மிகச் சரியான, சொல்லப்ப்போனால் இந்தியாவுக்கும் மிகுந்த நன்மையையே விளைவிக்கும் ஒரு சாதனையாகும். தமிழகத்தலைகளுக்கு இது ஒரு பிழைப்புவாதம். ஆள்வோருக்கு நடைமுறைப் பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்ப ஒரு வாய்ப்பு.

சூனிய விகடன் said...

ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தெரிந்தோ தெரியாமலோ இறைவன் இந்தியாவிலிருந்து அதாவது தமிழகத்திலிருந்து இலங்கையை பூகோள ரீதியாக நடுவிலே கடலை வைத்து ஒரு இருபது மைல் இடைவெளியில் அமைத்தான். தப்பித்தவறி நிலப்பரப்புகள் இணைந்த மாதிரி இருந்திருந்தால் என்றோ தமிழ்நாடு நாசமாகப்போயிருக்கும். தமிழ்நாட்டைக்காப்பாற்ற ஆண்டவன் முன்கூட்டியே முடிவு செய்துதான் அருள் புரிந்துள்ளான்.அந்த வரைக்கும் நன்றி தெரிவித்து ஆண்டவனை தினமும் வணங்குவோம்

சூனிய விகடன் said...

எல்லோரும் சொல்வது போல் விடுதலை புலிகளுடனான போரில் இலங்கைக்கு இந்தியா உண்மையிலே உதவியிருக்குமானால் இனி என் ஆயுசுக்கு மட்டுமல்ல என் சந்ததிகளுக்கே மன்மோஹன்சிங் தான் தானைத்தலைவர் , சோனியா காந்தி தான் இதய தெய்வம்.

சூனிய விகடன் said...

நடந்து முடிந்த லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்ட எண்பத்தொரு வீர வீராங்கனைகளில் ஒரு மூஞ்சி கூட தமிழ்நாட்டு மூஞ்சியில்லை. .............................................................................................................................................................................................................................................
அதனாலென்ன..

அதோ போகுது பார் சிங்களன் போற பஸ்ஸு......கல்லை விட்டு எறியடா மறத்தமிழா....சாரி ....... மரத்தமிழா

R. J. said...

Re Mast head:

I - only for Idly; V - for Vadai!

(Why are we wasting time on Politicians' actions on Srilanka when we know they won't listen? Jaya even sent Srilankan school kids back and suspended a poor official!)

- R. J.

R. J. said...

Re Mast head:

I - only for Idly; V - for Vadai!

(Why are we wasting time on Politicians' actions on Srilanka when we know they won't listen? Jaya even sent Srilankan school kids back and suspended a poor official!)

- R. J.

Anonymous said...

There is nothing wrong in protesting. As long as Tamils in Srilanka are treated as second class citizens we should do these types of protests. Rajapakshe said he would work on the devolution pkg for Tamils and there is no iota of any thing happening on that front. External affairs ministry does not even whispers about it. I still remember subra mania samy saying once Praha is killed ,samy would work to bring equality to Tamils. Every one has forgotten about Tamils in Lanka. I was a staunch opponent of prabhakaran looks like the Sinhalese politicians do not have even a small sincerity for humane treatment of Tamils. Looks like prabhakaran was correct in his opinion about the sinhalese. We need few more prabhakaran to teach Sinhalese some harsh lesson.

R.Gopi said...

மொதல்ல இதுக்கு கரீட்டா எதிர்ப்பு தெரிவிக்கணும்னா “பெர்ர்ர்ர்ரும் தலீவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” குடும்பத்தார் வைத்திருக்கும் “ஸ்பைஸ் ஜெட்” தன் கொழும்பு விமான சேவையை நிறுத்தட்டும்....

பிறகு எல்லாம் பேசலாம்.... நிறுத்துவாரா....

ஊருக்கெல்லாம் வியாக்கியானம் பேசுற “கோபாலபுர பெரியவர்” என்னாய்யா மறுபடியும் இம்புட்டு அமவுண்டு கிரானைட்ல அடிச்சுட்டு சைலண்டா வாய தொறக்காம இருக்கேன்னு கேட்டா இதான் சொல்லி இருக்காரு...

/// ""துரை தயாநிதி மீதான வழக்கு குறித்து, ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்த கம்பெனியிலிருந்து, துரை தயாநிதி விலகி விட்டதாக, ஏற்கனவே அறிக்கை விட்டிருப்பதாக, எனக்கு தகவல் கிடைத்தது. அதைத் தவிர, வேறு தகவல் எதுவும் தெரியாது,'' - தி.மு.க., தலைவர் கருணாநிதி //

நல்லா இருய்யா... நீயும் ஒன்னோட குடும்ப ஆளுங்க மட்டும்....

jaisankar jaganathan said...

இதே பிராமின்ஸ் இலங்கையில் கொடுமைப்பட்டு இருந்தால் இட்லிவடையின் கட்டுரை வேற மாதிரி இருந்திருக்கும்.

