பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 23, 2012

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 23-9-2012

அன்புள்ள முனி,
தினமும் எழுத வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் நேற்று வரை எழுத முடியவில்லை. காரணம் என்னவென்று எனக்கே தெரியாது. ஒருவேளை  காரணம் இருந்தாலும் நான் உனக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மன்மோகன்சிங் திடீர் என்று தூக்கத்தில் இருந்து விழித்து கொஞ்சம் தைரியமாக முடிவு எடுப்பதற்குக்  காரணம் இல்லாமல் இல்லை. நிலக்கரி சுரங்க ஊழலை எப்படி தீர்ப்பது என்று ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதை மறக்கடிக்க டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு போன்ற பூதங்களை கொண்டு இதை மறக்கடித்துள்ளார்கள். இரு கோடுகள் தத்துவம் தான். எனக்கொன்று புரியவில்லை சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு செய்தால் பேருந்தில் போகும் போது, சில்லரைத் தட்டுப்பாடு குறையுமா? ஆனால் பெரிய தமாஷ் நிலக்கரி ஊழலில் ஜெகத்ரட்சகன் பெயர் அடிப்பட்ட போது கலைஞர் "முறைகேடு நடந்த சமயத்தில் அவர் எங்கள் கட்சியில் இல்லை" என்று சொல்லிவிட்டார். கிட்டதட்ட கனிமொழி கூட இதே மாதிரி தான் கலைஞர் டிவிக்கு சொன்னார் என்று நினைக்கிறேன். தமிழ் நாட்டில் நகைச்சுவை உணர்வே இல்லை என்று ஏன் தான் ஜெயமோகன் அலுத்துக்கொள்கிறாரோ?

அலுக்காமல் நம்மூரில் நடக்கும் ஒரே விஷயம் அரசியல், ஜாதீய, சமூக அமைப்புகள் நடத்தும் போராட்டம். அமெரிக்காவில் முஸ்லீம் கடவுள் பற்றித்  தப்பாக எடுத்த வீடியோவிற்கு சென்னை அண்ணா சாலையில் போராட்டம் நடத்துகிறார்கள். சென்னையில் மின்சாரம் நேற்று 7 மணி நேரம் இல்லை. ஒரு வேலை இதுகூட அமெரிக்க சதியாக இருக்கலாம். அதுக்கும் போராட்டம் நடத்தலாம். இவர்கள் செய்யும் போராட்டத்தால் தினமும் டிராபிக் ஜாம். எஸ்.வி.சேகர் ஒரு டிராமாவில் சொல்லுவார், இலங்கைப் பிரச்சனைக்கு எல்.கே.ஜி பசங்களுக்கு லீவு விட்டுவிடலாம் என்று.  அதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

இலங்கை என்றவுடன் ஞாபகத்துக்கு வருவது இலங்கைக்  கால்பந்து வீரர்களை வீட்டுக்கு அனுப்பிய செயல். முட்டாள் தனம். முன்பு இலங்கையிலிருந்து வி.புலிகளை இங்கே கூப்பிட்டு அடைக்கலம் கொடுத்து பயிற்சி, பணம் எல்லாம் கொடுத்த போது இந்த மூளை எங்கே போனது? அப்போது ஒரு நியாயம் இப்போது ஒரு நியாயமா? நல்ல கூத்து. சரி ஒபமா திரும்ப வருவாரா? பின்லாடனை அழித்ததற்காகவே ஓபாமா திரும்ப ஒருமுறை வருவது நல்லது. ஐ.டி மக்களுக்கு நிறைய வேலை கிடைக்காது என்பதைத் தவிர நமக்கு அவரை எதிர்ப்பதற்கு நல்ல காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. வகிமாக்கள் விரைவில் ட்விட்டரில் அமெரிக்க எலெக்ஷனுக்காக பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இருக்கு  என்ற தகவல் உனக்கு அலுப்பா இருந்தாலும் எதுக்கும் சொல்லி வைக்கிறேன்.  

ஆனால் டாக்டர் அய்யா அலுக்காமல் எப்படி அறிக்கை விட்டுக்கொண்டெ இருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா? லேட்டஸ்ட் "ஒவ்வொரு வன்னியனுக்கும் குல தெய்வம் பாட்டாளி மக்கள் கட்சி தான் இன்று முதல் எல்லா வன்னியனும் எந்த நேரமும் தன் வாயால் உச்சரிக்க வேண்டிய மந்திரம் 'வன்னியன் ஆளணும்' என்பது தான். இந்த ஒன்பது எழுத்து மந்திரத்தில் வன்னியர்களின் எதிர்காலம் உள்ளது என்று சொல்லியுள்ளார். ஐந்து எழுத்து மந்திரம், எட்டெழுத்து மந்திரம் இப்ப ஒன்பதெழுத்து மந்திரம். அடுத்து யார் பத்தெழுத்து  மந்திரம் சொல்ல போகிறார்கள்?

