பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 26, 2012

கல் மரம்

பல இடங்கள் நமக்கு பக்கத்திலேயே இருக்கும் ஆனால் மற்றவர்கள் சொல்லி தான் நமக்கு தெரியும். தெரியும் போது 'அட' என்று நினைப்போம். அப்படி பட்ட இடம் ஒன்று சென்னைக்கு அருகிலேயே இருக்கிறது. ஆம், சென்னைக்கு பக்கத்தில…. ஒரு 100 கிலோ மீட்டர்ல…. இருக்கும் ஒரு மர்மமான இடம் பற்றிய தகவலே இது….

அப்படியா, என யோசிப்பவருக்கு…. ஒரு கேள்வியுடன் தொடங்குவோமே…
உலகம் தோன்றி எவ்வளவு காலமாச்சு
அது இருக்கும், கோடி வருசங்களுக்கு மேல…

ம்… அப்படி 3000 கோடி வருசத்துக்கு முந்தி, வாழ்ந்த ஒரு மரம் இப்ப இருக்குது….பெரும்பாலான சென்னை வாசிகளுக்கும் ஏன் பாண்டிச்சேரி வாசிகளுக்கும் கூட தெரியாம ஒரு கிராமத்துக்குள்ள இன்னும் இருக்குது… இத்தனைக்கும் இந்த மரங்களை நாம் பார்க்கலாம், ஃபோட்டா எடுத்துக்கலாம்…. ஏன் தொட்டுக் கூட பாக்கலாம்…
3000 கோடி வருசத்துக்கு முந்தியது எனும் போது, மரம் மக்கி போகாது என சிந்திப்பவருக்கு, இல்லை.. மக்கி போனால் அதுதான் பெட்ரோல் அண்டர் கிரவுண்டுல ஆக்சிஜன் கிடைக்காம போச்சுன்னா பிட்டிரைஃபைட்டு ஆகிவிடும். அதனால மரம்………. இப்ப கல் ஆயிருச்சு…
வாட்… கல்லாச்சா…
யெஸ்… மரம் ஒரு ஆர்க்கானிக் காம்பணெண்ட் இல்லியா… அதனோட தன்மைகள் சுத்தமா போயி, இப்ப சில்லிக்கான் செல்களா இருக்குது…..
திருவக்கரை, இதுதான் இந்த கல்லால மரம் இருக்கும் ஊரின் பெயர். வக்கர காளியம்மன் எனும் கோவில் அலங்கரிக்கும் ஊர் கூட இதுதான். ஆகம விதிப்படி அமைக்கப்படாத ஒரு கோவில் உண்டு என்றால் ….. கோவில்ன்னா இப்படி இருக்கணும் என்ற விதிக்கு …. சொன்னதற்கு நேர் மாறாக கோவில் அமைக்கப்பட்டது இங்காகத்தான் இருக்க வேண்டும்.
மூலவர் என சொல்லப்படும் கோவிலின் சாமி சிலைக்கு எதிரில் நந்தி அமைப்பது ஒரு ஆகம விதி. ஆனால்………. இங்குள்ள கோவிலில் நந்தி திரும்பி கொண்டிருக்கும். எல்லா கோவில்களிலும் இடம் வலமாய் சுற்றி வந்தால் இங்கு மாறி சுற்ற வேண்டி வரும்.
ஆதிச்ச சோழனால் கட்டப்பட்டு, மாணிக்க வாசகரால் பாடப்பட்ட இத்தலம், இன்றும் மக்களின் பெருங்கூட்டத்தால் அம்மாவாசை பௌர்ணமிக்கு திணறுகிறது. சில கிரகங்களின் வக்கிர பார்வைக்கு இந்த கோவில் வந்து எலிமிச்சை மாலை சாத்தினால் பரிகாரம் உண்டு என நம்பப் படுகிறது. மிக பிரசித்தியான தலம்.
இக்கோவிலின் உள்ளே, குண்டலினி சித்தர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு லிங்கம் இருக்கிறது, அந்த இடத்தில் தியானம் செய்ய அமர்ந்தால் மனம் ஒருமைப்படுவதை வியக்காமல் இருக்க முடியாது… எப்படி எப்படி.. இப்படி என மனம் மிரள வைக்கும் ஒரு அதிர்வை எளிதில் உணரலாம்… பிரணவ மந்திர மூம்மூர்த்திகளும் ஒரே சிவலிங்கத்தில் இருப்பது உலகிலேயே இங்குதான்.
