பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 17, 2012

நாட்டு நடப்பு

எச்சரிக்கை : இது வார வாரம் வர வாய்ப்பு இருக்கிறது.

சுரேஷ் கண்ணன் எழுதிய 'பில்லா 2-ம் ஆட்டு மூளைகளும்' என்ற விமர்சனம் எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று. இந்த மாதிரி விமர்சனங்களைப் படிக்கவே கோலிவுட் ஆசாமிகள் இந்த மாதிரிப் படங்கள் நிறைய எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அருண் வைத்தியநாதன் இந்த மாதிரி விமர்சனங்கள் தொகுக்கப்பட வேண்டும் என்று சர்டிபிக்கேட் கொடுத்துவிட்டார். அவருடைய அடுத்த படம் என்ன என்று யாருக்காவது தெரியுமா ? காதல் ஜோடிகள் நடித்தால் விஜய் டிவி திருமண மண்டபத்தில் திருமணம் ஆக வாய்ப்பு இருக்கிறது.
சுகா எடுக்கும் படித்துறை எப்போது ரிலீஸ்? அதில் டப்பிங் பேசியவருக்கு வயசாகுதில்லையா?

மத அடிப்படைவாதம் என்ற பத்ரி பதிவில் 50+ பின்னூட்டங்கள் இருக்க என்ன என்று பார்க்கப் போனால் அவருடைய பதிவையும் KRS வைரஸ் தாக்கியுள்ளது. இந்த வைரஸ் சில வாரங்களுக்கு முன் சொக்கனைத் தாக்கியது என்று கேள்விப்பட்டேன். எது எப்படியோ நம்மளைத் தாக்காமல் இருந்தால் சரி.

ஒரு ராட்டன் ஆப்பிளை வைரஸ் தாக்கினால் கூட இருக்கும் ஆப்பிள்களும் கெட்டு போகும். அதே மாதிரி பெங்களூர் பதிவர் சந்திப்பில் ஏதோ ஒரு ஆப்பிள் ராட்டன் என்று நினைக்கிறேன், அங்கே வந்த எல்லா ஆப்பிளும் கெட்டுபோய் உள்ளது. ( கெட்டு போச்சு என்றால் தொலைந்து போச்சு என்று அர்த்தம் )

நான் ஈ – ஞாநி ஒப்பிட முடியுமா? என்ற கேள்விக்கு ஞாநியின் பதில் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. ஏன் ஈயை வைத்து அணு உலை விபத்தைப்பற்றி எடுக்க கூடாதா என்று கேட்டுள்ளார். அது சரி. ஞாநி அணு உலை பிரச்சனையை விட்டு எப்போதுதான் வெளியே வரப் போகிறார் ?

எல்லா கேள்விக்கும் ஒரு பெரிய கட்டுரை எழுதும் ஜெயமோகன் வாழையும் விஷமும் என்ற பதிவில் வாழைகளுக்கு பூச்சி மருந்து அடிப்பதை பற்றி எழுதியுள்ளார். பேசாம அந்த பூச்சி மருந்துகளை நம் தமிழ் வலைப்பதிவுக்கும், டிவிட்டர் அகவுண்டுக்கும் அடிக்கலாம். நிச்சயம் பத்ரி ஒரு பாட்டிலை வாங்கி அவர் வலைப்பதிவுக்கு அடித்து KRS வைரஸை ஓட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ட்விட்டரில் கொஞ்சநாட்களாக இரவில் சத்தம் கம்மியாகி இருக்கிறது. எல்லாம் மகாபலிபுர மர்மம் என்கின்றனர் அறிந்தவர்கள்.பேசாம இங்கே இரவில் கும்மி அடிக்கும் எல்லோரும் பட்டாபட்டி போட்டுக்கொண்டு மகாபலிபுரத்துக்கு பேரணி போய் விட்டால் சௌக்யமாக இருக்கும். மழை வந்தாலும் பட்டாப் பட்டியைக் காய வைக்க இருக்கவே இருக்கு அழகிய செடிகள்.

என்ன அப்டி உலர்த்தினா அழகிய செடிகள் அழுகிய செடிகள் ஆகிவிடும்.

9 Comments:

Anonymous said...

NAMALWAR is reborn and his name is KRS...but one thing you have to accept ...he has wide knowledge...

Dont get envy on him...

Murali

R. J. said...

What is this 'Forward' special OR 'I scratch your back' special (expecting them to scratch IV's back! - R. J.

ஜெ. said...

//ட்விட்டரில் கொஞ்சநாட்களாக இரவில் சத்தம் கம்மியாகி இருக்கிறது. எல்லாம் மகாபலிபுர மர்மம் என்கின்றனர் அறிந்தவர்கள்.// மேல் மாடி கொஞ்ஜம் காலி, யாராவது புரியும்படி சொல்லுங்கள்! தன்யனாவேன். - ஜெ.

ஜெ. said...

//ட்விட்டரில் கொஞ்சநாட்களாக இரவில் சத்தம் கம்மியாகி இருக்கிறது. எல்லாம் மகாபலிபுர மர்மம் என்கின்றனர் அறிந்தவர்கள்.// மேல் மாடி கொஞ்ஜம் காலி, யாராவது புரியும்படி சொல்லுங்கள்! தன்யனாவேன். - ஜெ.

ஜெ. said...

//ட்விட்டரில் கொஞ்சநாட்களாக இரவில் சத்தம் கம்மியாகி இருக்கிறது. எல்லாம் மகாபலிபுர மர்மம் என்கின்றனர் அறிந்தவர்கள்.// மேல் மாடி கொஞ்ஜம் காலி, யாராவது புரியும்படி சொல்லுங்கள்! தன்யனாவேன். - ஜெ.

Anonymous said...

//ஒரு ராட்டன் ஆப்பிளை வைரஸ் தாக்கினால் கூட இருக்கும் ஆப்பிள்களும் கெட்டு போகும். அதே மாதிரி பெங்களூர் பதிவர் சந்திப்பில் ஏதோ ஒரு ஆப்பிள் ராட்டன் என்று நினைக்கிறேன், அங்கே வந்த எல்லா ஆப்பிளும் கெட்டுபோய் உள்ளது. ( கெட்டு போச்சு என்றால் தொலைந்து போச்சு என்று அர்த்தம் )///
Too much
இப்படிக்கு
Rotten apple

Anonymous said...

One of the hyper link gnani- naan-E is faulty it should be http://gnani.net/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-16-7-2012/

Anonymous said...

idhu naatu nadappai patriya
NETTU NADAPPU

Cuziyam said...

Should I feel happy for the Kargil victory day, which defeated terrorist incursion at one place, or feel sad for the Bodo genocide, which established mass support to terrorists at another place?