பத்து இருக்கட்டும்.  'முனி 3'ஆம் பார்ட் வர போகிறதாமே. அதற்குள் லாரன்ஸ் நடித்த இரண்டாம் பாகம் ஹிந்தியில் ரீமேக் பேச்சு வார்த்தை நடக்கிறது. இன்னொரு முறை பார்க்கலாம், ஹிந்தியில் ஹிரோயின் பார்க்க நல்லா இருப்பார்கள். 'பர்ஃபி' படம் பார்க்க வேண்டும் ஆனால் தியேட்டரில் சப்-டைட்டில் போடுவதில்லை. ஹிந்தி தெரிந்த யாராவது  என்னுடன் படம் பார்க்க வரலாம், ஒரே கண்டிஷன். கூடவே கதை சொல்ல வேண்டும். இடைவேளியில் ஒரு பாக்கெட் பாப்கார்ன் சன்மானம். அது சரி சிங்கம் 2 வர போகிறதாம், யாருக்காவது அதை பற்றி விஷயம் தெரியுமா?

சிங்கம் 2 பத்தி யாரானும் பின்னூட்டத்தில் சொல்வாங்க. நானிப்போ  அசிங்கம் பத்தி சொல்லிடரேன். ச்சீய் பக்கங்கள் என்று சி.சரவணகார்த்திகேயன் குங்குமத்தில் 'பொதுவில் பேசத் தயங்கும் புதிர் விஷயங்களின் ஹிஸ்டரி' என்று எழுத ஆரம்பித்திருக்கிறார். குங்குமத்துக்கு இது புதுசு இல்லை, முன்பே இது மாதிரி பலான விஷயங்கள் வந்திருக்கிறது @writercskக்கு இது புதுசாக இருக்கலாம். படித்து முடித்த பின் ஏதோ தமிழ் விக்கி படித்த உணர்வு. இன்னும் கொஞ்சம் நல்லா எழுதலாம். இவர் எடுத்துக்கொண்ட விஷயங்களை எல்லாம் தமிழ் மக்கள் மக்கள் சாதாரணமாகப் பேசுகிறார்கள் என்பது இவருக்கு தெரியாமல் இருக்கலாம்.

தமிழ்ப் படத்துக்கு தமிழ் பெயர் என்று ஒரு கூத்து சென்ற ஆட்சியில் நடந்தது. அதே மாதிரி இப்ப லண்டனில் ஒரு உணவிற்கு பெயர் மகாத்மா உணவு என்று வைத்திருக்கிறார்கள். ஹோட்டல் காரர்கள் இதற்கு சொல்லும் காரணம் "மகாத்மா காந்திபற்றி அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும் அவர் சாப்பாட்டு விசயத்தில் டயட்டை சிறந்த முறையில் கடைபிடித்துள்ளார் என்பது யாரும்அறிந்திராத ஒன்றாகும். அவரது உணவுப்பழக்கம் சிறந்த டயட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியதன் காரணமாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உணவிற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது" சரி இந்த உணவில் என்ன இருக்கிறது என்றால் 12 வகையான பதார்த்தங்கள் போட்டு வாழை இலையில் .. டயட் மீல்ஸ்!

மணிரத்னம் சார் டைரக்ஷன்ல நானும் ஸ்ரீதேவியும் ஜோடியா நடிக்கற வாய்ப்பு கூட எனக்கு அப்ப வந்தது . ஏவிஎம்மின்னின் திரையரங்க மேலாளர் என்கிட்ட அந்தப் படத்தை ஒத்துக்கச் சொன்னார் . மணிரத்னம் சார் குடிக்கிற மாதிரி ஒரு சீன் வச்சார்னா அவர்கிட்ட கிட்ட போய் குடிக்கிற மாதிரி நடிக்க முடியாது னு சொல்ல முடியுமா ? பெரு கெட்டுப் போயிடும் .அதான் மறுத்துட்டேன் என்கிறார் பசுநேசன் ராமராஜன். குடியினால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரே நல்ல விஷயம் இது தான் என்று நினைக்கிறேன்.

ஜெயலலிதா குஜராத் மாநிலம் மட்டும் எப்படி மது மூலம் பணம் கிடைக்காமல் எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்று அதிகாரிகளிடம் கேட்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள், இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு ஏற்படும் என்று சொல்லுகிறார்கள். பார்க்கலாம்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்க வீட்டில் கடித்து சாப்பிடும் மைசூர்பாக் செய்தால் சுரேஷ் கண்ணன் வீட்டுக்கு பார்சல் அனுப்புங்க. தயவு செய்து கிருஷ்ணா ஸ்வீட்ஸிலிருந்து வாங்கி அனுப்பாதீர்கள், அது அவருக்கு ரஜினி படம் பார்ப்பது மாதிரி.

