பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 31, 2012

முகமூடி - FIR

என் பேர் ஜீவா. என்னுடைய படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதற்கு முன்பு விஜய் சாருடன் நண்பன் படத்தில் நடித்தேன். மிஷ்கின் பல மாதங்களுக்கு முன் கூப்பிட்டார் ஒரு படம் பண்ண. ஓப்பனிங் சீன் சொன்னவுடன் அட நல்லா இருக்கே என்று ஒத்துக்கிட்டேன்.
முதல் சீன்ல முகமூடி திருடர்கள் ஹைடெக் கருவி எல்லாம் வைத்துத் திருடுவார்கள். ஆனால் அவர்கள் கொள்ளை அடிப்பது எல்லாம் கிழவர்கள் கிழவிகள் இருக்கும் வீடுகள். எவ்வளவு ஹைடெக் என்றாலும் வீட்டில் உள்ளவர்களை கொலை செய்ய அவர்கள் உபபோகிக்கும் ஆயுதம் சுத்தியல். நான் கூட டைரக்டரைக் கேட்டேன்.அவர் "என் படம் என்றால் வித்தியாசமா இருக்க வேண்டும்... அதனால்" என்று சொல்லிவிட்டார்.

படத்தில் என் பெயர் புருஸ் லீ. அட நிஜமாதாங்க. இதற்காக நான் குங்பூ எல்லாம் கத்துக்கிட்டேன். முகமூடி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று பல விதமாக யோசித்தோம். சூப்பர் மேன் மாதிரி ஜட்டியை வெளியே போட்டுக்கொண்டா அல்லது பேட் மேன் மாதிரி பெரிய காதுகளுடனா அல்லது ஸ்பைடர் மேன் மாதிரி நைலான் டிரஸ்ஸா என்று பயங்கர குழப்பம். இதை எல்லாம் கலந்து ஒரு உருவம் செய்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.

வீட்டைத் திருடும் கும்பலைக் கண்டுபிடிக்க போலீஸ் கஷ்டப்படுகிறது. கமல் படம், ரஜினி படம், ஏன் அஜித் படம் என்று எல்லா தமிழ் படங்களிலும் திருடர்களைக் கண்டுபிடிக்கும் முன் ஒரு வட்ட மேஜையை சுற்றி டிஸ்கஸ் செய்ய வேண்டும். அதே போல இங்கே நாசர் மற்றும் பெரிய பெரிய ஆபிசர்கள் எல்லாம் ஆலோசனை செய்கிறார்கள். ஆனா படத்தில் நான்தானே ஹீரோ? எனக்கு குங்ஃபூ வேற தெரியும். அதனால் அவர்களை நான் தான் சண்டை போட்டுப் பிடிக்கிறேன்.

சார் எனக்கு பாட்டு எல்லாம் கிடையாதா என்று கேட்டேன், உடனே இரண்டு பாட்டுகள் வைத்து விட்டார். ஒன்று குத்து பாட்டு (மஞ்சள் புடவை இல்லாமல்), இன்னொன்று காதல் பாட்டு சுவிஸ் எல்லாம் சுற்றி பார்த்தாச்சு.

படத்தில் காதல் என்று சொன்னவுடன் தான் நினைவுக்கு வருது, நான் காதலியிடம் ப்ரபோஸ் செய்யப் போன இடத்தில் அவர் அப்பா, அதான்சார் நாசர், சுட்டுக் கொல்லப்பட, நான் தான் கொலை செய்தேன் என்று என் மேலே பழிவிழுகிறது. அப்பறம் என்ன என்று உங்களுக்கே தெரியும். கடைசியாக, என்னை முகமூடி இல்லாமல் கூட அழகாகக் காண்பித்த கேமராமேனுக்கு நன்றி.

என் பெயர் பூஜா ஹெக்டே, இந்த படத்தில் நான்தான் ஹீரோயினாம் . மணிரத்தினம் படத்தில் வரும் அதிகப்பிரசங்கி மாதிரியான கேரக்டர். பாருங்க காருக்கு வெளியே யாராவது வாழைப்பழத் தோலியை தூக்கி போட்டால் அதைப் பொறுக்கி அவர்கள் காருக்குள்ளே தூக்கி போட்டுவிடுவேன். படத்தில் என் அப்பா நாசர். மேலே ஜீவாவே கதையை சொல்லிவிட்டார். எனக்கும் சொல்ல ரொம்ப விஷயம் இல்லை. அதே மாதிரி தான் படத்திலும் அதிகமாப் பேச மாட்டேன், அதிகமா வர மாட்டேன். ஜீவாவின் தாத்தாவுக்குக் கொடுத்த முக்கியத்துவம் கூட எனக்கு இல்லை. பை.

நான் தான் ஜீவாவோட தாத்தா. எனக்கு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் சைன்டிஸ்ட் தாத்தா மாதிரி ரோல். எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொன்னேன். "சார் சால்டரிங் அயன் வைத்து ஏதோ ஒரு சர்க்யூட் பத்தவையுங்க.. மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டார். அதே போல என்னுடன் இன்னொரு தாத்தா அவர் தான் ஜீவாவிற்கு முகமூடி தைத்து தருவார். எனக்கு முகமூடி ரோல் கிடையாதா என்று கேட்டேன்.. உடனே உங்களுக்கு இல்லாமலா என்று க்ருஸ்துமஸ் தாத்தா மாதிரி ஒரு வேஷம் கொடுத்தார் கடைசியில். என்னை யங்காக் காண்பிக்க பர்முடா போட்டுக்கொள்ளச்சொன்னார். நான் பெரிய நாடக நடிகன் அதே மாதிரி இந்த படத்திலும் நடித்திருக்கேன்.

