பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 29, 2012

நீயும் இந்திரா…..நானும் இந்திரா! - பாரதி மணி

போன டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த உயிர்மை 100-வது இதழ் வெளியீடும், சீனு ராமசாமியின் காற்றால் நடந்தேன் கவிதைத்தொகுப்பு வெளியீடும் ஒரே விழாவாக நடந்தேறியது.

உயிர்மை 100-வது இதழை வெளியிட்டுப்பேசிய மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அதிக நேரம் உட்காரமுடியாதென்ற காரணத்தால் உடனே வீட்டுக்குப் போய்விட்டார். அடுத்தநாள் என்னை தொலைபேசியில் அழைத்து, உயிர்மை 100-வது இதழில் வந்திருந்த எனது கட்டுரையை சிலாகித்துப்பேசிவிட்டு, தான் போனபிறகு, விழாவில் யாரெல்லாம் என்ன பேசினார்கள் என விசாரித்தார். என் பங்குக்கு நான் ‘சீனு ராமசாமியின் கவிதைத்தொகுப்பைப்பற்றி பேச வந்த நடிகர் விவேக் உங்கள் பெயரை தவறாக இந்திரா செளந்தர்ராஜன் என்று சொல்லிவிட்டு, உடனே தவறைப்புரிந்துகொண்டு, இந்திரா பார்த்தசாரதி என்று திருத்திக்கொண்டார்’ என்று ‘போட்டுக்கொடுத்தேன்’! இதைக்கேட்ட இ.பா. கொஞ்சமும் வருத்தமில்லாமல், ‘என் பெயர் ராசி அப்படி! அந்தக்காலத்தில் நா. பார்த்தசாரதியும், இப்போது இந்திரா செளந்தர்ராஜனும் தான் என் எதிரிகள்!’ என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு இரு சம்பவங்களை நினைவு கூர்ந்தார்:

முன்பொரு சமயம் இ.பா.வும், நா.பா.வும் பம்பாய் தமிழ்ச்சங்கத்தாரால் ஒரு விழாவுக்கு அழைக்கப்பட்டு, பம்பாய் போயிருந்தனர். அங்கே அவர்கள் பேசப்போகும் ஒரு நிகழ்ச்சியில், பார்வையாளராக வந்திருந்த வாசகர் ஒருவர் மேடையேறி, வலுக்கட்டாயமாக இந்திரா பார்த்தசாரதியின் வலது கையைப்பிடித்து, விரலில் ஒரு புது மோதிரத்தை போட்டுவிட்டு, ‘சார்! இது ‘குறிஞ்சி மலர்’ எழுதிய கைக்கு!’ என்று சொல்லி கும்பிட்டாராம். திகைப்படைந்த இ.பா. மோதிரத்தை கழட்டி அவர் கையில் கொடுத்து, ‘குறிஞ்சி மலர்’ எழுதிய கை அவர்ட்டே தான் இருக்கு!’ என்று நா.பா.வை கை காட்டினாராம்!

ஒருமுறை இ.பா. கும்பகோணம் போயிருந்தபோது, கலை விமர்சகர் தேனுகா இவரை தெருவில் பார்த்ததும், பக்கத்திலிருந்த, தான் வேலை பார்க்கும் வங்கிக்கு அழைத்துப்போய், தனது வங்கி மானேஜருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். மானேஜர் மிகுந்த மகிழ்ச்சியோடு, மாலை வாங்கிவரச்செய்து, மரியாதை செய்துவிட்டு, ‘சார்! என் மனைவி உங்களோடெ பெரிய விசிறி! உங்க கதையெல்லாம் விழுந்து விழுந்து படிப்பா!.....நீங்க அவசியம் நம்ம வீட்டுக்கு வரணும். அவ ரொம்ப சந்தோஷப்படுவா!’ என்று இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்துக்குப்போன இ.பா.வுக்கு ராஜ உபசாரம். வடை பாயசத்துடன் சமைத்திருந்தார் மானேஜர் மனைவி. ‘சார்! உங்க சிறுகதை, நாவல், மாதாந்திர ராணி எல்லாம் ஒண்ணு விடாமெ படிச்சிருக்கேன். ‘மர்ம தேசம்’ சீரியல் வந்தால், டி.வி.யை விட்டு நகரமாட்டேன்!’ என்றதும் தான் இ.பா.வுக்கு ஓஹோ…. இது ராங் நம்பர் என்பது புரிந்தது. ‘அம்மா! அவர் வேறே……நான் வேறே…….நீங்க சமைச்சு வச்சது இந்திரா செளந்தர்ராஜனுக்கு….இப்போ அவர் எங்கே இருக்கார்னு எனக்குத்தெரியாது. எம்பேர் இந்திரா பார்த்தசாரதி. நானும் ஒரு எழுத்தாளன் தான்! எனக்கு சாப்பாடு உண்டா….இல்லியா?’ என்று அவருக்கே உரிய நக்கலோடு கேட்டிருக்கிறார்!
படங்கள்:
(1)இ.பா.வும் நானும்! - 2004
(2)இ.பா.வும் நானும்! - 2010

15 Comments:

Anonymous said...

பாரதி மணின்னா.. பாரதி மணிதான். பேஷ்.. பேஷ் ரொம்ப நன்னாருக்கு.


அவரோட தென்றல் பேட்டியை சமீபத்தில் படித்தேன். அதுவும் சூப்பர்.

http://tamilonline.com/thendral/

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

IdlyVadai said...

//திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...//

உங்க பின்னூட்டம் Spamல் போய்விட்டது நண்பரே. பதிவர் சந்திப்பில் உங்களை பார்த்த போது இந்த மாதிரி டெம்பிளேட் பின்னூட்டம் போடாதீங்க என்று சொன்னேன். நினைவிருக்கிறதா ?