என்ன பண்ணூறது . இறந்தவன் தமிழனாச்சே

Anonymous said...

trichy to colombo and chennai to colombo air services to be stopped immediately.
no cricket team from india can plany in srilanka.
srilankan consulate general office
should not function in chennai.
the traeament given to asin should be given to doni and his team.
gopalasamy saudi arabia.
(Anani are you happy?)

Anonymous said...

karuna's three achievements:
1. in 1974, cauveri agreement was not renewed.
2. during his regime, he allowed kachatheevu handing over to srilanka.
3. his three hours fasting and declaration of "war ended".
gopalasamy saudi arabia

Anonymous said...

தமிழன் தமிழன் என்று‍ என்றைக்கு‍ - தான் பிறந்த இனத்தை ஒரு‍ தகுதியின் அடையாளமாக பார்க்க ஆரம்பித்து‍ வெற்றுக் கூச்சலிட்டோமோ அன்று‍ தமிழகத்துக்கு‍ ஆரம்பித்தது‍ சனியன். அடுத்த மொழி, இனத்துக்காரன் சும்மா இருப்பானா. தமிழகத்தில்தான் நாமெல்லாம் புலி அதாவது‍ காகிதப் புலி. எல்லை தாண்டினால் நமக்கான மரியாதையும் கவனிப்பும் அனுபவிப்பவர்களுக்கே தெரியும்.
இதில் சினிமா சிந்தனையாளர்கள் வேறு. ஜல்லியடிப்பது‍ என்பது‍ கட்டிட வேலைக்கு‍ மட்டுமதான் எனப்தை எப்போது‍ இவர்களுக்கு‍ புரியும்?
ஜெ. பாபு
கோவை

Anonymous said...

jaisankar jaganathan & ராபின் ஹூட் மற்றும் நண்பர்களே:

அடிபட்டவன் பாப்பான் இல்ல, எல்லாரும் கிருஸ்த்துவ மக்கள், இதுல கூட ஜாதி பாக்குரேங்களே?
உங்களுக்கு தகிரியம் இருந்தா PM veetula poondhu saathunga,Defence Ministera katti vachu udainga, Onnume mudiyalanna Thamilina Thalaivar, Ilangai tamilar pEra sollikittu pulappu Nadathura Political Leaders veetula Ukaandhu Dharna Pannunga....

R. J. said...

The lead editorial in Times of India (4.9.12) has commented on the issue vividly. There is nothing else to be said on this. I request the Srilankan haters to browse the editorial and think it over.

In short, it is foolish to encourage China to have a full fledged set up in Srilanka and our defence budget will double, thereby developmental plans will take back seat. Our business relations - in our favour now - will suffer. TN will have permanent headache.

- R. J.

Anonymous said...

@R.J. There is no need to worry about Chinese presence. When we cannot even raise a voice against "sundakai" ilangai what we would do against China? As soon as some small baccha bursts a "oosi tappasu" near the indian border our coward PM and defense minister will raise white flag and genuflect before the chinese. so why this unnecessary tension about the chinese presence.

poornam said...

சிங்கள எதிர்ப்பு என்றால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதுதானே இணையத்தில் உலாவும் வெற்றுவேட்டு வீரர்களுக்கு அழகு? அதை விமர்சித்து முதுகெலும்பு இருக்கிறதென்று காட்டிவிட்டதே, இட்லிவடை.... மீனில் எலும்பு இருக்கும், இட்லி, வடையில் கூடவா? சபாஷ்....

Anonymous said...

If America was thinking about soviet union influence in cuba could America have become a super power. America stood against Cuba even when USSR put Nuclear warheads in cuba. When we would get such leaders in India. It is better to commit suicide than peeing even looking at Srilanka.

kothandapani said...

I idealistic
d daring
l lovely
y yours

V vituperate
a anonymous
d delicious
a authentic
i indubitable

Anonymous said...

i agree with what u say..
but athu enna pa
anga en makkala kothu kotha konnu poodum poothu atha ethirthu
poodatha post
ippo mattum vakanaiya vaai kizhiya ethirkuraa??
unnoda singala paasatha ninachu pularikuthu..
-Raji

shankar said...

இந்தியா விற்கு வரும் சிங்களவர்கள் தாக்க பட்டால், இந்த
நிகழ்வானது இலங்கையில் அது தமிழர்களுக்கு எதிராக போக
கூடும். மேலும் சாமி கும்பிட வரும் சிங்களவர்களை திரும்ப
போக சொல்வது மிக கேவல மானது. நம் இந்தியர்கள் பலரும்
இலங்கைக்கு சுற்றுலா சென்று வரு கின்றனர் . அவர்களுக்கும்
ஆபத்து ஏற்படலாம்.

வேலை வெட்டி இல்லாதவன் தான் இம்மாதிரி போராட்டதில்
கலந்து கொள்வான்.

kothandapani said...

the otherside of the coin

I Idiotic
d dirty
l lousy
y yawning

v vulgarity
a arrogant
d denigrate
a ambiguous
i iye(nga)rish

Ivan Yaar said...

In Srilanka, people started protesting against attack on srilankan pilgrims in Tamilnadu. It is really a black mark on Tamilnadu.

http://eutamilar.eu/tamils/index.php/5118-2012-09-06-20-05-04

Anonymous said...