ம்… இந்த கோவில் ஏன் இப்படி இருக்கிறது….. சொல்வதற்கு ஆதாரமில்லை என்றாலும்… இக்கோவில் நாட்டார் வழிபாடு செய்யப்பட்டு பின்னர் சிவ வழிபாடு… அரக்கனை அழித்தது… என அரசியலாகி மாற்றப்பட்டது……… என உள்ளுணர்வு சொல்லும்….
கல்லால மரம் இந்த ஊரில் இருப்பதும்…. இவ்வூரின் கோவில் வக்கிர சித்தரிப்புக்கும் ஒரு ஆழமான காரணம் இருக்க வேண்டும். ஒரு ஆழ்ந்த தொடர்பும் இருக்க வேண்டும். அதில் இருக்கும் ஒரு ரகசிய தொடர்ப்பில் ஏதோ ஒரு சுவாரசியம் இருக்க வேண்டும்… என்றாலும் ஆழமான ஆராய்ச்சி செய்யும் யாராவது செய்ய வேண்டிய பணி இது….
கல்லால மரம் இருக்கும் திருவக்கரை சென்றால், கொஞ்சம் பாறைகள், கொஞ்சம் குன்றுகள் என்றாலும் வளப்பமான மரங்களும் நம்மை வரவேற்க்கும்.சுற்றி வேலி அமைக்கப்பட்டு, அந்த பூங்கா அழகுடனும் அமைதியாகவும் இருந்தது. அதனுள் தான் அந்த கல்லாலமரம் இருக்கிறது.
அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு, பொது மக்களுக்காக திறந்து விடப்பட்ட சிறு நிலப்பரப்பு ரகசியங்களை தரிசிக்க சொல்லி நம்மை வரவேற்க்கும்.
நுழைந்த உடனேயே சிவப்பு வண்ணத்தில் மரம் கண்ணுக்கு படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல…. நிறைய நிறைய மரத் துணுக்குகள்…. அதில் ஒரு நீண்ட கல்லால மரம் இருக்கிறது. அதன் நீளம் சுமார் 50 அடி….
‘இந்த மரத்தோட வயசு 3,000 கோடி வருசமா….
தொட்டு பார்த்த போது, மயிர்க்கால்கள் குத்திட்டன. ஏய்… மரமே உன் வயது கோடிகளிலா… கொஞ்சம் பேசேன்.. நீ பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. நீ எப்படி வாழ்ந்தாய்… நீ வாழ்ந்த காலத்தில் பூமி எப்படி இருந்தது.
உன் காலத்தில் எல்லாம் இங்கு சமுத்திரமாமே… அப்படியா… ஐஸ் ஏஜ் என சொல்கிறார்களே அப்படி என்றால் எப்படி…. நீ வாழ்ந்த காலத்தில் மனிதனே இல்லையாமே…. டைனோசர் எனும் ராட்சத விலங்குகள் தானாமே அப்படியா… புராணங்கள் சொல்வதை கேட்டு, இங்குள்ள வாயிற் காப்போன் சொல்கிறார்… ‘அந்த காலத்தில இங்கு வாழ்ந்தவர் பூரா அரக்கர்கள் என்று….’ அப்படியா….
யார் யார் இங்கு வசித்தார்கள். உனக்கு தெரியும் உண்மையை உரக்க சொல்லேன்…
கல்லாகி போன இந்த மரங்கள் இங்குள்ளவை அல்ல…. அதன் வேர்களோ, இலைகளோ அல்லது, அதன் ஒடிந்த கிளைகளோ இங்கு இல்லை… இவையெல்லாம் எங்கிருந்தோ இங்கு வந்து கொட்டப்பட்டிருக்கிறது… எப்போது… எந்த காலத்தில்………….
கேள்வி இருக்கிறது…. பதில் சொல்ல யாருமே இல்லை…. ஹும்… 2 கோடி வருசங்களுங்கு முன்னால்… இப்படி 2 கோடி வருசங்களுக்கு இங்கு வந்து கொட்டியவர்கள் யார்… மனிதனா…. அரக்கனா…. அல்லது டைனோசரா….