Cinema Virumbi said...

பாரதி மணி சார்,

இப்படித்தான் அந்த காலத்தில் வாசகர்கள் கோமல் சுவாமிநாதனையும் கோமதி சுவாமிநாதனையும் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள்! போதாக்குறைக்கு கோமதி சுவாமிநாதன் அவரே P&T இல் வேலை பார்த்தவர். கோமல் சுவாமிநாதனின் அப்பா மற்றும் அண்ணன்கள் P&T இல் வேலை பார்த்தவர்கள்!

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

பாரதி மணி said...

சினிமா விரும்பி: கோமல், கோமதி ஸ்வாமிநாதன் இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள்.
குமுதத்தில் எழுதி வந்த கோமதி ஸ்வாமிநாதன் எப்போதும் வெற்றிலையும் வாயுமாகவே இருப்பவர். அவரது ‘மனமே....மயங்காதே!’, ‘எதிரொலி/ போன்ற நாடகங்களை அறுபதுகளில் தில்லியில் மேடையேற்றியிருக்கிறோம். திருநெல்வேலிக்காரர்.

renga said...

நல்ல வேலை செய்தீர்கள். நம்ம தனபாலன் அண்ணன், எல்லார் பதிவிற்கும் வருகின்றார். கடைசியில் நல்ல பதிவு, பகிர்விற்கு நன்றி, சிறந்த பதிவு நன்றி, தொடருங்கள் நன்றி. இதில் "நல்ல பதிவு பகிர்விற்கு நன்றிதான்" அதிகம். "நபநப" மாதிரி "நபபந".

அவரது பதிவுகளில் பல நல்ல கருத்துக்கள், திருக்குறள் எல்லாம் எழுதிதள்ளுகின்றார். பின்னூட்டம் மட்டும் கூட இரண்டு வரி எழுதினால் என்னவாம்.

இதே போன்று பலரும் அவரிடம் சொல்லியிருப்பார்கள் என்ற தைரியத்தில்தானே நான் கூறினேன் என்று கூறி அவரை குழப்புகின்றீர்கள்.

எனிவே, பாரதிமணியில் அனுபவங்களை எங்களுக்கு வாசிக்கதந்தமைக்கு நன்றி :)

s suresh said...

சுவையான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்!
கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
ஹன்சிகா ரகசியங்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html

Cinema Virumbi said...

நன்றி பாரதி மணி சார்!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

சுபத்ரா said...

கடைசில சாப்பாடு என்னாச்சு :)

ஜெ. said...

இ.பா. பற்றிய பதிவுக்கு பா.ம. வுக்கு நன்றி! இ.சௌ. இதே மாதிரி நிலைமையை சந்தித்திருக்கிறார என்று அறிய ஆவல். இ.சௌ.எழுத்துக்கும் நான் ரசிகன்!

இ.வ. பதிவர் சந்திப்புக்குப் போனதை மற்ற பிரபல பதிவர்கள் தெரிந்துகொண்டார்களா? அவர்களுக்கு கை / வாய்ப் பூட்டு போட்டுவிட்டீர்களா? உங்கள் படம் எதிலும் வந்ததாகத் தெரியவில்லையே?! (அந்துமணி மாதிரி சைட் போஸ் மாஸ்க் போட்டாவது ஒரு போட்டோ போடுங்கள்!)

-ஜெ.

IdlyVadai said...

//இ.வ. பதிவர் சந்திப்புக்குப் போனதை மற்ற பிரபல பதிவர்கள் தெரிந்துகொண்டார்களா? அவர்களுக்கு கை / வாய்ப் பூட்டு போட்டுவிட்டீர்களா? உங்கள் படம் எதிலும் வந்ததாகத் தெரியவில்லையே?! (அந்துமணி மாதிரி சைட் போஸ் மாஸ்க் போட்டாவது ஒரு போட்டோ போடுங்கள்!)//

இல்லை காலை விழா ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து போனேன். ஒருவர் விசாரித்தார், நான் கேட்டரிங் ஆள் என்று சொல்லிவிட்டேன்... அதனால் என்னை யாரும் ஃபோட்டோ எடுக்கவில்லை :-)

kg gouthaman said...

// IdlyVadai said...
.......
இல்லை காலை விழா ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து போனேன். ஒருவர் விசாரித்தார், நான் கேட்டரிங் ஆள் என்று சொல்லிவிட்டேன்... அதனால் என்னை யாரும் ஃபோட்டோ எடுக்கவில்லை :-)

விசாரித்தவரிடம், நீங்கள் 'கேட்டரிங் ஆள்' என்று சொல்லவில்லை.
நீங்கள் 'இட்லிவடை' என்றுதான் சொன்னீர்கள். விசாரித்த நான்தான்,
"ஓஹோ, கேட்டரிங் ஆள் போலிருக்கு' என்று சொன்னேன்!

R. J. said...

'Catering AL' enRaal - saappida vanthavar enRu arthtamaa. avvvv... - R. J.

R. J. said...

Just now noticed the mast head. Glad you will have a Malayalam edition soon! Congrats for spreading the wings! - R. J.

ஜோதிஜி திருப்பூர் said...

ஒரு மணி நேரம் கழித்து போனேன். ஒருவர் விசாரித்தார், நான் கேட்டரிங் ஆள் என்று சொல்லிவிட்டேன்... அதனால் என்னை யாரும் ஃபோட்டோ எடுக்கவில்லை :-)

விதவிதமான சுவைகளில் தந்து கொண்டுருப்பதால் இந்த பெயர் தான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து சொல்லியிருப்பீங்களோ?