இப்ப எல்லாம் எது எழுதினாலும் ஒரு வாசகர் கடிதமும், கவிதையும் கூட எழுதுவது தான் ஃபேஷன். அதனால் இந்த வார கவிதையும், கடிதமும் கீழே

முதலிரவு அறையில்
மணமக்கள்
பேசிக்கொண்டார்கள்
அனைத்தையும்
தங்கள், தங்கள்
காதலைத் தவிர
- ப.க.கோமதிமங்கை

இந்த வார வாசகர் கடிதம்

அன்புள்ள இட்லி,

விசு எடுத்த சம்சாரம் ஒரு மின்சாரம் என்ற படத்தை ரிமெக் செய்தால் உங்க சாய்ஸ் யார் ?
அதை படமாக எடுத்தால் ஓடுமா ?

இப்படிக்கு
சங்குமுருகன்

ப்ரியமான சங்குமுருகன்,

தற்போது இந்த படத்தை எடுப்பது நல்லதில்லை. மின்சாரம் மாதிரி சம்சாரம் அடிக்கடி வீட்டுக்கு வந்துவிட்டு போனால் ? அதனால் கூடன்குளம் வநத பிறகு படம் எடுங்கள் ஓடும்.

இப்படிக்கு,
இட்லிவடை, ( முனிக்கும் சேர்த்து ! )

8 Comments:

சி. சரவணகார்த்திகேயன் said...

ச்சீய் பக்கங்கள் பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி. point taken. will try to incorporate in upcoming chapters.

dr_senthil said...

எம் பி கள் குழுவுடன் லங்கா சென்று ராஜபக்சே காலில் விழுந்து அவர் தந்த விருந்து உண்டு தமிழர் மறு குடியமைப்பு சிறப்பாக உள்ளதாக மீசை முறுக்கி பேட்டி கொடுத்த திருமாவிற்கு இன்று ராஜபக்சே வின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் என்ன தகுதி இருக்கிறது..?

Anonymous said...

புலி வாயில் இருந்து அப்பாவி இலங்கை ஹிந்து தமிழர்களை காப்பாற்றியவர் ராஜபக்சே. அவர் ஒன்றும் புனிதன் இல்லைதான். ஆனால் தீமையிலும் ஒரு நன்மை நடந்திருக்கிறதா இல்லையா?

R. J. said...

'chi..chee..y..' - Also see Kumudam 'Aattamaa thaerottamaa'.

So, Karunaa has confirmed that Jagatrakshakan was involved in Coal scam! (Obviously, he did not share a part with MK!)

Muni-2: What is wrong with the heroin in the Tamil original?

-R. J.

mak said...

"அமெரிக்காவில் முஸ்லீம் கடவுள் பற்றித் தப்பாக எடுத்த வீடியோவிற்கு" - movie about prophet mohamed, not god. Power Cut?

ConverZ stupidity said...

//Anonymous said...
புலி வாயில் இருந்து அப்பாவி இலங்கை ஹிந்து தமிழர்களை காப்பாற்றியவர் ராஜபக்சே. அவர் ஒன்றும் புனிதன் இல்லைதான். ஆனால் தீமையிலும் ஒரு நன்மை நடந்திருக்கிறதா இல்லையா?
//
well said. muslim tamils left the northern lanka more than a decade back due to the threat from Tigers. LTTE a well-organised movement but ruined due to selfishness and wrongly choosen path

Sankarasubramanian Mohan said...

Disclaimer: I am not pseudo DK or DMK and currently don't have a Tamil keyboard in my iPad.

Keeping Tamil names for Tamil movies is not a silly move. This will help future generation to keep Tamil alive. Otherwise we might get titles like boys, rebel, album, jeans and all other words in Oxford dictionary as titles. It gave as titles like Yuddham sei, thoonga nagaram, vaaranam aayiram, yaathumagi etc.

These titles only going to keep Tamil alive for future generations... See the Telugu now... You may not see future generations speaking Telugu... It will be eliminated by Hindi and Tamil equally...

Somewhere it's one of the unknown good done by previous govt.

Anonymous said...

/ Keeping Tamil names for Tamil movies is not a silly move /

அப்போ லேபில் மட்டும் நல்லா இருந்தா போதும்? உள்ளே சரக்கு எக்கேடு கெட்டால் என்ன? நல்லா இருக்கு லாஜிக்....அழுகிறதா சிரிக்கிறதான்னே தெரியவில்லை.

Tamil Nadu is the only remaining Classical society in the world. Everything else is destroyed. You cannot find such society in existence anywhere in the world.

That's why Christian missionaries are paying particular attention in systematically destroying Tamil language and culture with the help from Dravidian parties. Once the language is dead, then the culture will die along with it.

You are not going to save Tamil just naming a film title in Tamil. There is much more to it.

Think about that.