நமக்கு தெரிந்தது இந்த தகவல் மாத்திரமே… 18ம் நூற்றாண்டில் ஒரு ஐரோப்பியர் கண்டுபிடித்து இப்படி கல்லாகி போன ஒரு மரத்தின் துண்டுகள் இங்கே கொட்டி கிடப்பது பற்றி கண்டுபிடித்து எழுத…. ஆராய்ச்சி குழு இங்கே வந்து 100 வருசமாக ஆராய்ச்சி செய்ததில் நாம் கண்டுபிடித்தது இவ்வளவே…
1. இந்த கல் மரத்தின் தன்மையில் ஆர்கானிக் இல்லை இல்லவே இல்லை… முழுக்க முழுக்க சிலிக்கான் தன்மைகளே உள்ளன.
2. இந்த கல் மரத்தின் ஆயூள் 3000 கோடி வருசம்
3. இந்த கல் மரம் இந்த பகுதியை சேர்ந்தது அல்ல, எங்கோ இருந்ததை யாரோ கொண்டு கொட்டி வைத்திருன்ந்தார்கள்…
4. கொண்டு கொட்டிய வருசம்…. 2 கோடி வருசங்கள்
5. யார் கொண்டு வந்து கொட்டியது………. ஏன் இங்கு வந்து கொட்டி வைத்தார்கள்… என்ன செய்வதாக உத்தேசம்…. ம்…ஹூம்.. தெரியவில்லை… அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை
6. 10 வருடங்களுக்கு முன்னால் இங்கு வந்து ஐரோப்பாவை சேர்ந்த ஒரு நிறுவனம் பத்தடி தோண்டி, மணல்களை சேகரித்து சென்றிருக்கிறது. சேகரித்த மண் தங்கம் போல மின்னியதாகவும் … ஆராய்ச்சியின் தகவல் பற்றி ஏதும் தெரியவில்லை எனவும் தகவல்கள்.
கேள்விகள் ஓராயிரம் உண்டு, விடைகள் சொல்லத்தான் யாருமில்லை…. வெறும் 2000 வருசத்து சரித்திரமே தரிகிணத்த்தோம்… போட்டு… தெளிவாகத் தெரியாமல் விழிக்கின்ற சிறு புல் நாம்… நம் முன்னோர்களை பற்றியோ, இந்த பூமியை பற்றியோ எதுவும் அறியாத சிறு பாலகர்கள் நாம்…

எல்லாம் எமக்கு தெரியும்… என இறுமாப்பு கொள்ளும் நம் இன்றைய ஈகோவை பார்த்து பல் இளிக்கவாவது இந்த திருவக்கரைக்கு ஒரு பயணம் மேற்கொள்ளலாம்…

- லாரன்ஸ் பிரபா
சுற்றுப்புறத்தை பாதுகாப்போம்! இயற்கையை நேசிப்போம்!!

27 Comments:

Nilofer Anbarasu said...

இதை பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. படிக்க படிக்க ஆச்சரியாமாக இருந்தது. உங்களுடைய எழுத்து நடையும் ரொம்ப நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் லாரன்ஸ்.

ஜெ. said...

சங்கரின் சகோதரர் லாரன்ஸ் அண்ணனும் மர்மக் கட்டுரை எழுதிவிட்டார். பாவம் சங்கர் ஒரு நாள், 2 நாள் தாமதப் படுத்தியதற்கு இப்படி அவரை ஒதுக்கக் கூடாது!

