பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 24, 2012

பிங்க் சிலிப் டாப் 10+3

திருநெல்வேலி"யின்"குப்பை" என்ற வலைப்பதிவிலிருந்து இந்த வாரம் பிங்க் சிலிப் பற்றி திரு TS நாகராஜன் அவர்கள் எழுதியிருக்கார்... அதிலிருந்து.. பல கம்பெனிகளிலிருந்து திரட்டப்பட்ட சில அறிகுறிகளைக் கீழே காணலாம்.

1.உங்கள் ஸ்தாபனத்தை இன்னொரு ஸ்தாபனம் take over செய்தாலோ, இன்னொரு கம்பெனியுடன்
mergerஆனாலோ, அதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு வேறு வேலை தேட மு
யற்சி செய்யலாம். புது முதலாளி(boss)க்கு உங்கள் சேவை தேவைப்படும் என்ற அவசியமில்லை.

2.உங்கள் ஸ்தாபனம் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்ற பகுதிகளில் ஆள் குறைப்பு நடந்துகொண்டிருக்கிறது. எச்சரிக்கை.

3.உங்கள் "Boss"ன் நடத்தையில் ஒரு மாற்றம் தெரிகிறது. இதுவரை நீங்கள் விடுமுறைக்குப் போவதைத் தடுத்து வந்தவர், திடீரென்று கூப்பிட்டு "நீங்கள் ஏன் விடுமுறையில் செல்லக் கூடாது?”
என்று கேட்டால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "You are indispensable"
(உங்கள் சேவை தவிர்க்கமுடியாதது) என்று சொன்ன வாய்,"I can manage without you" (நீங்கள் இல்லாமலேயே சமாளித்து கொள்கிறேன்) என்று சொன்னால் - அர்த்தம் புரியவில்லையா?

4.உங்களுக்குக் கொடுத்துவந்த சில விசேஷ சலுகைகள் நிறுத்தப்படும். நீங்கள் இதுவரை அனுபவித்து வந்த "car parking" facility வாபஸ் பெறபடுவது ஒரு signal.

5.வழக்கமாக உங்களுக்குக் கொடுக்கப்படும் பரிசுகள் பல காரணங்களுக்காக நிறுத்தப்படும்.

6.முக்கியமான மீட்டிங்குகளுக்கு உங்களுக்கு அழைப்பில்லை. உங்களுக்குப் பதிலாக உங்களுக்குக் கீழே வேலைப் பார்க்கும் ஊழியர்கள் பங்கு எடுத்துகொள்வார்கள்.

7.நீங்கள் ‘loop‘ ல் வெளியே இருப்பீர்கள். அதாவது கம்பெனியின் முக்கிய நிகழ்வுகளிலும் மற்ற முடிவுகளிலும் உங்கள் பங்கு இருக்காது. சில சமயங்களில் உங்களுக்குத் தெரியாமலேயே அநேக முடிவுகள் எடுக்கப்படும்.

8.திடீரென்று முக்கியம் இல்லாத பணிகளைச் செய்ய உத்தரவுகள் வரும்.

9.உங்களுடைய அன்றாட வேலை அட்டவணையை (work flow) மேலிடம் கேட்டால், உங்கள் மேல் உள்ள நம்பிக்கைக் குறைந்துவிட்டது என்று புரிந்துகொள்ளுங்கள்.

10.நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய team கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப்படும்.

11.உங்களை மாதிரி தகுதியுள்ள புதியவர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்குப் பயிற்சி அளிக்க
உங்களை வேண்டிக்கொள்வார்கள்.

12.இதுவரை, நண்பர்களாகப் பழகி வந்த உங்கள் சக ஊழியர்கள் உங்களைத் தவிர்க்க முயற்சித்தால் அது ஒரு நல்ல அறிகுறியில்லை. உங்களைப்பற்றி உங்களுக்கு தெரியாமலேயே ஏதோ ஒரு விஷயம்
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

“வருமுன் காப்போம்” என்பது எக்காலத்திற்கும் எல்லோருக்கும் பொருந்தும்.

பி.கு. மேற்சொன்ன அறிகுறிகள் தனியார் துறையில் வேலை பார்க்கும் இந்திய ஊழியர்களுக்கும்
பொருந்தும்.

இதை தவிர இன்னொன்று இருக்கிறது, அலுவலத்தில் இட்லிவடை படித்தால் வேலை நிச்சயம் காலி ஜாக்கிரதை! பிகு: வேற பாயிண்ட் இருந்தால் எடுத்துவிடலாம்...

7 Comments:

ப.கந்தசாமி said...

நல்ல வேளை, நான் அரசாங்க வேலையில் 38 வருடம் குப்பை கொட்டிவிட்டு நல்ல முறையில் ஓய்வு பெற்றேன். பென்ஷன் வருகிறது என்று சொல்லவும் வேண்டுமோ?

இல்லாமயா அந்தக் காலத்தில "கால் காசு உத்தியோகம்னாலும் கவர்ன்மென்ட் உத்தியோகமா இருக்கணும்னு" சொல்லி வச்சாங்க.

Boston Bala said...

அடுத்தவருக்கு உழைக்கிறத வுட்டுட்டு, உனக்காக பிற உழைக்கிற மாதிரி வாழ்க்கைய நடத்திக்கற வழியப் பாரு கண்ணா!

R. J. said...

Aiyaa.. ippa government udhyoogaththukk kaaragruha raasiyum undu, theriyumaa?!

It is true that employees of private firms face these 'sword over their heads' all the time.

One more warning - When you have a new boss, he will try to have his own 'yes' men around him.

Few bosses appreciate discussions / new proposals to improve things in the company - unless you make it as if they said it!

If you know there is politics with two strong heads in the office, there is always a possibility that each boss thinks that you are on the other side or a mole. Better openly side one boss and you will be safe as long as he is in the company!

-R. J.

ILA (a) இளா said...

அருமையான பட்டியல்..

Ignoring is the First Step (India)

Unknown said...

உண்மைதான் . நல்ல பட்டியல்

ConverZ stupidity said...

Alibabi and 200+ thieves

Sonia Gandhi 4th richest politician in the world

http://www.weeklyblitz.net/2584/sonia-gandhi-4th-richest-politician-in-the-world

Anonymous said...

இட்லிவ்டைக்கு பிங்க் ஸ்லிப் கொடுத்துவிட்டார்களா :)