இந்த வாரம் விகடனில் வந்த கனிமொழி பேட்டியில்
”ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தி.மு.க-தான் அதிகமாகக் காயப்படுகிறது… கவனிக்கிறீர்களா?”
”கவனிக்கிறோம். ஆனா, நீங்களோ நானோ பட்டப்படிப்பை முடிச்சிருக் கோம்னா, அதுக்கான உழைப்பைக் கொட்டினது திராவிட இயக்கங்கள்தான். ஒரு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு உங்களோட எண்ணங்களை இறக்கிவைக்க முடியுதுன்னா… அதுக்கான வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தது திராவிட இயக்கங்களின் வியர்வைதான். ஆரம்பத்தில் இணையத்தை நாங்க அசட்டையா அணு கியது உண்மைதான். ஆனா, இப்போ இயக்கத்துக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கிறோம். ஆக்கபூர்வமா விவாதிக்கிறோம். எதிர்காலத்துல சமூக வலைதளங்கள் தி.மு.க-வின் கொள்கைப் பரப்புத் தளங்களா இருக்கும்.”
@kalaignar89
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, August 14, 2012
@kalaignar89
Posted by IdlyVadai at 8/14/2012 03:28:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











21 Comments:
பகிர்வுக்கு நன்றி ஐயா...
தனது தந்தையை, சகோதர்களை விட கனிமொழி நகைசுவை உணர்வு அதிகம் கொண்டவராக காணபடுகிறார்.. திகார் தந்த முதிர்ச்சி
@kalaignar89 இல்ல....@kalaignar175000c
@kalaignar89 இல்ல... @kalaignar175000c
That means mu.ka's son running this twitter account?
https://twitter.com/kalaignar89
I do not see anything wrong with her answer.
தன் தந்தையை, சகோதர்களை விட கனிமொழி நகைசுவை உணர்வு அதிகம் கொண்டவராக இருக்கிறார் - திகார் தந்த முதிர்ச்சி
ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் யாரும் பட்ட படிப்புபடிக்கவில்லையா ...கம்ப்யூட்டர் கல்வி இல்லாதவர்களா .....இந்த வளர்ச்சி காலத்தின் கட்டாயம்.... திராவிட இயக்கங்கள்
இந்த வளர்ச்சிக்கு ஒரு தடையாக இல்லாமல் இருந்தன என்பதே உண்மை. ஆனால் அதற்க்கு தமிழகம் கொடுத்துள்ள விலை மிகப்பெரியது....
கோவில்கள் தி.மு.க-வின் கொள்கைப் பரப்புத் தளங்களா மாறியாச்சு, கல்வி கூடங்கள் தி.மு.க-வின் கொள்கைப் பரப்புத் தளங்களா மாறியாகி விட்டது, தொலை காட்சி மாறிவிட்டது, பத்திரிக்கை துறையும் மாறி விட்டது. சமூக வலைதளங்கள் தி.மு.க-வின் கொள்கைப் பரப்புத் தளங்களா மாறுவது என்ன பெரிய விஷயம். என்ன ஒரே ஒரு பிரச்சனை, அனேக தி.மு.க. காரனுக்கு எழுத படிக்க தெரியாது.
ப்பூ!கடந்த அறுபது ஆண்டுகளாக, தினம் 140000 வார்த்தை பொய்கள் அனாயாசமாக சொல்லிவரும் திறமை படைத்த ஒருவர்,கேவலம் 140 வார்த்தை பொய்கள் சொல்வதா கடினம்? சும்மா ஊதிடுவாரில்ல !!
Ultimate,as if they have invented the computers and internet .
Thanks to DMK rulers for inventing the Computer, imparting knowledge to all of us, introducing twitter, face book and blog sites to us. Without them where will we be? And Idly Vadai? - R. J.
ஏற்கனவே டிவிட்டரில் நுழைந்துள்ள கருணாநிதி தற்போது பேஸ்புக்கிலும் கூட முகவரியை ஏற்படுத்தியுள்ளார். இதுபோல கருணாநிதிக்காக தனியாக ஒரு வலைத்தளமும் உருவாகி வருகிறதாம்.
இந்தப் புதிய இணையதளம் ஆகஸ்ட் 17ம் தேதி முரசொலி மாறனின் 79வது பிறந்த நாள் விழாவின்போது தொடங்கி வைக்கப்படும் என்று திமுகவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கருணாநிதியின் பேஸ்புக் பக்கம்
http://www.facebook.com/Kalaignar89
கனியாத மொழியே கேள்,
என்றும் நிலைத்ததில்லை கயமைத்தனம்; இதனை
நன்று உணர்தல் நலம் - விரைவில்
சென்றுவிடும் இக் காலம்; நிச்சயம்
நின்று கொல்லும் தெய்வம்.
இங்கே சில பின்னூட்டங்களைப் படிக்கையில், எழுபதுகளில்,
துக்ளக்கில் வந்த ஒரு கேள்வி பதில் ஞாபகத்திற்கு வந்தது.