2 கோடி வருஷமா, 3000 கோடியா?

மரத்தின் தன்மையே இல்லை, ஆனாலும் மரமா?

‘கல்லால்’ மரமா, கல் ஆல மரமா?

இதை 30 வருஷம் முன்னால் படித்திருந்தால் தலை முடியை பிய்த்துக் கொண்டிருப்பேன், இப்போது எங்கே தேடுவேன் (இல்லாத தலை முடியை)!

நன்றி, தகவலுக்கு!

-ஜெ.

s suresh said...

வியப்பான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி!

Anonymous said...

இது கூடத் தெரியாமல் மக்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாகத் தான் உள்ளது.

அநாநி

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத விசயம்... விளக்கமாக தந்ததற்கு நன்றி !

Gomathi said...

போச்சு இதை வேறு போட்டு விட்டீர்களா? இனி அதையும் விற்க இந்து சமய அறநிலை துறை என்ற கொள்ளை கூட்டம் தயாராக போகிறது..

Gomathi said...

இன்னும் கொஞ்ச நாளில் இதையும் இந்து சமய அறநிலை துறை கொள்ளை அடிக்க போகிறது.

தகவலுக்கு நன்றி. விரைவில் இந்த கோயிலை தரிசனம் செய்ய முயற்சிக்கிறேன்.

kg gouthaman said...

//சென்னைக்கு பக்கத்தில…. ஒரு 100 கிலோ மீட்டர்ல…. இருக்கும் //
லாரன்ஸ் என்பவர் ரியல் எஸ்டேட் அதிபரா?

வெண்பூ said...

3000 கோடி வ‌ருச‌ம் ப‌ழ‌மையான‌ ம‌ர‌மாம்.. அப்ப‌டின்னா 30 பில்லிய‌ன் வ‌ருச‌ங்க‌ள் முந்தைய‌ ம‌ர‌மா? அவ்வ்வ்... இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌ம் உருவாகியே 14 பில்லிய‌ன் வ‌ருச‌ம்தான் ஆச்சுன்னு ஸ்டீஃப‌ன் ஹாக்கிங்னு ஒரு ஆள் சொல்லிட்டு இருக்காரு, ப‌ய‌புள்ள‌ பொய் சொல்லி புக்கு வித்துட்டு இருக்கு போல‌.. :))

kothandapani said...

அருமையான கட்டுரை .. மேலும் சில விளக்கங்கள்.
இவை கல் ஆல மரங்கள் அல்ல. கல் மரங்கள் தான். இவற்ற்றை fossils என்று அழைப்பார்கள் .இவற்ற்றை பற்றி அறிந்துகொள்ள Paleobotany என்ற தனி பிரிவே உள்ளது. Evolution கோட்பாடுகள் பல இவற்றின் அடிபடயில்தான் உள்ளன. எப்பொழுதோ எங்கோ ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கால் அடித்து வரப்பட்ட கட்டைகள் திருவாகரையில் ஒதுங்கி கல் மரங்களாக மாறிவிட்டன. இந்த கட்டைகளின் வேர்கள் இல்லாதது இவை அடித்து வரப்பட்டவை என்பதை உணர்த்தும். வழக்கம் போல, விஷ்ணுவால் கொல்லப்பட்ட அரக்கர்களின் எலும்புகள்தான் இவை என்பது போன்ற கதைகளும் வழக்கத்தில் உள்ளன.இந்த கல்மரங்களின் வயது சுமார் இருபது மில்லியன் ஆண்டுகள் தான். 2000 கோடி ஆண்டுகள் பழமையானது என்பது எல்லாம் டுபாக்கூர்....நம்ம ஸ்ரீ பெருமந்தூர் அருகில் கூட பாசில் படிவங்கள் உள்ளன. (திருவக்கரை அளவுக்கு அல்ல)
இட்லி வடையில் இப்படி பட்ட கட்டுரைகளா........... நம்பவே முடியல்லை........