நான் தான் படத்தின் வில்லன். எனக்கு பெரிய வேலை இல்லை. ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஸ்டிக்கார் ஒட்ட வைத்த சுத்தியலை வைத்து எல்லோரையும் கொலை செய்வேன். எதுக்கு சுத்தியலில் ரிப்ளடர் ஸ்டிக்கர் என்று கேட்கலாம் அப்ப தான் இருட்டு சீனில் ஒழுங்கா தெரியும் ? ! கடைசியில் ஹீரோ கையில் அடிப்பட்டு படம் பார்க்கும் உங்களுக்கு முன்னால் நான் செத்து போகிறேன்.

நான் முகமூடி படம் பேசுகிறேன். படத்தில் வசனம் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனக்குப் பிடித்த ஒரே நல்ல வசனம் படம் ஆரம்பிக்கும் முன் "புகைபிடித்தல் உடல் நலத்துக்கு கேடு" என்று வரும் பாருங்க அது மட்டும்தான். கேமரா முதல் இரண்டு மூன்று காட்சிகளில் நல்லா இருக்கு. திரைக்கதை மிஷ்க்கின். முதல் பாதி மூச்சா போகும் வரை ஓ.கே. அதற்கு பிறகு அவருக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் சமீபத்தில் சாருவுடன் சண்டை கூடப் போடவில்லை. இசை சில இடங்களில் நல்லா இருக்கு ஆனால் சில இடங்களில் ஒரே இரைச்சல். பல இடங்களில் திடீர் என்று ஆரம்பித்து திடீர் என்று முடிகிறது. இதுக்கு மேல சொல்லிக்கற மாதிரி ஒண்ணுமே இல்லை.

மொத்தத்தில் முகமூடி மூக்கு ஷார்ப். மூவி மொக்கை.

மார்க் 5/10

9 Comments:

சுபத்ரா said...

Nalla velai... Naalaiku poradhaa irundha plan now cancelled :-)

Btw, padam pazhaiya model maari irunthaalum, unga review puthu model aa irukku !

Sidharth said...

மொக்கைன்னா எப்படி ?? "நொந்திரன்" படத்தை மாதிரியா ?

வவ்வால் said...

http://www.couriermail.com.au/news/breaking-news/female-russian-serial-killer-jailed-for-17-hammer-murders/story-e6freonf-1226386465803துல்ச்கம் முழுக்க சுத்தியல் வச்சூ சீரிய்ல் கில்லர் இருக்காங்க.

இந்தியாவில் மாவ்ரியா கொள்ளையர்னு ஒரு குழு சின்ன இரும்பு ராட் வச்சு மட்டுமே கொல்லும்.

மோடஸ் ஓபரண்டி காட்டி இருக்கார் இயக்குனர் :-))

சிந்திப்பவன் said...

நல்ல விமரிசனம்..நன்றி.
மிஷிகினின்(கற்பனை) பதில்:
என்னய்யா அக்கிரமமா இருக்கு?
ஒரு நல்ல படம் எடுத்தால் இது அப்படியே ஆங்கில/இரானிய/ஜப்பானிய திரைப்படத்தின் காப்பி என்று ஆதாரத்துடன் சொல்றாங்க!சரி ஒரிஜினலா எடுக்கலாம்னு எடுத்தா இது மரண மொக்கை ன்னு சொல்றாங்க!பின்ன எப்படிதான்யா படம் எடுக்கிறது?

R. J. said...

After reading the 'review' I wonder if the mark given is fair! Should it be 0.5 / 10 ? Will Mishkin remove his goggles now!

Jiiva does look good in the ads of 'Nee thaanae en pon vasantham'!

-R. J.

மோகன் said...

நேற்று இரவு முகமூடி திரைப்படம் பார்த்தேன்.கடந்த 15 ஆண்டுகளாக மாதம் 2 படமாவது தியேட்டருக்கு சென்று பார்க்கும் என்னுடைய திரையரங்க அனுபவத்தில், என்னை அசந்து போக வைத்த இரண்டாவது படம்.

அசந்து போக வைத்த முதல் படம் அணில் விஜய் நடித்த ''சுறா''. ...அந்த படத்திற்கு பிறகு நான் அசந்து தூங்கிய படம் முகமூடி தான்..!

கதை,திரைகதை,வசனம்,இசை,ஒளிபதிவு,ஹீரோயின்,வில்லன், காமெடி எதுவுமே உருப்படியாக இல்லாமலும் படம் எடுக்கமுடியும் என நிரூபித்திருக்கிறார் மிஷ்கின். இதற்காக அவரை பாராட்டுவோம்.

படம் சூப்பர் என எழுதி , கொஞ்சம் பேரை சிக்க வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் அவ்வளவு பெரிய பாவம் செய்ய மனம் வரவில்லை.

My mark 1.5/10

Anonymous said...

Some blogs may post 'Jeeva, you too?' and likewise. Idlyvadai should not get in to the trap of 'suitcase vangitanga' type of reviews. Keep it up!

ConverZ stupidity said...

//கடைசியில் ஹீரோ கையில் அடிப்பட்டு படம் பார்க்கும் உங்களுக்கு முன்னால் நான் செத்து போகிறேன்//

இதுதாண்டா இட்லிவடை பன்ச்சு

SAIRAAM said...

Nalla review - kalakiteenga idyvadai -

http://countermani.blogspot.in/2012/09/mugamoodi-oru-sirippu-paarvai.html

idhu ennoda review

Ps - Mysskinku mattumilla, enakkum mokkai poda theriyumnu puriyum) ;)