கிளிஞ்சது கிஸ்ணகிரி....

கோ-தண்ட-பாணி ஸார்....அந்தாஆஆஆஆ கொஞ்சம் மேல பாருங்க.....அப்புடியே கொஞ்சம் கீள......கொஞ்சம் லெப்ப்ட்டு .....கொஞ்சம் ரைட்டு....
கொஞ்சம் லெப்ப்ட்டு .....கொஞ்சம் ரைட்டு....
கொஞ்சம் லெப்ப்ட்டு .....கொஞ்சம் ரைட்டு....
கொஞ்சம் லெப்ப்ட்டு .....கொஞ்சம் ரைட்டு....

அப்புடியே போனிங்கன்னா கீள்ப்பாக்கம் வந்துரும்....

Anonymous said...

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினையை கையில் வைத்துக் கொண்டு நம் தமிழின காவலர்கள் என்ற போர்வையில் செய்யும் அரசியல் ரவுடித்தனம் கொஞ்சநஞ்சமல்ல. அங்குள்ள தமிழர்களின் பிரச்சனையில் இவர்கள் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே அவ்வின மக்களுக்கு ஒரு சுமுகமான வழி ஏற்படும். அம்மக்களின் தற்போதைய நிலைக்கு புலம்பெயர்ந்த இலங்கை தமிழின மக்களும் காரணம். அவர்கள் எந்த சுயபரிசோதனைக்கு உட்படுத்த விரும்பாதவர்கள். பிரச்னையை அலசி தொலைநோக்கு பார்வையோடு பிற்கால சந்ததியினருக்கு நல்ல சூழலை ஏற்படுத்த விரும்பாமலும், எந்த ஒரு நிதர்சன உண்மையை அங்கீகரிக்க முடியாமல் வெறும் உணர்ச்சி வெறியில் கொந்தளிக்கும் சமூகமாகவே வாழ்ந்து தவறான நெறியில் வழிநடத்துகின்றனர். தமிழக அரசியல்வாதிகளுக்கு இலங்கை விவகாரம் ஒரு பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் ஒருவித போதை. சினிமா துறையிலிருப்பவர்களுக்கு இதில் மூக்கை நுழைப்பது வியாபார நோக்கம். ஏனெனில், அவர்களின் நல்ல புத்தகத்தில் இவர்கள் இருந்தால் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சினிமா வசூல் அமோகமாக இருக்கும். புலம்பெயர் தமிழின மக்கள் உணர்ச்சி பொங்க இணையத்திலும் வலைப்பூக்களிலும் கொப்பளித்துவிட்டு உலக தரம் வாய்ந்த மல்டிப்லேசுகளில் விசிலடிச்சான் குஞ்சுகளாக துள்ளிக்கொண்டிருப்பார்கள். சுயபரிசோதனை, விவாதம், தீர்மானங்கள் செய்யப்படாத எந்த நோக்கமும் வெற்றிபெற்றதாக சரித்திரமில்லை. - ராசப்பன்.

kothandapani said...

dear anony
எந்த ஒரு விஷயத்திற்கும் , ஸ்ரீலங்கா உட்பட, இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும் என்று தான் சிம்பலிக்கா சொல்லி இருந்தேன். இது புரியாமல் என்னையும் உங்க கூட கீலபாக்கதிர்க்கு அழைப்பது நியாயமா.......

Ravi said...

Raasappan and Sooniyan Vikatan comments are apt and true... But unfortunately in our state such comments would be considered as Aryan, Brahminical, anti-Tamil and so on... But truth should prevail...

Ravi said...

Raasappan and Sooniyan Vikatan comments are apt and true... But unfortunately in our state such comments would be considered as Aryan, Brahminical, anti-Tamil and so on... But truth should prevail...

Anonymous said...

/ dear anony
எந்த ஒரு விஷயத்திற்கும் , ஸ்ரீலங்கா உட்பட, இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும் என்று தான் சிம்பலிக்கா சொல்லி இருந்தேன். இது புரியாமல் என்னையும் உங்க கூட கீலபாக்கதிர்க்கு அழைப்பது நியாயமா......./அத்தயெல்லாம் பெருசா எடுத்துக்காதே வாத்யாரே....எல்லாம் சொம்மா டமாசு....

இவ்வளவுகூட நக்கலடிக்காவிட்டால் இட்லிவடை படிச்சு என்னா புண்ணியம்?

Anonymous said...

சாரி எங்களுக்கு prize எல்லாம் வேணாம். கதையை எழுதினது யார்னு சொன்னா மட்டும் போதும். நாலு மொத்து மொத்தனும் போல இருக்கு. இதுக்கு பேர் கதை. கடவுளே, இந்த so called எழுத்தாளர்கள் கிட்டே இருந்து நாட்டையும் தமிழையும் காப்பாத்து.

Anonymous said...

CPIM Party condemns the attack on ordinary srilanka people and sent back of srilankan players. CPIM Politbuero and state secratriate bothe condemns this.