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெண்பூ கூறுவது போல இந்த பிரபஞ்சத்தின் வயதே 1400 கோடி ஆண்டுகள் தான். பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள்.ஆகவே 3000 கோடி ஆண்டுகள் என்பது தவறான தகவல்.
ராமதுரை

kg gouthaman said...

இந்த கல் மரத்தின் ஒரு பகுதி, உதகமண்டலம் பொட்டானிக்கல் கார்டனிலும் பார்த்தேன்.
அங்கு உள்ள தகவல் பலகையில், இந்த மரத்தின் வயது இரண்டு கோடி ஆண்டுகள் (20 Million years)
என்று எழுதப்பட்டுள்ளது. இந்த மாதிரி மரங்கள் தென்னாற்காடு திருவக்கரையில் உள்ளன என்றும்,
நதிகள் மூலமாக அவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நதிப் பிரவாகத்தில் அடித்துக் கொண்டு
வரப்பட்டவையாக இருக்கக் கூடும் என்றும் அந்தத் தகவல் பலகை அறிவிக்கின்றது.

Anonymous said...

எலேய் இட்லி, கோயமுத்தூர்ல சம்பள ஆள் வெச்சி லஞ்சம் வசூலிக்கிராஹலாம்டே!!!....தினமலர்ல போட்ருக்கான்...இனி அடுத்து ...ண்டி கழுவி விட்ரதுக்குகூட அசிஸ்டெண்டு வச்சுகிடுவானுங்க போலேருக்கே அப்பு....வெளங்குமாலே இது?

Anonymous said...

"அருமையான கட்டுரை .. மேலும் சில விளக்கங்கள்.
இவை கல் ஆல மரங்கள் அல்ல. கல் மரங்கள் தான். இவற்ற்றை fossils என்று அழைப்பார்கள் .இவற்ற்றை பற்றி அறிந்துகொள்ள Paleobotany என்ற தனி பிரிவே உள்ளது. Evolution கோட்பாடுகள் பல இவற்றின் அடிபடயில்தான் உள்ளன. எப்பொழுதோ எங்கோ ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கால் அடித்து வரப்பட்ட கட்டைகள் திருவாகரையில் ஒதுங்கி கல் மரங்களாக மாறிவிட்டன. இந்த கட்டைகளின் வேர்கள் இல்லாதது இவை அடித்து வரப்பட்டவை என்பதை உணர்த்தும். வழக்கம் போல, விஷ்ணுவால் கொல்லப்பட்ட அரக்கர்களின் எலும்புகள்தான் இவை என்பது போன்ற கதைகளும் வழக்கத்தில் உள்ளன.இந்த கல்மரங்களின் வயது சுமார் இருபது மில்லியன் ஆண்டுகள் தான். 2000 கோடி ஆண்டுகள் பழமையானது என்பது எல்லாம் டுபாக்கூர்....நம்ம ஸ்ரீ பெருமந்தூர் அருகில் கூட பாசில் படிவங்கள் உள்ளன. (திருவக்கரை அளவுக்கு அல்ல)
இட்லி வடையில் இப்படி பட்ட கட்டுரைகளா........... நம்பவே முடியல்லை........"

vow..thanks for clarifying. While reading the article, I could feel that the author doesn't have any clue about what he is writing about and it is half baked. It's very rare nowadays to find someone who writes articles about something they knew well. There is not even a mention that these could be "fossils".

Dhas said...

Puducherry (Pondicherry) Botanical garden also has this "Stone" Tree on display. I think, it was near "visiri vaazhai". I had been there almost everyday/week during school days.

Anonymous said...

எல்லாம் எமக்கு தெரியும்… என இறுமாப்பு கொள்ளும் நம் இன்றைய ஈகோவை பார்த்து பல் இளிக்கவாவது இந்த திருவக்கரைக்கு ஒரு பயணம் மேற்கொள்ளலாம்…

rai raitt..

லாரன்ஸ் பிரபாகர் said...