கேள்வி: "கடல் அலைகள் எப்படி உருவாகின்றன? "
பதில்: "தி மு க அரசுதான், கடலுக்கு அடியில் எந்திரங்களை வைத்து
அலைகளை ஏற்படுத்துகின்றது. நம்புங்கள் சார், நம்புங்கள்!"
They deleted my below two Postings and blocked me from Posting:
1. இலங்கையில் பல்லாயிரம் மக்கள் கொத்து கொத்தாக கொன்றுகுவித்த இலங்கை அரசுக்கு பக்கபலமாக இருந்தது இந்திய அரசு. (உங்கள் கட்சியும் அதில் முக்கிய அங்கம்)
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் உங்கள் சொந்த பிள்ளைகள்/பேரங்கள் அந்த இடத்தில்(கொலை களத்தில்) இருந்து இருந்தால், சும்மா உண்ணாவிரதம் மட்டுமா இருந்து இருப்பீர்கள் ?!?!?!
இந்திய அரசை அப்போதே கலைத்துவிட்டு, உங்கள் பிள்ளைகள்/பேரங்களை காப்பாற்ற தி.மு.கா தொண்டர்களுடன் இலங்கைக்கு சென்று இருப்பீர்கள் அல்லவா ?
...
இலங்கையில் மாண்டது யாரோ பெற்ற பிள்ளைகள் அல்லவா
2. ***** அறிஞர் அண்ணா புற்றுநோயால் மரணமடைந்ததற்கு காரணம் ***** "அவரின் அமைச்சராக இருந்த தாங்கள்" செய்த ஊழல்களை பொறுக்க முடியாமல் போனதே காரணம்... என்று அண்ணாவிற்கு வைத்தியம் செய்த மருத்துவர்(உங்கள் கட்சியின் மூத்த தலைவரின் மருமகன்) ஒரு நிகழ்ச்சியில் சொன்னார். உண்மையா ?!?!?!?!?
Mark zuckerberg வசனம்: என்னது, இங்கயும் வந்துட்டாரா? தம்பிக்கு லெட்டர் எழுதியே உசுரை வாங்குவாரே? ஐயோ, நான் என்ன பண்ணுவேன்னு தெரியலியே? சங்கத்தைக் கலைச்சுடுடா, கைப்புள்ள..........
கவிதை என்பது...
கவிதை என்பது கை விதை!
எப்படி வேண்டுமானாலும்
எழுதலாம் அதை!
கவிதை கொண்டு,
சண்டை போடலாம்
சிண்டு முடியலாம்.
அண்டை வீட்டுக்காரன் அறியாமலே
அனானியாய்,
அவன் மண்டை உடைக்கலாம்.
திறனிருந்தால் அனைவருக்கும்
கொண்டை போட்டு
கூந்தல் நிறைய
(கவி) பூச்சூட்டலாம்...
லாம்...
லாம்..
லாம்....
(கண்டு பிடிச்சிட்டாய்ங்க போல இருக்கேடே இட்லி!....இனிமேலே சுதந்திரமா குத்தாட்டம் போடா முடியுமாலே? கத முடுஞ்சு போச்சுலே மக்கா!!!!...)
தி.மு.க., தலைவர் கருணாநிதியின், "பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை துவக்கினார். துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்தனர். துவங்கிய மறு நாளான நேற்று மாலை வரை, சுமார், 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்து இருந்தனர். கருணாநிதியின், "பேஸ் புக்' பக்கத்தில் "டெசோ' மாநாட்டு தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன. நேற்று காலை முதலே கருணாநிதியின் பக்கத்தில் இணைந்த புதியவர்கள் பலர், அவருடைய அறிக்கைகள், "டெசோ' மாநாடு, ஈழப் பிரச்னையில் அவருடைய நிலைப்பாடு, குடும்ப அரசியல் என கருணாநிதி குறித்து கடுமையான எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வந்தனர். அதில், கருணாநிதியை தனிப்பட்ட முறையில் தாக்கி மிக கடுமையான பதிவுகள் பதியப்பட்டன. இந்த பதிவுகளுக்கு, இந்த பக்கத்தில் இணைந்து இருந்த, பல தி.மு.க.,வினரும் பதிலடி தந்தபடி இருந்தனர். இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் கருணாநிதியை பற்றி கடுமையான விமர்சனங்கள் அதிகமாயின. இதனால், கருணாநிதியை தனிப்பட்ட முறையில், விமர்சனங்களை பதிவிட்ட பலர், மாலையில் தடை செய்யப்பட்டனர். பின்னர், மாலை 6 மணியில் இருந்து புதிதாக துவங்கப்பட்ட கருணாநிதியின் "பேஸ் புக்' காணாமல் போனது.
தினமலர்:::
மாலை 6 மணியில் இருந்து புதிதாக துவங்கப்பட்ட கருணாநிதியின் "பேஸ் புக்' காணாமல் போனது.
கையெழுத்துப் பத்திரிகையிலிருந்து ட்விட்டர் வரை-ன்னுல்லாம் ஒருத்தரு பதிவு போட்டாரேப்பா... இப்படி ஆயபோச்சேப்பா... ஒரு வேளை இது ஆரிய சூழ்ச்சியா இருக்குமோ?
Post a Comment