திருவக்கரை பற்றியும், கல் மரம் பற்றியும் பதிவிட்ட இட்லிவடைக்கும், படித்த நண்பர்களுக்கும் நன்றி.

சுவையான பின்னூட்டங்கள், மிக்க மகிழ்ச்சி தந்தது. தங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றி.

கல் மரத்தின் வயது 2000 கோடி வருசம் அல்ல 2 கோடி வருசம் தான் என பின்னூட்டம் இட்ட தோழமைக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்…. தகவல் பிழை சுட்டிக் காட்டி, அன்போடு திருத்தியமைக்கு நன்றியும் வணக்கமும்.

நம் வாசகர் வட்டத்தில் இது குறித்த நல்ல தகவல்கள் இருப்பதை உணர்கிறேன். என் போலவே கல் மரம் குறித்தும் FOSSILS குறித்தும் தகவல் அறிய ஆவல் இருப்பதை உணர்வதால் ஒரு வேண்டுகோள்…. யாராவது இது பற்றி இன்னும் சொல்லுங்களேன்.

அன்புடன்

லாரன்ஸ் பிரபாகர்

Ratan said...

அடேய் டுபாக்கூர்களா.... பூமியின் வயதே 500 கோடி வருஷம் தான் (approx 4.54 billion years; i billion = 100 crores)
இதுல 3000 கோடி வருஷத்துக்கு முன்னாடினா, வைகுண்டத்துல இருந்துதான் வந்து இருக்கணும்.

புரூடா விடறதுக்கும் ஒரு அளவில்லையா?

Alex Pandian said...

check the oldest tree list http://en.wikipedia.org/wiki/List_of_oldest_trees

R. J. said...

"Request readers not to insult a blogger / guest contributor. You may differ from him or point out errors in the article - but remember that the publication of the article only brings forth discussions and clarifications."

(If some one questions why did I object to Bala's cricket posts, he is not my friend!)

-R. J.

kothandapani said...

இந்த கல் கட்டையை காண ஆசை உள்ளவர்கள் பாண்டி , ஊட்டி எல்லாம் போகவேண்டாம். நமது museum சென்றாலே பார்க்கலாம். 1975 ஆம் ஆண்டே பாசில் பற்றி படிக்க சென்ற மாணவர்களால் தூக்கி வரப்பட்ட திருவக்கரை கல் கட்டை தாம்பரம் christian college botany department வளாகத்தில் வைக்கபட்டுள்ளது.

Anonymous said...

ஒரு கட்டுரை இட்லிவடையில் வெளியிடபட்டால் அதன் பின்னூட்டங்களே சுவையை கூடுகின்றன .பின்னூட்டங்களில் ஒரு சில கடுமையான கருத்துகளும் இருக்கலாம்,,,அதுதான் சுவையே. இதை லாரன்சும் உணர்ந்துள்ளார் ,,,,, சில அல்லகைகளுக்கு ஏன் புரிய மாட்டேன் என்கிறதோ.....

bandhu said...

http://www.petrifiedforest.org/
இங்கு (அமெரிக்காவில்) உள்ள ஒரு பார்க். இதில் உங்களுக்கு இது போன்ற fossil மரங்களை பற்றி மேலும் தகவல்கள் கிடைக்கும்.

Anonymous said...

இப்போ சொல்லிட்டீங்க இல்லை.. இனிமெ கல்லு மரத்தை கல்லு கல்லாப் பேத்து வெளிநாட்டுக்கு வித்துடுவாய்ங்க நம்ம அரசியல்வியாதிங்க.. ஒருவெளை கூடிய சீக்கிரத்தில லண்டன்லயோ நியூயார்க்கிலயோ மியூசியத்தில பாக்கலாம்...

Avargal Unmaigal said...

வியப்பான தகவல்கள் பகிர்வுக்கு நன்

siva.saravanakumar said...

வேய் இட்லி......எங்கேய்யா போனீர்....ஆளையே காணோம்.....[ ஏங்க ... நான் சரியாத்தான் பேசுரேனா?]

Anonymous said...

நன்றி